பிள்ளைகள் இலவச கல்வியை இழந்துள்ளனர் – எதிர்க்கட்சி தலைவர்

கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை அரசாங்கம் தாமதப்படுத்துவதன் ஊடாக மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் – அதிபர்கள் சம்பள முரண்பாட்டிற்கு நியாயமான தீர்வை உடனடியாக வழங்கி மாணவர்கள் கல்வியை…

சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இருந்து விடுவிக்கபட்ட இலங்கை!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் காரணமாக பயணத்தடை விதித்திருந்த நாடுகளின் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். எனினும் தற்போது பல நாடுகளுடன் இராஜதந்திர மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா,…

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமா? அரசாங்கம் எடுக்கவுள்ள 3 தீர்மானங்கள்

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு இன்னமும் இரண்டு மாத காலப்பகுதிகளே உள்ளன. இதனால் இதுவரையில் வரவு செலவு திட்டம் தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய நீர்ப்பாசனம், நெடுஞ்சாலைகள், விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம்…

இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு! மூடிஸ் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு இன்னும் குறைவாகவே இருப்பதாக "மூடிஸ்" முதலீட்டாளர்கள் சேவை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் , "மூடிஸ்", செப்டம்பர் 10ஆம் திகதி அன்று, இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு நிலை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2021, ஆகஸ்ட் இறுதியில் இலங்கையின் அந்நிய செலவாணி…

அடுத்த மாதத்தின் பின் மின்சார தடை

அடுத்த மாதத்தின் பின்னர் மின்சார விநியோகத்தில் சிக்கல் நிலைமை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சாரம் பயன்படுத்தும் மக்கள் 44 பில்லியன் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தாமையினால் இந்த நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் மக்கள் உடனடியாக மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை…

இலங்கை போரின்போது காணாமல் ஆக்கப்பட்டோர்: ஐ.நாவை நாடும் உறவினர்கள்

இன அழிப்பு தொடர்பான உண்மையைக் கண்டறியும் பணிக்குழுவொன்றை நியமிக்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, நேற்றைய தினம் (15) ஐக்கிய நாடுகள் சபையின் மனித…

இலங்கையின் முழு கடனையும் அடைக்க இதுவே ஒரே வழி! –…

இலங்கை எதிர்கொள்ளும் வெளிநாட்டு கடன் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி மன்னார் கடற்படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆராய்வதுதான் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை தற்போது 47 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கடன்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிறப்பு…

இலங்கை மத்திய வங்கி விதித்த தடை – வெளிநாடுகளிலிருந்து நாடு…

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு வரும் போது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கொண்டு வரும் பொருட்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் 623 பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை சில நபர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக சிலர்…

இலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய அமைச்சர்…

அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, எழுந்த கண்டனங்களினால் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார். தான் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடுத்து, அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாத நோக்கில், இன்று முதல் தனது…

அதிகம் சம்பளம் பெறுவோரிடமிருந்து வரி அறவிடப்படமாட்டாது

ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து 5% வரி அறவிடும் எந்த எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் இது தொடர்பில் எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்ததார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற…

இலங்கை விவகாரம்! – ஐ.நாவில் அதிருப்தி வெளியிட்ட பிரித்தானியா தலைமையிலான…

இலங்கையில் தற்போதைய மனித உரிமை முன்னேற்றங்கள், பொறுப்புக்கூறல், பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட விடயங்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கான முக்கிய குழுவில் அங்கம் வகிக்கும் கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் கவலையை எழுப்பியுள்ளன. ஒரு…

நாட்டை திறப்பது தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

எதிர்வரும் வாரம் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்க முடியும் என கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்து்ளளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட இராணுவ தளபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பான இறுதி முடியு…

நாளை முதல் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை!

மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் நாளை (15) முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டையை பரிசோதிக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். அல்லது அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் தெரிவித்துள்ளார்.…

யாழில் அதிகரித்துள்ள கோவிட் மரணங்கள்! கார்ட்போர்ட் சவப்பெட்டிக்கான கோரிக்கை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் உயிரிழக்கும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சவப்பெட்டிகளுக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமையினால் யாழ்ப்பாணத்திற்கு கார்போர்ட் சவப்பெட்டிகளை விற்பனை செய்யுமாறு சவப்பெட்டி விற்பனைபாளார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சவப்பெட்டி விற்பனை செய்யும் நபர்கள் இது தொடர்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு…

இலங்கை நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எம்பி…

மப்றூக், இலங்கை இலங்கையின் நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜநாமா செய்துள்ளார். நாடாளுமுன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்கவிடம், இன்று திங்கட்கிழமை தனது ராஜிநாமா கடிதத்தை கப்ரால் ஒப்படைத்தார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் பொதுஜனபெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற…

2.5 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை

திரட்டப்பட்ட எரிபொருள் இறக்குமதி நிலுவையின் ஒரு பகுதியை ஈடுசெய்ய வெளிநாட்டு காப்புறுதி அல்லது ஓய்வூதிய நிதியிலிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக எரிசக்தி அமைச்சக தரப்புகள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை, இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு, முன்மொழிவுகளை…

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்திருந்தால் நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும்!ஷெஹான் சேமசிங்க

எதிர்க்கட்சியிடம் கௌரவமாக வேண்டுவது யாதெனில், கோவிட் பெருந்தொற்றை அரசியல் மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்பதேயாகும் என ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாட்டில் பெருந்தொற்று நிலைமை நீடிக்கும் இந்தக் காலத்தில் நல்லாட்சி…

இலங்கை மக்களின் வருமானத்தில் 5 வீதத்தை வரியாக அறவிட திட்டம்?

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நெருக்கடிக்கு மத்தியில் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொது சேவைகளை நடத்தி செல்ல பொது மக்களின் மாதாந்த வருமானத்தில் 5 வீதம் வரி அறவிட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…

வைரஸ் தொற்று நோய் பரவலைத் தடுக்க இராணுவம் ஏன் தலையிடுகிறது?

பாதுகாப்பு அமைச்சும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலமாக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் ஹெரோயின் உட்பட பாரியளவிலான பல்வேறு போதைப் பொருள்களும், பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடணத்திற்கு…

இலங்கையில் விரைவில் ஏற்படும் பெரும் அபாயம்; எச்சரிக்கும் சஞ்சிகை

இலங்கையில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதென இந்தியாவின் பிரபல Frontline சஞ்சிகை தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பிடியில் இலங்கை சிக்கியுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உணவு மாத்திரமின்றி மருந்து தட்டுப்பாடும் இலங்கையில் ஏற்பட்டுள்ளதாகவும், சீனி, அரிசி உட்பட பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள்…

623 பொருட்களின் இறக்குமதி உத்தரவாத தொகையை 100% உயர்த்திய இலங்கை…

இலங்கையில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற தெரிவு செய்யப்பட்ட 623 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 100 வீத உத்தரவாதத் தொகையை வைப்பிலிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறையை உடன் அமலுக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி இன்று (09) அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நேற்றைய தினம்…

இலங்கையில் தாக்குதல் இடம்பெறலாம்; மீண்டும் எச்சரித்த அமெரிக்கா!

இலங்கையில் மீண்டுமொரு தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்ற எச்சரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இந்த எச்சரிக்கை குறிப்பை அமெரிக்கா வெளியிட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் அதனை வெளியிட்டிருக்கின்றது. இதேவேளை கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒக்சிமீட்டர் தொகை கண்டுபிடிப்பு

சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒக்சிமீட்டர் தொகை ஒன்று இலங்கை சுங்க அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் கார்கோ நிறுவத்தின் அதிகாரிகளுக்கு தன்னை பொருட்கள் அகற்றும் பிரிவின் பிரதிநிதியாக அடையாளப்படுத்தி போலியான ஆவணங்களை சமர்ப்பித்து குறித்த ஒக்சிமீட்டர் தொகை விடுவிக்கப்பட்டுள்ளன. பின்னர் சுங்க தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் வௌியேறும் பகுதியில்…