ஈழத் தமிழர்களுக்கு விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கும்! -இல.கணேசன்

இலங்கையில் உள்ள ஈழத்து தமிழர்களுக்கு மிக விரைவில் மோடி தலைமையில் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாக அவுஸ்திரேலியாவில் இல. கணேசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடந்த பாரதி விழாவில் உரையாற்றிய போதே இந்தியா பாஜக தலைவர்களில் ஒருவரான இல. கணேசன் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக…

ஐநா விசாரணைக்குழு தொடர்பாக வடமாகாண சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது உகந்ததல்ல!…

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக்குழு தமது விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் நிலையில், குறித்த விசாரணைக்குழு தொடர்பாக வடமாகாண சபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவது சமகாலத்திற்கு உகந்ததல்ல. என நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். வடகிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும், ஒரு இன அழிப்பு…

ஐ.நாவின் காணாமல் போதல் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க இலங்கை மறுப்பு

காணாமல் போனோர் தொடர்பாக இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் முடியும் வரை, சுயமின்றி காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை குழு இலங்கைக்கு விஜயம் செய்வதை அரசாங்கம் ஏற்க மறுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் 27வது மனித உரிமைகள் பேரவை அமர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிக்கும் நிலையில்,…

கோத்தபாயவை சந்திக்கப் போவதில்லை?: த.தே.கூட்டமைப்பு

வடமாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை இன்று வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம், தாம் வடமாகாண முதலமைச்சர்…

ஐ.நா கட்டுப்பாடுகளை மீறும் சிறீலங்கா அரசாங்கம் எவ்வாறு தீர்வை வழங்கும்…

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக இருந்துக் கொண்டு, அதன் கட்டுப்பாடுகளை மீறி செயற்படுகின்ற சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கும் என்று நம்புவது? என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க வலியுறுத்தி, கடந்த…

தமிழ் மக்களது போராட்டம் நியாயமானது! யாருமே அதை நிராகரிக்க முடியாது!!…

தமிழ் மக்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது என தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை.சேனாதிராஜா அவர்கள் கூறியுள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் கிளையில் மாவை சேனாதிராஜாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்று நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் ஊரையாற்றும் போது:…

வடமாகாண நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் வருவதை இராணுவத்தினர் தடுக்கின்றனர்

வடமாகாண சபையின் நிகழ்வகளில் கலந்து கொள்கின்ற பொதுமக்கள், தமது கட்டுப்பாட்டில் இருந்து விலகிச் சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்களை அங்கு செல்லவிடாமல் இராணுவத்தினரும், அவர்களைச் சார்ந்தோரும் தடுப்பதற்கு முயற்சிப்பதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியிருக்கின்றார். இதற்காக அவர்கள் அந்த மக்களை அச்சுறுத்துவதாக, தான் கேள்விப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.…

போராடினால் மட்டுமே சிறுபான்மை இனங்களுக்கு உண்டு வாழ்வு – சுரேஸ்…

நாங்கள் அமைதியாக இருந்தவாறு தீர்வை எதிர்பார்க்க முடியாது. தீர்வு தானாகவே வரும் என்ற மனப்பாங்கில் இருந்தால் எதுவும் இங்கு நடவாது. வெறுமனே போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எமக்காக யாரும் போராட வரமாட்டார்கள். சிறீலங்கா அரசின் அடக்குமுறைகள் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்பட்டு வரும் நாங்கள் முதலில்…

பாலச்சந்திரன் கொலை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன – மகிந்த ராஜபச்ச

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகரனின் புதல்வன் பாலசந்திரனின் கொலை தொடர்பில் விசாரணைகள் நடத்துவதாக சிறிலங்காவின் ஜானாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெறும் போது யார் யாரை சுட்டார்கள் என்பது சரியாக தெரியாது. ஆனால் இதனை இராணுவத்தினர்…

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்: மஹிந்தவுக்கு பதிலளித்த சம்பந்தன்

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஹிந்து பத்திரிகைக்கு செவ்வியளித்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், அரசாங்கத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைக்கு…

இனவழிப்பு என்னும் சொல்லை உச்சரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பயப்படுகின்றதா?…

இனவழிப்பு என்னும் சொல்லை உச்சரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பயப்படுகின்றதா? என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வட மாகாண சபையின் விசேட அமர்வு நேற்று  காலை 9.30 மணியளவில் கைதடியில் உள்ள வட மாகாண சபையின் பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. இவ் விசேட…

இந்திய மீனவர்களின் செயல் இலங்கைக்கு மாத்திரமல்ல, இந்தியாவுக்கும் கெடுதல் தரும்:…

இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதன் மூலம் இந்திய மீனவர்கள் இலங்கையின் சுற்றலாடலை நாசமாக்குகின்றனர் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். ஒன்று இரண்டு என்றில்லாமல் நூற்றுக்கணக்கான இழுவைப் படகுகள் நாள்தோறும் இலங்கையின் கடற் பகுதிக்கு வந்து தொழிலில் ஈடுபடுகின்றன என்;று ஜனாதிபதி த ஹிந்து நாளிதழுக்கு…

த.தே.கூட்டமைப்பினருடன் பேசத் தயார்! அவர்கள் இணங்கவில்லை: மஹிந்த ராஜபக்ச

தாம் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேசத்தின் அழுத்தங்களை எதிர்நோக்கும் நிலையில், உள்நாட்டில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துமாறு அழுத்தத்தையும் எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக த ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…

வவுனியாவில் அமெரிக்க இராணுவம் ? அதிரும் தகவல் !

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 27வ் ஆவது கூட்டத்தொடர், ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 26ம் திகதிவரை இது இடம்பெறவும் உள்ளது. இந்த கூட்டத்தொடரில், மனித உரிமை அலுவலகத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணை குறித்து வாய்மூல அறிக்கை சம்ர்பிக்கப்படவுள்ளது. இந்த 27வது கூட்டத்தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை…

சம்பந்தனின் நிபந்தனைகளுடன் இணங்க முடியாது – திஸ்ஸ விதாரண

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனினால் விடுக்கப்பட்ட நிபந்தனைகளுடன் இணங்க முடியாது என சிரேஷ்ட அமைச்சரும், சர்வ கட்சி குழுவின் முன்னாள் தலைவருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது; “தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த மட்டத்திலும் கலந்துரையாடல்களை நடத்தினால், அது சிறந்ததாகும். இதனை முன்னோக்கி…

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை: இந்தியா

இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இந்திய பிரதிநிதி இந்த கருத்தை முன்வைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக…

சிறிலங்கா விவகாரம் : ஐ.நா மனித உரிமைச் சபையில் நடந்தது…

இன்று திங்கட்கிழமை தொடங்கிய ஐ.நா மனித உரிமைச்சபையி;ன் 27வது கூட்டத் தொடரில் , சிறிலங்காவினை மையப்படுத்தி இரு விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்ததாக ஜெனிவா செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய ஆணையாளராக பொறுப்பேற்றிருந்த செய்ட் ராட் அல்-உசேன் அவர்களது தொடக்கவுரையில், சிறிலங்கா தொடர்பில் அவர் குறித்துரைத்திருந்த விடயமும், இதனையொட்டி மற்றைய நாடுகளது…

பேச்சுகள் 6 வாரத்தில் முடிக்கப்பட வேண்டும் என்கிறார் சம்பந்தன்

இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் ஆறு வாரத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஞாயிறன்று முடிவடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதி நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இந்த நிபந்தனையை விதித்துள்ளார். அப்படியான பேச்சுவார்த்தையின் போது…

ஐநா விசாரணையை நிராகரிக்கிறோம்: மனித உரிமை கூட்டதொடரில் இலங்கை

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை கவுன்சிலின் 27ஆவது கூட்டத்தொடரின் துவக்கத்தில்இலங்கை சார்பாக உரையாற்றியுள்ள மனித உரிமை கவுன்சிலுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதர் ரவிநாத ஆரியசிங்க, இலங்கையில் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை நடத்துவதற்குப் பணித்திருந்த ஐநா மனித உரிமைக்…

மக்களின் உடல் மொழியை படையினர் ஆராய்ந்து வருகின்றனர்: வடக்கு முதல்வர்

இராணுவத்தினர் வடக்கில் உள்ள குடும்பங்கள் பற்றிய சகல விபரங்களையும் கணணியில் உள்ளடக்கி வருகின்றமை தொடர்பாக எம்முள் பலருக்கு தெரியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா நகர கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இறுதி அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்…

தனக்குத் தானே ஆப்பு வைக்கும் அரசாங்கம்

13ஆவது திருத்தச்சட்டத்தின் பற்களைப் பிடுங்கும், அரசாங்கத்தினதும், சிங்களத் தேசியவாதிகளினதும் நடவடிக்கைகளே, தமிழர்களுக்கு வலுவான அதிகாரப்பகிர்வு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தும் கருவிகளாக மாறத் தொடங்கியுள்ளன. 13ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள், குறைக்கப்படுவதும், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதும், இந்தியாவை விசனம் கொள்ள வைத்துள்ளது என்றே தெரிகிறது. அண்மையில் இந்தியப் பிரதமர்…

விடுதலைப் புலிகளின் கொள்கையை வெளிப்படுத்தும் கூட்டமைப்புடன் தனிப்பட அரசாங்கம் பேசாது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமாதானத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனினும் பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூக்க இடமளிக்கப்…

வடக்கில் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தும் மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள்!

மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள் வடக்கில் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். மேற்குலக நாடுகளின் ராஜதந்திர அதிகாரிகள் வட பகுதிக்கு இரகசிய விஜயங்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறு இரகசிய விஜயங்களை மேற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இலங்கைக்கான…