வகுப்புவாத மோதல்களுக்கு மாநில அரசு தான் பொறுப்பு: மன்மோகன்சிங் பேச்சு

manmohan-singh01புதுடில்லி: அதிகரிக்கும் வகுப்பு மோதல்கள் கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், வகுப்பு ‌மோதல்களை தூண்டிவிடுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 16-வது தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் இன்று டில்லி விஞ்ஞான் பவனில் , பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் உட்பட, மொத்தம், 148 பேர் பங்கேற்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இந்த கூட்டத்தில் முக்கிய விஷயமாக , காஷ்மீரில் கீத்ஷ்வார் நகரில் நடந்த கலவரம், சமீபத்தில் உபி. மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் நடந்த கலவரம், குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதையடுத்து உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங். தலைவர் சோனியா, உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்டோரும் இந்த ‌கூட்டத்தில் பங்கேற்றனர்.

பெண்களுக்கு அதிகாரம் அவசியம்

கூட்டத்தை ஷிண்டே துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பவர்களை ஒடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ன. கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் பாதுகாப்பு, அதிகாரமளிப்பது அவசியமாகிறது. பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் எந்த நாடும் முன்னேறமுடியாது. தலித்கள் மீதான தாக்குதலும் அதிகரித்து வருகிறது என்றார்.

மதநல்லிணக்கம்: பிரதமர் வலியுறுத்தல்

பின்னர் பிரதமர் ‌மன்மோகன்சிங் பேசியது, சமீப கால வகுப்புவாத மோதல்கள் கவலை அளிக்கின்றன. தற்போதை நிலையில் நாட்டில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. நாட்டில் கலவரத்தை தூண்டும் எந்த அமைப்பும், கட்சியும் அதற்கு பொறுப்பாகும். உ.பி.யில் நடந்த சிறய அளவிலான மோதல் பெரும்கலவரமாக உருவெடுத்துவிட்டது. மாநிலங்களில் ஏற்படும் கலவரங்களை கட்டுப்படுத்த வேண்டிய தலையாய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உண்டு என்றார்.

பா.ஜ. முதல்வர்கள் புறக்கணிப்பு

இதற்கிடையே பா.ஜ. மாநிலமுதல்வர்கள் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இதில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, சத்தீஷ்கர் முதல்வர் ராமன்சி்ங்., மத்தியபிரதேச முதல்வர் சிவாரஜ்சிங்சவுகான் உள்ளிட்டோர் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. அவருக்கு பதிலாக, தமிழக சட்ட அமைச்சர் முனுசாமி கலந்து கொள்வார் என, கூறப்படுகிறது. தி.மு.க., சார்பில், முக்கிய தலைவர்கள் பங்கேற் பார்களா என்பது குறித்து, எந்த விதமான, உறுதியான தகவலும் இல்லை.

TAGS: