பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தெலங்கானா: பேருந்து பள்ளத்தில் விழுந்து 53 பேர் பலி
தெலங்கானா மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று, செவ்வாயன்று ஜகித்தியால் எனும் நகரின் அருகே பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நகரம் ஹைதராபாத்தில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அந்தப் பேருந்து சனிவாரம்பேட்டா எனும் இடத்தில் இருந்து ஜகித்தியால் நோக்கி சென்று…
சரியும் ரூபாயின் மதிப்பு; உயரும் பெட்ரோல் விலை – என்ன…
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடுமுழுவதும் கடையடைப்பை நடத்தியுள்ள வேளையில், இது ஒரு மிகப் பெரிய பாதிப்பின் சிறு துவக்கமே என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடத்தின் செப்டம்பர் மாத முதல் வாரத்தோடு ஒப்பிடுகையில், பெட்ரோலின் விலை 25 சதவீதமும், டீசலின் விலை…
மணல் கடத்தி சென்ற 26 லாரிகள் பறிமுதல்
உரிய ஆவணமின்றி சென்னைக்கு மணல் ஏற்றிச் சென்ற 26 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகை, திருவாரூர் மாவட்ட பகுதிகளிலிருந்து சவுட்டு மணல் என்று அனுமதி வாங்கி ஆற்று மணலை ஏராளமான லாரிகளில் அடிக்க்கடி கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மணல் கடத்தலை தடுக்க…
தேர்தல் ஆதாயத்திற்கு 160 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்…
உத்திர பிரதேச மாநிலத்தில் யோகி தலைமையிலான பாஜக அரசு பொறுப்புக்கு வந்து ஒரு வருட காலத்திற்கு மேலாகிறது. இந்த காலத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாமல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணமடைந்தது நாட்டையே உலுக்கியது. மேலும் இஸ்லாமியர்கள் மீது வழக்கு என நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு…
ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்பட 40 சேவைகள்- ஆம்…
புதுடெல்லி, டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய திட்டத்தை நேற்று முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிவைத்தார். அதன்படி ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், திருமண பதிவு சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், குடிநீர் இணைப்பு போன்ற 40 வகையான சேவைகள் டெல்லி மக்களின் வீடு தேடிவரும். இதற்காக வழங்கப்பட்டுள்ள…
4500 வருட பழமையான உடல்.. டிஎன்ஏவில் இருந்த தமிழர் அடையாளம்..…
டெல்லி: 4500 வருடங்களுக்கு முன் ஹரியானாவில் வாழ்ந்த மனிதர் ஒருவரின் உடலில் இருந்து டிஎன்ஏ எடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஎன்ஏ முழுக்க முழுக்க தென்னிந்திய மக்களுக்கு நெருக்கமானதாக உள்ளதாக கூறப்படுகிறது. உலகின் மிகவும் பழமையான நாகரீகங்களில் ஒன்று ஹரப்பா நாகரீகமும் என்று கூறப்படுகிறது. இங்கு இருந்தவர்கள் ஆரியர்களா, திராவிடர்களா என்று…
ஸ்தம்பித்த இந்தியா.. நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம்.. கடைகள்,…
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். இதனால் பல மாநிலங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. இதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை…
ஏழு பேரின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை மீண்டும் ஆளுனருக்குப் பரிந்துரை
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், ஏழு பேரையையும் விடுதலை செய்வதற்கு மாநில ஆளுனருக்கு, தமிழ்நாடு அமைச்சரவை நேற்று பரிந்துரை செய்துள்ளது. 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி அகிய 7 பேரையும், விடுதலை…
ஆம்புலன்ஸ் தரமறுத்த மருத்துவமனை:இறந்த மகனை தோளில் சுமந்த தந்தை!!
பீஹாரில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 11 வயது சிறுவனுக்கு ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் இறந்த மகனை தந்தை தோள்மீது தூக்கி சென்ற அவலம் நடந்துள்ளது. பீஹார் மாநிலம் நலந்தாவில் 11 வயது சிறுவன் வாகன விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸ்க்காக காத்திருந்து வராததால் இருசக்கர வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பப்ட்டான்.…
பாசிச பா.ஜ.க.வுக்கு எதிரான கோஷம்! -சென்னையில் நந்தினி குடும்பத்தினர் கைது!
‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!’ இந்த கிராமத்து சொலவடை, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையின் சமீபத்திய செயல்பாட்டுக்கு மிகவும் பொருந்திப் போகிறது. விமான பயணத்தின்போது, பா.ஜ.க.வுக்கு எதிரான சோபியாவின் முழக்கத்தை, ஒட்டுமொத்த இந்தியாவின் குரலாக்கிவிட்டார். இதோ இன்னொரு பெண் கிளம்பியிருக்கிறார். அவர், வேறு யாருமல்ல! மதுவுக்கு…
“என்னோட கடைசிகாலம் வரைக்கும் மரம் நடுவேன்” – 82 வயது…
கட்டடங்கள் மட்டுமே நிரம்பிய வாழ்வியல் சூழல் மனிதர்களுக்கு நல்லதல்ல என கூறும் திருப்பூரை சேர்ந்த 82 வயது முதியவர் வேலுச்சாமி, தனது தள்ளாத வயதிலும் மரக்கன்றுகளை சைக்கிளில் எடுத்துச் சென்று வீடு வீடாக கொடுத்து வருகிறார். பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்துள்ள திருப்பூரில் வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில மக்கள்…
விடுதலை செய்யுங்கள்.. தமிழக அரசுக்கு 7 தமிழர்கள் புதிதாக மனு..…
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இது…
பள்ளிக்குள் புகுந்து மாணவியை கடத்த முயன்ற 3 பேர் அடித்துக்…
பாட்னா, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று காலையில் இந்த பள்ளிக்கு வந்த 3 பேர் அந்த மாணவியை கடத்த முயன்றனர். இதை தடுக்க முயன்ற ஆசிரியர்களை அவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டினர். இதைப்பார்த்த பிற மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கம்பு,…
எச்.ஐ.வி. தொற்று பரவுவதை தடுப்பதில் உலக அளவில் தமிழகம் 3-வது…
சென்னை, சிறை மற்றும் சமூக நலத்துறை மையங்களில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் காசநோய் தடுப்பு சேவை பணிகளை விரிவுபடுத்தும் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சுகாதார அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இதற்கான விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. எய்ட்ஸ் தடுப்பு மற்றும் காசநோய் தடுப்பு…
ஏழு தமிழர்கள் விடுதலை: தமிழக அரசின் நிலைப்பாடு இதுதான்!
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறைவாசம் அனுபவித்துவருகிற பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிப்பது தொடர்பான முடிவினை தமிழக அரசே மேற்கொள்ளலாம் என இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது டெல்லி உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை தமிழக அரசியல் கட்சிகளின்…
‘லிங்க வழிபாடு செய்யும் நாட்டில் ஒருபாலுறவு குற்றமா?’
செப்டம்பர் 6, 2018, வியாழக்கிழமை முற்பகல். இந்திய உச்ச நீதிமன்ற வளாகம். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 ஒருபாலுறவைக் குற்றமாக்குவதை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்குகிறது என்பதை அறியாத பலரும், "இன்று உச்ச நீதிமன்றத்தில் ஏதேனும் சிறப்பான…
ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. சில ஆண்டுகளாக இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று உத்தரவு…
குட்கா ஊழல் எப்படி நடந்தது? வழக்கை சிபிஐ விசாரிப்பது ஏன்?
சென்னை: குட்கா முறைகேடு என்றால் என்ன எப்படி அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் இதில் அடிபடுகின்றன, ஏன் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கிறது என்பது குறித்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டுமானால், சற்று இந்த குட்டி பிளாஷ்பேக்கை பாருங்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த…
தமிழக வரலாறு காணாத ரெய்டு.. சிபிஐ அதிகாரிகளின் முற்றுகையில் சிக்கிய…
சென்னை: பதவியில் உள்ள டிஜிபி ஒருவரது வீட்டில் ரெயிடு நடப்பது தமிழக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. கிட்டத்தட்ட 11 மணி நேரம் டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ளது. குட்கா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட கல்லூரியிலிருந்து கல்குவாரி வரை வருமானவரித் துறை…
சொந்த செலவில் கணினி வழி பாடம்: அசத்தும் அரசுப் பள்ளி…
தனது விடாமுயற்சியாலும், ஆர்வத்தினாலும் வெறும் 7 மாணவர்கள் கொண்ட ஊராட்சி ஒன்றிய பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கையை 21ஆக உயர்த்தியது மட்டுமல்லாமல் தமிழ் பாரம்பரியம் குறித்த ஆர்வத்தையும் மாணவர்கள் மத்தியில் விதைத்து வருகிறார் ஆசிரியர் ஒருவர். என்ன செய்தார் வள்ளுவன்? நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்…
உத்தரபிரதேசத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொது இடத்தில் அடித்து…
அலகாபாத், உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மர்மநபர்கள் 3 பேரால் பொது இடத்தில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 70 வயதான அப்துல் ஷமாத் கான் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆவார். இந்நிலையில் நேற்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த…
கேரளா: எலிக்காய்ச்சலுக்கு 74 பேர் பலி – 21 பேருக்கு…
திருவனந்தபுரம், கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடானது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். தற்போது அங்கு வெள்ளம் முழுவதுமாக வடிந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.…
நெல் கொள்முதல் நிலையங்களை மூடும் விவகாரம் – மத்திய அரசு…
தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடவேண்டும் என்பதற்கு எந்தவித காரணங்களையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமாராஜ் தெரிவித்துள்ளார். குறுவை நெல் சாகுபடி முடிந்துள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களை ஆகஸ்ட் 31ம் தேதியுடன் மூடவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதால்,…