இந்தோனீசியாவில் சுனாமி – 220 பேர் பலி, 843 பேர்…

இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் ஏற்பட்ட சுனாமியில் 220க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் மற்றும் 843 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி ஞாயிறு அதிகாலை இந்தப் பேரிடர் அங்கு நிகழ்ந்துள்ளது. ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப்…

ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல் – 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் மூன்று மாகாணங்களில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த 25 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப்…

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே பயங்கர குண்டுவெடிப்பு; பலர் பலியானதாக…

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி, அரசுப் படைகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவத்திற்கு ஆப்பிரிக்க ஒன்றிய…

அமெரிக்காவுக்கு மிரட்டலா? மாபெரும் போர் ஒத்திகைக்கு தயாராகும் ஈரான்!

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை கண்டு மனம் தளராத் ஈரான் அரசு ‘பயகம்பர்-இ-ஆசம் என்ற பெயரில் முப்படைகளின் போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து…

யேமன் போர்: ஐ.நாவின் புதிய முயற்சியால் லட்சக் கணக்கானோரின் பட்டினி…

யேமன் உள்நாட்டுப் போரில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள சண்டை நிறுத்தத்தைக் கண்காணிக்க தமது குழு ஒன்றை அனுப்ப ஐ.நா பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டுப் போரால் கடும் பஞ்சத்தை சந்தித்துள்ள யேமனில் உணவுப்பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் செல்வதற்கான முக்கிய நுழைவாயிலாக உள்ள, ஹுடைடா துறைமுக நகரில் சண்டை நிறுத்தம்…

சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் என்று டிரம்ப் அறிவிப்பு!…

வியாழக்கிழமை சிரியாவில் ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியை அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் மீளத் திரும்புவதாகவும் அதிரடியாக அறிவித்திருந்தார். டிரம்பின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மேத்திஸ் வியாழக்கிழமை தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.…

டிரோன் விமான அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டன் விமான நிலையம் 2…

பிரிட்டனின் மிக முக்கியமான 2 ஆவது விமான நிலையமான கேட்விக் விமான நிலையம் அருகே ஆளில்லா விமானங்களான டிரோன்களினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக அவ்விமான நிலையம் தொடர்ந்து 2 ஆவது நாளாக மூடப் பட்டுள்ளது. இதனால் அங்கு ஆயிரக் கணக்கான பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர். முன்னதாக…

ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவத்தை திரும்ப பெறுகிறதா அமெரிக்கா?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது நாட்டு ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருக்கும் கிட்டத்தட்ட பாதி அமெரிக்க ராணுவ வீரர்கள், அதாவது 7,000 பேர் அடுத்த சில மாதங்களில் தங்களது நாட்டிற்கு திரும்பலாம் என்று பெயர் வெளியிட…

ஐ.எஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படவில்லை – டிரம்ப் தகவலை மறுத்த பிரிட்டன்!

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதனை பிரிட்டன் மறுத்துள்ளது. வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க, அரசுப் படைகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உதவி செய்தது. கூட்டுப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 2,000 அமெரிக்க வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த கூட்டுப்…

அமெரிக்க குண்டுவீச்சில் 62 பயங்கரவாதிகள் பலி!

சோமாலியாவில் அமெரிக்க போர் விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் 62 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். சோமாலியாவில் அல்- ‌ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியாவுக்கு அமெரிக்க ராணுவம் உதவி புரிந்து வருகிறது. இந்தநிலையில் காந்தர்சே பகுதியில் முகாம்களில்…

சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது – ஆவேசமடைந்த அதிபர்!

சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது என சீன அதிபர் ஜின்பிங் ஆவேசமாக கூறினார். உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்பினர் இடையே வர்த்தகப்போர் மூண்டது. இந்த நிலையில் சமீபத்தில் அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில்…

‘ஐஎஸ் தோற்றுவிட்டது’ – சிரியாவில் துருப்புகளை விலக்கியது அமெரிக்கா –…

சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதையடுத்து, போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்றுவருவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்த அமெரிக்காவின்பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் மேற்கொண்டு எந்த தகவலையும்…

சிரியா போர்: “அமெரிக்கப் படைகள் வெளியேறினால் ஐஎஸ் மீண்டும் தலைதூக்கும்”…

சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் அமெரிக்காவின் முடிவு அந்நாட்டில் ஐஎஸ் அமைப்பினர் மீண்டும் தலையெடுப்பதற்கு வழிவகுக்கும் என்று ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு குர்துகள் தலைமை வகிக்கின்றனர். சிரியா ஜனநாயகப் படை (SDF) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், சிரியாவில் ஒரு ராணுவ…

பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான 5 ஆவது நாடு இந்தியா! :…

இந்த வருடம் மாத்திரம் உலகளாவிய ரீதியில் 80 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இதில் 49 பேர் தனிப்பட்ட குரோதத்தின் காரணமாக வேண்டுமென்றே கொல்லப் பட்டவர்கள் ஆவர். அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பற்றிய புள்ளி விபரம் ஒன்று RSF எனப்படும் எல்லைகள் அற்ற நிருபர்கள் என்ற…

