பேராசிரியர் இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு…

ஆச்சே கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு போதிய உணவு, மருத்துவ உதவிகளை அளித்து தஞ்சம் அளிக்கவேண்டும் என்று தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்துள்ள இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண அரசாங்கத்திற்கு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி நன்றி தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுக்கு…

ஐ.நா.வில் ஒளிபரப்பப்பட்ட வடக்கின் குரல்கள்!

ஜெனிவாவில் இன்று மாலை ஜேர்மனியை தளமாகக் கொண்டியங்கும் Society for Threatened Peoples International (STPI) அமைப்பினால் இன்றைய தினம் 3:30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்தாய்வின் போது ‘வடக்கின் குரல்கள்` என்ற தலைப்பில் ஆவணப்படுத்தப்பட்ட காணொளி ஒன்று ஒளிபரப்பட்டிருந்தது. அக்காணொளியில் வழக்கறிஞர் ரட்ணவேல், மற்றும் அருட்தந்தை ரவிச்சந்திரன்…

இலங்கை கடினமான நீதிப்பொறிமுறை தொடர்பான பயணத்தை ஆரம்பித்துள்ளது: ஐ.நா விசேட…

கடந்த 13ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா.மனித உரிமை சபை 32வது கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பில், ஈழத் தமிழர்கள் தொடர்பில் பேசப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அங்கு ஈழத் தமிழர்கள் பற்றிய நிகழ்ச்சிநிரல் காணப்படவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் இலங்கை சென்றிருந்த, நீதிபதிகள் மற்றும்…

கரையிறங்கிய இலங்கை புகலிட பெண்களை தடுக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச்…

இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் இறங்கிய பெண்களை எச்சரிக்கும் வகையில் அந்நாட்டு காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் படகு இந்தோனேசியாவின் அச்சே பிராந்திய கடற்கரையில் கடந்த சனிக்கிழமை கரையொதுங்கியது. குறித்த…

நீதியை நிலைநாட்டும் போது சகல இலங்கையரும் உள்வாங்கப்பட வேண்டும்: சையிட்…

இடைமாற்ற கால நீதியை நிலைநாட்டுவது தொடர்பில் இலங்கை வழங்கிய உறுதிமொழியை நடைமுறைப்படுத்தும்போது சகல இலங்கையரும் உள்ளடக்கப்படுவதுடன், அவர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாவில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…

ஊமையர் சபையிலே உளறுவாயன் வித்துவான்!!!

"கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்" இது தமிழ் மக்கள் மத்தியில்ப புழக்கத்தில் இருந்து வரும் பழமொழி. இதனை நிரூபிக்கும் வகையில் சிலபுலம்பெயர்ந்த தமிழர்கள் நடந்து கொள்கின்றனர். புளிச்சல் ஏவறையுடன் உட்காந்திருந்து, இன்றைக்கு யாருக்கு துரோகிப் பட்டம் கொடுக்கலாம், யாரை யாருடைய முகவர் என கதை கட்டி விடலாம், யாருக்கு…

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான மென்போக்கு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது அமர்வு ஜெனீவாவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது. மனித உரிமைகள் பேரவை அமர்வில் வழமை போன்று இம்முறையும் இலங்கை விவகாரமும் கவனத்தில் எடுக்கப்படவிருக்கின்றது. ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கடந்த முறை அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எத்தகைய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது…

படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பல நாடுகளில்…

இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் பல்வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றிருப்பதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்றில் வெளிவந்துள்ள இது தொடர்பான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகளின் முக்கிய படையணிகளில் பணியாற்றிய 54 முக்கியஸ்தர்கள் நான்கு நாடுகளில்…

திட்டமிட்ட வகையில் தொடர்ந்தும் கொல்லப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள்!

இலங்கை இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு ஒரே மாதிரியாக மரணமடைந்து வருகின்றார்கள். இலங்கை இராணுவத்தால் புனர்வாழ்வு முகாமில் வைத்துப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளியான பூநகரி நல்லூர் மகா வித்தியாலய தமிழ் பாட ஆசிரியை செல்வி…

இலங்கை அகதிகள் 44 பேரை திருப்பி அனுப்ப இந்தோனேஷியா தீர்மானம்

கடந்த சனிக்கிழமை இலங்கையில் இருந்து சென்ற 44 அகதிகள், தாம் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்தோனேஷியாவில் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களை மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்க இந்தோனேஷிய அதிகாரிகள் தீர்மானம் எடுத்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் சட்டவிரோதமான முறையில்…

நாடு பிளவுபட வேண்டுமென்பது எனது நோக்கமல்ல – சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கை தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டத்தில் தங்கியிருக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழகத் தேர்தலில் வெற்றிபெற்ற அவருக்கு தாம் வாழ்த்து தெரிவித்ததாகவும் எனினும் அதில் எவ்வித உள்நோக்கம் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன்…

இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத தடைக்கற்களாக இராணுவம்: சிறீதரன் எம்.பி

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று காலை 9.30மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இணைத்தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கூட்டம் ஆரம்பமானது. 1. பூநகரி பிரதேச வைத்தியசாலைக்குரிய…

வடக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கக் கோரும் விக்கினேஸ்வரனை கோமாளி என்கிறார்…

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக, இலங்கை இராணுவ முகாம்களை அகற்றக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கொண்டு வந்த, வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது…

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை!– பந்துல குணவர்தன

இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்… இந்த நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அடக்குமுறைக்கு…

வெளிநாடுகளிலிருந்து யாழ்.வருவோராலேயே பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு!

இலங்கை கடற்பரப்பில் சண்டித்தனம் காட்டும் இந்தியா, பாகிஸ்தான் கடற்பரப்பில் அணுவாயுதத்திற்கு பயந்து அத்துமீறுவதில்லை என ஜே.வி.பி. எம். பி. பிமல் ரத்னாயக்க நேற்று சபையில் தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து யாழ். குடா நாட்டுக்கு விடுமுறைக்காக வருவோரால் “பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்” அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று…

மீண்டும் திறக்கும் ஐ.நா. அரங்கும், இலங்கையின் தப்பிக்கும் தந்திரமும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கலப்பு விசாரணைப் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத்தொடரில்…

நெறி பிறழ்ந்த நடத்தையினால் சீரழியும் மனித விழுமியங்கள்!

“உரைத்திடும் உலகமெல்லாம்....” என்ற சிவஞானசித்தியாரில் உள்ளவாக்குக்கு இணங்க அன்றையகால சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்றே மக்களது இல்லற வாழ்வு அமைந்தது. மேலும் பெண்களின் ஒழுக்கமே சமூகத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்தது. அந்த ஒருவனும் ஒருத்தியும் பிறன்மனை நேக்கா பெருவாழ்வு வாழவேண்டும் என்பதை வள்ளுவர் திருக்குறளில் அழுத்திக்…

திருச்சியில் இலங்கை அகதிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது

திருச்சி சிறப்பு தடுப்பு முகாமில் உள்ள நான்கு ஈழ அகதிகளில் நேற்று முன்தினம் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது குடும்பங்களுடன் இந்தியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரியே குறித்த அகதிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களில் அவுஸ்திரேலியா…

அம்பாறை பெண்களுக்கு இந்தியா உதவி

போரினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட பெண்களுக்கு இந்தியா உதவிகளை வழங்கவுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்தியஉயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. அம்பாறையில் இடம்பெற்ற இது தொடர்பான நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் வை கே.சிங்ஹாவும் பெண் விவகார அமைச்சின் செயலாளர் சந்திராணி சேனாரட்னவும் கையெழுத்திட்டனர். இதன்மூலம் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு…

அரசின் தீர்மானத்துடன் ஜெனிவா செல்கிறார் மங்கள சமரவீர

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத் தொடர் எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளக விசாரணை பொறிமுறையின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார். எதிர்வரும் 28ம் திகதி ஜெனிவா பயணமாகவுள்ள…

ஐ.நாவில் மற்றுமொரு சவாலையும் கடக்குமா சிறிலங்கா?

எதிர்வரும் வாரத்தில் தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்கா மற்றுமொரு பாரிய சவாலை கடந்தாக வேண்டுமென கொழும்பு ஊடகமொன்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு எச்சரித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை Sri lanka - Monitoring…

(ஈழத்) தமிழ் கலைகள் இன்றைய காலகட்டத்தில் வளர்க்கப்படுகிறதா? சிதைக்கப்படுகிறதா?

உலகத்திலுள்ள அனைத்து விடயங்களையுமே தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நமது உள்ளங்கைகளில் கொண்டு வந்து விட்டது. இது அன்றாட வாழ்கையில் நமக்கு நன்மையை அளித்திருக்கிறது என்பதுடன், உலக மக்களின் கலை கலாச்சாரங்களையும் அனைவரும் அறிந்து கொள்வது இலகுவாகிவிட்டது. இதன் மூலமாக கலைகளுக்குள் வித்தியாசமான விதிமுறைகளை சோதித்துப் பார்த்து புதிய கலப்புகளை உருவாக்கி…

இனப்பிரச்சினைக்கான தீர்வை வருட இறுதிக்குள் எட்டுவதே இலக்கு!- சம்பந்தன்

பல்வேறுபட்டவர்கள் சில பல கருத்துக்களைக் கூறினாலும் நியாயமான நிரந்தர தீர்வொன்றை ஏற்படுத்துவதற்குரிய முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய உயர்…