வடமாகாண சபையின் எதிர்காலம் என்ன? பிரச்சினைகள் தொடருமா?

சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் வடக்கு மாகாண சபையானது இது வரை மிகப்பெரிய சாதனைகளை செயற்படுத்தி உள்ளதாக கூறிவிட முடியாது. காரணம் வடமாகாண சபைக்கு அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையே காணப்படுகின்றது என்பதே உண்மை. இவ்வாறானதொரு நிலையில் குழப்ப நிலை ஏற்பட்டமை வேதனையான விடயம். இன்று வரை வடமாகாண…

தமிழரென்றால் சிறை! ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்

சிறுபான்மையினராகிய தமிழரின் முக்கியமான பிரச்சினையாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சில கைதுகள், நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் துன்புறுத்தல்கள் காணப்படுகின்றன. இவற்றை நிறுத்தாமல் நிலைமாறு கால நீதி தொடர்பில் நாம் பேச முடியாது என மனித உரிமைகள் சட்டத்தரணி டொமினிக் பிரேமானந்தா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 35ஆவது கூட்டத்…

காணாமல் ஆக்கப்பட்டோரின் அறிக்கைத் தயார் : 1,46000 பேர்களைக் கொன்ற…

சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு ஈழத் தமிழர்களுக்கான பல்வேறு உதவித்திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என எட்வர்ட் ஆனந்தராஜா டொமினிக் பிரேம்நாத் வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு…

காணாமல்போனோருக்கான பணியகம் மிகவும் அவசியம் – அமெரிக்க தூதுவர்

காணாமல் போனோருக்கான பணியகம் மிகவும் அவசியமானது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் நேற்று கிழக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் போது, பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அமெரிக்கத் தூதுவர்…

ஐ.நா. அறிக்கையாளர் மீது கடும் அதிருப்தி வெளிட்ட அரசாங்கம்

நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனத் தன்மை பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளர் மொனிகா பின்டோவின் அறிக்கை இலங்கையின் இறைமைக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தவறானதும் பொய்யானதும் தகவல்களால் நிரம்பியுள்ளது என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார். நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனத்தன்மை பற்றிய ஐ.நா.…

தமிழ் மக்களின் உரிமைத் தலைவனாக மாற முயற்சிக்கும் கருணா

வடமாகாண சபையின் குழப்பமானது இப்போதைய சூழலில் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளதோடு, அது ஓர் தீர்வு நிலையை எட்டக் கூடிய நகர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தற்போதைய நிலையில் இந்தக் குழப்பங்கள் ஏற்பட்டதன் பின்னணி என்ன? என்ற நோக்கத்தில் சிந்திக்கும் போது தெற்கின் அரசியல் சதியும் இதில் இருக்கலாம் என்ற வாதப்பிரதிவாதங்களும்…

விக்கி விவகாரத்தில் வெளிவரும் யாருமறியா இரகசியங்கள்!! தயாராகும் அடுத்த நகர்வுகள்..

வடக்கு மாகாண சபையில் தற்போது அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள இஸ்திரத்தன்மை குறித்து லங்காசிறியின் அரசியற் களம் வட்டமேசையில் மூத்த அரசியல் ஆய்வாளரும் சிரேஸ்ட சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார். யாழில் முதலமைச்சருக்கு ஆதரவாக, முதலமைச்சரை நோக்கி மக்கள் வருகைதந்த காட்சிகள், மற்றும் இப்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண…

போராளிகளின் குருதியினால் உருவான மாகாணசபை கேலிக்குரியதாக மாறியுள்ளது?

பொதுமக்களினதும் போராளிகளினதும் குருதியினால் உருவான மாகாணசபை இன்று கேலிக்குரியதாக மாறியுள்ளது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.)தியாகிகள் தினம் இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கிழக்கு மாகாண…

வடக்கில் நிலவிய அரசியல் பதற்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது!? வடக்கு…

கடந்த ஒருவார காலமாக வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

சிறிலங்காவினால் புறக்கணிக்கப்படும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகள்

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை உயர் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசேன் சிறிலங்காவால் நிறைவேற்றப்பட வேண்டிய சில முக்கிய பரிந்துரைகளை முன்வைத்திருந்தார். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் இப்பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இப்பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா உடன்படவில்லை என பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்ட போது வெளியுறவு…

சமரசப் பேச்சுவார்த்தையில் திருப்பம்! விக்கியே வடக்கின் முதலமைச்சர்?

வடக்கு மாகாண சபையின் இரண்டு அமைச்சர்களின் ஊழல் விவகாரத்தால் பிளவு பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீள ஒன்றிணைக்கும் சமரசப் பேச்சுவார்த்தையில் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபை தொடர்ந்து இயங்குவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபை விவகாரத்தால்…

வடக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி! சமரசத்தில் இறங்கியுள்ள சர்வதேசம்

வடக்கு அரசியல் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் வெளிநாட்டு தூதுவர்கள் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாண சபையில் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழத் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று…

ஆப்பிழுத்த தமிழரசுக்கட்சி? அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா?!

விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்த்தப் போய் தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? தமிழரசுக்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருமா? இல்லையா என்பது இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் நிச்சயமற்றதாகவே காணப்படுகிறது. அவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கைவிட்டால் அது தோல்வி. முன்னெடுத்தாலும் அது தோல்விதான். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அவர்கள்…

நெருக்கடியான சூழலுக்கு முதலமைச்சரின் பதவி நீடிப்பே சரியான தீர்வு!

தற்போது வட மாகாணத்தில் உருவாகியிருக்கும் நெருக்கடியான சூழலுக்குச் சுமூகமானதொரு தீர்வு காண வேண்டுமெனில் எஞ்சியுள்ள ஒன்றரை வருட காலப் பகுதியிலும் முதலமைச்சரே பதவியில் நீடிக்க வாய்ப்பை வழங்குவதே சரியானது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட அரசியல் ஆய்வாளருமான கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். வட…

நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற்றால் வடக்கின் கொந்தளிப்பு அடங்கும்! விக்னேஸ்வரன்

ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட தமக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்பட்டால் வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என சமயத் தலைவர்களிடம் கூறியதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வட மாகாண நிலவரம்…

நல்லாட்சி அரசு மீதான நம்பிக்கையை இழக்கும் நிலையில் சிறுபான்மை மக்கள்!

நாட்டில் மீண்டும் யுத்தச் சூழலை ஏற்படுத்தி தேசத்தை அழிவுக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் சில தீய சக்திகள் தொடராக இயங்கிக் கொண்டிருக்கின்றன. மற்றொரு தடவை இனவாதத் தீயை மூட்டி விட இச் சக்திகள் செயற்பட்டு வருகின்றன. அண்மித்த காலத்தில் இனவாதச் சக்திகள் நாட்டில் ஆங்காங்கே முக்கிய இடங்களில் அதுவும் முஸ்லிம்…

தமிழக மீனவர்களின் 42 படகுகள் கடும் நிபந்தனைகளுடன் விடுவிப்பு: மஹிந்த…

தமிழக மீனவர்களை கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்க தயாரென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீன்பிடி படகுகளில் 42 படகுகளை விடுவிக்க தயாரெனவும் அவற்றை ஏற்குமாறு இந்திய மத்திய அரசுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்பட்டாலும் அத்துமீறி…

சீ.விக்கு எதிரான நடவடிக்கையின் பின்னணியில் சிறிலங்கா அரசு! தமிழ் மக்கள்…

வடமாகாணசபை முதலமைச்சரின் மீது சில மாகாணசபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழ் மக்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்துவதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது…

சீ.வி மீது கைவைத்தால் வடமாகாண சபை முடங்கும்!

தலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் வடமாகாண சபை முற்றிலுமாக முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தொடர்ந்து, முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த போராட்டத்தில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், முதலமைச்சருக்கு வலுசேர்க்கும் வகையில்…

உங்கள் ஆதரவுடன் தொடர்ந்து வடக்கை ஆட்சி செய்வேன்! முதலமைச்சர் உறுதி

உங்கள் ஆதரவு இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் பேரணியாக முதலமைச்சரின் அலுவலகத்திற்கு சென்றது. இதன்போது அலுவலகத்திலிருந்த முதலமைச்சர் போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களுக்கு கருத்து கூறும்…

எனக்கு கட்சி முக்கியமில்லை! விக்னேஸ்வரன்

சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ள நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு…

முதலமைச்சருக்கு ஆதரவாக 15 உறுப்பினர்கள் ஆளுநரிடம் கடிதம் கையளிப்பு!

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நேற்றைய தினம் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது தமக்கு நம்பிக்கை உள்ளதாக கூறி வடமாகாண சபையின் 15 உறுப்பினர்கள் ஆளுநருக்கு இன்று பெயர் பட்டியலையும், சத்திய கடதாசியையும் சமர்பித்திருக்கின்றனர். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முறைகேட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட…

அதிவேகத்தில் முல்லைத்தீவிற்கு வந்த விசேட நாளிதழ்: பொதுமக்கள் மத்தியில்; பரபரப்பு!

தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டை கண்டித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அதரவாக நாளை பூரண கதவடைப்பு என்னும் தலைப்புடன் யாழ்ப்பாணத்தில் வெளியாகிய விசேட நாளிதழ் பிரதிகள் முல்லைத்தீவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விசேட பிரதி இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் வெளியாகிய நிலையில் முல்லைத்தீவிலும் பொதுமக்கள் மத்தியில் அதிகம் பகிரப்படுகின்றதாக…