சமயத் தகுதி: வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது

61 வயது ஸ்டோர்கீப்பர் மற்றும் அவரது பிள்ளைகளின் சமயத் தகுதி பற்றி எழுப்பப்பட்டுள்ள ஐந்து அரசமைப்புக் கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றம் பதில் அளிக்காது. காரணம் அதன் விவரங்கள் ( facts) சர்ச்சைக்குரியதாக இருப்பதாகும். ஷா அலாமில் உள்ள உயர் நீதிமன்றம் அந்தக் கேள்விகளை உறுதி செய்ய வேண்டும் என…

நஜிப்: ரோஸ்மா குறித்த தகவல்கள் “‘வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டன”

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது துணைவியார் ரோஸ்மா மான்சோர் அண்மையில் சிட்னியில் பொருட்களை வாங்கிக் குவித்தார் என்ற தகவல்கள் தமக்கு  மோசமான தோற்றத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டன" எனக் கூறுகிறார். கார்ல் காப் என்னும் ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கிய ஆடையின் விலை 100,000…

கிளந்தான் அம்னோ கூட்டங்களில் கலந்துகொள்ளாதது ஏன்? தெங்கு ரசாலி விளக்கம்

குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா, கிளந்தான் அம்னோ தொடர்புக்குழுக் கூட்டங்களில் தாம் கலந்துகொள்ளாததை வைத்து தாம் அக்கூட்டங்களைப் புறக்கணிப்பதாக தப்பாக பொருள் கொண்டுவிடக் கூடாது என்கிறார். அக்கூட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது என்ற எண்ணம் தமக்கு இருந்ததில்லை என்று குவாங் மூசா அம்னோ தலைவருமான அவர் கூறினார். “சில…

வரி செலுத்தவில்லை என்றால் வாக்குரிமை இல்லையா?, EC-ஐ சாடியது பெர்சே…

வெளிநாட்டில் வேலை செய்துகொண்டு வரி செலுத்தாதிருக்கும் மலேசியர்கள் வாக்களிப்பதைத்  தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் (EC) முன்வைத்துள்ள பரிந்துரை அரசமைப்புக்குப் புறம்பானது என்று தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே 2.0 கூறுகிறது. இசி பரிந்துரை,  குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று அரசமைப்பு குறிப்பிடுவதைப் புறக்கணிப்பதாக…

மேல் முறையீடு செய்வதற்கான அனுமதியை தியோ பெங் ஹாக் குடும்பம்…

தியோ பெங் ஹாக் மரணம் மீதான விசாரணையில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டதை நீதித் துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற விண்ணப்பத்தை நிராகரித்த ஷா அலாம் உயர் நீதிமன்ற முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்து கொள்ள தியோ பெங் ஹாக் குடும்பத்துக்கு முறையீட்டு நீதிமன்றம் அனுமதி…

ஆரோக்கியமான, கலகலப்பான ஐஜிபி லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினார்

ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார், லண்டனுக்கு மேற்கொண்ட ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியிருக்கிறார். தாம் பிரிட்டிஷ் தலைநகரில் காலமாகி விட்டதாக  வெளியான வதந்திகளை அவர் முறியடித்துள்ளார். செப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பிரமுகர்கள் அறையில் அவருக்காக…

செந்தூல் பள்ளிவாசலில் பன்றித் தலை கண்டெடுக்கப்பட்டது!

கோலாலம்பூர் செந்தூலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பன்றித் தலை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் பள்ளிவாசல் ஒன்றில் பன்றித் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது இது இரண்டாவது முறையாகும். அது மஸ்ஜித் ஹிடாயாட் செந்தூலில் வைக்கப்பட்டிருந்ததாக பத்து எம்பி தியான் சுவா கூறினார். "சில கேடு கெட்ட போக்கிரிகள்…

பெர்க்காசா, செய்தால் ஒழுங்காகச் செய், இல்லாவிட்டால் அறவே செய்ய வேண்டாம்

"பொதுவாக மலேசியர்களைப் பொறுத்த வரையில் நாம் ஒருவர் மற்றொருவருடைய நம்பிக்கைகளை மதிக்கிறோம். ஆனால் பெர்க்காசாவைப் பொறுத்த மட்டில் அது ஒரு வழிப் பாதை." வெள்ளை அங் பாவ்: அரசாங்கம் தவறி விட்டது கர்மா: கீ துவான் சாய் 'நான் அவர்களை நிறுத்த முடியாது' என பிரதமர் நஜிப் ரசாக்…

கீத்தா கட்சி கலைக்கப்படும் என ஜைட் அறிவிப்பு

கீத்தா எனப்படும் Parti Keadilan Insan Tanah Air கட்சி விரைவில் நடத்தப்படவிருக்கும் சிறப்புப் பொதுக் கூட்டத்தின் மூலம் கலைக்கப்படும். அந்தத் தகவலை அதன் தலைவர் ஜைட் இப்ராஹிம்  கட்சியின் இணையத் தளம் வழி அறிவித்துள்ளார். "நாம் எதிர்த்தரப்பை ஆதரிக்கிறோம் என்பது தொடர்பான சந்தேகங்கள் அனைத்தையும் போக்கும் பொருட்டு"…

மலேசியா அவர்கள் நாடு, நாம் “பாலே இந்தியா”

கோவிந்தசாமி: ம.இ.கா-விலிருந்து நீக்கப்பட்டு, பக்காத்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு, மீண்டும் ம.இ.கா-வில் இணைந்து பாக்காத்தான் அரசாங்கம் வாக்கு கொடுத்ததை செய்யவில்லை என்று கிள்ளான் வட்டாரத்தில் ஒருவர் கலையோடு சாமி ஆடுகிறாரே?   கோமாளி: சாமி ஆடுபவர்கள், அருள் போகும்போது மலையேறிவிடுவார்கள். மீண்டும் அருள் வந்ததும் ஆடுவார்கள். அவரின் ஆட்டத்தில் உண்மையும்…

டிஎபி, மலேசியாவையும் சிங்கப்பூரையும் இணைத்து குடியரசாக்கும், ஹசான் அலி

நேற்று பாங்கியில் சுமார் 1,000 பேர் கூடியிருந்த கூட்டத்தில் பேசிய சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹசான் அலி பக்கத்தான் ரக்யாட் எப்படி இஸ்லாத்தை மிரட்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். அவரது நாடுதழுவிய அளவில் கூட்டம் நடத்தும் திட்டத்தின் முதல் கட்டமான இக்கூட்டத்தில் டிஎபி கூடிய விரைவில்…

லிம்: பதற்றத்தைத் தூண்டுவதே பள்ளிவாசலில் பன்றித் தலை வைக்கப்பட்டதின் நோக்கம்

சிலாங்கூர் ரவாங் நுருல் இமான் பள்ளிவாசல் நுழைவாயிலில் பன்றித் தலை வைக்கப்பட்ட சம்பவத்தை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கடுமையாகச் சாடியுள்ளார். அது, வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக "இன சமய உணர்வுகளைத் தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்ட  கோழைத்தனமான நடவடிக்கை" என டிஏபி தலைமைச் செயலாளருமான லிம்…

புவா: இபிஎப் பணத்தைத் தவறாக பயன்படுத்தக் கூடாது

குறைந்த-விலையிலும் அடக்க விலையிலும் வீடுகள் கட்டிக்கொடுக்கும் முயற்சிகளை வரவேற்றாலும் அத்திட்டங்களுக்காக ஊழியர் சேமநிதி(இபிஎப்) பயன்படுத்தப்படுவது குறித்து டிஏபி எச்சரிக்கிறது. “இத்திட்டங்களுக்கு இபிஎப்-பிலிருந்து நிதியுதவி செய்யக்கூடாது. குறைந்த அபாயம்கொண்ட திட்டங்களில் முதலீடு செய்து முடிந்தவரை உயர்ந்த ஆதாயம் பெற்று 11 மில்லியன் மலேசியர்களின் கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட பணத்தைக் காப்பதுதான்…

அன்வார்: தேர்தல் ஆணையம் சிறிய விஷயங்களில் நேரத்தை வீணாக்கக் கூடாது

இசி என்ற தேர்தல் ஆணையம் சிறிய, நடைமுறை விஷயங்கள் மீது நேரத்தை வீணாக்குவதை நிறுத்திக் கொண்டு தேர்தல் நடைமுறைகளைத் தூய்மைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "தேர்தல் ஆணையத்தின் பெரிய கடமை தேர்தலை தூய்மைப்படுத்துவதாகும். அது வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்த வேண்டும்.…

அன்வார் “வாயை மூடிக் கொள்ளுங்கள்” என அந்த “முதியவர்” மகாதீரிடம்…

அந்த 'முதியவர்' டாக்டர் மகாதீர் முகமட் வீட்டில் அமைதியாக இருப்பது நல்லது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "அந்த முதிய மனிதர் இன்னும் நிறுத்தவில்லையா? அது போதும். அவரது அவரது குடும்பத்தினரும்  ஏற்கனவே கொழுத்த பணக்காரராகி விட்டனர்," என அவர் கோலாலம்பூரில் பத்து பிகேஆர் ஏற்பாடு…

சீனர் பண்பாட்டை மதிக்கும் பாஸுக்குப் பாராட்டு

வாழ்த்து பாஸுக்கு, வசவு பெர்காசாவுக்கு. மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா,  ‘வெள்ளை அங் பாவ்’ பொட்டலங்களைக் கொடுத்ததற்காக பல தரப்புகளின் கண்டனத்துக்கு இலக்காகியுள்ள வேளையில் சீனர்களின் பண்பாட்டுக்கு மதிப்பளித்து சீனப் புத்தாண்டைக் கொண்டாடிய பாஸ் கட்சி, ஃபேஸ்புக்கில் பலருடைய பாராட்டைப் பெற்றுள்ளது.  மாற்றரசுக் கட்சியான பாஸின் சீனப்…

வெள்ளை அங் பாவ்: அரசாங்கம் தவறு செய்து விட்டது, கீ…

பெர்க்காசா, சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட மக்களுக்கு வெள்ளை 'அங் பாவ்' கொடுக்கப்பட்டுள்ளது, அறியாமையால் நிகழ்ந்த தவறு என அந்த வலச்சாரி அமைப்பு கூறிக் கொண்டுள்ளது. அது, சில சமயங்களில் மற்றவர்களைப் பற்றி மலாய்-முஸ்லிம்கள் எண்ணுவதில் உள்ள தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளது. மற்ற இனங்கள், சமயங்கள்…

புதிய தமிழ் நாளேடு, தினக்குரல், உதயமாகிறது

ஒரு புதிய தமிழ் நாளேடு, தினக்குரல் பிப்ரவரி 9-இல் வெளியீடு காண்கிறது. அதன் நிர்வாக இயக்குனர் அருள்குமார்,29. இவர், காலஞ்சென்ற மலேசிய நண்பன் தலைமை ஆசிரியர் ஆதிகுமணன் அவர்களின் புதல்வராவார்.ஆதிகுமணன் பிறந்த நாளான பிப்ரவரி 9-இல், இப் புதிய நாளிதழ் வெளிவருவதாக அதன் தலைமை ஆசிரியர் பி.ஆர்.ராஜன் தெரிவித்தார்.…

வாக்காளர் பட்டியலில் ஐயத்துக்கிடமான 42,025 பெயர்கள் நீக்கம்

தேர்தல் ஆணையம்(இசி), வாக்காளர் பட்டியலில் உள்ள ஐயத்திற்டமான 42,025 பெயர்களை நீக்க முடிவு செய்துள்ளது. 42,051 பெயர்களை இரண்டு மாதங்கள் காட்சிக்கு வைத்ததில் 26வாக்காளர்களை மட்டுமே உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.எனவே, எஞ்சியுள்ள 42,025பெயர்களை நீக்குவதென முடிவு செய்யப்பட்டதாக இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் தெரிவித்தார்.  “வழக்கமாக ஒரு…

பெர்க்காசாவின் வெள்ளை அங் பாவ்-வுக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை

பெர்க்காசா நடத்திய சீன புத்தாண்டு நிகழ்வின் போது பாரம்பரிய 'அங் பாவ்' சிவப்பு உறைகளுடன் வெள்ளை நிற கடித உறைகளும் பயன்படுத்தப்பட்டதற்கும் அரசாங்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அந்த அரசு சாரா அமைப்பின் தலைவர் நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினர் என…

“போலீசுக்குக் கையூட்டுக் கொடுக்கச் சொன்னதில்லை’’, என்எப்சி

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) நிர்வாகத் தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில், போலீசுக்குக் கையூட்டுக் கொடுக்குமாறு ஒரு வணிகரான ஷாம்சுபாஹ்ரினிடம் தாம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுவதை மறுத்தார். இன்று நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சில் வெளிவந்திருந்த ஒரு செய்தியில் சாலே, போலீசார் அரசாங்கக் கடன்மீதான விசாரணையில் நியாயமாகவே நடந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்குக்…

“நில மோசடி” குறித்த புலனாய்வுக்கு உதவ முன்னாள் பினாங்கு பிஎன்…

"பினாங்கு மாநில அரசாங்கத்துக்கு பல மில்லியன் ரிங்கிட் செலவு வைத்த நில மோசடி எனக் கூறப்பட்ட ஒரு விவகாரம் மீதான விசாரணையில் ஒத்துழைக்க முன்னாள் பினாங்கு பிஎன் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தவறி விட்டனர். ' தான் ஹாக் ஜு 'மோசடி' என வருணிக்கப்பட்ட அதிலிருந்து தங்களை மீட்டுக்…

கிளந்தானில் இரண்டு இடங்களில் போட்டியிட பிபிபி விருப்பம்

அடுத்த பொதுத் தேர்தலில் கிளந்தானில் தனக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று மக்கள் முற்போக்குக் கட்சி(பிபிபி)  விரும்புகிறது. பிபிபி உதவித் தலைவர் நிக் சாபியா நிக் யூசுப், கிளந்தானில் பிபிபி-க்கு நிறைய செல்வாக்கு இருப்பதாகவும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வெல்லும் ஆற்றல் அதற்குண்டு என்றும் கூறினார். “பிபிபி…