காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் ; 72 மணி நேரத்தில் 3 வது சம்பவம்

kashmirஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் சென்ற கான்வாய் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் காயமுற்றார். இதனையடுத்து சனாட் நகர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் இருந்து 6 கி.மீட்டர் தொலைவில் உள்ள சனாட்டா நகரில் ராணுவ வீரர்கள் தங்களின் வாகனங்கில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். இந்நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ராணுவ வாகனத்தின் மீது துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து ராணுவத்தினர் திருப்பி சுட்டனர்.

மேலும் சில இடங்களில் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டு வருகின்றனர். இதனால் இங்கு பதட்டம் நிலவி வருகிறது. இங்கு கூடுதல் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்திய ஜவான் காயமுற்றார்.

இது குறித்து ஐ. ஜி. அமீர் கூறுகையில்; பைக்கில் வந்த 2 பேர் தப்பி விட்டனர். இவர்களை பிடிக்க இந்த பகுதி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீரில் நடந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 10 பேர் கொல்லப்பட்டனர். நேற்று , நேற்று முன்தினம் என கடந்த 72 மணி நேரத்தில் 3 முறை பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஐ,நா., சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், பாக்., பிரதமர் நவாசை சந்திக்கவுள்ள நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

TAGS: