இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதன் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 78.48 சதவீத வாக்குகளைப் பெற்று, போட்டியிட்ட 38 இடங்களில் 30-ல் தமிழ்த் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 13-வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கருதுகிறேன்.
மாகாணங்களில் முழு சுயாட்சி, மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு, தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சமஉரிமை, தமிழர்களின் தொன்மையான உரிமைகளை நிலைநாட்டுதல், இலங்கை அரசியலிலும், நிர்வாகத்திலும் உரிய பங்கு ஆகிய லட்சியங்களை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று நம்புகிறேன்.
இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் கொண்டுள்ள கொள்கை சரியானது என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது. சம்பந்தன், விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என ப. சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அவர்களே , இந்தியாவின் நிலை மாறும் , இன்றைய வாழ்த்துப்போல், நாளை மலரும் [ தமிழ் ஈழம் ]என்ற ஆதி சொல்லுக்கு தாங்கள் வாழ்த்துப்பா பாடும்காலம் வரும் , இனத்திற்க்கு தமிழனாக இருப்போம், நாட்டுக்கு இந்தியனாக இருப்போம், [ இந்தியர்களே ஆதரவு கொடுங்கள் மலரட்டும் தமிழ் ஈழம் ].
கரு நாய் நிதி இருக்கும் வரை ஈழம் மலராது. அவனையும் அவன் கூட்டத்தையும் முதலில் தொலைக்க வேண்டும்.
இந்த இன துரோகிக்கு ஈழ தமிழர் பற்றி பேச யோக்கிதை கிடையாது .கேவலம் ஒரு அமைச்சர் பதவிக்காக சொந்த கட்சியை கலைத்துவிட்டு இத்தாலிய காரியின் காலில் விழுந்தவர் தான் இந்த சீ-தம்-ப-ர-ம் இந்தியாவையோ ..இந்தியா தமிழர் தலைவர்களையோ ஈழ தமிழர்கள் நம்ப மாட்டார்கள் ..இந்த மாகாண கவுன்சில் ஒரு கடை நிலை ஊழியரை கூட நியமிக்க முடியாது ..நினைத்த நேரத்தில் சிங்கள அரசாங்கத்தால் கலைக்க படமுடியும் …இது அங்கு உள்ள எல்லா தமிழர்களுக்கும் தெரியும் ..எதிர்ப்பை காட்டவே வாக்கு போட்டார்கள்
முன்டாசுகாரனையும் இத்தாலிய காரியின் காலில் விழுந்து வாழும் மானமில்லாத சில முள்ளமாரிகளையும் முடிந்தால் உள்ளே விடாதிர்கள்
டேய் சிதம்பரா 13 வது சட்ட திருத்த எங்கட எவண்டா ஏத்து கிட்டான் முட்டாள் போல பேசுற ..தமிழர் பற்றி பேச உனக்கு அருகெத இல்ல வாய மூடு.