அமெரிக்காவில் தொடரும் சம்பவம், சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு; 3…

அமெரிக்காவில் மீண்டும் தொடரும் சம்பவமாக, சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகினர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மான்டேரி பார்க் நகரில் கடந்த 21-ந் தேதி நடன பயிற்சி மையத்துக்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகினர்.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த திங்கட்கிழமை…

உலக அழிவை கணக்கிடும் டூம்ஸ்டே கடிகாரம்

உலக அழிவை கணக்கிடும் டூம்ஸ்டே கடிகாரத்தில் 12 மணிக்கு இன்னும் 90 வினாடிகள் மட்டுமே மீதம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த 1947-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் 'டூம்ஸ்டே கடிகாரம்' உருவாக்கப்பட்டது. உலகில் நடக்கும் பருவநிலை மாற்றம், போர்,…

உக்ரைன் போரில் இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் 2…

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 11 மாதங்களுக்கும் மேலாக போர் நடத்தி வருகிறது. இந்த போர் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை பறித்ததோடு, லட்சக்கணக்கான மக்களை அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக செய்துள்ளது. கல்வி, வேலை மற்றும் பிற தேவைகளுக்காக உக்ரைனுக்கு சென்ற வெளிநாட்டினர் பெரும்பாலானோர் போர்…

ஆளில்லா போர் விமானங்களுக்கான உலகளாவிய சந்தையில் சீனா ஆதிக்கம்

கடந்த தசாப்தத்தில் ஆளில்லா போர் விமானங்களுக்கான உலகளாவிய சந்தையில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாக தரவுகள் வெளிப்படுத்துகின்றன. சவூதி அரேபியா முதல் மியான்மர், ஈராக் மற்றும் எத்தியோப்பியா வரை உலகெங்கிலும் உள்ள அதிகமான இராணுவத்தினர் சீன போர் ஆளில்லா விமானங்களை குவித்து போர்க்களத்தில் நிலைநிறுத்தி வருகின்றனர். உலகளாவிய ஆயுத பரிமாற்றங்களைக்…

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷிய விளையாட்டு வீரர்கள் போட்டியிடக் கூடாது:…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் உரையாடினார். உக்ரைன் - ரஷியா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. சிறிய நாடான உக்ரைனும் அமெரிக்கா உள்ள பல நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ்…

உயிர் வாழும் சூழலுக்கான அடையாளங்களை விண்வெளியில் கண்டறிந்த நாசா

உயிர்கள் வாழ்வதற்கான கட்டமைப்புகளுக்கான அடையாளங்கள், உறைபனியான விண்வெளி மேகக்கூட்டங்களில் உள்ளன என நாசா கண்டறிந்து உள்ளது. நமது பூமியில் பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன. அவற்றில் மனித இனம் தனித்துவமுடன் இயங்கி வருகிறது. எனினும், உயிரினங்கள் முதன்முதலில் எப்படி சூரிய மண்டலத்தில், அதுவும் பூமியில் தோன்றின என்பது விடை…

புடின் தோல்வியடைந்தால் உலகதிற்கு அது நல்ல நேரம் – பிரிட்டன்…

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்ற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமரை உக்ரைன் அதிபர் வோல்மியுர் ஜெலென்ஸ்கி வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனில் ரஷ்யப் படைகள் பின்வாங்கிய பகுதிகளையும் போரினால் சேதமடைந்த பகுதிகளையும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டதாக…

அமெரிக்க துப்பாக்கி சூட்டில் 10 பேரை கொன்ற நபர் தற்கொலை;…

அமெரிக்காவில் சீன புதுவருட கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 10 பேரை கொன்ற நபரை போலீசார் சுற்றி வளைத்ததும் தற்கொலை செய்து கொண்டார். லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. இதில், கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய்…

பாகிஸ்தானில் இன்று பல நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு- பொதுமக்கள் தவிப்பு

பாகிஸ்தானில் இன்று காலை 7.30 மணி அளவில் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திடீரென மின்சாரம் துண்டிக்கபட்டது. கராச்சியில் 90 சதவீதம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சீரற்ற மின் வினியோகம் காரணமாக மின்சாரம் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின் ஊழியர்கள் இதனை சரி செய்யும் பணியில்…

கூடுதல் ராணுவ ஆதரவை அனுப்புவதைப் பற்றி வேகமாக முடிவு எடுங்கள்…

உக்ரேனின் ஸாப்போரிஸியா நகரிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் மேலும் பல ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பல கட்டடங்கள் தரைமட்டமாயின. அந்த வட்டாரத்தில் தமது படைகள் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக ரஷ்யா கூறியது. இந்நிலையில், தமது நட்பு நாடுகள் ஒரு முடிவை விரைவில் எடுக்க முடியாமல் இருப்பதாக…

பெருவின் பிரபல சுற்றுலாத் தலமான மச்சு பிச்சு மூடப்பட்டது

பெருவில் நடைபெறும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் நாட்டின் பிரபல மச்சு பிச்சு சுற்றுலாத் தலம் மூடப்பட்டுள்ளது. வருகையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாட்டின் கலாசார அமைச்சு கூறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் தடங்களைச் சேதம் செய்ததால் மச்சு பிச்சு சுற்றுலாத் தலத்திற்கு இட்டுச்சென்ற சேவைகள் முன்னதாக மூடப்பட்டிருந்தன.…

நியூசிலந்தின் அடுத்த பிரதமராக கிரிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு

நியூசிலந்தின் தொழிற்கட்சி திரு. கிரிஸ் ஹிப்கின்ஸைக் (Chris Hipkins) கட்சியின் புதிய தலைவராகவும் நாட்டின் 41ஆவது பிரதமராகவும் தேர்ந்தெடுத்துள்ளது. தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 64 பேர் சற்று முன்னர் நடத்திய சந்திப்பின்போது அந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர்கள் எடுத்திருக்கும் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திரு. ஹிப்கின்ஸ் இன்னும் சற்று நேரத்தில்…

கடந்த 30 நாட்களில் கொரோனா மரணங்கள் 20 சதவீதம் அதிகரிப்பு…

உலக அளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. வாஷிங்டன், உலக அளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. குறிப்பாக சீனாவில் உருமாறிய கொரோனா வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் மரணமும் அதிகரித்து வருகிறது. இதை உலக சுகாதார அமைப்பும் உறுதி…

ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் குண்டு கண்டெடுப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான…

2-ம் உலகப்போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா ஏராளமான குண்டுகளை வீசியது. அவற்றில் பல குண்டுகள் வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைந்து போன நிலையில், அவை அவ்வப்போது கண்டெடுக்கப்படுகின்றன. பெர்லின், 2-ம் உலகப்போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா ஏராளமான குண்டுகளை வீசியது. அவற்றில் பல குண்டுகள் வெடிக்காமல்…

தைவானுக்குள் ஊடுருவிய 31 சீன போர் விமானங்கள் – போர்ப்பதற்றம்…

தைவானை மிரட்டும் விதமாக சீனா நேற்று 31 போர் விமானங்களை தைவான் எல்லைக்குள் அனுப்பியது. பீஜிங், 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த…

அமெரிக்காவின் கடன் உச்சவரம்பைத் தாண்டிவிட்டது

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே அரசியல் போட்டி வலுவடைந்து வருகிறது. அமெரிக்கா கடன் உச்சவரம்பைத் தாண்டிவிட்டது அதற்குக் காரணம். அமெரிக்கா அதன் கடமைகளைத் தவறவிடாமல் இருப்பதற்குத் தனித்துவமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நிதியமைச்சர் ஜெனட் யெல்லன் கூறினார். ஆனால் காலம் கடந்து கொண்டிருக்கிறது. நிதியமைச்சு அதன் செலவினங்களைச் செலுத்துவதற்காக…

சீனப் புத்தாண்டைக் கொண்டாடச் சொந்த ஊருக்குத் திரும்பிய மில்லியன் கணக்கான…

சீனாவில் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். கிருமிப்பரவல் அச்சம் நீடிக்கும் வேளையில், இதுவரை 480 மில்லியன் முறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒப்புநோக்க சென்ற ஆண்டை விட, அது 50 விழுக்காடு அதிகம். சீனா கிருமிப்பரவலை முற்றாகத் துடைத்தொழிப்பதற்காகப் பின்பற்றிய கடுமையான கட்டுப்பாடுகளை…

பாலஸ்தீனத்தில் ஆசிரியர், போராளி சுட்டுக்கொலை: இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை

பாலஸ்தீன போராளிகளுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையேயான மோதல் பல்லாண்டு காலமாக தொடர்கதையாக நீண்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் ஜெனின் அகதிகள் முகாமில் ஜாவத் பாவாக்னா வயது 57 என்ற ஆசிரியரும், ஆதம் ஜபாரின் (28) என்ற பாலஸ்தீனிய போராளியும் இஸ்ரேல் படையினரால் நேற்று…

150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஓடி ஆஸ்திரேலிய பெண்…

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை எர்ச்சனா முர்ரே பார்ட்லெட். 32 வயதான இவர் ஆரம்பத்தில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதை தவறவிட்ட பிறகு தனது மற்றொரு வாழ்நாள் கனவில் கவனத்தை திருப்பினார். மாரத்தான் ஓட்டம் மூலம் முழு ஆஸ்திரேலியாவையும்…

தைவானியப் பெண்களும் இனி போர்க்காலப் படை வீரர் பயிற்சிக்குச் செல்லலாம்

தைவானிய ராணுவம் முதல்முறையாக அந்நட்டின் பெண்களைப் போர்க்காலப் படை வீரர் பயிற்சியில் ஈடுபடுத்தும் திட்டத்தை அறிவித்தது. சீனாவிலிருந்து வரும் மிரட்டல்களை எதிர்கொள்ளும் முயற்சிகளில் இது ஒன்றாகும். தன்னாட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்படும் ஜனநாயக நாடான தைவான் அந்நாட்டில் நடக்கக்கூடிய சீனப் படையெடுப்பு குறித்து அச்சத்தில் வாழ்கிறது. தைவான் சீனாவின் ஒரு…

கீவ் அருகே ஹெலிகாப்டர் விபத்து – உக்ரேன் உள்துறை அமைச்சர்…

உக்ரேனியத் தலைநகர் கீவுக்கு வெளியே உள்ள ப்ரோவரி நகரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் மாண்டனர். அந்த ஹெலிகாப்டர் பாலர்பள்ளிக்கும் குடியிருப்புக் கட்டடத்துக்கும் அருகே விழுந்து நொறுங்கியதாகக் கீவ் ஆளுநர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் இருவர் சிறுவர்கள். மேலும் 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள்…

பெண்கள் உரிமை எங்களுக்கு முக்கியமில்லை – தாலிபான்

ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் அரசு மீது சமீப காலமாகவே புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மனித உரிமை மீறல் குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடக்குமுறை சார்ந்த குற்றச்சாட்டுகள் தாலிபான் அரசின் மீது ஐநா உள்ளிட்ட சர்வதேச சமூகங்கள் முன்வைத்து வருகிறன. ஆப்கனில் தாலிபான் ஆட்சி அமைத்து சுமார் ஒன்றரை…

உக்ரைனுக்கு பிரிட்டன் அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும்: ரஷியா…

உக்ரைனுக்கு கனரக பீரங்கிகளை வழங்க பிரிட்டன் உறுதி அளித்துள்ளது. புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது என்று ரஷியா கூறி உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ரஷியா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி, உக்ரைனை நிலைகுலையச் செய்கிறது. இதற்கு உக்ரைன்…