தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களை வைத்திருந்தார்: பாபா ராம்தேவ் பிரிட்டன் விமான நிலையத்தில் தடுப்பு

swami-ramdev1தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களை வைத்திருந்ததாக கூறி யோகா சாமியார் பாபா ராம்தேவ் பிரிட்டன் விமான நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் 8 மணி நேரம் பிடித்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சரமாரி கேள்விகள் கேட்டு அதிகாரிகள் தொடுத்ததாகவும், பலத்த விவாதத்திற்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

பாபா ராம்தேவ் விமான நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதற்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன. வியாபார விசா பெற்றுள்ள அவர், சுற்றுலா விசாவில் வந்ததால் சுங்க அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதாகவும், மேலும் அவர் கொண்டுசென்ற சமஸ்கிருத மற்றும் ஹிந்தி மொழி புத்தகங்களால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்ததாகவும் அதனால் அதிகாரிகள் அவரைபிடித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

பாபாராம்தேவ் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறியதாவது, இந்திய மொழி, ஆடை கலாச்சாரம் ஆகியவற்றை அவமதித்திருக்கிறார்கள். பாபாராம்தேவை தேவையில்லாமல் தடை செய்துள்ளார்கள். அவரிடம் கேள்விகள் கேட்டதாக தெரியவில்லை. மந்திரங்கள் மற்றும் வேதங்கள் அடங்கிய புத்தகத்தைத்தான் அவர் கொண்டு சென்றார். இந்த அவமதிப்பு சம்பவத்தை மன்னிக்கவே முடியாது. இதை கடும் குற்றமாக பார்க்க வேண்டும் என்றார்.

விவேகானந்தரின் 120வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் பதஞ்சலி யோகபீட அமைப்பினரால் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கொண்டாடப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பிற்கிணங்க அவர் இந்தியாவிலிருந்து கிளம்பி லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை அடைந்தார். அங்கு சுங்க அதிகாரிகள் அவரை 8 மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் காக்க வைத்தனர்.

TAGS: