EC: அது மோசடி அல்ல, சட்டப்பூர்வமான “இல்லாத வாக்காளர்” பதிவு

நாடாளுமன்ற எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அம்பலப்படுத்தியுள்ள தேர்தல் மோசடி எனக் கூறப்படும் விசயம், உண்மையில் சாதாரண வாக்காளர் ஒருவர்  'இல்லாத வாக்காளர்' எனப் பதிவு செய்து கொள்வதற்கு விண்ணப்பித்துக் கொண்டதாகும் என தேர்தல் ஆணையம் (EC) விளக்கியுள்ளது. தம்மை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத தேர்தல் ஆணைய…

சிலாங்கூர் அம்னோ மகளிர் பிரிவு: நாங்கள் ஷாரிஸாட்டை ஆதரிக்க வேண்டும்…

அம்னோ மகளிர் பிரிவினர் தற்போது நெருக்கடியில் சிக்கியிருக்கும் தங்கள் தலைவி பின்னால் அணி திரள வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்தப் பிரிவைச் சேர்ந்த சில தலைவிகள் ஷாரிஸாட் பதவி விலக் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள வேளையில் பிரதமர் அவ்வாறு கூறியுள்ளார்.…

வாக்காளர் பட்டியலில் இசி-யின் மோசடிகள்: பக்காத்தான் அம்பலம்

வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் செய்யும் ‘மாபெரும் மோசடி வேலைகளை’ பிகேஆர் நடப்புத் தலைவர் அம்பலப்படுத்தினார். இன்று, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் இப்ராகிம்,“அதை என்னால் நிரூபிக்க முடியும்”, என்றார். பின்னர் அவர், பூலாயில் ஏற்கனவே வாக்காளராக பதிவுசெய்யப்பட்ட ஒருவர்  இப்போது பெக்கானில் புதிய வேட்பாளராக பதிவு…

அம்னோ தலைவர்களைக் கட்சியிலிருந்து விலகச் செய்யும் முயற்சியில் பாஸ்

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, அம்னோ தலைவர்களை அம்னோவிலிருந்து வெளியேறச் செய்யும் முயற்சியாக அவர்களில் பலருடன் “பேச்சு நடத்திவருவதாக”த் தெரிவித்தார். முன்னாள் அமைச்சரும் அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான காடிர் ஷேக் ஃபாதிர் இவ்வாரத் தொடக்கத்தில் அக்கட்சியிலிருந்து விலகியதற்குத் தாமே காரணம் என்று கூறிய முகம்மட் சாபு…

ஆர்பிகே, நஜிப் இருவருக்கும் எதிராக வாதம் செய்ய அன்வார் தயார்

ஒரே நேரத்தில் வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடின், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆகிய இருவருக்கும் எதிராக வாதம் செய்ய மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தயாராகவுள்ளார். “நஜிப், ஆர்பிகே, நான் ஆகிய மூவரும் கலந்துகொள்ளும் பொதுவிவாதத்துக்கு ஏற்பாடு செய்ய ஜூலியன் அஸாஞ்சே முன்வந்துள்ளார். நானும் சரி என்று…

“கணக்காளராகும் முயற்சியில் தோற்றுப்போனவன் நான்”, குவான் எங்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ஆஸ்திரேலியாவில் பொருளாதாரத்திலும் கணக்கியலிலும் பட்டம் பெற்றவர். ஆனாலும் ஒரு கணக்காளராகும் முயற்சியில் அவருக்குக் கிடைத்தது தோல்விதான். பட்டம் பெற்றதும் தம்முடன் படித்தவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்துவிட்டது. ஆனால், தமக்கு மட்டும் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்ததென லிம் (வலம்) குறிப்பிட்டார்.…

ஆசிய அரியமண் ஆலை மீதான தீர்மானத்துக்கு அனுமதி

புக்கிட் மேராவில் கைவிடப்பட்ட Asian Rare Earth(ஏஆர்இ)ஆலையிலிருந்தும்,ஈப்போவில் புக்கிட் கெலேடாங்கில் உள்ள அவ்வாலையின் கழிவுகொட்டும் இடத்திலிருந்தும் மிதமிஞ்சிய அளவில் கதிரியக்கம் வெளிப்படுவதாகக் கூறப்படுவது பற்றி விவாதம் நடத்தக் கோரிக்கை விடுக்கும் தீர்மானத்தை மக்களவை ஏற்றுக்கொண்டிருக்கிறது. நேற்று, பத்து காஜா டிஏபி எம்பி போங் போ குவான் அத்தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.…