வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பான முடிவுகளில் மாற்றமில்லை!- ஜனாதிபதி

கடந்த முதலாம் திகதியன்று வெளியான அச்சு ஊடகமொன்றில் மயிலிட்டியை விடுவிக்க இராணுவம் கடும் எதிர்ப்பு என்ற பிரதான தலைப்பின் கீழ் வெளியான செய்தியில், மயிலிட்டி பிரதேசத்தை விடுவிக்க இராணுவம் கடும் எதிர்ப்பை காட்டியதாகவும் ஜனாதிபதி அவர்கள் மாற்றுவழி ஒன்றை மயிலிட்டி பிரதேச மக்களின் மீள் குடியமர்வு தொடர்பாக முன்…

வெடித்து சிதறிய ஆயுதக் கிடங்குகள்! பரபரப்பான கொழும்பு! காரணம் என்ன?…

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக நாசமடைந்துள்ளமை வேண்டுமென்றே செய்யப்பட்ட சூழச்சியாக இருக்கலாம் என வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தல் தொடர்பிலான விசேட வெளிநாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு முறைப்படி செய்யப்பட்ட ஒன்றென கூறப்படுகின்றமை மற்றும் நேரில் பார்த்தவர்களின் கருத்தினை அடிப்படையாக கொண்டு இந்த தகவல்…

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் கடற்படையினர் வலுவடைகின்றனர்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமது நிலைகளை பலப்படுத்தும் பணிகளில்இலங்கையின் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. வடக்கின் கிழக்குக்கரை மற்றும் கிழக்கு மாகாணத்தில் இந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகின்றன. வன்னியில் இலங்கையின் கடற்படை 'முகாமான எஸ்எல்என்எஸ் கோட்டாபய' ஏற்கனவே 300ஏக்கர் தனியார் காணியையும் 200 ஏக்கர் அரச காணியையும்…

தமிழகத்தில் இலங்கை அகதிகளின் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கோரிக்கை

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களின் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அகதிகள் தொடர்பான நடவடிக்கையாளர்கள் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கை அகதிகள் சிலர், அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் தப்பிச்செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டநிலையிலேயே இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகளின் முகாம்கள் தொடர்பில் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கையடக்க தொலைபேசிகளை…

இலங்கையை ஆட்டிப்படைக்கும் மேற்குலக சக்திகளால் தமிழன் அனாதை ஆகிறான்!

இலங்கை அரசு சர்வதேச இனப்படுகொலை விசாரணையைத் தவிர்ப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி அதைச் செயல்படுத்தி வருகிறது. இதற்காகத்தான் ”முன்னாள் விடுதலைப்புலி கைது?” என்ற செய்தியை இலங்கை அரசு சமீப காலமாக பரப்பி வருகிறது. அதன் நோக்கம் என்ன? அதன் பின்னணியில் இருக்கும் மேற்குலக சதி என்ன? அவைதான் அதிர்ச்சி…

காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களில் இலங்கை அரசு மெத்தனம்; சர்வதேச மன்னிப்பு…

ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் இலங்கை அரசு சரியான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுப்பதைத் தவிர்த்துவிட்டு, புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது தொடர்பிலேயே கரிசனை செலுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றஞ்சாட்டியுள்ளது. இதன்காரணமாக மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமற்போனோரின் உறவினர்கள் மற்றும் நீதியைக் கோரி நிற்பவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளார்கள் என்றும் சர்வதேச…

இலங்கை அரசு புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தவறியுள்ளது!- அமெரிக்கா குற்றச்சாட்டு!

விடுதலைப் புலிகள் மீதே தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் புதிதாய் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இலங்கை அரசு தவறியுள்ளதாக அமெரிக்க உள்விவகாரத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை அரசின் கவனம் மொத்தமும் விடுதலைப் புலிகளின் சாத்தியமான மறு எழுச்சி குறித்தே இருப்பதால், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகளில் இலங்கை குடிமக்கள்…

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை! படை அதிகாரிகள் கலக்கத்தில்..!

யுத்தக் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பவுள்ள உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை குறித்து உயர் இராணுவ அதிகாரிகளை அழைத்து அரசாங்கம் தெளிவுபடுத்தவுள்ளது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்பன தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விளக்கம் அளிக்கவுள்ளார்.…

தமிழக முதல்வரை வடமாகாண முதல்வர் உடன் சந்திக்க வேண்டும்!

ஈழத் தமிழினத்தின் சாபக்கேடு இன்னமும் தீர்ந்தபாடில்லை. அவர் அந்தப் பக்கம், இவர் இந்தப் பக்கம் என்ற விமர்சனங்கள் ஒரு புறம். இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டு எப்பாடுபட்டாவது தமிழினத்தை பலவீனப்படுத்துகிறோம் பார் என்போர் இன்னொரு பக்கம். உரத்துக் கதைக்க வேண்டிய தமிழ்ப் புத்திஜீவிகள் நமக்கென்ன என்பது போல தம்பாடு.…

விடுதலை புலிகளின் பெண் கடற்புலிகளின் தலைவி பகிரதி விடுதலை! இவரை…

விடுதலைப் புலிகளின் பெண் கடற்புலிகளின் தலைவியாக செயற்பட்டவரென பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட பகிரதி முருகேசு அல்லது மீலர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார். 02-03- 2015ம் திகதி பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக…

இலங்கைக்கான பயணத் தடை நீக்கம்; புலம்பெயர் தமிழருக்கு இனிப்பான செய்தி

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் அச்சுறுத்தல் மற்றும் உயிராபத்து காரணமாக இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் உள்ளிட்ட  இலங்கையர்கள் இலங்கை திரும்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளது. இலங்கை வருவதற்கு மாத்திரமன்றி இலங்கை கடவுச் சீட்டுக்களைப் பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.அந்தத் தடையும்…

காணாமல் போனோர் தொடர்பான மூவாயிரம் முறைப்பாடுகள் போலியானவை – பரணகம

1980ஆம் ஆண்டு முதல் காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் மூவாயிரம் முறைப்பாடுகள் பொய்யானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,…

ஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்னேஸ்வரன் தவறிழைக்கின்றார்: வாசுதேவ நாணயக்கார

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் தலையீட்டைக் கோருவதன் மூலம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தவறிழைப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான…

இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை:பிரித்தானியா!

இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்திடம் அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக இராஜாங்க அமைச்சர் ஹூகோ ஸ்வைரி இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவை…

யாழ்.பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 35 வருடங்கள் பூர்த்தி!

யாழ்ப்பாணத்தின் மிகப் பெரும் அறிவுப் பொக்கிசங்களில் ஒன்றான யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 35 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தென்னிலங்கையில் இருந்து சென்ற குண்டர்களால் யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. இலங்கையின் சமாதானமும், சகவாழ்வும் அன்று முதல் தீப்பற்றிக் கொள்ளத்…

மலையகத் தமிழ் மக்கள் புறம் தள்ளப்படுகிறார்கள் – ஸ்ரீதரன்

இலங்கையில் 200 வருடகால வரலாறு கொண்ட மலையகத் தமிழ் மக்களின் நிலவுரிமை, வீட்டுரிமைக்கான கோஷம் தற்போது வலுப்பெற்றுள்ளமைக்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் செயற்பாடுகளே காரணமாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் த.மு.கூட்டணியின் இணை உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். பலாங்கொடை மாரத்தென்ன தோட்டத்தில்…

எமக்கான அரசியல் தீர்வுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உந்து சக்தியாக நிற்பார்:…

நியாயமான ஒரு தீர்வை ஈழத்தமிழர்கள் பெறுவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் உந்துசக்தியாக நிற்பார் என்று தாம் எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா ஜெயராம் பெற்ற வெற்றியை வடக்கு மாகாண சபை வரவேற்றுப் பாராட்டும் அதேநேரம், அவரின் அரசுடன் கிட்டிய…

இந்தியா அழுத்தம் கொடுக்க முடியாது! லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

இலங்கையின் சுயாதீன தன்மையில் இந்தியா தலையீடு செய்ய முடியாது என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக முதலமைச்சர் ஜே.ஜெயலலிதா உள்ளிட்ட எவருக்கும் அதற்கான அதிகாரம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். சமஷ்டி கோரிக்கையினை வலியுறுத்தி வட மாகாண…

முள்ளிவாய்க்கால் நிகழ்வை வைத்து மக்களையும் தமிழர் தலைமையையும் கொச்சைப்படுத்தாதீர் !

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் கொண்டு இன்று வரை பலவிதமான போராட்டங்களையும், இழப்புக்களையும் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வந்துள்ளார்கள். அதில் ஒரு பகுதிதான் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள். இந்த நினைவுகூரும் நிகழ்வில் எல்லாரும் பங்குபற்ற வேண்டும்…

ஈழத்தில் சிறுவர்களுக்கு கஞ்ச கொடுத்து கெடுப்பது யார் ?

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் வசிக்கும் சிறுவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். கிளிநொச்சி, பாரதிபுரம், இரணைமடு ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் கஞ்சாப் பாவனையில் அதிகமாக ஈடுபடுவதாக சிறுவர் தொடர்பான புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. போருக்குப் பின்னர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும்…

தமிழர் பிரச்சினையை அரசாங்கம் கையிலெடுக்க காரணம்..! சர்வதேசத்துக்கு அஞ்சியே.

சரவதேச அழுத்தங்களுக்கு அஞ்சியும் சர்வதேச ஆதரவை தக்கவைக்கவும் மாத்திரமே தமிழர்களின் பிரச்சினைகளை அரசாங்கம் கையில் எடுக்கின்றது. அதையும் தாண்டி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் வடக்கு மீட்கப்பட்டதாக அர்த்தமில்லை.…

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு விரைவில் – பிரதமர்

போர் நடைபெற்ற சமயத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக தேடி அறிவதற்காக உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளை சிலரை நேற்று அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் இது குறித்து விளக்கியுள்ளார். பாதுகாப்புச்…

புலிகளின் முன்னாள் முக்கிஸ்தர் கட்டுநாயக்கவில் கைது

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ் என்பவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்ல தயாரான நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி…