பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் குடும்பத்தினருடன் தடுத்து வைப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர், சிறிலங்காவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சிறிலங்கா அதிகாரிகளை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “சுரேஸ்நாத் இரத்தினபாலன் என்ற 48 வயதுடையவர், தனது மனைவி…
‘சிறுபான்மைகளை’ ஒதுக்கும் அரசியல்
இலங்கையின் அரசியல் கலாசாரமென்பது, முற்றுமுழுதாக ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தைக் கொண்டது என, யாரும் கூறிவிட முடியாது. நேரடியான இனவாதமும் மதவாதமும் பாலின ஒதுக்குதலும் காணப்படாவிட்டாலும், சுதந்திரம் பெறப்பட்ட பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், இவை அனைத்தையும் கண்டே வந்திருக்கிறோம். இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், சிறுபான்மைகளை அல்லது…
கொழும்பு – தூத்துக்குடி இடையே சரக்கு கப்பல் சேவை தொடக்கம்
இலங்கையின் கொழும்பு துறைமுகம் மற்றும் தமிழ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமான தூத்துக்குடி ஆகியவற்றுக்கு இடையே சரக்கு கப்பல் சேவையை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது. வாரம் இரு முறை பயணம் மேற்கொள்ளும் எம்.வி.சார்லி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கப்பல் 1,730 டி.இ.யூ கொள்ளளவு…
ஆண்டுகளே உருண்டோடுகின்றன! நீதி இன்னும் கிடைக்கவே இல்லை!!
ஆண்டுகளே உருண்டோடுகின்றன! நீதி இன்னும் கிடைக்கவே இல்லை!! – லசந்தவின் நினைவேந்தல் நிகழ்வில் எடுத்துரைப்பு படுகொலைசெய்யப்பட்ட ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று நினைவுகூரப்பட்டுள்ளது. பொரளை கனத்தையிலுள்ள அவரது நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும்,…
சுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஊடகங்களுக்கு அஞ்சி, ஊடகங்களை மிரட்டி வருவதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில்…
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44வது ஆண்டு நினைவேந்தல்…
யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற 4வது உலகத் தமிழாராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. யாழ். முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அருகில், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கலந்து…
தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள்
‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகியுள்ளது வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமைகள் என்றால் மறுப்பதற்கில்லை. தமிழர்களது போராட்ட வரலாறுகளும் அதனூடான உரிமைக்கான குரலும் ஓங்கி ஒலித்த காலத்தில் இருந்த திடமான அரசியல் களம், தற்போது தடம்புரளும் வங்குரோத்தில் செல்கின்றமை ஆரோக்கிமானதாக இல்லை. விடுதலைப் புலிகளினால் உருவாக்கம் பெற்ற தமிழ்த்…
பிரித்தானியா சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியிடம் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை?
சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியா விசாரணை நடத்தியிருப்பதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடமே, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எனினும், எப்போது இந்த விசாரணை நடத்தப்பட்டது, விசாரணைக்குள்ளாக்கப்பட்ட சிறிலங்கா…
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுவை அமைக்குமாறு விக்னேஸ்வரனிடம்…
யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்றை அமைக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபையின் 115வது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியிலுள்ள பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில்…
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு இலங்கை வடக்கு மாகாண முதல்–மந்திரி…
யாழ்ப்பாணம், இலங்கையில் உள்ள வடக்கு மாகாணத்துக்கு முதல்–மந்திரியாக இருப்பவர் விக்னேஸ்வரன். யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண கவர்னர் அலுவலகத்தில் தேசிய மற்றும் மாவட்ட அளவிலான தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க விக்னேஸ்வரன் வந்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து…
ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டதாக கூறப்படுவது பொய் – சுமந்திரன்
ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல, நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டதாக கூறப்படுவது பொய் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஒஸ்மானியா கல்லூரி வீதியில் நேற்று மாலை நடந்த, யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் வேட்பாளர்களை…
அகதி முகாம்களில் மத்திய அரச அதிகாரிகள் ஆய்வு – இரட்டைக்…
தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்களில் இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கொட்டப்பட்டு, வாழவந்தான்கோட்டை, தோப்புக்கொல்லை, தேக்காட்டூர், அழியாநிலை அகதிகள் முகாம்களில் மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.…
கடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமையை திருத்துவதற்கு முயற்சித்தோம்:…
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நீண்ட சகிப்புத்தன்மையுடன் இருந்தோம். மக்கள் எங்களுக்கு கொடுத்த ஆணையை ஏற்று கிட்டத்தட்ட 16 வருடங்களாக கூட்டமைப்பில் ஒரு சர்வதிகார தலைமையின் கீழ் நாங்கள் இருந்தோம். கூட்டமைப்பின் ஒற்றுமை குலையக் கூடாது. எங்கள் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நீண்ட…
சாவகச்சேரியில் கூட்டமைப்பின் வேட்பாளர் தாக்கப்பட்டு படுகாயம்
சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காசிலிங்கம் சற்குணதேவன் என்ற வேட்பாளரே காயமடைந்தவராவார். சாவகச்சேரி நகரசபையின் 8 ஆவது வட்டாரத்துக்கு (நுணாவில் கிழக்கு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இவர் போட்டியிடுகிறார். இவர் சாவகச்சேரி-…
தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் மத்திய அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு-…
தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்கள் சிலவற்றில், இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதனால் மாநில அரச அதிகாரிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெங்கபுரம் அகதிகள் முகாமில் மத்திய அரசு அதிகாரிகள்…
இனவாதத்திற்கு எதிராக போராடிய இலங்கையின் சிவானந்தன் மறைவு
தனது இனத்திற்காக போராட்டங்களை நடத்திய தலைசிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், ஆசிரியரும், நியாயமான சமூகத்திற்காக போராடிய இலங்கை செயற்பாட்டாளருமான அம்பலவானர் சிவானந்தன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உயிரிழந்தார். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையில் பிறந்த சிவானந்தன், தனது 35ஆவது வயதில், அதாவது 1958ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட…
விக்னேஸ்வரன் எனக்கு துரோணாச்சாரியார்; ஆனாலும், அவர் இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகிறார்:…
“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா எனக்குத் துரோணாச்சாரியார். நான் அருச்சுனன் அல்ல. என்றாலும், ஐவரில் ஒருவன், இல்லையென்றால் ஏகலைவன். அவருக்கு அளிக்க வேண்டிய கண்ணியத்தை வழங்கி, 'உள்ளதையும் நல்லதையும்' சொன்னேன், 'விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய்' என்று நொந்தேன். ” என்று இலங்கைத்…
முல்லைத்தீவில் கடற்படைத் தளம் அமைக்க 671 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க…
முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு 671 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விகல்ப என்ற ஊடகத்தின் ஆசிரியர் சம்பத் சமரக்கோன், எழுப்பியிருந்த வினாவுக்கு காணிகள் மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலர் தயாரத்ன அளித்துள்ள…
பொலிஸ் காவலில் உள்ளவர்கள் மீது தொடர்ந்தும் சித்திரவதை: இலங்கை மனித…
பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ளவர்கள் மீது தொடர்ந்தும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பிலான முறைப்பாடுகள் தங்களுக்கு அடிக்கடி கிடைப்பதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய 2017ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான…
‘இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் ஆணை வேண்டும்’
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் நகர்வுகளுக்கு, தமிழ் மக்கள் வழங்கும் ஆணையாக அமைய வேண்டும்” என, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெவித்தார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
‘தமிழ் மக்கள் ஏமாற்றம்’
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான பொறுப்புக்கூறலுக்காக வழங்கிய அர்ப்பணிப்புகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், இதனால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் எனவும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் “தி ஹிந்து” ஆங்கிலப் பத்திரிகையின் மீரா…
13 இந்திய மீனவர்கள் கைது
இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 13 பேரை கைதுசெய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (3) இவர்களை கைதுசெய்ததாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களது 2 மீன்பிடி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு யாழ்-மீன்பிடி பணிப்பாளர் அலுவலகத்தில்…
அரசியல் தீர்வு விடயத்தில் விரக்தியடையவோ, விடயங்களைக் கைவிட்டுவிடவோ முடியாது: சம்பந்தன்
“அரசியல் தீர்வு விடயத்தில் விரக்தியடையவோ விடயங்களை கைவிட்டுவிடவோ முடியாது. தற்போதைய சூழ்நிலையில் எமது நோக்கங்களில் தொடர்ந்தும் விடாப்பிடியாக இருந்து, விரைவானதும் வெற்றிகரமானதுமான முடிவைக் காண வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். “ஆட்சி மாற்றத்துக்காக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தமையை…