குடியேற்ற பிரச்சனை : கூட்டணி கட்சி விலகல் – பெல்ஜியம்…

குடியேற்றம் தொடர்பான பிரச்சனையை அடுத்து நாட்டின் ஆளும் முக்கிய கூட்டணி கட்சியொன்று விலகியுள்ளதை தொடர்ந்து தான் ராஜிநாமா செய்வதாக பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார். தேசியவாத நியூ பிளெமிஷ் கூட்டணி (N-VA) என்ற அமைப்பின் ஆட்சிக்கான ஆதரவை அண்மையில் சார்லஸ் மைக்கேல் இழந்தார். கடந்த வாரத்தில் கையெழுத்தான…

சிரியா போர்: “துருப்புகளை திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்” –…

சிரியாவில் நடந்து வரும் போரிலிருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்கா தயாராகிவருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தாம் வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ்.…

நைஜீரியாவில் 12 படையினர் பலி

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில், இஸ்லாமிய ஆயுததாரிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்த நைஜீரியப் படையினரில், ஆகக்குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் எனவும், இன்னும் பலர் காணாமற்போயுள்ளனர் எனவும், அந்நாட்டு இராணுவத் தரப்புகள் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலுக்குப் பதிலடி வழங்கும் விதமாக, மீண்டுமொரு தாக்குதலை இராணுவம் நடத்தியதெனவும், அதன்போது, படைவீரரொருவர் கொல்லப்பட்டதோடு, இன்னுமொருவர் காயமடைந்தார்…

யேமன் போர்: தொடங்கிய சில நிமிடங்களில் முறிந்த போர் நிறுத்தம்

மிக மோசமான உள்நாட்டுப் போர் நடந்துவரும் யேமனில் தொடங்கிய சில நிமிடங்களில் போர் நிறுத்தம் முறிந்தது என அரசாங்கத்தை ஆதரிக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் துறைமுக நகரமான ஹுடைடாவில் போர் நிறுத்தம் செய்வது என்று ஹூதி கிளர்ச்சியாளர்களும், அரசாங்கத் தரப்பும் ஒப்புக்கொண்டன.…

பருவநிலை மாற்றமும், இயற்கை பேரிடர்களும்: அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை?

பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக ஆபத்துள்ள 15 நாடுகளில் ஒன்பது நாடுகள் தீவுகளாக இருக்கும் என்று புதிய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 172 நாடுகளில் பூகம்பங்கள், சுனாமிகள், சூறாவளிகள், வெள்ளம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து 2018 உலக ஆபத்து சூழ்நிலை…

ஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை

டிசம்பர் மாத ஆரம்பத்தில் அனைத்துலக அரங்கில் தென் அமெரிக்க நாடான  ஆஜென்ரீனாவில் இடம் பெற்ற  உலகின் இருபது பெரிய நாடுகளின் G-20 மாநாடு மிக முக்கிய இடம் பெற்றிருந்தது. ஜீ-20 எனும் அனைத்துலக மன்றம், உலகின் மிகப்பிரதானமான தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளையும், பொருளாதார ரீதியாக தமது முதன்மை…

வடகொரியாவின் அதிகரிக்கும் உயர் தொழில்நுட்ப லட்சியங்கள்

வடகொரியா அடிக்கடி தனது ராணுவத் தளவாடங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும். ஆனால், சமீப காலமாக பொது மக்களுக்கான தொழில்நுட்பங்களில் அது முன்னேறி வருவதாகத் தோன்றுகிறது - அல்லது அப்படி சொல்லிக் கொள்கிறது. நாட்டில் உள்ள பல விஷயங்களைப் போல, இந்தக் கூற்றினை சரிபார்ப்பது கடினம்தான். ஆனால், தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது…

பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தலையிடுகிறது அமெரிக்கா – செளதி கண்டனம்

யேமனில் செளதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கு ராணுவ உதவியை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க செனட் வாக்களித்தது மற்றும் செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு செளதி பட்டத்து இளவரசரை குறைகூறிய அமெரிக்க செனட்டின் தீர்மானம் ஆகியவற்றுக்கு செளதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது பொய்யான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக்…

உருப்பெறுகிறது ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு; வலுவிழக்கிறது நேட்டோ

ஐரோப்பிய இராணுவமொன்றை உருவாக்குவதற்கான முயற்சியில், ஐரோப்பிய ஒன்றியம் உண்மையில் முனைப்புக் காட்டுவதாகவே உள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஜேர்மன் சான்செலர் அங்கேலா மேர்க்கெல் இருவரும், ஐரோப்பிய ஒன்றியத் தொடர் கூட்டத்தில், கூட்டு ஐரோப்பிய இராணுவமொன்றை உருவாக்குவதற்கான தேவையை இந்த மாதம் ஆதரித்திருந்தனர். இந்த இரு நாடுகளும், வலுவான…