ஐநா சபையின் சர்வஜன வாக்கெடுப்பே இலங்கை தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வை தரும்!- கருணாநிதி

karunanithiஐக்கிய நாடுகளின் அனுசரணையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படும் போதே இலங்கையில் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என்று தமிழக முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை சென்று திரும்பியதன் பின்னர் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையை அடுத்து உலகெங்கிலும் இருக்கின்ற தமிழர்கள் ஐக்கிய நாடுகளின் தலையீட்டையே எதிர்ப்பார்த்துள்ளதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் புலம்பெயர்ந்த தமிழர்களும் வாக்களித்தால், அதன்போதே தமிழர்களுக்கு அவர்கள் எதிர்ப்பார்த்த அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என்று கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

போருக்கு பின்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

13வது அரசியல் அமைப்பின் அம்சங்கள் மறுக்கப்படுகின்றன.

இந்தநிலையில் நவநீதம்பிள்ளையின் வருகைக்கு பின்னர் சர்வதேச மட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கருணாநிதி குறிப்பிட்டார்.

TAGS: