பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
போர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்!
போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் ஆகப் போகின்றன. இன்னமும் போரின் அக வடுக்கள் தீரவில்லை. இன அழிப்புப் போரின் எல்லா தடங்களையும் சிங்கள அரசு அழித்துவிட்டது. இன்னமும் எஞ்சியுள்ள ஈழ மனிதர்களையும் அழித்துவிட்டால் எந்தச் சிக்கலும் இல்லை என்ற யோசனையில்தான் நகர்வுகளை இன அழிப்பு அரசு முன்னெடுக்கின்றது. உண்மையில்…
‘தமிழீழ கனவு வேண்டாம்’ சுமந்திரன்!
புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. நான் சொல்வது, வெளியே போகும் போது, கல்லெறி…
மார்ச் 20இல் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது சிறிலங்கா குறித்த அறிக்கை
சிறிலங்கா தொடர்பான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை, வரும் மார்ச் 20ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர்,…
அரசியல் நோக்கிலான பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும் – வடக்கு…
தமிழ்ப் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “விரைவில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக்…
‘சிங்கள-பௌத்த’ தேசத்தின் பிறப்பு
இது ‘சிங்கள-பௌத்த’ நாடு (அல்லது தேசம்) என்ற பேரினவாதக் கருத்தை, இலங்கையில் கேட்பது புதுமையானதொரு விடயமல்ல. ஆனால் அந்தக் கருத்தை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் நியாயங்கள்தான் கேள்விக்குரியவை ஆகின்றன. இது, ‘சிங்கள-பௌத்த’ நாடு என்ற கற்பிதத்துக்கான நியாயம், புனைகதை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே கட்டியெழுப்பப்படுகிறது. ஏறத்தாழ 2,000 வருடங்களுக்கு மேற்பட்ட,…
தமிழ் – முஸ்லிம் உறவு: பிட்டும் தேங்காய்ப்பூவும்
பல்லினங்களும் வாழ்கின்ற ஓர் ஆட்புலத்தில், எவ்வாறு சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் பரஸ்பரம் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்வது என்ற பாடத்தை, இலங்கையில் இனவாதிகள் மட்டுமன்றி, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களில் சிலரும், இன்னும் பட்டறிந்து கொள்ளவில்லையோ என்ற வலுவான சந்தேகத்தை, அண்மைக்கால சம்பவங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இரண்டு இனங்களைச் சேர்ந்த நபர்களுக்கு…
பதற்றமடைந்த மட்டக்களப்பு; ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழர்கள்!
கிழக்கு மாகாண ஆளுநர் பதவியினை மாற்றம் செய்யக்கோரி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் பெயரில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கிழக்கு மாகாணத்தின் தமிழர் பிரதேசங்களில் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர் பகுதிகள் முழுமையாக முடங்கியுள்ளது. மட்டக்களப்பு நகரில் உள்ள தமிழர்களின் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதுடன் வங்கிகள்…
தமிழர் பகுதிகள் எங்கும் மனிதப்புதைகுழிகள்; வெளியான அதிர்ச்சி தகவல்!
மண்டைதீவு உட்பட வடபுலத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளன என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும், முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் தகவல் வெளியிட்டுள்ளார். இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் சர்வதேச கண்காணிப்புடன் மனித…
‘மூவின மக்களும், ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும், சம உரிமையுடனும் வாழ, புதிய…
'அரசமைப்பு உருவாக்கத்திலிருந்து கூட்டமைப்பு பின்வாங்காது' அரசமைப்பு உருவாக்க் செயற்பாடுகளிலிருந்து, இறுதிவரை பின்வாங்கப் போவதில்லையென, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்தது. பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை கூடிய அரசமைப்புப் பேரவையில் உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசமைப்பு உருவாக்கத்தில் உள்ள…
விடுதலை புலிகள் இருவருக்கு 185 ஆண்டுகள் சிறை
இலங்கை பாதுகாப்புப் படையின் 37 பேரை கொலை செய்தது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு அநூராதபுரம் மேல் நீதிமன்றத்தால் 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அநூராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் வியாழகிழமை இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோதே…
“சவேந்திர சில்வா வெள்ளை கொடியுடன் சரணடைந்தோர் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டும்”
இறுதி போரில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட ஏனைய போராளிகள் தொடர்பாக சவேந்திர சில்வாவே பொறுப்புக்கூற வேண்டுமென தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியும், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலளார் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்…
கருவில் கரையும் புதிய அரசியலமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்!
