பொதுத் கசையடியை அனுமதிக்கும் சட்டங்களை மறுபரிசீலனை செய்து திருத்தம் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் திரங்கானு அரசாங்கத்தை மலேசியன் வழக்கறிஞர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. நாளைத் திரங்கானுவில் உள்ள மசூதியில் உடல் ரீதியான தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த அழைப்பு வந்துள்ளது. பொது ஒழுக்கம் மற்றும் சமூக…
ஐஜிபி: ராம்லியின் குற்றச்சாட்டு பழையது, கவனிக்கப்பட்டு விட்டது
முன்னாள் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ராமிலி யூசோப் வெளியிட்டுள்ள தகவல்கள் பழைய குற்றச்சாட்டுக்கள் என ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் வருணித்துள்ளார். அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப்பில் புதிய புகார்கள் ஏதும் தமக்குக் கிடைக்கவில்லை என்றார் அவர். "நீங்கள் பழைய கதையைப்…
வெட்டுமர ஊழல் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்கிறார் அனீபா
சபா முதலமைச்சரும் தமது மூத்த சகோதரருமான மூசா அமானிடமிருந்து ஆதாயமிக்க வெட்டுமர அனுமதிகளை ஊழல் வழிகளில் தாம் பெற்றதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுவது தமக்கு எதுவும் தெரியாது என வெளியுறவு அமைச்சர் அனீபா அமான் இன்று கூறிக் கொண்டுள்ளார். அந்தக் குற்றச்சாட்டை ஜோடித்தவர்கள்…
பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத் திருத்தம் கட்டுப்பாடுகளை அதிகரிக்கிறது என்கிறது…
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத் திருத்த மசோதாவை பிகேஆர் கடுமையாக சாடியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள திருத்தங்கள் மாணவர்கள் அரசியலில் பங்கு கொள்வதை மேலும் கடுமையாக்கியுள்ளதாக அந்தக் கட்சியின் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறினார். "அந்தத் திருத்தங்கள் மேலோட்டமானவை, பயனற்றவை, மாணவர்கள், பல்கலைக்கழகங்கள்…
பிகேஆர்: சொத்துக்களை அடமானமாக வைக்குமாறு ஷாரிஸாட் உறவினர்களை கட்டாயப்படுத்துங்கள்
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் மீட்கப்படும் வரையில் முன்னாள் கூட்டரசு அமைச்சர் ஷாரிஸாட் குடும்பத்தினர் தங்களது சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டும் என அரசாங்கம் கட்டாயப்படுத்த வேண்டும் என பிகேஆர் விரும்புகிறது. கடந்த ஜனவரி முதல் திருப்பிச்…
BERSIH 3.0 குறித்து ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் நிலைப்பாடு
நிகழ்கால மலேசியத் தேர்தல் முறைகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற BERSIH அமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தமது ஆதரவை தெரிவித்து கொள்கிறது. மலேசிய இந்தியர்கள் இனரீதியாக வஞ்சிக்கப்படுவதை மாற்ற வேண்டுமென்றால் அடிப்படை கொள்கைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்ற ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் கருத்தோடு BERSIH நடவடிக்கைகளும்…
மாணவர்கள் அரசியலில் ஈடுபட அனுமதிக்கும் சட்டத் திருத்தங்கள் சமர்பிக்கப்பட்டன
பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் க்ட்சி நடவடிக்கைகளில் பங்கு கொள்வதற்கு சுதந்திரம் வழங்கும் சட்டத் திருத்தங்கள் இன்று மக்களவையில் சமர்பிக்கப்பட்டன. 1971ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவில் செய்யப்படும் திருத்தங்கள் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் மாணவர்கள் உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்வதற்கு அந்த திருத்தங்கள்…
‘அனீபாவுக்கு எதிரான வெட்டுமரக் குற்றச்சாட்டுக்களை எம்ஏசிசி உறுதி செய்ய வேண்டும்’
சபா வெட்டுமர ஊழல் மீது எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தான் நடத்திய புலனாய்வில் வெளியுறவு அமைச்சர் அனீபா அமானும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் வெளியிட்டுள்ள தகவலை அந்த ஊழல் தடுப்பு அமைப்பு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.…
உங்கள் கருத்து: சாமிவேலு இன்னும் உண்மை நிலையை உணர மறுக்கிறார்
"தங்கள் சொந்த மக்களுக்கு அவர்கள் இவ்வளவு செய்த பின்னரும் அவர்கள் தங்களைப் பற்றியே இன்னும் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களுடைய மன நிலையைக் காட்டுகிறது." சாமிவேலு: டாக்டர் மகாதீர் என்னைத் தோல்வி காணச் செய்தார் கோபாலன்: "அது அவரைக் காயப்படுத்தியிருந்தாலும் தாம் இன்னும் மகாதீரை மதிப்பதாகவும் அவருடன் பணியாற்றிய 22…
தேர்தல் சீர்திருத்தங்களா? இப்போதுள்ள தேர்தல் ஆணையத்தில் அவை நிச்சயம் நடக்காது
"வாக்காளர் பட்டியலை தூய்மை செய்வது ஒன்றும் மிகப் பெரிய பெரிய வேலை அல்ல. ஆனால் அதனைச் செய்ய இசி என்ற தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறதா?" 'போலி வாக்காளர்கள்' 13வது பொதுத் தேர்தல் முடிவை நிர்ணயம் செய்வர் திறந்த உள்ளம்: தேர்தல் சீர்திருத்தங்கள் உண்மையில் மேலோட்டமாக மேற்கோள்ளப்படுகின்றன. இசி…