சர்வதேசத்துடன் நெருங்கிப் பழகுங்கள்! மஹிந்த அரசைப் பலவீனப்படுத்தலாம் என மோடி

நீங்கள் சர்வதேசத்துடன் நெருங்கிப் பழகுங்கள். அதன் மூலம் மஹிந்த அரசைப் பலவீனப்படுத்த முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி எமக்கு ஆலோசனை வழங்கினார். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவைர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இலங்கைத்…

இறுதிப்போரில் பொதுமக்கள் மரணங்களுக்கு ஐ.நா. சபையின் நடவடிக்கையின்மையே காரணம்!- ரொய்ட்டர்

இறுதிப்போரின் போது இலங்கையில் பொதுமக்களை காப்பாற்றுவதில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை தோல்வி கண்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் 2009 ம் ஆண்டில், கடுமையான போர் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் பிரிவினைவாதிகளால் மனித கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை இலங்கை அரசாங்கப் படையினர் சுற்றிவளைத்தனர். இந்தநிலையில் 2011ம் ஆண்டில்…

அரசியல் இல்லாத ஆயுதம்தான் புலிகளை அழித்தது! 25 ஆண்டுகள் கழித்து…

வரதராஜ பெருமாள், ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமுல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டவர். புலிகளின் கொலைப் பட்டியலில் அவர் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் அங்கிருந்து தப்பினார். எங்கே இருக்கிறார் என்பதே…

அதிகாரப் பகிர்வுதான் தீர்வு!

இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடகிழக்கு மாகாணம் அமைந்து, இந்திய அமைதிப்படை உதவியுடன் தேர்தல் நடத்தப்பட்ட வேளையில், பல்வேறு போராட்ட அமைப்புகள் அரசியல் அமைப்புகளாக தேர்தலைச் சந்தித்தன. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் புறக்கணித்த தேர்தலில் ஏனைய போராளிக் குழுக்களும், அரசியல் அமைப்புகளும் கலந்து கொண்டன. அந்தத் தேர்தலில் வெற்றி…

சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்கத் தயார்’ : சரத் பொன்சேகா

மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு…

“இந்திய பிரதமரை விக்னேஸ்வரன் சந்திக்க இலங்கை அரசின் அனுமதி அவசியம்”

வடமாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன்   இலங்கையின் வடமாகான முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வேண்டுமானால் அவர் அதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வது அவசியம் என்று இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சரவை…

கூட்டமைப்பு நியுடெல்லியின் எடுபிடியாக மட்டுமே செயற்படுகிறதே தவிர தமிழ் மக்களின்…

தமிழ் மக்களுக்கு என்று ஒரு நிகழ்ச்சி நிரலை வைக்காது, வெறுமனவே நியுடெல்லி கூறுகின்ற கருத்துக்களுக்கு இணங்கி, கேள்விகள் எதுவும் எழுப்பாமல் செயற்படுவது. கூட்டமைப்பு நியூடெல்லியின் எடுபிடியாக மட்டுமே செயற்படுகிறதே தவிர தமிழ் மக்களின் நலன்களை மையப்படுத்தி எந்தவொரு செயற்பாடுகளையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…

இலங்கைக்கு எதிராக நோர்வே அரசாங்கம் வாய் திறக்க வேண்டிய தருணம்…

இலங்கைக்கு எதிராக நோர்வை அரசாங்கம் வாய்த்திறக்க வேண்டிய தருணம் வந்திருப்பதாக நோர்வேயில் வெளியாகும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. யுத்த காலத்தில் இலங்கை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நோர்வே அரசாங்கம் நேரடி தொடர்புகளை கொண்டிருந்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும், இலங்கை மக்களின் நலன் தொடர்பில் நோர்வே அரசாங்கத்துக்கு அக்கறை…

வன்னி நிலைவரத்தை கவனமாக கேட்டறிந்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

காணி அபகரிப்பு, காணாமல் போகச்செய்யப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் விடுதலை, போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு, அனைத்து இயக்கங்களினதும் போராளிகளுக்கான வாழ்வாதாரம், உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீனுடன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துரையாடினார். பாராளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்ட…

புலிகள் ஆயுதப்போராட்டம் போல தற்போது அவர்களின் பிரச்சாரமும் வலுப்பெற்று வருகிறது…

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைப் போன்றே அவர்களின் பிரச்சாரப் போராட்டமும் வலுவானது என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டொக்டர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார். ஆயுதப் போராட்டம் எவ்வாறு முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டதோ அதே தீவிரம் புலிகளுக்கு எதிரான பிரச்சாரப் போராட்டத்திலும் காண்பிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதே முனைப்பு…

மோடியைப் பயன்படுத்தி வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற சம்பந்தன் மேற்கொண்ட முயற்சி…

இந்திய பிரதமர் நரேந்திர மோடியைப் பயன்படுத்தி, வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. நரேந்திர மோடியைப் பயன்படுத்தி வடக்கின் 15 படையணிகளை விலக்கிக்கொள்ள முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில்…

ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை! புலிகளுக்கு சம்பந்தமே…

24 ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!  குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய…

பிரித்தானி​ய உயர்ஸ்தானிகர் புதுக்குடி​யிருப்பில் மக்கள் சந்திப்பு! புலனாய்வுத் துறையால் மக்களுக்கு…

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீன் அவர்களும் பிரதிநிதிகளும் இன்று பகல் 12.15 அளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 3 குடும்பங்களை அவர்களின் இல்லங்களுக்குச் சென்று பார்வையிட்டதோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். அதேவேளை சற்று முன்னர் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அவர்கள் பார்வையிட்ட இல்லங்களில் ஒன்றுக்குச்…

இலங்கை அரசுடன் பேசலாம், இந்தியா மத்தியஸ்தம் வகிக்குமா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியமை முக்கியமான நிகழ்வு என்பது மறுக்க முடியாத உண்மை. மோடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியமை முக்கியமானது என்பதற்காக, மோடி பலமான உறுதி மொழிகளை எங்களுக்குத் தந்து விட்டார் என்று யாரும் கருதிவிடக்கூடாது.…

ஈழத் தமிழர்களின் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல: பழ.…

ஈழத் தமிழர்களின் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல என, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக பாஜக தலைவர்கள் இரட்டை…

காணாமல் போனவர்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு உறவுகள் நீதிமன்றில் ஆஜராக…

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பில் , உறவினர்களினால் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்குச் செல்ல விடாது அச்சுறுத்தும் நடவடிக்கைளில் படையினர் ஈடுபட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர் திருமதி  அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு…

இலக்கை அடைய இந்தியா உறுதுணையாக இருக்கும்!- நாடு திரும்பிய சம்பந்தன்…

தமி­ழர்கள் சுய­ம­ரி­யா­தை­யுடன் நியா­ய­பூர்­வ­மான அபி­லா­ஷை­களைப் பெற்று கௌர­வ­மாக வாழ்­வ­தற்­கு­ரிய இலக்கை அடை­வ­தற்கு இந்­தியா உறு­து­ணை­யாக இருக்கும் என தெரி­வித்­துள்ள தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன், இந்­தியப் பயணம் திருப்­தி­க­ர­மான ஆரம்­ப­மாக அமைந்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். இந்­தி­யா­வி­லி­ருந்து நேற்­றைய தினம் நாடு திரும்­பிய இரா.சம்­பந்தன் இந்­தி­யா­வுக்­கான தமிழ்த் ­தே­சியக்…

இலங்கை தமிழர் பிரச்சினை! இந்தியாவின் அடுத்த நகர்வு என்ன?

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை இந்தியா அழைத்துப் பேச்சு நடத்­தி­யுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகி­றது? என்ற வினா, கொழும்பு அர­சியல் அரங்கில் எழுந்­தி­ருக்­கி­றது. இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு, புது­டில்­லிக்கு மேற்­கொண்ட பய­ணமும் சரி, அதன் போது இந்­தியத் தரப்பில் இருந்து…

நவநீதம்பிள்ளை இன்னொரு இரும்புச் சீமாட்டி

கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக இலங்கை அர­சாங்­கத்­துக்கு நெருக்­கடி கொடுக்கும் ஒரு மனி­த­ராக இலங்கை அர­சாங்­கத்­தினால் அதி­க­ளவில் வெறுக்­கப்­பட்ட ஒரு மனி­த­ராக இருந்து வந்த நவ­நீ­தம்­பிள்ளை, இன்­றுடன் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பத­வியில் இருந்து நீங்கப் போகிறார். லூயிஸ் ஆபர் அம்­மை­யாரை அடுத்து, ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ராக…

எமது மக்களது குறைகளை வெளிநாடுகளுக்கு நாம் சொல்வதை அரசு தடுக்கமுடியாது

வடக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கிறோம் என அரச தரப்பினர் கூறுக்கின்றனர். அவர்கள் தமது பொக்கற்றுக்குள் இருந்து காசை எடுத்து எங்களுக்கு தரவில்லை. யாரோ செலவு செய்ய, யாரோ கட்டிமுடிக்க, அவற்றை திறந்துவைக்கவும் ஆரம்பித்துவைக்கவும் தான் இங்கு வந்து தாங்கள் செய்ததாக தம்பட்டம் அடிக்கின்றார்கள். அரசு நடுவில்…

தமிழ் – முஸ்லிம்களின் பொது வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்த தீர்மானம்?

தமிழ் - முஸ்லிம் மக்களின்  ஜனாதிபதி பொது வேட்பாளராக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை தெரிவு செய்வது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது. எதிர்வரும் நான்காம் திகதி முதல் ஆறாம் திகதி வரையில் வவுனியாவில் நடைபெறவுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட உள்ளது. யாரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது…

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஆதரவு தருமாறு ஐ.நா குழு இலங்கையிடம்…

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பலாத்கார மற்றும் சுயாதீனமற்ற ரீதியில் காணாமல் போனோருக்கான நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை மனித உரிமை காப்பாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்களும் நிறுத்தப்படவேண்டும் என்று அந்த குழு கேட்டுள்ளது. ஐக்கிய…

இலங்கை போர்க்குற்ற விசாரணையில் ஐ.நா. குழு தமது இயலுமையை காட்டவேண்டும்!-…

இலங்கையில் இறுதிப் போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஐக்கிய நாடுகள் விசாரணையாளர்கள் தமது விசாரணைகளை திறந்தநிலையில் மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களின் கருத்துக்களை தாங்கி இணையத்தளம் ஒன்றில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்;டுள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின்போது போர்க்குற்றங்களில் இலங்கை…