“…புதிய அரசியலமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென் இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு உகந்த ஒன்றாக இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசியலமைப்பு தொடர்பில், வெளிப்படுத்திவரும் நம்பிக்கைப் பேச்சுகள் எதை நோக்கியது?...” என்று வெளிநாட்டுத் தூதரக அதிகாரியொருவர் இந்தப் பத்தியாளரிடம்…
சுமந்திரன் சம்பந்தன் ஆகியோர் முஸ்லீம்களே -புதிய சுவரொட்டியால் கிழக்கில் பரபரப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசுடன் பங்கு பற்றி தமிழ் மக்கள் விடயத்தில் உறுதியான தீர்வினை பெற்றுக் கொடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோரை முஸ்லிம்களாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.இதில், முஸ்லிம்களுக்கு 13…
இலங்கை கிழக்கு மாகாணம்: “தமிழ் மக்களுக்கு இனி அநியாயங்கள் நடக்கக்கூடாது”…
மாகாண நிர்வாகத்தில் தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் அநியாயங்கள் இடம்பெற்றதாகவும், அவ்வாறான அநியாயங்களும் எதிர்காலத்தில் நடந்துவிடக் கூடாது எனவும் இலங்கை கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரா. சம்பந்தன் கேட்டுக் கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன்…
பிரதான இராணுவத் தளபதியாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா நியமனம்
படைப் பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம் இலங்கை இராணுவத்தின் படைப் பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. அவர் இலங்கை இராணுவத்தின் 53 வது படைப் பிரிவு பிரதானியாக…
சிங்கள சொத்தாகும் மன்னார் மடு? காரணம் என்ன?
மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள மடுத்திருத்தலம் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் முழு நிர்வாகியாகவும் பொறுப்புக் கூறக்கூடிய தரப்பினராகவும் தானே தொடர்ந்து செயற்படுவேன் என மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை…
யாழ்.மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்!நாடாளுமன்றில் சிறிதரன் அதிரடி!
மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் இன்று வலியுறுத்தினார். குறிப்பாக யாழ்ப்பாணம் – மண்டைதீவில் தோமையார் தேவாலயம் அருகிலுள்ள…
தமிழனின் காலில் விழுந்த சிங்களவர்; காரணம் இதுதான்!
கிழக்கு மாகாணத்திற்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் ஹிஸ்புல்லா தொடர்பில் கடந்த காலத்தில் பல கசப்புணர்வுகள் இருந்திருக்கின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார். அவற்றினை வெல்லக்கூடிய வகையில் எதிர்கால செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திசவீரசிங்கம் நான்காம் குறுக்கு…
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் யார்? சபாநாயகர் உத்தியோகபூர்வமாக இன்று அறிவிப்பு!
இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற சர்ச்சைக்கு சபாநாயகர் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவை புதிய எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று கூடியபோது பிரதி சபாநாயகர் இந்த விடயத்தை சபையில் அறிவித்தார். வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமானது.…
இலங்கை இராணுவத்தின் வாகனம் மோதியதில் 3 யாழ் தமிழர்கள் பலி!
கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இராணுவ ரக் வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று பேரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்றுபேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பளைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் கரந்தையைச் சேர்ந்த குகன் என்பவரும் அப்பகுதியில் இயங்கும் பண்ணை…
வடக்கின் புதிய ஆளுநர் இவர்தான்; மைத்திரியின் அரசியல் சூழ்ச்சி இதுதான்!
2019 ஆம் ஆண்டுக்குரிய முதலாவது பரபரப்பான வாரத்துக்குள் இலங்கைத்தீவின் அரசியல்களம் இன்று புகுந்து கொண்டது. இந்த ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு, நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று சில முக்கியநகர்வுகள் இடம்பெற்றன. இந்த நகர்வுகளில் வட மாகாணத்துக்குரிய புதிய ஆளுனர் நியமனமும் அடக்கம். சுரேன்ராகவன் ஒரு தமிழர் என்பதே…
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு…
இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இலங்கையின் கிழக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். இவர்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி…
இலங்கை வட மாகாண ஆளுநராக முதன்முதலாக தமிழர் நியமனம்
இலங்கையின் வட மாகாணத்திற்கான ஆளுநராக, தமிழரொருவர் முதன்முதலாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முனைவர் சுரேன் ராகவன், திங்கட்கிழமை பிற்பகல் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார். இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு, இலங்கை ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்றது. ரெஜினோல்ட் குரேவினால் வகிக்கப்பட்டு வந்த வட மாகாண ஆளுநர்…