பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வன்னிப் போரின் மருத்துவர் வரதராஜாவுக்கு அமெரிக்காவில் தஞ்சம்!
வன்னிப் போரின் முக்கியமான சாட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் மருத்துவர் வரதராஜாவுக்கு அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்னிப்போரின் இறுதிக்கட்டத்தில் மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்குண்டிருந்த பொதுமக்கள் பல்முனைத் தாக்குதல்களினால் காயமடைந்திருந்தனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதில் மருத்துவர் வரதராஜா உள்ளிட்ட ஓரிரு மருத்துவர்களே முன்னின்று…
யாழ்ப்பாணத்தைச் சுதந்திர பிரதேசமாக மாற்றிய பின்பே யாழ்பாணத்தை விட்டு செல்வேன்…
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற சர்வோதய அமைப்பின் நிகழ்வில் யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்வில் உரையாற்றும் போது எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாணத்தை 1970 ஆம் ஆண்டில் இருந்தவாறு மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு யாழ்ப்பாணத்தை மாற்றுவதற்கு தன்னுடன் இணைந்து அனைவரும்…
ஜெயலலிதா முதலமைச்சரானது இலங்கைக்கு ஆபத்து!
ஜெயலலிதாவின் வெற்றி இலங்கைக்கு ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வடக்கு தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுத்து தனித் தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கும் "இந்தியாவின்" தலையீடு இலங்கைக்குள் அதிகரிக்கும் என்றும் அவ்வியக்கம் தெரிவித்தது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்தபண்டார…
வடமாகாணத்திற்கு தம்மைத் தாமே ஆளும் அதிகாரம் வழங்கவேண்டும்!- வாசுதேவ
ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை. வடமாகாணத்திற்கு தம்மைத் தாமே ஆளும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று மஹிந்த அணி ஆதரவு பொது எதிர்க்கட்சி எம்.பி. யான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும்தெரிவிக்கையில்> தமிழர் பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு வழங்கப்பட…
தொடரும் தமிழ் பெண்களின் மரணங்கள்: இயற்கை மரணமா? இன அழிப்பா?
நான்கு நாட்களுக்கு முன்பு தலை மன்னார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளின் தாயான தமிழரசன் ரோகினி (வயது 40 ) என்ற பெண் மர்மமான முறையில் திடீரென மரணமடைந்துள்ளார். நல்ல ஆரோக்கியமாக இருந்த அவர் இறுதி இனஅழிப்பிற்கு பிறகு உடல் ஆரோக்கியத்தை இழந்து அறுவைச் சிகிச்சை ஒன்றுக்கு முகம் கொடுக்க…
தொடர்ந்தும் ஓரங்கட்டப்படும் இலங்கை தமிழ் மக்கள் இந்த நிலையை மாற்றுமாறு…
இலங்கைத் தமிழ் மக்கள் , தாங்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவதாக உணரும் எண்ணப்பாட்டை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் வலிமையான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களாகியும் , இலங்கை தமிழர்கள் இன்னும் தாம் ஒதுக்கப்படுவதாகவே உணர்கின்றனர்…
ஏன் யாழில் இப்டி செய்தாங்க ? ஜெயலலிதாவுக்கு யாழ்ப்பாணத்தில் பட்டாசுகொளுத்தி…
தமிழக தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றவுள்ள செல்வி ஜெயலலிதாவுக்கு யாழ்ப்பாணத்தில் பட்டாசுகொளுத்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் அமைந்துள் எம்.ஜி.இராமசந்திரன் சிலைக்கு யாழ் எம்.ஜி.ஆர்.கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் ஏற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கோப்பாய் சுந்தரலிங்கம் எம்.ஜி.ஆர் இன் நெருங்கிய…
மழையால் சிதைந்த இலங்கை!! நடந்தவை இவைதான்…
இங்கு நாம் அனைவரும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்தபோது, அங்கே மக்கள் வீட்டு கூரைகளின் மீது ஏறி, படகுகளுக்காக காத்திருந்தனர். இங்கு நாமனைவரும் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அங்கே மக்கள் காணாமல்போன தம் பிள்ளைகளை தேடிக் கொண்டிருந்தனர். மீண்டும் ஒரு முறை அந்த தீவு தேசம் சிதைந்து…
இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் கிளர்ச்சிக்கு போர்…
தமிழ் மக்களால் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சிகளை நாட்டினை மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் இன ஒடுக்கு முறை என்ற கொள்கையைக் கையாண்டு போர் வடிவம் கொடுத்துள்ளன என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும்…
பெருவெற்றியீட்டிய ஜெயலலிதாவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசு வாழ்த்து
பெருவெற்றியீட்டிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துகிறது. அத்துடன் ஈழத் தமிழ் மக்கள் குறித்த தேர்தல் உறுதிமொழியினை அக்கறையுடன் நிறைவேற்றுக என வேண்டுகிறது. என நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,…
சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும்; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சி.வி.விக்னேஸ்வரன்…
இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் எனப்படும் பகுதியில் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) ஆரம்பித்தது. அங்கு…
அரசாங்கத்தின் தடையை மீறிய விக்னேஸ்வரன்! விஜயகலாவும் பங்கேற்பு
அரசாங்கத்தின் தடையை மீறி வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வொன்றை நடத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூருவதற்காக மட்டுமே தான் இந்த நிகழ்வை நடத்துவதாகவும், யுத்தத்தில் உயிரிழந்த அனைவரும் விடுதலைப் புலிகள் அல்லவென்றும், ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.…
சிறையில் உள்ள புலிகளை விடுவிக்க அமெரிக்காவின் உதவியை நாடும் சம்பந்தன்!
எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்வது தொடர்பில் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ரிச்சட் ஆர்மிடேஜ் ஆகியோருக்கிடையில் இரகசிய கலந்துரையாடல்…
சிறிலங்காவின் தற்போதைய இனஅழிப்பில் இரண்டு முக்கிய திட்டங்கள்!- விளக்குகிறார் பிரதமர்…
தமிழர் தேசத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசு, தொடர்ந்தும்தமிழின அழிப்பினை தொடர்ந்த வண்ணமே உள்ளதென தெரிவித்துள்ள பிரதமர்வி.உருத்திரகுமாரன் அவர்கள், இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டு இவைகள்மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியிலே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். சிறிலங்காவின் இனஅழிப்புத்…
அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலர் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுடன் சந்திப்பு
முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார். பாராளுமன்றத்தில் உள்ள…
புலம்பெயர் மக்களின் உதவியால் எழுச்சி பெறும் தாயக மக்கள்! சாந்தி…
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கான விவசாய வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று புதுக்குடியிருப்பு கைவேலியில் அமைந்துள்ள பெண்கள் கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வினை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா ஏற்பாடு செய்திருந்தார். கனடா வாழ் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் புதுக்குடியிருப்பு பிரதேச…
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு இன்று!
விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தினர் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் கடைசித் தறுவாயில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை பேரவலத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு இன்றாகும். நல்லாட்சி அரசாங்கத்தின் ஒருதரப்பான ஐக்கிய தேசியக் கட்சி தென்னிலங்கையின் போர் வெற்றி மனப்பாங்கிலிருந்து விடுபட்டு வெற்றிக் கொண்டாட்டங்களை தவிர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.…
2016 முள்ளிவாய்க்கால் நினைவால் தொடரும் போராட்டத்தை மீளவும் வலுப்படுத்துவோம்
அன்பான எனது சகோதரரே! மீளவும் எமது இனத்தின் போராட்ட சரித்திரத்தில் மறக்கவோ மறைக்கவோ மறுக்கவோ முடியாத நிகழ்வுகளை நினைவு கூருகின்றோம். இந் நினைவு நாட்களை கருத்துள்ள பொருத்தமான முறையிலே நடாத்தி, எமது போராட்டத்தை விரக்தியிலிருந்து விடுவித்து, வீரத்துடனும் வேகத்துடனும் செயற்பட, மன உறுதியும் ஆன்ம பெலனும் சேர்ப்போமாக என…
முள்ளிவாய்க்கால் – தணியாத தமிழீழ விடுதலைத் தாகத்தின் அறை கூவல்!
முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழர்களின் இரத்தச்சகதியால் வரையப்பட்ட ஈழத்துக் காவியம் அது. தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின்இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலைசெய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில்அணையாது எரியும்…
தீர்வினை வழங்கினால் அரசை எதிர்க்கமாட்டோம் – சிறிநேசன் எம்.பி
எங்களுடைய இனப்பிரச்சினை என்கின்ற விடயம், முறையான அதிகாரப்பகிர்வு மூலமாக சமஷ்டி முறை மூலம் தீர்க்கப்படுகின்ற போது, நாம் மத்திய அரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் எமது மக்களின் தேவைகளை நாங்களே கட்டியெழுப்பக்கூடிய ஒரு நிலை ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.…
நம் எல்லோரது தாகமும் ஒன்றுதான்! வட்டுக்கோட்டை 40வது வாழ்த்துச் செய்தியில்…
நம் எல்லோரது தாகமும் ஒன்றுதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது எழுச்சி நிகழ்வுக்காக நாடுகடந்த தமிழீழ் அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து நகர்ந்து விட்டோம் என…
தனி தமிழீழம் உருவாக்கும் நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டுள்ளோம்!– சம்பந்தன்
தனி தமிழீழம் உருவாக்கும் நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது வருட பூர்த்தி நேற்று நினைவுகூரப்பட்ட நிலையில், இந்தியாவின் தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை – இந்தியாவிற்கு இடையில் கடந்த 1987ம் ஆண்டு…
கும்பமேளா என்று சொல்லி சம்பந்தன் மற்றும் மைத்திரியை அழைத்த மோடி:நடக்கப்…
இந்தியாவில் கும்பமேளா நிகழ்வு நடக்க இருப்பதை காரணம் காட்டி பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் இரா சம்பந்தன் அவர்களை இந்தியாவுக்கு வருமாறு அழைத்துள்ளார். பிரித்தானியா சென்று காமன்வெலத் மாநாட்டில் கலந்துகொண்ட மைத்திரி, இந்தியா செல்வது ரகசியமாக பாதுகாக்கப்பட்டு இருந்தது. தற்போது எதேட்சையாக இரா சம்பந்தன் இந்தியா சென்றது போலவும்.…
