அரசியல்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காகவே குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதால், அவர்களின் விடுதலை குறித்து அரசியல் ரீதியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து…

‘புதிய அரசமைப்பின் ஊடாக அச்சமின்றி வாழும் நிலை உருவாக்கப்படவேண்டும்’

“புதிய அரசமைப்பின் ஊடாக, சகல மக்களும் அச்சமின்றி உரிமையுடன் வாழும் நிலை உருவாக்கப்படவேண்டும். அனைத்து மக்களதும் சுயநிர்ணய உரிமை நிலைநாட்டப்பட்டு, உரிமையைப் பகிர்ந்து வாழும்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது” என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்…

11,000 புலிகளை விடுவித்தது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – என்கிறார்…

முன்னைய அரசாங்கம் எடுத்த சில தவறான முடிவுகள் தேசிய பாதுகாப்புக்கு மோசமான அச்சுறுத்தல் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு…

மாவீரர் தினத்துக்கு தயாராகும் மட்டக்களப்பு.. முன்னாயித்தப்பணிகள் தீவிரம்..

மாவீரர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்பட்டு மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று…

197 இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு

அவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு, தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, இலங்கையர்கள் 197 பேரையும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறானவர்கள், நவ்றூ, பபுவா நியூகினியா, அவுஸ்திரேலியா மற்றும் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் 12 பேரும், பபுவா நியூகினியாவில் 21…

சிறிலங்கா இராணுவம் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று கூறுவது கோழைத்தனம்…

கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த போது, சிறிலங்கா இராணுவத்தை அரசியல்மயப்படுத்தினார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், ”கோத்தாபய ராஜபக்ச இராணுவத்துக்குள் அரசியல் செல்வாக்கைப் புகுத்த…

மறக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள்

அண்மைய மாதங்களில் ஊடகங்களில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ரொஹிங்யா அகதிகள் தொடர்பான செய்திகள் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன. ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக அகதி வாழ்வு வாழும் ஈழத்தமிழ் மக்கள் தொடர்பாக ஊடகங்கள் முக்கியத்துவம் காண்பிக்கவில்லை. பரிதாபகரமான வாழ்விடங்கள், சுதந்திரமாக நடமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள், வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான…

போர்க்குற்ற விசாரணை, அனைத்துலக பிரகடனங்களில் கையெழுத்திட சிறிலங்காவுக்கு அழுத்தம்

தெளிவான காலவரம்புடன் கூடிய போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும், ரோம், அனைத்துலக குற்றவியல் உடன்பாடுகளில் கையெழுத்திட வேண்டும் என்றும், சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் அனைத்துலக சமூகம் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான மூன்றாவது பருவகால, பூகோள…

வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் வாள்வெட்டுக் குழுக்கள் – சிறிலங்கா அமைச்சர்…

வடக்கில் மீண்டும் ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களைத் தலையெடுக்க விடமாட்டோம் என்று சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள வாள்வெட்டுகள் போன்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல…

’காணாமல் ஆக்கப்பட்டோர்: ஜனாதிபதியின் முடிவுகளில் திருப்தியில்லை’

காணாமல் ஆக்கப்படோர் தொடர்பில், ஜனாதிபதியுடனான சந்திப்பின்  முடிவுகளில் திருப்தியில்லை எனவும் இவ்விவகாரத்துக்கு, சர்வதேச விசாரணையே அவசியம் எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர் ​. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று (16) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இச்சந்திப்பு இடம்பெற்றது. வடக்கு,…

இரகசிய தடுப்பு முகாம்களில் யாரும் இல்லை – கைவிரித்தார் சிறிலங்கா…

சிறிலங்காவில் தற்போது எந்த இரகசியத் தடுப்பு முகாமும் இல்லை, அவ்வாறான இடங்களில் எவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கவும் இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகளை நேற்று அதிபர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, சிறிலங்கா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

வட மாகாண கல்வி அமைச்சர் இலங்கை தேசிய கொடியை ஏற்ற…

வவுனியாவிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், இலங்கை தேசிய கொடியை ஏற்ற வட மாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். வவுனியா - ஈச்சம்பெரியகுளம் பெரகும் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று வட மாகாண கல்வி…

யாழில் ஆவாவுக்கு எதிராக, பல வாள் வெட்டு குழுக்கள் ;…

யாழில் செயற்படும் ஆவா வாள் வெட்டுக் குழு மற்றும் அக்குழுவுக்கு எதிராக சட்டவிரோதமாக செயற்படும் மேலும் பல குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பொலிஸார் விஷேட வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ், விஷேட அதிரடிப் படையின் சிறப்புக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்த விஷேட கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை…

தமிழர்கள் மீதான சித்திரவதை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச்…

தமிழ்ப் போராளி சந்தேகநபர்கள் மீது சித்திரவதைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, இது ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக கூறப்பட்ட குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தற்போதைய ஆட்சிக்காலத்தில், கைது செய்யப்பட்ட 50 இற்கும் அதிகமானோர் சித்திரவதை…

சிறிலங்கா மீதான சித்திரவதைக் குற்றச்சாட்டு – தாமதமின்றி நடவடிக்கை எடுக்கக்…

சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதை மற்றும் பாலியல் வதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கரிசனை கொண்டுள்ளதாகவும், இத்தகைய மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவில் அண்மைக்காலத்தில், தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் தொடர்பாக, ஏபி வெளியிட்ட…

நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை

நாட்டை பிரிக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக கூட்டுஎதிரணி முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யான ஒன்றென   எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து மக்களும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பிரிவினைவாதம் இல்லாத நாடாக இலங்கை மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்…

த.தே.கூட்டமைப்புக்கு நல்ல ‘எதிர்க் கடை’ வேண்டும்

தமிழில், “கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்” என்றொரு சொற்றொடர் உண்டு. இது, யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்களைப் பொறுத்தவரை, அக்கூட்டமைப்புக்குச் சரியாகப் பொருந்துகிறது. இவர்களில் ஒரு பகுதியினரால் தான், புதிய எதிர்க் கடையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. புதிதாக வரப்போகும் கடை…

கூட்டமைப்பின் பாதை சரியா? – மக்களின் தீர்ப்பு முடிவு செய்யும்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லும் பாதை சரியானதா- இல்லையா என்பதை, மக்கள் முடிவு செய்வவதற்கான வாய்ப்பாக உள்ளூராட்சித் தேர்தல் அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான…

தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு, காரணம் இதுதான்..! விளக்குகிறார் விக்கி..

நாமே தயா­ரித்த  தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்றித்தன­மாக  கைவி­டு­வ­தற்கு  எமது தலை­மைகள்  முன்­வந்­த­மையே கூட்­ட­மைப்­புக்குள் பிளவு ஏற்­பட  கார­ண­மாக அமைந்­துள்­ளது என்று வட­மா­காண முத­ல­மைச்சர்  சி.வி. விக்­கி­னேஸ்­வரன்   தெரி­வித்­துள்ளார். இரா­ணு­வத்­தினர் போரில் வென்­றார்கள். எனவே எமக்கு  எமது சட்­ட­ரீ­தி­யான  நியா­ய­மா­ன­கோ­ரிக்­கை­களை  அதன்­பொ­ருட்டு அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க எந்த உரித்தும் இல்லை என்று  எம்­மவர் …

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போர்.. இராணுவம் செய்தது தவறு.. ஒப்புக்கொண்ட மைத்திரிபால…

கொழும்பு: ''இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும,'' என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கை இறுதிக்கட்ட போரின் போது ராணுவத்தினரால் 40,000 க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா., புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதுவரை இலங்கை ராணுவத்திற்கு…

3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் இன்று காலை பாரிய கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பித்த இந்தப் பேரணி, யாழ். மாவட்டச் செயலகம் வரை இடம்பெற்றது. அனுராதபுர சிறையில் உண்ணாவிரதமிருந்த 3 அரசியல் கைதிகளின்…

கனேடிய வாழ் இலங்கை தமிழ் மக்களை, ஏமாற்றுகிறதா கனடா?

கனடா வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இலங்கை தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கனடாவில் லிபரல் கட்சி பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டன. எனினும் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் போது லிபரல்…

‘நல்லாட்சி வெளிவேடம்’

“நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் திருப்திப்படுத்துவதற்காக வெளித்தோற்றத்தில், உதவுவதுபோல் நடிக்கிறது” என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நாடாளுமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான…