சாவகச்சேரி வெடிபொருட்கள்! யாருக்கு வைத்த குறி?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் சாவகச்சேரியில் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் கிளைமோர்கள், வெடிபொருட்கள் பரவலான கவனிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவரை வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் சாவகச்சேரி…

இராணுவப் புலனாய்வுப் பிரிவு செய்த கொலைகள், புலிகள் மீது சுமத்தியமை…

கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட போதிலும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் அரசியல் மற்றும் தனிப்பட்ட பகை காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல கொலைகள் குறித்த தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொலைகளில் பிரபல இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல்…

தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் 10 வருடங்கள் பழைமை வாய்ந்தவையாம்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மறவன்புலவு பகுதி வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியன 10 முதல் 15 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டவை எனவும், விடுதலைப் புலிகளின் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டவை என்றும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு…

உண்மையைக் கண்டறியுங்கள்!

யாழ். சாவ­கச்­சேரி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மற­வன்­புலவு வள்­ளக்­குளம் பகு­தியில் நேற்­று­ முன்­தினம் தற்­கொலை அங்­கி­யொன்று உள்­ளிட்ட வெடிபொருட்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­மை­யா­னது நாட்டு மக்கள் மத்­தியில் பல்­வேறு சந்­தே­கங்­க­ளையும் ஒரு­வி­த­மான பதற்­றத்தையும் தோற்­று­வித்­தி­ருந்­தது. குறித்த வீட்டில் கஞ்சா உட்­பட போதைப்­பொ­ருட்கள் இருப்­ப­தாக சாவ­கச்­சேரி பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லுக்­க­மைய அந்த வீட்டை சோத­னை­யிட்­ட­போதே…

தற்கொலை அங்கி கண்டெடுப்புக்குப் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல்! குற்றம்…

சாவகச்சேரியில் தற்கொலைத் தாக்குதல் அங்கி கண்டெடுக்கப்பட்டதன் பின்னால் பலரும் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றை முன்னெடுக்க முயற்சிப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில், சாவகச்சேரி தற்கொலைத் தாக்குதல் அங்கி கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொலிசார்…

புலிகளின் நிழலில் வாழும் பேரினவாத அரசியல்

தற்கொலைக் குண்டு அங்கியும் வெடிபொருட்களும் யாழ். சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மீட்கப்பட்ட செய்தியானது அரசாங்கத்துக்கு எதிரான அரசியல்வாதிகளை உரத்துப் பேச வைத்திருக்கிறது. நாட்டின் தேசிய பாதுகாப்பு அரசாங்கத்தை விட்டு முற்றாகவே கை நழுவிப் போய் விட்டதென்ற தோரணையில் மஹிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கண்டன அறிக்கைகளை வெளியிடத்…

பொது எதிரணியின் சதியாகவும் இருக்கலாம்!- விக்ரமபாகு கருணாரட்ன

சாவகச்சேரியில் கிடைக்கப்பெற்ற தற்கொலை அங்கி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் சதித்திட்டமாகவும் இருக்கலாம் என்று நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள சமசமாஜ கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,…

வடக்கில் மீண்டும் இராணுவ சோதனைச்சாவடி: பயணிகள் அவதி

மன்னாரில் மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வருவதால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பாக குறித்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி…

கைதானவரின் இரண்டாவது மனைவியே தகவல் வழங்கினார்! – கைதானவர் கூறும்…

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளவரின் இரண்டாவது மனைவியே தகவல்களை பொலிஸாருக்குத் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு- மறவன்புலவில் நேற்று முன்தினம்…

எமது பிள்ளைகள், கணவன், மனைவிகள். இருக்கின்றனரா? அமைச்சர் மங்கள முன்னிலையில்…

காணாமல் போனேரின் உறவுகள் தமது உறவுகளுக்கு நீதிகேட்டு,  காணமால் போனோர்களின் உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவி இ.செல்வராணி தலைமையில் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலை…

அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் தலைமையில் சரணடைந்தவர்கள் எங்கே?: போராளி உமாபதியின்…

முல்லைத்தீவு நீதிமன்றில் இராணுவம் தெரிவித்தது போன்று அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் தலைமையில் சரணடைந்தவர்களின் பெயர் விபரம் வெளியிடப்படவேண்டும். அதனுடாக ஆணைக்குழு தனது கணவனை கண்டுபிடித்து தரவேண்டும் என போராளி பரராஜசிங்கம் உமாபதியின் மனைவி திருமதி.உமாபதி ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கண்ணீர் மல்ல வேண்டுகோள் விடுத்துள்ளார் மன்னாரில் நேற்று நடைபெற்ற காணாமல்…

புலிகளின் தலைவரை இராணுவம் சுடவில்லை! கருணா கூறினார்: சிவநாதன் கிஷோர்

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் தென்னிலங்கையில் கூறும் தகவல் என்ன? அவற்றில் உண்மை உள்ளதா? புலிகளின் தலைவர், பொட்டு அம்மானை கொழும்பு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் நம்பகத்தன்மை உள்ளதா..? நந்திக்கடல் பகுதிக்கு கருணா சென்று வந்தார் அவர் கூறியது என்ன..? லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட…

இரண்டு இலட்சம் இராணுவத்தில்; ஒன்றரை இலட்சம் இராணுவம் வடக்கில் நிலை…

இலங்கை மொத்தமாக இரண்டு இலட்சம் இராணுவத்தினரைக் கொண்டுள்ளது. அதில், ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் வடக்கிலேயே நிலை கொண்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். மீதமுள்ள 50 ஆயிரம் இராணுவத்தினரில், 20 ஆயிரம் இராணுவத்தினர் மட்டக்களப்பிலும், 30 ஆயிரம் இராணுவத்தினர் ஏனைய…

அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களின் முதன்மைக் கோரிக்கை: மனோ கணேசன்

தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வினையே முதன்மைக் கோரிக்கையாகக் கொண்டிருக்கின்றார்கள். அதனை முன்னிறுத்தியே தொடர்ந்தும் போராடி வந்திருக்கின்றார்கள் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ““அடிப்படை உரிமைகளை…

இறுதிப்போர் இரகசியங்கள்! இலக்கு வைக்கப்படும் தமிழர்கள்

இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது என்று முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சில தகவல்களை வௌயிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் இறுதிப்போர் பற்றிய பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழினியின் நூலும் வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு விவகாரங்களுமே இறுதிப்போர் பற்றிய…

சமூகப் புறக்கணிப்பிலும் வறுமையிலும் உழலும் முன்னாள் பெண் போராளிகள்!

பெண் போராளிகள் தடுப்பிலிருந்து விடுதலையாகி 4, 5 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஒரு பிரிவினர் இன்னும் திருமணமாகாமல் தனித்தே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைத் திருமணம் செய்வதற்கு யாரும் முன்வருகிறார்கள் இல்லை. விடுதலைப் புலிகள் உயிர்ப்போடு இருந்த காலப் பகுதியில் அமைப்பில் இருந்த பெண் போராளிகள் மீது தமிழ் சமூகத்தினர்…

கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்ட முன் வரைபு தொடர்பில், கொழும்பு வாழ் தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. வட கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிளும் மக்கள் கருத்து பதியப்பட்டு வருகின்ற…

வவுனியாவில் இராணுவக் குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து வடக்கு மாகாண சபையில்…

வவுனியாவில் இராணுவத்தினருக்கான குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து வடக்கு மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவத்தின் 56வது படைப்பிரின் ஒத்துழைப்புடன் வவுனியா கொக்எலிய பிரதேசத்தில் இராணுவ வீரர்களுக்கென 40 பேர்ச்சர்ஸ் வீதம் 80 காணித் துண்டுகளில் ‘நல்லிணக்க படைவீரர் கிராமம்’ என்கிற…

‘காலநிலைக்கு ஒவ்வாத’ 65,000 வீடுகள் திட்டம்; வடக்கு மாகாண சபையோடு…

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள 65,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தினை வடக்கு மாகாண சபையோடு கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரும் தீர்மானமொன்று இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையோடு கலந்து ஆராயாமல் குறித்த வீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி…

இந்திய இலங்கை பாலம் அமைப்பு தொடர்பில் முனைப்புக்கள் இல்லை:-ரணில்…

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்படவில்லை என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ரணில் இதனைக் குறிப்பிட்டார். ஏற்கனவே பல தடவைகள் நாடாளுமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…

பிரபாகரன் மகன் இறந்தது எப்படி யாரால் : பொன்சேகா பரபரப்பு…

இறுதிக்கட்ட போர் நடைபெற்ற கால கட்டத்தில் நான் சீனா சென்றிருந்தேன். மே 11 முதல் மே 17 வரை நான் இலங்கையில் இல்லை. புலிகளை எப்படி தாக்குவது என்ற வரைபடங்கள் உபகரணங்கள் என பல விடையங்களை நான் சீனாவுக்கு எடுத்துச் சென்றிருந்தேன். அங்கே இருந்த வண்ணம் ஒரு நாளைக்கு…

நம்பகமான விசாரணையே எமக்குத் தேவை:- பர்ஹான் ஹக் தெரிவிப்பு !

இலங்கையில் இடம்பெற்ற போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளையே ஐ.நா வலியுறுத்துவதாக ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னர், நீதிச்செயற்பாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கப்போவதில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது தொடர்பாக எழுப்பிய…

புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன? தமிழினியின் “ஒரு கூர்வாளின் நிழல்“…

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமரன் எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழல் (போராட்டக் குறிப்புக்கள்)’ மற்றும் ‘போர்க்காலம் (கவிதை தொகுப்பு)’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவுக் கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை…