பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவை அமர்வுகளை கண்காணிக்கிறதாம் சிறிலங்கா…
கனடாவில் நடந்து வரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வுகளை கனடாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் 8 ஆவது கூட்டத்தொடர், கனடாவின் ரொரன்டோ நகரில், ஜனவரி…
ஒற்றையாட்சி நீடிக்கும் வரை சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது –…
ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை எங்களால் சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Huffington post என்ற அனைத்துலக ஊடகத்துக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். வடமாகாண முதலமைச்சருடனான நேர்காணல் வருமாறு: கேள்வி: மைத்திரிபால சிறிசேன மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்…
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு த.தே.கூ தடையாக இருந்தது:…
“தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு நாம் பல வழிகளிலும் முயற்சித்த போதும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாக இருந்தது.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டியிலிருந்து நான் இன்னும் பின்வாங்கவில்லை.…
பாதுகாப்பு பலூன், ஆசனப்பட்டி இல்லாத வாகனங்களுக்கு தடை!
பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்புக்கான அம்சமாக காணப்படும் ஆசனபட்டி மற்றும் பாதுகாப்பு பலூன் இன்றிய வாகனங்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் குறித்த தடை அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான வரவு-…
பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கக் கோருகிறது ஐரோப்பிய ஒன்றியம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று நடந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான 21 ஆவது கூட்டுக் குழுக் கூட்டத்திலேயே, இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்,…
முல்லைத்தீவில் சிக்கிய, விடுதலைப் புலிகளின் முக்கிய தடயம்”..
விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் மிதப்பிகள் இரண்டு முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நீர்மூழ்கி கப்பல் மிதப்பிகள் விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகியாதாக குறிப்பிடப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் "அங்கையற்கன்னி" நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி செல்லும் சந்தர்ப்பத்தில் அதனுடைய மேற்பகுதி கடல்மட்டத்துடன் காணப்படும் என்று கூறப்படுகின்றது. கடற்கரும்புலிகள்…
தமிழ்க் கட்சிகளின் பிளவுகள் தேசியக் கட்சிகளின் நிலைபேற்றுக்கு வழிசமைக்கும்
கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைப்பாட்டில் இன்றைய தமிழ் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒற்றுமை என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழர் அரசியல் பலம் சிதைந்து, பல கூறுகளாகியுள்ள நிலையில், உள்ளூராட்சி தேர்தல் மக்கள் மத்தியில் வந்திருக்கின்றது. அரசியல் தீர்வை நோக்கி நகரவேண்டிய கட்டாயம் தமிழர்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையிடம் சோரம் போகவில்லை: செல்வம் அடைக்கலநாதன்
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையிடம் சோரம் போகவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்று இராஜதந்திரத்தைக் கடைப்பிடிக்கின்றது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.…
ஈழத்தமிழருக்கான குரல் ஒன்று ஓய்ந்தது
ஞாநி நாடறிந்த மூத்த பத்திரிகையாளர். எதையும் எவர் முன்னும் நேர்படப்பேசும் மனத் திண்மை பெற்ற மனிதராக இதழியல் துறையில் இயங்கி வருபவர். அவரது ஓ பக்கங்களுக்கென்று தனித்த வாசகர் வட்டம் உண்டு. அப்பக்கங்களின் வெக்கை தாளாமல் சில இதழ்கள் வெளியிட மறுத்த வரலாறும் உண்டு. தீம்தரிகிட, தினமணி கதிர்…
தமிழ் மக்கள் வழங்கிய அரசியல் பலத்தை த.தே.கூ தவறாக பயன்படுத்துகின்றது:…
தமிழ் மக்கள், தங்களின் அரசியல் அபிலாசைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய அரசியல் பலம் இன்று தமிழ் மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர்…
வடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு:…
நாட்டில் யுத்தம் நிறைவடைந்து நீண்ட காலமாகிய போதிலும், வடக்கில் இன்னமும் இராணுவம் நிலை கொண்டிருப்பது, தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்து வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு…
சுமந்திரன் சுற்றும் வாளும் அகப்படும் ஊடகங்களும்!
தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அரசியல் என்பது, கூட்டமைப்புக்கு எதிரான நிலையிலிருந்து தமிழரசுக் கட்சிக்கு எதிரான நிலையாக மாறி இன்றைக்கு அது, எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான அரசியலாக மாறி நிற்கிறது. ஒரு முனையில் சுமந்திரனும் மறுமுனையில் சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் நிற்கின்றனர்.…
இராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
இராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நிலைமாற்ற நீதிமுறைமைகளின் கீழ், போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட…
இரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி பேசியிருப்பது நகைப்புக்கிடமானது:…
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பினை ஏற்றுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ‘உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இறையாண்மை மதிக்கப்பட்டு சுயாட்சியுடன் கூடிய தீர்வினை பெறுவோம்’ என பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பது நகைப்புக்குரியது. அது, ஏமாற்று வேலை.” என்று தமிழ்த் தேசிய மக்கள்…
கூட்டு அரசாங்கம் தொடர வேண்டும் – சுமந்திரன்
அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை முன்னெடுப்பதற்கு கூட்டு அரசாங்கம் தொடர வேண்டியது அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அண்மையில் பலவேறு…
ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுகள் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்
ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில், இந்திய அரசாங்கத்தின் அவதானம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாதுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் தாரான்ஜித் சிங் சாந்துவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து இந்த சந்திப்பு…
பொறுப்புக்கூறல், நல்லிணக்க விவகாரங்களில் சிறிலங்கா மீது அமெரிக்கா அதிருப்தி
பொறுப்புக்கூறல், நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அமெரிக்க தூதுவர் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்தபோதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், இது…
வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பில் இந்தியாவால் எதுவும் செய்ய முடியாது:…
‘வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்பில் இந்தியாவினால் எதுவும் செய்ய முடியாது. அது, இலங்கையின் உள்நாட்டு விவகாரம்’ என்று இலங்கைக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்துவை கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்தித்துப் பேசியிருந்தார்.…
விடுதலைப் புலிகளின் பயன்பாட்டில் இருந்த தமிழர் நாட்காட்டி, மீண்டும் வெளிவந்துள்ளது!
தமிழ் புத்தாண்டு என அழைக்கப்படும் தைப்பொங்கல் திருநாளான நேற்று புதிய திருவள்ளுவர் ஆண்டு பிறந்துள்ளது. அதாவது தமிழரின் பண்டைய நாட்காட்டிக் கணிப்பின்படி புதிய தமிழ் ஆண்டு பிறந்துள்ளது. அந்தவகையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொன்மத் தமிழ்க் குடிகளால் கையாளப்பட்டு வந்த தமிழ் நாட்காட்டியை தற்காலத்திற்கேற்ப வடிவமைத்து வெளியிட்டிருக்கின்றார் கிளிநொச்சியைச்…
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்- முதலமைச்சர்…
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியத் தூதுவர் தரன்ஜித் சந்துவை, வடக்கு மாகாண முதலமைச்சர் நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகள்…
நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் சிறிலங்காவில் இருந்து நாடு…
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூத்த உறுப்பினரான சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். கருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் சிறிலங்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் நேற்றுக்காலை நாடு கடத்தப்பட்டதாக சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை…
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய தீர்வுக்காக பிரார்த்திக்கிறேன்; பொங்கல்…
“தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடியதாகவும், நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான சுயாட்சியுடன் கூடிய ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதன் மூலம் இதயசுத்தியுடனான புரிந்துணர்வையும் இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு வழியேற்பட வேண்டுமென இந் நன்நாளில் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்…
அமெரிக்கத் தூதுவர் – வடக்கு முதல்வர் சந்திப்பு
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்புத் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். “முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தைப்பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறினேன். வட மாகாண விவகாரங்கள்…























