உதிரும் மாகாண சபை அதிகாரங்கள்!

அரசின் மீதான வெறுப்பினைக் கொட்டித் தீர்த்து விட்டார்கள் வடக்கு வாக்காளப் பெருமக்கள். ஏறத்தாழ 85 சதவீத வாக்குகள் என்பது பேரழிவின் பின்னான 4 வருடங்களில் தமிழ் மக்களின் மனங்களில் பெரிதளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதைக் காட்டுகிறது. அரசு மேற்கொள்ளும் அபிவிருத்திகள் இழப்பினால் வந்த ரணங்களை ஆற்றாது கம்பள நெடுஞ்சாலைகளை்…

கூட்­ட­மைப்பின் வெற்­றியால் நெருக்­க­டிக்குள் சர்­வ­தேசம்!

வடக்கு மாகாண சபைத் தேர்­தலில் தமிழ் மக்கள் அளித்­துள்ள பேரா­த­ரவு, உல­கத்­தையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்­துள்­ளது. உலக ஊட­கங்கள் அனைத்தும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்ற வெற்­றியை பிர­மிப்­போடு பார்க்­கின்­றன. ஜன­நா­யக ரீதி­யாக தமிழ்­மக்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்ள அர­சியல் அபி­லா­சை­களை உலக நாடுகள் அதிர்ச்­சி­யோடும்…

வடக்கிற்கு உரிய அதிகாரங்களை வழங்காவிடில் அரசாங்கத்திற்கு பாரிய பிரச்சினை ஏற்படும்!

வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபார வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், வடக்கிற்கு உரிய ஆட்சி அதிகாரங்களை அரசாங்கம் வழங்காவிடின், சர்வதே ரீதியாக இலங்கை பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம். ரி. ஹஸன் அலி பா.உ. எச்சரித்துள்ளார். அது மட்டுமின்றி,…

வெருகல் முருகன் சிலையை மீளப்பெற புதிய முயற்சி

தமிழ்நாடு சிலைகள் காப்பகத்திலுள்ள தமது ஆலயத்திற்குரிய சிலை என நம்பப்படும் முருகன் சிலையை மீளப்பெற தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியை நாடுவதற்கு வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2005 - 2007 ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ…

மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் அவசியம்: சம்பந்தர்

இலங்கையில் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. வட மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்று அங்கு ஜனநாயக முறையிலான ஒரு தீர்ப்பு வந்த சில நாட்களுக்குள் இப்படியான தீர்ப்பு வந்துள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக்…

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவான கூட்டமைப்பை அழிக்க வேண்டும்: கர்ச்சிக்கும்…

விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்தது போல் அதன் அரசியல் பிரிவையும் அழிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அந்த அமைப்பின் அரசியல் பிரிவை அழிக்காததால் ஏற்பட்டுள்ள பின் விளைவுகளை தற்பொழுது அனுபவிக்க நேர்ந்துள்ளது என்றும் அவர்…

பான் கீ மூனின் காலம் கடந்த கழிவிரக்கம் தமிழர் காவியத்திற்கு…

ஐ.நா.சபையின் 68 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் ஐ.நா.சபையின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளதை ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதனைத் தெரியப்படுத்தியுள்ளார். வன்னிப் போர் முடிவுற்ற கையோடு போர் தந்த இழப்புகளை அவதானிப்பதற்காக வருகை தந்த…

யாரிடம் பதவிப் பிரமாணம் செய்வது என்பது குறித்து பரிசீலிக்கவுள்ளோம்: சீ.வி.விக்­னேஸ்வரன்

வட­மா­காண ஆளு­நரின் பதில் கிடைத்­ததும், முத­ல­மைச்சர் சத்­தி­யப்­பி­ர­மாண விட­யத்­தையும் அமைச்சர் வாரிய நிய­ம­னங்­களைப் பற்­றியும் பரி­சீ­லிப்போம். அவ­ரு­டைய பதிலுக்­காக காத்திருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், வடக்குத் தேர்­தலில் கூட்­ட­மைப்பின் சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்­டிய 28 அங்­கத்­த­வர்­களும் ஏகமனதான தீர்­மா­னத்­துடன் என்னை…

குற்றச்செயல்களுக்கு தீர்வு காணாவிடில் சர்வதேச விசாரணை!- நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது. குற்றச் செயல் விசாரணை, குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு காத்திரமான வகையில் தீர்வு காணாவிட்டால், சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார். நவநீதம்பிள்ளையின் மதிப்பீடுகள் கவனத்திற் செலுத்தப்பட வேண்டியது…

இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கை: மனித உரிமை பேரவையில் பிளவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் மனித உரிமை பேரவை இன்று இரண்டாக பிளவுபட்டிருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் பிள்ளையின் அறிக்கைக்கு ஆதரவு வழங்கியதுடன் இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தன. இந்த நிலையில் பாகிஸ்தான்,…

மாகாணங்களுக்கு காணி அதிகாரம் இல்லை: இலங்கை உச்சநீதிமன்றம்

இலங்கையின் 13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் எவையும் இல்லை என்றும், மத்திய அரசாங்கத்துக்கே முழுமையான காணி அதிகாரம் இருப்பதாகவும் இலங்கையின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மோஹான் பீரிஸ் உட்பட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினர் வியாழனன்று பரபரப்பான இந்தத் தீர்ப்பை…

நாங்கள் வீழ்ந்து விடவில்லை! உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்!

இனப்படுகொலைப் பயங்கரங்களுக்குப் பிறகு கதறி அழக்கூட உரிமையற்று இருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கான அரசியலைத் தாங்களே தீர்மானிக்க அடித்தளமாக, ஓர் ஆரம்பமாக... முதல் முத்திரை வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்! இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது, ஈழத் தமிழர்கள்…

சுதந்திர தாகம் தணியவில்லை என்பதன் வெளிப்பாடே தேர்தல் வெற்றி!- வி.…

இனப்படுகொலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைக்குள்ளும், தங்களுடைய சுதந்திர தாகம் தணியவில்லை என்பதனை தாயக மக்கள் உலகிற்கு தெட்டத் தெளிவாக கூறியிருக்கின்றார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்ரகுமாரன் அவர்கள் பொங்குதமிழ் எழுச்சி முழக்கமிட்டுள்ளார். தொடங்கியுள்ள ஐ.நாவின் வருடாந்த கூட்டத் தொடரில் பங்கெடுப்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள  இலங்கை…

இலங்கைப் போர்க்குற்ற விசாரணை : நவி பிள்ளை எச்சரிக்கை

போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த வேண்டிவரும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவி பிள்ளை எச்சரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம்…

நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் தமிழ் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது! ப.சிதம்பரம்…

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமைக்கு பாராட்டுத்…

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்!

வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் உணர்வுகள, அபிலாசைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன என்ற உண்மையை எவரும் மறுதலிக்க மாட்டார்கள். அதேநேரம் தமிழ் மக்கள் தங்கள் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயகம் நிறைந்த கள நிலைமையை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம் என்ற உண்மையும் இங்கு புலப்படுகிறது. அதாவது தமிழ்…

விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவில் புலனாய்வாளர்களை புகுத்த கோத்தபாய திட்டம்?

வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவிற்குள் அரச புலனாய்வு பிரிவின் மூன்று அதிகாரிகளை இரகசியமான முறையில் புகுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிங்கள இணையதளம் தெரிவித்துள்ளது. சட்டத்திற்கு அமைய மாகாண முதலமைச்சர் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு வழங்கப்படும் அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.…

வட மாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்!

இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்று யாழ்ப்பாணத்தில் கூடி, விக்னேஸ்வரன் அவர்களை உத்தியோகபூர்வமாக முதலமைச்சராகத் தெரிவு செய்திருக்கின்றார்கள். யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை…

வடக்கிற்கு 13வது திருத்த அதிகாரங்கள் வழங்கினால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்!–…

வடக்கிற்கு 13ம் திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டமொன்று உருவாக்கப்படும். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி விக்னேஸ்வரனுக்கு தனி இராச்சியம் அமைக்க இடமளிக்க முடியாது. 13ம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை…

வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படுமாறு இலங்கை அரசுக்கு அமெரிக்கா…

கடந்த 21ம் நாள் நடைபெற்று முடிந்த தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையுடன்  இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வாசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் பசாகி நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும்…

வடக்கில் தனி நாடு அமைக்கப்படும்: ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திற்கு…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வெற்றியைப் பயன்படுத்தி, வடக்கில் தனி நாடு அமைக்கும் என ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அரசாங்கம் உடனடியாக மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜாதிக…

சிங்களமே மண்டியிடுவோம் என்று கனவிலும் நினைக்காதே! இது வீர மறத்…

சிங்களத்தின் அடக்கு முறைக்கும், இலங்கை அரசின் போலித் தந்திரங்களுக்கும் நாங்கள் அடி பணியாத வீர மறவர் சந்ததி. சுட்டெரிக்கும் சூரியனையே நோக்கி மீண்டும் மீண்டும் பறக்கும் பீனிக்ஸ் போல எத்தனை முறை எரிந்தாலும் மீண்டும் உயிர் பெறக் காத்திருக்கின்றவர்கள். உலக வல்லரசுகள் துணையோடு இரசாயன ஆயுதங்களை வீசியெறிந்தாலும் மூச்சின்…

கூடுதல் இடங்கள் மலையக மக்களுக்கு நன்மை பயக்குமா?

இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு நடைபெற்ற தேர்தலில், கடந்த முறையைவிட இம்முறை தமிழ்க் கட்சிகள் கூடுதல் இடங்களை வென்றுள்ளன. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தலைமையிலான கட்சிகள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிட்ட போதிலும், இம்முறை தமிழர்களுக்கு கூடுதல் இடங்கள்…