பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தம்பி பிரபாகரனுக்கு மண்டியிட்டு மலர் மாலை பெறவேண்டிய அவசியம் என்றைக்கும்…
“தம்பி பிரபாகரன் அவர்கள் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் மரணத்தையுந் தழுவியிருக்கலாம். ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்றுமே இருந்தில்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றுக்கு…
வடக்கு- கிழக்கு இணைப்பு முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் நிகழ வேண்டும்:…
“வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு வேண்டும் என்று வெறுமனே கூறினால் அது முஸ்லிம் மக்களின் மனதைப் பாதிக்கும். ஏனென்றால், தங்களுடன் கலந்தாலோசிக்காமல் அப்படி எவ்வாறு கூறமுடியும் என்று அவர்கள் சிந்திப்பார்கள். அதனால்தான் நாங்கள், வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் நிகழ வேண்டும்…
திருகோணமலை மாணவர்கள் படுகொலை; 12வது நினைவு தினம் இன்று!
திருகோணமலையில் பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்களை இராணுவத்தின் சிறப்பு அதிரப்படை சுட்டுக்கொண்டு இன்றோடு 12 ஆண்டுகளாகின்றது. 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி, ஐந்து மாணவர்களும் நிலாவெளிக் கடற்கரையில் நின்றிருந்த வேளையே, அங்கு வந்த இராணுவத்தின் சிறப்பு அதிரப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். குறித்த மாணவர்களின் படுகொலைக்கான நீதிக்…
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பறக்கும் சீனாவின் தேசியக்கொடி
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த செப்ரெம்பர் மாதம், 9ஆம் நாள் சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, முதல் முறையாக அங்கு சீனாவின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. முன்னதாக, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிறிலங்காவின் தேசியக்கொடியும், துறைமுக அதிகாரசபையின் கொடியும்…
தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்;…
“புதிய வருடம் ஆரம்பிக்கின்ற வேளையில், தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அடையும் நோக்கில் ஒன்றுபட்டு செயற்பட முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றறேன். இதனைச் செய்வதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததிக்கு ஒரு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்…
பெண்கள் அரசியலில் ஈடுபடத் தயங்குவது ஏன்?
நீங்கள் குதிரையை தண்ணீர் குடிக்கக் கொண்டுவர முடியும், ஆனால் உங்களால் அதைக் குடிக்க வைக்க முடியாது. இதேபோன்றே, சிறிலங்காவில் செயற்படும் அரசியற் கட்சிகள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் போன்றன இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சி நிறுவகங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதில் வெற்றி பெற்றாலும் கூட, தகைமைபெற்ற பெண்…
அரசியல் தலைமைகள் வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
“எமது அரசியல் தலைமைகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு தமது வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாளை திங்கட்கிழமை பிறக்கவுள்ள 2018ஆம் ஆண்டினை முன்னிட்டு முதலைச்சர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஊடக அறிக்கையில்…
உதயசூரியன் சின்னத்தில் போட்டியா? – மறுக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
அடுத்த மாகாணசபைத் தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக வெளியான தகவல்களை நிராகரித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் தலைமையை விமர்சித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் கேள்வி- பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதையடுத்து, ஆனந்தசங்கரி தலைமையிலான…
புராதன பௌத்த சின்னம் என்ற பெயரில் சம்பூரில் முருகன் ஆலயத்தை…
திருகோணமலை- சம்பூர், சூடைக்குடா பகுதியில் புராதன பௌத்த எச்சங்கள் இருப்பதாக கூறி, முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியை சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களம் விரைவில் சுவீகரிக்கவுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மந்தவெல, இதனைத் தெரிவித்துள்ளார். “சம்பூர் சூடைக்குடா செதிய அமைந்துள்ள பகுதியை பாதுகாப்பதற்காக அந்தப் பகுதி விரைவில் தொல்பொருள்…
இலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்
இலங்கையில் உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கலாம். ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்க்களமாகவே இருக்கிறது. அவர்களுடைய வாழ்வுக்கான, அன்றாட தேவைக்கான, வாழ்வாதாரத்துக்கான, உணவுக்கான, கௌரவமான வாழ்வுக்கான போராட்டமும், அவப்பெயருக்கு பயப்படும் போராட்டமும்,சமூகப் பாதுக்காப்புக்கான போரட்டமும் எத்தனை தலைமுறைகளுக்குத் தொடரப்போகின்றதோ என்று நினைக்கும்போது…
அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கிறது சிறிலங்கா – அதிர்ச்சியுடன் தொடங்கும்…
புத்தாண்டு சிறிலங்காவுக்கு அதிர்ச்சியுடன் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை சிறிலங்கா 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாளில் இருந்து இழக்கவுள்ளது. சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்காவில் கிடைத்து வந்து ஜிஎஸ்பி வரிச்சலுகை நாளையுடன் காலாவதியாகவுள்ளது என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்…
இலங்கை: ‘நாடு திரும்புவோரின் குழந்தைகளுக்கு குடியுரிமைக் கட்டணம் கூடாது’
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கான இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் 25,000 ரூபாய் கட்டணம் அறவிடுவதாக ஈழ புகலிடக் கோரிக்கையாளர் புனர்வாழ்வு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தம் காரணமாக சட்டவிரோதமான முறையில் இந்தியா நோக்கி சென்ற இலங்கை அகதிகளின் சுமார் 25 பிள்ளைகள் தற்போது நாடற்றவர்களாக…
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தமிழ் அரசுக் கட்சி பதிலடி
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை மற்றும் அதன் தலைமையை விமர்சித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த புதன்கிழமை வெளியிட்டிருந்த கேள்வி- பதில்…
கேப்பாப்புலவில் 133.34 ஏக்கர் காணிகளை விடுவித்தது சிறிலங்கா இராணுவம்
முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 133.34 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன. கேப்பாப்புலவில் நேற்று நடந்த நிகழ்வில், முல்லைத்தீவு படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு, இந்தக் காணிகளை ஒப்படைக்கும் ஆவணத்தை, புனர்வாழ்வு புனரமைப்பு, மீள்குடியேற்ற…
அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இதுவரை…
அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தான் இதுவரை சிந்தக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “வடக்கு கிழக்கில் இந்தத் தேர்தல் காலத்தில் என் பெயரை இழுத்து கட்சிகளின் சார்பிலும் தனிப்பட்ட…
10 நாட்களாக தொடரும் லெமன்மோரா மக்களின் போராட்டம்
தோட்ட நிர்வாகம் தங்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் என தெரிவித்து கடந்த 18 ஆம் திகதி முதல் லெமன்மோரா மக்கள் தொடர்போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பத்தில் 188 ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டிருந்தபோதிலும் தோட்ட நிர்வாகம் திட்டமிட்டு அத்தோட்டத்தினை கடாக்கி வருவதாக…
கேப்பாப்புலவில் 133 ஏக்கர் காணிகள் இன்று இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து…
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில், சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 133 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளன என்று புனர்வாழ்வு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள சிறிலங்கா படையினர் அமைத்துள்ள படைத்தளங்களை இடம்மாற்றுவதற்கு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சு 148 மில்லியன் ரூபாவை…
பாம்பு தீண்டியதால் 400 பேர் உயிரிழப்பு
இலங்கையில் வருடத்திற்கு 400 பேர் பாம்பு தீண்டுவதால் உயிரிழப்பதாக புதிய அறிக்கைகள் தெரிவித்துள்ளன. களனி பல்கலைக்கழகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. அத்துடன், பாம்பு தீண்டுதலுக்கு இலக்காகி வருடாந்தம் 80,000 பேர் பாதிக்கப்படுவதாகவும், ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன. நாட்டின் சகல வைத்தியசாலைகள், வைத்திய மத்தியநிலையங்கள், ஆயர்வேத…
எனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர் என் ஒத்த…
“என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள். நான் எந்தக் கட்சியையும் நாடிச் செல்லவில்லை. எந்தக் கட்சியின் ஆண்டு சந்தாப் பணத்தைக் கட்டி விடுபவனும் அல்ல.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…
தமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்காது: அனந்தி சசிதரன்
தமிழ் பேசும் மக்களுக்காக இனியும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்படப் போவதில்லை என்பதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளதாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நீதி…
வட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் என்றைக்கும் இல்லாதளவுக்கு அடிதடி, மிரட்டல், ஆள் பிடித்தல், சாதி- மத அடையாள அரசியல் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கின்ற நிலையில், இன்னும் என்னென்ன அடாவடிக் காட்சிகளைப் பார்க்க…
ரிரிவி தினகரன் – சுமந்திரன் சந்திப்பு
தமிழ்நாட்டில், சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, பெருவெற்றியைப் பெற்றுள்ள ரிரிவி தினகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம், இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். கன்னியாகுமரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நத்தார் விழாவில் கலந்து கொண்ட போதே, ரிரிவி தினகரனுக்கும்,…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தது ஜனநாயகப் போராளிகள் கட்சி
உள்ளூராட்சித் தேர்தலில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து, ஜனநாயகப் போராளிகள் கட்சி போட்டியிடுவதாக, தமிழ் அரசுக் கட்சியின் இணைச்செயலரும், வடமாகாணசபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர்களுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக்…





















