பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கிம் ஜாங்–உன் சூளுரை: “பொருளாதாரத் தடையை அமெரிக்கா தொடர்ந்தால் அணுஆயுத…
அணு ஆயுத ஒழிப்பு குறித்து தாம் உறுதியாக இருப்பதாக கூறும் வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன், ஆனால் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்தால் தானும் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட தனது புத்தாண்டு உரையில் கிம் ஜாங்-உன் இவ்வாறு தெரிவித்தார்.…
ஆமை புகுந்த வீடும், அமெரிக்கா நுழைந்த நாடும்!
மனித உரிமைகளை மீட்கிறேன். ஜனநாயகத்தை காப்பாற்றுகிறேன் என்ற பேரில் நீண்ட நாட்கள், நிலையான அரசுகள் அமைத்திருக்கும் அரபு நாடுகள் பலவற்றை அமெரிக்க ராணுவத் தலையீடு நாசப்படுத்தியது. 2011 ஆம் ஆண்டில் மக்கள் எழுச்சி என்ற போர்வையில் அரசு எதிர்ப்பாளர்கள், கார்பரேட் நிறுவன ஊழியர்கள் என்று சில ஆயிரம் பேரை,…
வங்கதேச தேர்தலில் ஹசீனா மீண்டும் வெற்றி தொடர்ந்து 3வது முறையாக…
தாகா: வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா, 71, தலைமையில் இயங்கும், அவாமி லீக் அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தொடர்ந்து மூன்றாம் முறையாக, ஷேக் ஹசீனா, பிரதமராக பதவியேற்க உள்ளார். வங்கதேசத்தில், அவாமி லீக் கட்சி தலைமையிலான கூட்டணி, ஆட்சியில் உள்ளது. இக்கட்சித் தலைவர்,…
ஐ.எஸ். பெண் பயங்கரவாதிகளின் குழந்தைகள் மாஸ்கோ சென்றடைந்தனர்!
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து கைதாகி, ஈராக் சிறைகளில் தண்டனை அனுபவித்துவரும் ரஷிய நாட்டுப் பெண்களின் 30 குழந்தைகள் விமானம் மூலம் மாஸ்கோ நகரை வந்தடைந்தனர். சிரியா மற்றும் ஈராக் நாட்டின் சில பகுதிகளை முன்னர் கைப்பற்றி, அங்கிருந்து பரந்து, விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உருவாக்க பயங்கரவாத ஆயுதத்தை…
குர்து போராளிகள் சிரியாவுடன் புதிய கூட்டணி; அதிர்ச்சியில் துருக்கி: உலகரங்கில்…
சிரியா எல்லையில் துருக்கியின் தாக்குதலை தடுப்பதற்காக குர்து போராளிகள், அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் புதிய கூட்டணியை அமைத்து உள்ளன. சிரியாவில் 2011-ம் ஆண்டு, மார்ச் 15-ந் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் தொடங்கியது. 9-வது ஆண்டாக அது நீடிக்கிறது.…
ஆப்பிரிக்காவில் இனப்படுகொலையில் இருந்து நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றிய மூதாட்டி
கோடரிகளையும், ஆயுதங்களையும் கையில் ஏந்திய கும்பல், ஜுரா காரூஹிம்பியின் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்த மக்களை வெளியே அனுப்புமாறு கூச்சலிட்டபோது, அவரிடம் ஆயுதங்கள் ஏதுமில்லை. ஆனால் நிராயுதபாணியான ஜுரா துணிச்சலுடன் அவர்களை எதிர்த்தார். அதற்கு காரணம் அவரிடம் மந்திர சக்திகள் இருப்பதாக வன்முறை கும்பல் கருதியதுதான். இல்லையென்றால், அடைக்கலமாக இருப்பவர்களை…
வங்கதேச தேர்தல் வன்முறை – 17 பேர் பலி; மறுதேர்தல்…
வங்கதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அந்நாட்டின் பதினோறாவது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது நடந்த மோதல்களில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு எதிர்க்கட்சிகள் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. வாக்குப்பதிவுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள முடிவுகளில் தற்போதைய ஆளும் கட்சியே…
வடகொரிய தலைவர் கிம் தென்கொரிய அதிபருக்கு கடிதம்: ‘உங்களை அடிக்கடி…
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத பயன்பாட்டை நீக்க, வரும் 2019ஆம் ஆண்டில் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடன் அடிக்கடி சந்திப்புகள் மேற்கொள்ள விரும்புவதாக வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். தென்கொரிய அதிபருக்கு அவர் எழுதியுள்ள அரிதான கடிதம் ஒன்றில், 'இரு நாடுகளுக்கும் இடையே அமைதி முயற்சிகளைத்…
டிரம்ப்பின் பிடிவாதத்தால் தொடரும் சிக்கல்!
அமெரிக்காவில் அரசுத் துறைகளின் முடக்கம் நீடிப்பதால் அரசு ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டாய விடுப்பில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் சட்ட விரோதமாக யாரும் நுழையாதபடிக்கு அமெரிக்க–மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்று 2016–ம் ஆண்டு தேர்தலின் போது டிரம்ப்…
எகிப்து பிரமிட் வளாக வெடிகுண்டு தாக்குதல் : போலீசாரின் பதில்…
எகிப்தில் டஜன்கணக்கான தீவிரவாதிகள் அவர்களின் பதுங்கிடங்களில் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகளில் போலீசாரால் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை காலையில் கிஸா மற்றும் வடக்கு சினாய் பகுதிகளில் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகளில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் சுற்றுலா…
ஐந்து வயது சிறுமிக்கு தண்ணீர் கொடுக்காமல் கொன்ற பெண் தீவிரவாதி
குடிக்க தண்ணீர் கொடுக்காமல், கடும் வெயிலில் சங்கிலியால் கட்டி வைத்து ஐந்து வயது பெண் குழந்தையை உயிரிழக்க செய்த விவகாரத்தில் ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த பெண் உறுப்பினர் ஜெர்மனியில் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த 27 வயதான ஜெனிஃபரும் அவரது கணவரும், கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ்…
ரஷ்யாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதன வெற்றி! : கலக்கத்தில்…
காற்றில் ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் பயணித்து எதிரிகள் இலக்கைத் தாக்கும் அணுவாயுதத்தைச் சுமந்து செல்லக் கூடிய அதி நவீன கிளைடர் எனப்படும் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது ரஷ்யா. இந்தத் தொழிநுட்பத்தை இதுவரை பெற்றிராத காரணத்தால் அமெரிக்காவும் சீனாவும் கலக்கம் அடைந்துள்ளன. கம்சாட்கா தீபகற்பத்தில்…
சிரியா போர்: முக்கிய நகருக்குள் நுழைந்தன அரசு ஆதரவு படைகள்
சிரியா அரசின் ஆதரவுப் படைகள், நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் நுழைந்துவிட்டன. ஆறு ஆண்டுகளுக்கு முன் சிரியா அரசு தரப்பு முதன்முறையாக இந்த நகருக்குள் நுழைந்திருப்பதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அந்தப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குர்து இனப் படைகள், அங்கு துருக்கிப்…
‘உலகப் பொலிஸ்காரராக இருக்க முடியாது’
ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் உலகப் பொலிஸ்காரராக இருக்க முடியாதென ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈராக்கிலுள்ள ஐக்கிய அமெரிக்கப் படையினரிடத்தே அறிவிக்கப்படாத கிறிஸ்மஸ் விஜயத்தை தானும் ஐக்கிய அமெரிக்க முதற்பெண்மணி மெலானியா ட்ரம்பும் நேற்று முன்தினம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த கருத்தை ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.…
ஈராக்கில் மீண்டும் ஐஎஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம்- 20 பேரை கடத்திச்…
ஈராக் நாட்டில் இருந்து அடித்து விரட்டப்பட்டு சில மாதங்களாக பதுங்கி வாழ்ந்து வந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் கிர்குக் நகரின் அருகேயுள்ள கிராமங்களுக்குள் புகுந்து 20 பேரை கடத்திச் சென்றனர். ஈராக்-சிரியா நாடுகளுக்கு உட்பட்ட எல்லைப்பகுதியில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் அனைவரும்…
‘சிரியா மீது இஸ்ரேல் இரவு நேரத்தில் வான் தாக்குதல்’
தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சிரியா ராணுவம் கூறியுள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே, இரவு நேரத்தில் பெருத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக சிரியா கூறியுள்ளது. "ராணுவக் கிடங்கு ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மூன்று ராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் பெரும்பாலான ஏவுகணைகள் தடுத்து அழிக்கப்பட்டுள்ளன," என்று…
ரஷ்யாவின் அதிநவீன ஹைப்பர் சானிக் ஏவுகணை சோதனை வெற்றி –…
தங்கள் நாட்டின் அதிநவீன ஹைப்பர் சானிக் ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். தற்போது நடப்பில் உள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளால் கண்டுபிடித்து அழிப்பதற்கு இயலாத அளவுக்கு இது நவீனமானது என்று ரஷ்யாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகிலேயே…
துருக்கியிடம் சிரியாவைக் கையளித்தாரா ட்ரம்ப்?
சிரியாவில் எஞ்சியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளை, தான் அழித்தொழிக்கவுள்ளதாக, துருக்கிய ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவான், தனக்கு உறுதியளித்துள்ளாரென, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சிரியாவில் ஆதிக்கம் மிக்க நாடாக, துருக்கி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.அமெரிக்கப் படைகளை, சிரியாவிலிருந்து வெளியேற்றுவதாக ஜனாதிபதி ட்ரம்ப்…
இந்தோனேஷியாவில் உயிரிழந்தோர் எண். 281ஆக உயர்வு
இந்தோனேஷியாவின் ஜாவா, சுமாத்ரா தீவுகளைத் தாக்கிய சுனாமியின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, ஆகக்குறைந்தது 281ஆக உயர்வடைந்துள்ளது என, இந்தோனேஷிய அதிகாரிகள், நேற்று (24) அறிவித்தனர். அத்தோடு, மீட்புப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது. இவ்வனர்த்தம் காரணமாக, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததோடு, இன்னும் பலரைக் காணவில்லை…
டொனால்டு டிரம்ப் – மைய வங்கி மோதல்: அமெரிக்கப் பங்குச்…
அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், அந்நாட்டின் மைய வங்கியான ஃபெடரல் ரிசர்வுக்கும் இடையே நீடிக்கும் மோதலின் விளைவாக அமெரிக்க, ஐரோப்பிய, ஆசியப் பங்குச் சந்தைகள் பல சரிவைச் சந்தித்தன. குறிப்பாக, கிறிஸ்துமஸ் காலத்தில் இதுவரை முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியை அமெரிக்கப் பங்குச் சந்தைகள் சந்திக்கின்றன. 30 முன்னணி நிறுவனங்களின் பங்குகளை…
இந்தோனீசியா சுனாமி பேரலை: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – தொடரும்…
இந்தோனீசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் குறைந்தது 373 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரழிவு தடுப்பு முகமை தெரிவித்துள்ளது. சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் உள்ள கடலோர நகரங்களில் சனிக்கிழமை வீசிய பிரம்மாண்ட சுனாமி அலைகள் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு…
இந்தோனீசியா சுனாமி பேரலை: மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை
இந்தோனீசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்ததால், அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என்று அப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை கடலோர பகுதிகளில் இருந்து உள்பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் உள்ள கடலோர நகரங்களில் எரிமலை…
செயலற்றுபோன அமெரிக்க அரசுத்துறைகள்: தற்போதைய நிலை என்ன?
நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக பகுதியளவு பாதிப்படைந்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் செயல்பாடுகள் வரும் ஜனவரி 3ஆம் தேதிவரை சென்றடைவதற்கு வாய்ப்பில்லை என்று அதிபர் டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - மெக்ஸிகோ இடையே எல்லை சுவர் கட்டுவதற்கு 5 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு கோரும்…