அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
“ஐரோப்பாவில் வறட்சி மோசமடைகிறது”
ஐரோப்பா வட்டாரத்தின் வறட்சி நிலவரம் மோசமடைவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இம்மாதத் தொடக்கத்திலிருந்து வறட்சி மோசமடைந்துவருவதாக ஐரோப்பிய ஆணையத்தின் கூட்டு ஆய்வு நிலையத்தின் அறிக்கை குறிப்பிட்டது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லந்து, உள்ளிட்ட இடங்களில் வறட்சி மோசமடையும் என்று முன்னுரைக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய வட்டாரத்தில் கிட்டத்தட்ட 17…
பின்லாந்து பிரதமர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை- பரிசோதனையில் தகவல்
தான் போதை பொருளை பயன்படுத்த வில்லை என்றும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார். பிரதமர் சன்னா மரினுக்கு கடந்த 19-ந் தேதி போதை மருந்து சோதனை நடத்தப்பட்டது. பின்லாந்து நாட்டின் பெண் பிரதமர் சன்னா மரின். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது 34…
ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 9 ஆயிரம் உக்ரைன்…
ரஷியா-உக்ரைன் போரில் 5,587 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். உக்ரைன் குழந்தைகள் 972 உயிரிழந்துள்ளதாக தகவல். கடந்த பிப்ரவரி 24 அன்று உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்தது. தலைநகர் கீவ் உள்பட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் இரு தர்ப்பு படைகளும் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த போரில் 9 ஆயிரம்…
ஆப்கானிஸ்தானில் கனத்த மழை, வெள்ளம் – 20 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாநிலமான லோகாரில் (Logar) பெய்த கனத்தமழையால் பெருகிய வெள்ளத்தில் குறைந்தது 20 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. லோகாரின் பல பகுதிகளை மழை பாதித்துள்ளது. அதில் 30க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக மாநிலத்தின் ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது. பல கால்வாய்களும் சுமார்…
“உக்ரேனை அவமானப்படுத்துவது ரஷ்யாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று” – உக்ரேனிய…
உக்ரேன் அதன் 31ஆவது சுதந்திர தினத்தை வரும் 24ஆம் தேதி அனுசரிக்கவிருக்கிறது. அன்றைய தினம் அந்நாட்டிற்கு ரஷ்யா ஏதேனும் தீங்கு விளைவிக்கக்கூடும் என்று உக்ரேனிய அதிபர் வொலோடமிர் ஸெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரேனை அவமானப்படுத்துவது ரஷ்யாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று அவர் சொன்னார். மேலும் ரஷ்யா உக்ரேனிய…
தைவானுக்கு அருகில் தொடர்ச்சியாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சீனா
தைவானின் தற்காப்பு அமைச்சு, அதன் வட்டாரத்தைச் சுற்றிய பகுதியில் 12 போர் விமானங்கள் பறப்பதாகத் தெரிவித்துள்ளது. அத்துடன் 5 போர்க்கப்பல்களும் தைவானிய நீரிணையில் காணப்பட்டன. தைவானுக்கு அருகில் பெய்ச்சிங் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசி இம்மாதம் தைவானுக்குப் பயணம் செய்ததிலிருந்து சீனா…
ஆஸ்திரேலியா: விக்டோரியாவில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநில அளவில் அங்கு கடந்த இரண்டு வாரங்களில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அங்கு இதுவரை 40 பேருக்குக் குரங்கம்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்திலேயே ஆக அதிகமானோருக்குக் குரங்கம்மை தொற்று ஏற்பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் முதல்…
உக்ரைனின் சுதந்திர தினம் நெருங்குகிறது.. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அதிபர்…
சுதந்திர தினத்தன்று உக்ரைன் மீது பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் தயாராகி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6194 கோடி மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி உள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய…
சோமாலியாவில் ஓட்டலில் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல்- 40 பொதுமக்கள் பலி
தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல்- ஷபாப் பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. அல்-கொய்தா ஆதரவு பெற்ற இந்த இயக்கம் ராணுவ வீரர்கள், போலீசார், பொதுமக்களை குறிவைத்து அடிக்கடி…
ஹாங்காங்கின் கிருமித்தொற்று நிலவரம் மேலும் மோசமாகலாம் – அஞ்சும் அதிகாரிகள்
ஹாங்காங் அதன் ஆகப் பெரிய COVID-19 கிருமித்தொற்று தனிமைப்படுத்தும் நிலையங்களை மீண்டும் திறக்கவிருக்கிறது. அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.AsiaWorld Expoவில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையம் அடுத்த வாரம் அதன் செயல்பாட்டை மீண்டும் தொடங்கும். அங்கு 200 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.100 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.ஹாங்காங்கின் கிருமித்தொற்று நிலவரம் மேலும் மோசமாகக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். மருத்துவமனைகளில் அவசரப்பிரிவில் சேர்க்கப்படாதோருக்கான சேவைகளைக் குறைக்கவும் திட்டமிடப்படுகிறது.புதிய…
மெக்சிகோவில் மாயமான 43 மாணவர்கள் -விசாரணையில் முன்னாள் அரசாங்கத் தலைமைச்…
மெக்சிகோவில் 43 மாணவர்கள் மாயமாய்ப் போன சம்பவத்தின் தொடர்பில் அந்நாட்டின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கிறார். சம்பவத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் ஆக உயரதிகாரி அவர். மாணவர்கள் காணாமற்போனது, அவர்கள் துன்புறுத்தப்பட்டது, நீதியை நிலைநாட்ட விடாமல் தடுத்தது ஆகிய சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டதாய்த் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் சொன்னது. 2014ஆம் ஆண்டு 43 மாணவர்கள் காணாமற்போனது மெக்சிகோவில் நடந்த ஆகக் கொடுமையான சம்பவங்களில் ஒன்று. அது குறித்து 2015ஆம் ஆண்டு அரசாங்கச் சார்பில் அப்போதைய தலைமைச் சட்ட அதிகாரி ஜீசஸ் முரில்லோ கராம் (Jesus Murillo Karam) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த மாணவர்கள் மெக்சிகோ சிட்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்று கொண்டிருந்தபோது காணாமல் போயினர். அவர்கள் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, போதைப் பொருள் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கொன்று குப்பையில் வீசப்பட்டதாகவும் அறிக்கை சொன்னது. இருப்பினும் அதில் பெரும் மர்மம் நீடிக்கிறது. ஜீஸஸ் மரில்லோவின் கைது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. -smc
உக்ரைன் போர்: ரஷியாவில் புதின் செல்வாக்கு உயர்ந்தது
உக்ரைன் ரஷியா போர் சுமார் 6 மாதங்களாக நடந்து வருகிறது. உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று கருத்து கணிப்பு நடந்தது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா சுமார் 6 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில்…
7 தைவானிய அதிகாரிகள்மீது சீனா தடை
சீனா 7 தைவானிய அதிகாரிகள்மீது தடைகளை விதித்துள்ளது. அவர்கள் தைவானின் சுதந்திரத்திற்கு ஆதரவளிக்கும் பிரிவினைவாதிகள் என்று சீனா கூறியிருக்கிறது. தடை செய்யப்பட்ட அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் தலைநிலச் சீனா, ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றுக்குச் செல்லமுடியாது. தைவானைச் சுற்றி சீனா புதிய ராணுவப் பயிற்சிகளைத் தொடங்கவிருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து தடைகள்…
சிங்கப்பூர், மலேசியக் காவல்துறையினரின் அதிரடிச் சோதனையில் எல்லை தாண்டிச் செயல்படும்…
சிங்கப்பூரையும் மலேசியாவையும் சேர்ந்த காவல் துறையினர், எல்லை தாண்டிச் செயல்படும் மோசடிக் கும்பல்கள் இரண்டை முறியடித்துள்ளனர். அந்தக் கும்பல்கள், இந்த வட்டாரத்தில் உள்ளவர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வந்தன. இரண்டு நாடுகளிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் மட்டும், மோசடிக்கு…
உக்ரைன் மற்றும் தைவானில் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவே காரணம் –…
உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருகிறது. உக்ரைன், தைவானில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கும் அமெரிக்காவே காரணம் என்றார் அதிபர் புதின். உக்ரைனில் நீண்ட நாட்களாக நடைபெறும் சண்டை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருகிறது என ரஷிய அதிபர்…
பிரிட்டனில் வறட்சி – உருளைக்கிழங்கு, கேரட், வெங்காய அறுவடை குறையலாம்…
பிரிட்டனின் சில பகுதிகளில் வறட்சிநிலை அறிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பயிர் அறுவடையும், கால்நடைகளுக்கான தீவனமும் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட், வெங்காயம் போன்ற முக்கியமான பயிர்களின் அறுவடை குறைய வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் பண்ணையாளர்கள் சங்கம் முன்னுரைத்துள்ளது. பச்சைப் பசேல் என்று காட்சியளித்த நிலப்பரப்பு சாம்பல் நிறத்துக்கு உருமாறியிருப்பதைத்…
கென்யாவின் புதிய அதிபராக தேர்வானார் வில்லியம் ரூடோ
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் வில்லியம் ரூடோ வெற்றி பெற்று அடுத்த அதிபராக தேர்வானார். ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட ரைலா…
இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக் பின்தங்குகிறார்
வாக்குப்பதிவு அடுத்த மாதம் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது. ரிஷி சுனக்கும், லிஸ் டிரஸ்சும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகினர். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்த…
கடும் பதற்றத்துக்கு மத்தியில் தாய்வான் சென்றுள்ள அமெரிக்க எம்.பிக்கள்
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகையால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க எம்.பி.க்கள் தாய்வான் பயணம் மேற்கொண்டுள்ளனர். தைபே, தீவு நாடான தாய்வானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வரும் சீனா, தாய்வானுடன் அமெரிக்கா நட்புறவை பேணுவதை கடுமையாக எதிர்த்து வருகிறது. சீனா…
ஆஸ்திரேலியா: சிட்னி சாலை ஓட்டப்பந்தயத்தில் 60,000க்கும் மேற்பட்டவர்கள்
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னியில் பெரிய அளவில் சாலை ஓட்டப்பந்தயம் இடம்பெற்றுள்ளது. அதில் 60,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். City2Surf எனும் நிகழ்ச்சியில் உலகின் ஆகப்பெரிய கேளிக்கை ஓட்டப்பந்தயம் இடம்பெற்றது. ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய நகரான சிட்னியின் ஹைட் பார்க் முதல் போண்டி பீச் (Hyde Park,…
எகிப்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர்
கெய்ரோவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். எகிப்து தலைநகர் கெய்ரோவின் வடமேற்கில் இம்பாபா மாவட்டத்தில் அபு சிபைன் என்ற கிறிஸ்தவ ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென இந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு…
அமெரிக்க – ரஷ்ய உறவு சரி செய்ய முடியாத அளவுக்கு…
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு இனி சீர்செய்ய முடியாத அளவுக்கு மோசமாகப் போய்விடலாம் என்று மாஸ்கோ எச்சரித்திருக்கிறது. உக்ரேனியப் போரை ஒட்டி ரஷ்யாவைப் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அறிவிப்பது குறித்து வாஷிங்டனில் பேச்சு நடக்கிறது. இரண்டு செனட்டர்கள் கடந்த மாதம் அந்தப் பரிந்துரையை முன்வைத்தனர். லாட்வியா நாடாளுமன்றம் இவ்வாரத் தொடக்கத்தில் அந்த நடவடிக்கையை முன்னெடுத்தது.ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது மேலும் விரிவான தடைகளைக் கொண்டு வர வேண்டும் என்று அது கூறியது. ரஷ்யாவைத் தனிமைப்படுத்தி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்ற பிரகடனத்தைச் செய்யும் முயற்சியில் வாஷிங்டன் ஈடுபட்டால் இருநாட்டுக்கும் இடையிலான அரசதந்திர உறவு முற்றாக முறிந்து போகக்கூடும் என்று மாஸ்கோ எச்சரித்தது. -smc
நியூயார்க்கில் துணிகரம் – எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து…
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். நியூயார்க்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி இன்று ஒரு நிகழ்ச்சியில்…