கச்சதீவு திருவிழாவிலும் புகுந்தது சிங்களம் – இம்முறை சிங்கள மொழியிலும்…

கச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் கொமடோர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார். “இந்திய- சிறிலங்கா யாத்திரிகள் ஒன்று கூடுகின்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்தமுறை திருவிழாவில் இந்தியாவில்…

பலாலியில் சிறிலங்கா படையினரின் புதிய பண்ணை – கூலிகளாக அமர்த்தப்படும்…

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மக்களும், அனைத்துலக சமூகமும் வலியுறுத்தி வரும் நிலையில், பலாலிப் பெருந்தளப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா படையினர் தமிழ் மக்களின் காணிகளில் புதிய பண்ணைகளை உருவாக்கி வருகின்றனர். வலி.வடக்கில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்…

புதிய அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுக்களில் இருந்து ஒதுங்கியது கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நடக்கும் எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பெப்ரவரி 10 தேர்தலுக்குப் பின்னர், அரசாங்கத்தை அமைப்பதற்காக நாடாளுமன்ற…

‘தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும்’ – சம்பந்தன்

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தொடர்ந்தும் இதே போக்கில் செயற்பட்டால் தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெறும், சிறப்பு விவாதத்தில் உரையாற்றிய அவர், “உள்ளூராட்சி த் தேர்தலில்  சிறிலங்கா பொதுஜன…

சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?

உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களுடனான ஒப்பீடுகளின் அடிப்படையிலேயே, இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய ஒப்பீடு பொருத்தமானதா,…

மகிந்த மீள்வருகை – வெளிநாட்டு இராஜதந்திரிகள் கவலை

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திர சமூகத்தினர் கவலையடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, மேற்குலக இராஜதந்திரிகள், சிறிலங்கா அரசாங்கத்திடம் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கூட்டு எதிரணியினருடன்,…

திரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா? அல்லது குப்பைகளைச் சேர்க்குமா?!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது. 2. ஒரு சிறிய சைக்கிள் அலை வீசியிருக்கிறது. 3. தமிழ் வாக்குகள் சிதறிப்போய் உள்ளன. 4.சில சபைகளைத் தவிர பெரும்பாலான சபைகளில் தொங்கு நிலை தோன்றியுள்ளது. தெற்கில் அது மகிந்தவின் பலத்தை நிரூபித்திருக்கிறது.…

நாமல் ராஜபக்ஷவுடன் பேசி நல்ல முடிவினை எடுக்க முடியும்; சி.வி.விக்னேஸ்வரன்…

“தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குப் பெற்றார். தனது கருத்துக்கள் இனங்களுக்குள் விரிசலை ஏற்படுத்தக் கூடாதென நினைத்தோ என்னவோ, மஹிந்த ராஜபக்ஷ மகனான நாமல் ராஜபக்ஷவிடம் கூறி இவ்வாறான கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் தெரிவிக்கின்றனர் போல் தோன்றுகின்றது. எதுவாக…

மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள் – மைத்திரியை சந்தித்து சம்பந்தன் வலியுறுத்தல்

2015 அதிபர் தேர்தலின் போது, பெற்றுக் கொண்ட மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அடுத்து,  நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.…

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் அன்பான வேண்டுகோள்

பிரத்தியேக மருத்துவமனைகள் மற்றும் வைத்திய ஆலோசனை நிலையங்களை நடத்துகின்ற அனைத்து. முகாமையாளர்களுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்….,…

ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றக் கோரி கையெழுத்துப் போராட்டம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், இந்த விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றக் கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தமிழ்த் தேசிய…

சூடுபிடிக்கிறது சிறிலங்கா விவகாரம் – கடும் அழுத்தம் கொடுக்குமாறு ஜெனிவா…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடங்கவுள்ள நிலையில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய தூதுவரின் பணியகத்தில் நேற்றுக்காலை நடந்த இந்தக் கூட்டத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும், மனித உரிமை…

தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள்

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வர். இந்நிலையினையே, அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடாகக் காணமுடிகிறது. இலங்கைத் தேசத்தில் கடந்த காலங்களில் பல தேர்தல்கள் வந்து போயிருந்தாலும், அவற்றில் குறிப்பிட்டுச் செல்லக்கூடியதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஒரு சில தேர்தல்களே அமைந்துள்ளன. இந்நிலையில்…

‘மஹிந்தவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவரை நாம் எதிர்க்கவும் வேண்டியதில்லை’;…

“இனவாதத்தைத் தூண்டும் ஒரு செயலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளை நான் பார்க்கவில்லை. அவர் இனவாதக் கருத்துக்களை வெளியிடுகின்றார் என்று நாம் அவரை எதிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “அரசியலானது செய்யக்கூடியதைச் செய்யும் கலை என்றார் ஜேர்மன் அறிஞர்…

இந்திய, அமெரிக்க தூதுவர்கள் மைத்திரி, ரணிலுடன் அவசர சந்திப்பு

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவரும், அமெரிக்கத் தூதுவரும், நேற்று அவசரமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு அரசின் பங்காளிக் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளதையடுத்து, கொழும்பு அரசியலில் குழப்பங்கள் தோன்றியுள்ளன. கூட்டு அரசாங்கம் ஆட்டம் காணும் நிலையை அடைந்துள்ள…

தற்போது பிச்சை கேட்க்கும் சம்பந்தர்: இதனை விட தூக்கு போட்டு…

மகிந்தரை நாம் வரவேற்கிறோம். ஒரு நல்ல கருமத்தை ஆற்ற அவர் எங்களோடு இணைந்து செயல்பட அவரை நாங்கள் அழைக்கிறோம். மகிந்த பெற்ற வெற்றியானது பெரும் வெற்றி. அவர் நாட்டின் ஒரு சிறந்த தலைவர் என்பதனை இது எடுத்துக் காட்டுகிறது என்று சம்பந்தர் கூறியுள்ளார். வெற்றிபெற்ற வேட்பாளர்கள் சிலரை தனது…

காணாமல் போன தமிழர்களை ராஜபக்ஷதான் திருப்பித்தர முடியும்: உறவினர்கள்

இலங்கையில் வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முடியும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கூறுகிறார்கள். இறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அவர்களின் உறவுகளின் அமைப்பினர் கடந்த ஒரு வருடமாக தொடர் உண்ணாவிரதப்…

தீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணையாது: சுமந்திரன்

‘தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் வரையில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் திட்டவிட்டமாக அறிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகவுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி…

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்களின் பதில்

நீதியாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்துவதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டு, முதல் தடவையாக ஒரே நாளில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலொன்று நடந்து முடிந்திருக்கிறது. இதில், பிரதான கட்சிகள் பலப்பரீட்சையொன்றை நடத்தி முடித்திருக்கின்றன என்றுதான் சொல்லிக்கொள்ள முடியும். இதற்கென்றே உருவாக்கப்பட்டது போன்று, மொட்டு எல்லாவற்றையும் மேவியிருக்கிறது. நாட்டில் என்ன நடக்கப்போகிறது என்று, ஜனாதிபதியின் ஞாயிற்றுக்கிழமை…

தமிழர் பகுதிகளில் எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்திய தேர்தல்…

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்ட முறைமையானது குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்சியமைப்பதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பல தரப்பினரும் கூறுகிறார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் பெரும்பாலான சபைகளில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு தொங்கு நிலையை,…

அழைப்பும் மறுப்பும்

தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று கொள்கையில் பயணிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர், “சிறிலங்காவின் தென்பகுதியில் மகிந்த ராஜபக்சவின் கட்சி பெற்றுள்ள…

பரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதாக…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகக் கூடும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே தற்பொழுது சந்திப்பு வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. ரணிலின் பதவி விலகல் முடிவால் நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்படலாம் என்று…

”இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்”- மஹிந்த ராஜபக்‌ஷ

'இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்' என்று உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கேட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகளின்படி ராஜபக்‌ஷவின்…