இந்தோனீசியா நிலநடுக்கத்தில் 384 பேர் பலி, தொடரும் நில அதிர்வுகள்

இந்தேனீசியாவின் சுலாவெசி தீவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு வலுவான நில அதிர்வுகள் ஏற்படுவது தொடர்ந்து வருகின்றது, இந்தோனீசியாவில் வெள்ளிக்கிழமை 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி குறைந்தது 384 பேர் உயிரிழந்துள்ளனர். 500 பேர் காயமடைந்துள்ளனர். டஜன்கணக்கானோரை காணவில்லை.…

“அணுஆயுதங்களை கைவிடுவதற்கு வாய்ப்பேயில்லை” – வட கொரியா

அமெரிக்கா வட கொரியா மீது தொடர்ந்து தடைகளை விதித்து வரும் சூழ்நிலையில், தங்களிடம் உள்ள ஆயுதங்களை கைவிடுவதற்கு "வாய்ப்பேயில்லை" என்று அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வட கொரியா மீது விதிக்கப்பட்டு வரும் தொடர் தடைகள் அமெரிக்கா மீதான அவநம்பிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள்…

சீனாவில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்

தங்கள் நாட்டில் எச்.ஐ.வி நோய்த் தொற்று மற்றும் எய்ட்ஸ் நோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 14% அதிகரித்துள்ளதாக சீனா கூறியுள்ளது. சீனாவில் எச்.ஐ.வி - எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 8,20,000 என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2018ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் 40,000 பேருக்கு புதிதாக…

தேவையற்ற குற்றச்சாட்டு கூறுவதை நிறுத்துங்கள் – அமெரிக்காவுக்கு சீனா கண்டிப்பு

பீஜிங், நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 26–ந் தேதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாகவும், இது தனது நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் புகார் கூறினார்.…

இந்தோனீசியாவை தாக்கியது சுனாமி: சுலவேசி தீவில் 6.6 அடி உயர…

7.5 அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனீசியாவின் கடலோர நகரை சுனாமி தாக்கியது என்கிறார்கள் அதிகாரிகள். இந்தோனீசிய நாட்டின் சுலவேசி தீவில் உள்ள பாலு என்ற அந்த நகரம் 6.6 அடி உயர அலைகளின் ஆவேசத்துக்கு இலக்கானது. ஆனால், முன்னதாகவே அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தனர். சமூக ஊடகங்களில் வலம்…

ரோஹிஞ்சா: ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப்…

மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது. மியான்மரில் ரோஹிஞ்சா சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த, முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட…

நைஜர் நாட்டில் காலரா வியாதி பாதிப்பிற்கு 67 பேர் உயிரிழப்பு

நியாமி, நைஜர் நாட்டின் சுகாதார அமைச்சக தகவலின் அடிப்படையில் ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலையில் இருந்து காலரா வியாதியால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நைஜீரியா நாட்டு எல்லைக்கு அருகே தெற்கு மராடி பகுதியில் இது அதிகம் பரவியுள்ளது.  இங்கு 55 பேர் பலியாகி உள்ளனர்.  தெற்கே டோஸ்சோ, மேற்கே…

அர்ஜென்டினா பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அர்ஜென்டினா பொருளாதாரத்தையும் அதன் சந்தையையும் விரைவாக மீட்க ஏற்கெனவே முடிவு செய்த தொகையைவிட அதிகமாக நிதியளிக்க உலக நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. 36 மாத நிதி தொகுப்பாக அந்நாட்டிற்கு 57.1 பில்லியன் டாலர்கள் அளிக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக 50 பில்லியன்…

“அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில் தலையிட சீனா முயற்சி” – டிரம்ப்…

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தலில் 'தலையிடுவதற்கு' சீனா முயற்சித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார். "அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகத்தில் சீனாவை எதிர்க்கும் முதல் அதிபர் நான் என்பதால் என்னையோ அல்லது…

கடனை திருப்பி செலுத்துவதற்கு பதிலாக சிறுமிகளை முதியவர்களுக்கு விற்பனை செய்யும்…

பொதுவாக கறுப்பின மக்கள் தங்களது அன்றாட தேவைகளை நிறைவு செய்வதற்கு தேவையான பணத்தை பெற்று கொள்ள தங்களது பெண் பிள்ளைகளை விற்று அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு நிறைவு செய்கின்றனர் .இவர்களன் வாழ்வு மிகவும் அவலமானது ..அதாவது 12 வயது கூட நிரம்பாத சிறுமிகளை முதியவர்களிடம் விற்று…

இஸ்லாமுக்கு எதிரானது என இடிக்கப்பட்ட உலகின் முதல் கடல் அலை…

சுற்றுலா நாடான மாலத்தீவில் கடந்த ஜூலை மாதம் உலகின் முதல் கடல் அலை அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. கடலுக்கு மேலேயும், கடலுக்கு அடியிலும் இருக்கும் வண்ணம் இந்த அருங்காட்சியகம் பல சிலைகளுடன் மிக நவீனமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இயற்கை சூழல் காரணமாக கடலில் நீர் மட்டம் குறையும் போது கடலுக்கு அடியில்…

இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுக்க ஒத்துழையுங்கள்: ஐ.நா. பாதுகாப்பு…

இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற நாடுகள் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய டிரம்ப், இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளுடன் ஒத்துப்போக…

இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு நவீன எஸ் 300 ரக ஏவுகணைகளை…

மாஸ்கோ : சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரியா அரசுப் படைகள்…

49 நாட்களாக கடலில் தவித்த மீனவர் உயிருடன் மீட்பு

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுலாவேசி தீவை சேர்ந்தவர் ஆல்டிநோவல் அடிலாங் (19). இவர் படகில் இருந்தபடி மீன்களை பிடித்து விற்று வருகிறார். சில கம்பெனிகள் நேரடியாக வந்து அவரிடம் இருந்து மீன்களை விலைக்கு வாங்கி செல்கின்றன. கடந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவில் புயல் தாக்கியது. அதில் அவரது படகு அடித்து செல்லப்பட்டது.…

ஐ.நா.வில் டிரம்ப்: “லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது இந்தியா”

பல லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டு நடுத்தர வர்க்கமாக மாற்றியிருப்பதாக இந்தியாவைப் புகழ்ந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையின் 73-வது கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய அவர் இவ்வாறு கூறினார். மத்திய கிழக்கு முழுவதிலும் குழப்பம், மரணம், அழிவு ஆகியவற்றை…

சீன பொருட்களுக்கு அமெரிக்கா புதிதாக வரி விதித்தது – சீனாவும்…

பீஜிங், இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு தலா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3½ லட்சம்) அளவுக்கு கூடுதல் வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய இந்த…

15 வீரர்களை இழந்த நிலையிலும் சிரியாவின் வான் பாதுகாப்பை ரஷ்யா…

ஒரு இஸ்ரேலிய வான் தாக்குதலின்போது சிரியா படையினர் தவறுதலாக ஒரு ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய நிகழ்வு நடந்த ஒரு வாரத்துக்கு பிறகு தரையில் இருந்து புறப்பட்டு வான் இலக்கை வீழ்த்தும் ஏவுகணைகளை சிரியாவுக்கு அனுப்பவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இன்னும் இரண்டு வாரத்துக்குள் சிரியாவின் வான் பாதுகாப்பை மேம்படுத்தும்…

‘இரான் முதலில் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்’: அமெரிக்கா

இரானில் ராணுவ அணிவகுப்பில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள, இரான் 'தன்னை தானே முகக்கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்' என ஐ.நாவுக்கான அமெரிக்கத்தூதர் வலியுறுத்தியுள்ளார். இரான் அதிபர் ஹசன் ருஹானி, 'தன் நாட்டு மக்களை நீண்ட காலம் ஒடுக்கி வைத்துள்ளதாக'…

ஜேர்மனியில் சூழலை மாசு படுத்தாத அதிவேக ஹைட்ரஜன் ரயில் சேவை…

ஒருமுறை டேங்கை நிரப்பினால் 1000 Km தூரம் செல்லக் கூடிய சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் ரயில் சேவையை முதன் முறை அறிமுகப் படுத்தி ஜேர்மனி சாதனை படைத்துள்ளது. இந்த ரயிலில் உள்ள லிதியம் மற்றும் அயன் பேட்டரிகளை ரீ சார்ஜ் செய்தும் இதனை…

சீனாவில் மேலும் 4000 ஆபாச இணையத் தளங்களுக்குத் தடை

சமூக சீரழிவுக்கு வழிவகுக்கின்றன என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சீன அரசு ஆபாச, வன்முறைத் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய மேலும் 4000 இணையத் தளங்களை முடக்கியுள்ளது. ஏற்கனவே இணையத்தை சுத்தப் படுத்துவது தொடர்பாக 3 மாத காலமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த சீன அரசு அதன் பின்னர் வன்முறையைத்…

மியான்மார் மீது விசாரணைகள் ஆரம்பம்

மியான்மார் இராணுவம், அதன் ராக்கைன் மாநிலத்தில் காணப்பட்ட றோகிஞ்சா மக்களை, பலவந்தப்படுத்தி, பங்களாதேஷுக்கு அனுப்பிவைத்தது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநர் ஒருவர் அறிவித்துள்ளார். இது தொடர்பான நிலைமைகள் குறித்து, முழுமையான முதற்கட்ட விசாரணையொன்று முன்னெடுக்கப்படுமெனவும், அதன் பின்னர், உத்தியோகபூர்வமான விசாரணைகளும்…

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை ‘சதாம் உசேனைப்போல டிரம்பை தோற்கடிப்போம்’

டெக்ரான், டெக்ரானில் நேற்று ஈரான்–ஈராக் போர் தொடக்கத்தை நினைவுகூர்ந்து நடந்த ராணுவ அணிவகுப்பின்போது, அந்த நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானி ஆவேச உரை ஆற்றினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ஈரானின் செல்வாக்குமிக்க ஆயுதங்கள் என்று சொன்னால் அவை, ஏவுகணைகள்தான். நமது எதிரிகளிடம் (அமெரிக்கா) இருந்து சமீபத்தில் வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து,…

இரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; 24 பேர் பலி

டெக்ரான், ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன், ஈரானை 1980–ம் ஆண்டு ஆக்கிரமித்தார். அதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் செப்டம்பர் 22–ந்தேதி இரு நாடுகள் இடையே போர் தொடங்கியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. சபையின் முயற்சியால் போர் முடிவுக்கு வந்தாலும், இது 20–ம் நூற்றாண்டில் பேரழிவை சந்தித்த போர்களில்…