இந்திய யோகா கலைக்கு உஸ்பெகிஸ்தானில் வரவேற்பு

TeenagerDoingYogaதாஷ்கண்டு: உஸ்பெகிஸ்தானிலும், இந்திய, யோகக் கலை, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உஸ்பெகிஸ்தானில், 1995ல், “இந்திய கலாசார மையம்’ துவங்கப்பட்டது. பின், 2005ல், இந்திய கலாசாரத்துக்கான, “லால் பகதூர் சாஸ்திரி மையம்’ என்று, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

“உள்ளூர் மக்களிடையே, யோகா மிகவும் பிரபலமடைந்துள்ளது. இங்கு நடத்தப்படும், யோகா வகுப்புகளில், 16 வயது முதல், 70 வரையிலான, 282 பேர் யோகா கற்கின்றனர்; இவர்களில், 80 சதவீதம் பேர் பெண்கள்.

யோகாவை, ஒரு உடற்பயிற்சியாக நினைக்காமல், தங்கள் வாழ்க்கை முறையாக, உஸ்பெகிஸ்தான் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்’ என, இந்த மையத்தின் தலைவர், ராஜேஷ் மேத்தா கூறியுள்ளார்.இந்த மையத்தில், கதக் நாட்டியமும், தபேலா கருவி வாசிக்கவும் கற்றுத் தரப்படுகிறது.

Click Here
TAGS: