மாணவர்கள் தயாரித்த காரில் தீபா மாலிக் தில்லி பயணம்

jprஅர்ஜுனா விருது பெற்ற விளையாட்டு வீராங்கனை தீபா மாலிக், சென்னை சத்தியபாமா கல்லூரி மாணவர்கள் தயாரித்த புதிய காரில் தில்லி பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் இக் காரை தயாரித்த 7 மாணவர்களும் உடன் செல்கின்றனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில், தில்லி கார் பயணத்தை பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் தொடங்கி வைத்தார். இந்த சவாலான பயணம் மேற்கொள்ளும் வீராங்கனையையும், காரைத் தயாரித்த மாணவர்களையும் ஜேப்பியார் பாராட்டினார்.

பெங்களூர், புனே, மும்பை, ஆமதாபாத், உதயப்பூர், ஜெயப்பூர் வழியாக 10 நாள்கள் பயணம் செய்து 3,200 கி.மீ. கடந்து தில்லியை அடைகின்றனர். இந்த 10 நாளுக்கும் இவர்களுக்குத் தேவையான உதவிகளை நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா ரஜினிகாந்த் செய்து கொடுக்கின்றனர் என்றார் ஜேப்பியார்.

இவ்விழாவில், பல்கலைக்கழக நிர்வாக இயக்குனர்கள் மரிய ஜான்சன், மரியஜீனா, ஜானசன் மற்றும் மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

TAGS: