பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
போர்க்கால மரணங்களை உறுதிப்படுத்த புதிய கணக்கெடுப்பை நடத்துகிறது சிறிலங்கா அரசு
போரின்போது வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் நாடு முழுவதிலும் புதிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி வருகிறது. கடந்த டிசெம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு நடவடிக்கை தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரில் இறந்த-…
‘குறிப்பிட்டதொரு மதத்தை முதன்மைப்படுத்தும் செயலை ஏற்கமுடியாது’
“நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் அல்லர். எனினும் குறிப்பிட்டவொரு மதத்தை முதன்மைப்படுத்தும் செயலை ஏற்றுக்கொள்ளமுடியாதென” வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் விகாரை அமைப்பதுக்கான நடவடிக்கைகளை மாவட்ட செயலர் மேற்கொண்டு வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ப.சத்தியலிங்கம் இன்று (27) வெளியிட்டுள்ள…
இலங்கையில் இணைப்பாட்சிக்கான ஏற்பாடுகளுக்கு இந்தியா அழுத்தம் வழங்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இலங்கையில் இணைப்பாட்சிக்கான ஏற்பாடுகளுக்கு இந்தியா அழுத்தம் வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அண்மைக்காலமாக இந்திய வெளிவிவகார பொருளாதார கொள்கை…
ஜெனிவாவுக்கு ஐவரை அனுப்புகிறது கூட்டமைப்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நடந்த கூட்டத்திலேயே, கூட்டமைப்பு சார்பில்…
‘இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா நிறைவேற்ற வேண்டும்’
சர்வேதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் என கோரி, சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ள கையெழுத்துப்போராட்டம் யாழ்.பஸ் நிலையத்தில் இன்று (26) மாலை இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட கால அவகாசத்தில் 1 வருடம் நிறைவடைந்துள்ளது.…
அனந்தியையும் சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனையும், சிவகரனையும் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று தற்போது, வடமாகாணசபையின் அமைச்சராக பதவி வகிக்கும், அனந்தி…
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் விடுதலை.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான வாசுகோபால் தஜரூபன் நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில்…
விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்து, முன்னாள் ஜனாதிபதியை விட அதிக சொத்துக்களை…
நமது நாட்டு (இலங்கை) அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. இந்த வரிசையில் இருக்கும் தமிழர்கள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும் தான் தமிழ்…
‘போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நீதி இல்லை’: இலங்கை மீது ஐ.நா…
இலங்கை போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் ஷெயித் ரா'அத் அல் ஹுசைன், அங்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்தை கேட்டுள்ளார்.…
இலங்கையில் போதிய முன்னேற்றம் இல்லை; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்…
“காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழுள்ள வழக்குகளை தீர்த்தல் உள்ளிட்டவற்றை செயற்படுத்துவதில், இலங்கையில் போதுமான முன்னேற்றங்கள் இல்லை” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹூசைன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அத்தோடு, இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியனவற்றை ஊக்குவிப்பதில் ஐக்கிய…
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு
சிறிலங்காவில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவது தொடர்பான தீர்மானம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை அடுத்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.…
கச்சதீவில் சிங்களத்தில் ஆராதனை – இந்திய, இலங்கை பக்தர்கள் அதிர்ச்சி
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் சிங்களத்தில் ஆராதனை நடத்தப்பட்டமை குறித்து- விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு மற்றும் இலங்கை பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்த கச்சதீவு புனித ஆலயத்தின் இரண்டு நாள் திருவிழா நேற்று நிறைவடைந்தது. இந்த…
உறுதியான அரசாங்கத்தை உருவாக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் சம்பந்தன் வலியுறுத்தல்
நாட்டை உறுதியற்ற நிலைக்குச் செல்ல அனுமதிக்காமல், அரசாங்கத்தை உறுதிப்படுத்த துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துப் பேசினார். தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும்,…
சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க ‘ஏனைய வழிகளை’ ஆராயுமாறு கோருகிறார் செயிட்…
சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான ஏனைய வழிகளை ஆராயும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அழைப்பு விடுத்துள்ளார். வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடருக்குச் சமர்ப்பித்துள்ள சிறிலங்கா தொடர்பான அறிக்கையிலேயே அவர் இந்தக்…
மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம் மலரப் போகிறது என, மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பிரிவினரும், தேர்தல் பிரசாரக் காலத்தில் முன்வைத்த பிரசாரங்களுக்கான பதிலடியாகவே, எதிர்க்கட்சித் தலைவரின்…
சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும்…
அனைத்துலக சமூகத்துக்கும், சிறிலங்கா மக்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை, அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினரான ஜேம்ஸ் சென்சென்பிரென்னர் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், உள்ள எதிர்க்கட்சி தலைவரின்…
தமிழ்க் கட்சிகள் பொதுக் கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்: என்.ஸ்ரீகாந்தா
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு தமிழ்க் கட்சிகள் ஒரு பொதுக் கொள்கையில் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தாபகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அதன் போக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட…
சிறிலங்கா அரசு வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்
காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியன தொடர்பான வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு ஆண்டைக் கடந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்கா பணியகம் கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவு…
அதிகாரத்துக்குப் போட்டியிடும் சிங்களக் கட்சிகளும் பிரச்சினைகளோடு போராடும் சிறுபான்மையினரும்
இவ்வாண்டு தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய இனப்பிரப்பிரச்சினை நிலவுகின்ற சிறிலங்காவில், வன்முறைகள் நிறைந்த தேர்தல்கள் இடம்பெறும். பெப்ரவரி 10 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் சிறிலங்காவின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது. இத்தேர்தலில் 75 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றதானது மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையைப்…
கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ
பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ, கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவின் சுதந்திர நாளன்று, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை நோக்கி பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல சைகையில் எச்சரித்திருந்தார்.…
இலங்கை கடற்படையினர் சித்ரவதை செய்தனர்.. மீனவர்கள் கண்ணீர் பேட்டி..
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்து மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைபிடிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த 3 மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துசென்று யாழ்பாணம் சிறைகளில் அடைத்தனர். இந்த நிலையில் இலங்கை சிறையில்…
இலங்கை: பேருந்தில் வெடிப்பு -19 பேர் காயம்
இலங்கையாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ என்ற இடம் நோக்கி சென்ற ஒரு பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பில் 12 அரசாங்க படையினர் உட்பட 19 பேர் காயமடைந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 7 ராணுவத்தினரும் 5 விமானப்படையினரும் அடங்குவர். இரு படையினரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. பண்டாரவளை என்ற இடத்துக்கு…
நாம் கேட்காத தமிழீழத்தை பொய்ப் பிரசாரங்கள் மூலம் மஹிந்த அணி…
“நாம் கேட்காத தமிழீழத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் தேர்தல் காலத்துப் பொய்ப் பிரசாரங்கள் மூலம் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றனர்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் தற்போது (இன்று திங்கட்கிழமை) நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவாதத்தில் கலந்து…























