ஸ்தம்பித்த இந்தியா.. நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம்.. கடைகள், பேருந்துகள் இயங்காது!

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்த போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். இதனால் பல மாநிலங்களில் பேருந்துகள் இயங்கவில்லை.

இதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா முழுக்க முழு அடைப்பு போரட்டம் நடத்தப்படுகிறது.

மோடி ஆட்சி

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91காசுகளாகும். டீசல் விலை 56 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.98காசுகளாகும். மும்பையில் பெட்ரோல் விலை 89.10 ரூபாய்க்கு விற்கிறது.

இந்தியா முழுக்க போராட்டம்

இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தியா முழுக்க முழுஅடைப்பு போராட்டம் கடைபிடிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை போராட்டம் நடக்கும்.

யார் ஆதரவு

காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கும் போராட்டத்திற்கு 40க்கும் மேற்பட்ட கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.மாலை 4 மணிக்கு இந்தியா முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. முக்கியமான எதிர்க்கட்சிகள் எல்லாமே ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திமுகவின் தலைமையில் போராட்டம் நடக்கிறது.

கடைகள் இயங்காது

இதனால் இன்று இந்தியா முழுக்க போராட்டம் நடக்கும் மாநிலங்களில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும். வணிகர் அமைப்புகள் அனைத்தும் கடைகளை அடைப்பதாக கூறியுள்ளது. அதே சமயத்தில் தொழிலாளர்கள் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பேருந்துகள் இயங்காது

அதேபோல் போராட்டத்திற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்கிய மாநிலங்களில் எல்லாம் பேருந்துகள் இயங்காது. அலுவலகம், அரசு பணிகள் எதுவும் நடக்காது. ஆனால் ஆம்புலன்ஸ், மருத்துவமனை இயங்கும். அதேபோல் போல் பால், மருந்து ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.

tamil.oneindia.com

TAGS: