பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இலங்கையில் நடப்பதும், நடக்கவிருப்பதும்…! – 4 முக்கிய கேள்வி பதில்கள்
இலங்கையில் கண்டி மாகாணத்தின் மத்திய பகுதி ஒன்றில், பெரும்பான்மை சிங்கள பெளத்த மக்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கும் இடையே எற்பட்ட மோதலை அடுத்து, மார்ச் மாதம் 6-ஆம் தேதி, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனை அங்குள்ள எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில்…
இலங்கை: கலவரம் தொடர்பாக 81 பேர் கைது
கண்டி கலவரம் தொடர்பாக இலங்கை அரசு இதுவரை 81 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெளத்த இயக்கத்தின் இளம் தலைவரும் ஒருவர். அண்மைய கண்டி கலவரத்திற்கு காரணமானவர் என பெளத்த கடும்போக்கு இயக்கமான `மஹசான் பாலாகயா'-வின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கேவை சந்தேகிக்கும் போலீஸ், வியாழக்கிழமை காலை…
முஸ்லிம்கள் இல்லாவிட்டால் புலிகளுடனான யுத்தம் முடிந்திருக்காது: இலங்கை கூட்டுப்படை தளபதி
கொழும்பு: முஸ்லிம்கள் இல்லாவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிந்திருக்காது என இலங்கை கூட்டுப் படைகளின் தளபதி ரவிந்தீர விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் முஸ்லிம்கள் மீதான சிங்களர் வன்முறை தாக்குதல்கள் குறித்து இலங்கை கூட்டுப் படைகளின் தளபதி ரவிந்தீர விஜயகுணவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளுடனான…
எரிக்கப்பட்ட வாணிப நிலையத்தில் பறக்கவிடப்பட்ட சிங்கக் கொடி
கண்டி- கட்டுகஸ்தோட்டையில் சிங்களக் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் வாணிப நிலையங்களில், பௌத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளன. கட்டுகஸ்தோட்டை, உகுரெசபிட்டிய பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வாணிப நிலையங்களின் மீது, இன்று காலை 11.30 மணிக்கும் பிற்பகல் 1 மணிக்கும் இடையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன. தீயிட்டு எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் வெதுப்பகத்தின்…
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறது ஐ.நா
சிறிலங்காவில் வெடித்துள்ள இன வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா அமைப்பு, இந்த வன்முறைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாக இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐ.நா கோரியுள்ளது.…
இலங்கை: அவசர நிலைக்கு பிறகும் தொடரும் பதற்றம்
இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில சம்பவங்கள் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தென்னகும்பர மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முயன்றவர்களை போலிஸார் கலைத்திருக்கிறார்கள். துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை கண்டி மாவட்டத்துக்கு வெளியே…
முஸ்லிம்களிடம் பௌத்தர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் – லக்ஸ்மன் கிரியெல்ல
தெல்தெனிய, திகண பகுதிகளில் நடந்த வன்முறைகள் தொடர்பாக முஸ்லிம்களிடம் பௌத்தர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அமைச்சரும் நாடாளுமன்ற அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “திகண, தெல்தெனிய சம்பவங்களின் விளைவாக அரச புலனாய்வுச்…
இலங்கை: இனக்கலவரங்களின் பின்னணி
இலங்கை இனக்கலவரங்களுக்கு பழகிப்போன நாடுதான். இங்கு தமிழருக்கு எதிராக கடந்த காலங்களில் நடந்த வன்செயல்கள், அதனைத் தொடர்ந்த கலவரங்கள் பெரும்பாலும் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்ட, பலரும் அறிந்த விடயங்கள். ஆனால், இலங்கையில் நடந்த முதலாவது வன்செயல் அல்லது கலவரம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்பது பலரும் அறியாத விடயம். முதலாவது…
இலங்கை: 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்
இலங்கை முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் நடந்த சிங்கள முஸ்லிம் வன்செயல்களை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை சந்திப்பு ஒன்றில் ஜனாதிபதியும், அமைச்சர்களும் இந்த முடிவை எடுத்ததாக அந்த சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம்…
இந்தியாவில் உள்ள, இலங்கை அகதிகள் முகாமில் கடிதம் எழுதி வைத்துவிட்டு…
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே முத்தூர் சாலை பிரிவில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு லிங்கேஸ்வரன், அவரது மனைவி சுபாஷினி (27) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 வயதில் காக்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது. லிங்கேஸ்வரன்…
எனது கனவு நனவாக விட்டால் நாடே அழிந்துவிடும்: மைத்திரிபால சிறிசேன
“நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், சகவாழ்வுடனும் வாழவேண்டும். அதுவே நான் காணும் கனவாகும். அந்தக் கனவை நனவாக்க முடியாவிட்டால், இந்த நாடே அழிந்துவிடும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கும் வகையில் இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைக்கவுள்ளதாகவும் அவர்…
கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் – இன மோதல்கள் வெடிக்கும்…
சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் தோன்றியுள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அறிவித்துள்ளார். தெல்தெனியவில் கடந்தவாரம் மோதல் ஒன்றின் போது படுகாயமடைந்த சிங்களவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை மரணமானார். இதையடுத்து, நேற்று தெல்தெனிய பகுதியில்…
புலிகளின் வாகனத்தில் இருந்தே குண்டை எடுத்தேன், தற்கொலை செய்யவே கொண்டு…
தற்கொலை செய்துகொள்வதற்காகவே கைக்குண்டை வீட்டுக்கு எடுத்து சென்றேன்.எனினும் அது தவறுதலாக பஸ்ஸினுள் வைத்து வெடித்து விட்டது” என கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான இராணுவ அதிகாரி அதிர்ச்சி வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி வருகைத்தந்த தனியார்…
புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் முதலிட முன்வர வேண்டும்: ஜோன்…
இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை புரிய வேண்டும் என நினைத்தால், புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு மாகாணத்தில் முதலிட முன்வர வேண்டும் என்று சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் யாழ். மாவட்டத்தில் விருந்தோம்பல் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதல் வழங்கும்…
ஐ.நா. மனித உரிமை: இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க…
ஐக்கிய நாடுகளால் இலங்கை மீது அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 2014 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2015 செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொது பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளிவந்தது. இந்த தீர்மானத்தில் முக்கியமான கூறு 30/1. அதில், இலங்கையில் நடந்து முடிந்த போரின் போது…
மக்களின் நம்பிக்கையை இழந்த பின்னர் நிறுவப்பட்டுள்ள பணியகம் – சுமந்திரன்
மக்கள் நம்பிக்கையிழந்து விட்ட பின்னரே, சிறிலங்கா அரசாங்கம் காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பணியகத்துக்கான உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “நீண்ட தாமதத்துக்குப் பின்னர் காணாமல் போனோர்…
பிராந்திய செயலகங்களை அமைக்க காணாமல் போனோர் பணியகத்துக்கு அதிகாரம்
காணாமல் போனோர் பணியகம் பிராந்திய செயலகங்களை அமைக்க முடியும் என்றும், அதற்கு காணாமல் போனோர் பணியக சட்டத்தில் இடமிருப்பதாகவும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பணியகத்தின் கிளைச் செயலகங்கள் வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகளும், தமிழ்…
தாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேற்கிறது அனைத்துலக சமூகம்
காணாமல் போனோர் பணியகத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை, அனைத்துலக நாடுகள் வரவேற்றுள்ளன. நீண்டகால இழுபறிகளுக்குப் பின்னர், காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிசும், ஏனைய ஆறு உறுப்பினர்களும் கடந்த 28ஆம் நாள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்களுக்கு நியமனங்கள்…
சிறிலங்காவின் சித்திரவதைகள் குறித்த புதிய ஆதாரங்களை வெளியிட்டது அல்-ஜெசீரா
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் அங்கு தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்வதாக அல்- ஜெசீரா தொலைக்காட்சி புதிய ஆதாரங்களை முன்வைத்துள்ளது. தற்போதைய ஆட்சிக்காலத்தில் சித்திரவதை செய்யப்பட்ட தமிழர்களின் புதிய காணொலி சாட்சியங்களுடன் அல்- ஜெசீரா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன…
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கும் அவலம் நீடிக்கிறது:…
“வடக்கு மாகாணத்தில், 63,331 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இவர்களுடைய வாழ்வாதாரம் வலுவிழந்து காணப்படுவதோடு, பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்து வாழ்வியலை தொடரும் அவல நிலை காணப்படுகின்றது.” என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலைமை தொடர்பாக…
“முக்கியமான நகர்வு“ – அமெரிக்கத் தூதுவர்
காணாமல் போனோர் பணியகத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது, முக்கியமானதொரு நகர்வு என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பணியகத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நியமனக் கடிதங்களை வழங்கியிருந்தார். இதுதொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்,…
இலங்கை: போரில் காணாமல் போனவர்களை கண்டறிய அதிகாரிகள் நியமனம்
இலங்கையில் 2009 இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகத்துக்கான ஆணையர்களை இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ளார். இதற்கான தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணியான சாலிய பீரிஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அரசாங்க தகவல் திணைக்களம், மேலும் 7 பேரை அதன் ஏனைய உறுப்பினர்களாகவும் அறிவித்துள்ளது.…
சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்…
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் மேரி கத்தரின் பீ தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் நேற்று…























