2050-ல் மக்கள்தொகையில் இந்தியா முதலிடம் வகிக்கும்

population_controlசீனாவைக் காட்டிலும் அதிக மக்கள்தொகையுடன் இந்தியா 2050-ல் முதலிடம் வகிக்கும் என்று பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

பிரெஞ்சு மக்கள்தொகை ஆய்வு நிறுவனத்தின் தகவல்படி 2050ஆம் ஆண்டு 160 கோடி மக்கள்தொகையுடன் இந்தியா முதலிடம் வகிக்கும். மக்கள்தொகையில் தற்போது முதலிடம் வகிக்கும் சீனா 130 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படும். உலக மக்கள்தொகை தற்போதுள்ள 710 கோடியில் இருந்து 970 கோடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் தற்போது 130 கோடி மக்கள்தொகையுடன் சீனா முதலிடத்திலும், 120 கோடியுடன் இந்தியா 2ஆவது இடத்திலும், 3.16 கோடியுடன் அமெரிக்கா 3ஆவது இடத்திலும், 2.48 கோடியுடன் இந்தோனேசியா 4ஆவது இடத்திலும், 1.95 கோடியுடன் பிரேசில் 5ஆவது இடத்திலும் உள்ளன.

மக்கள்தொகை கடந்த இருநூறு வருடங்களில் 7 மடங்கு உயர்ந்துள்ளதாகவும், 21ஆம் நூற்றாண்டின் இறுதியில் 1000 கோடி அல்லது 1100 கோடியாக உயரக்கூடும் என பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கில்ஸ் பிஸன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு அறிக்கையின்படி 2050ஆம் ஆண்டு மற்ற நாடுகளின் மக்கள்தொகை: நைஜீரியா (44.4 கோடி), அமெரிக்கா (40 கோடி), இந்தோனேசியா (36.6 கோடி), பாகிஸ்தான் (36.3 கோடி), பிரெசில் (22.7 கோடி), வங்கதேசம் (20.2 கோடி), காங்கோ (18.2 கோடி), எத்தியோப்பியா (17.8 கோடி), பிலிப்பின்ஸ் (15.2 கோடி), மெக்ஸிகோ (15.0 கோடி), ரஷியா (13.2 கோடி), தான்ஸானியா (12.9 கோடி), எகிப்து (12.6 கோடி),

உகாண்டா (11.4 கோடி), வியத்நாம் (10.9 கோடி), ஈரான் (9.9 கோடி), ஜப்பான் (9.7 கோடி), கென்யா (9.7 கோடி), துருக்கி (9.3 கோடி), இராக் (8.3 கோடி), பிரிட்டன் (7.9 கோடி), ஜெர்மனி (7.6 கோடி), பிரான்ஸ் (7.2 கோடி), சூடான் (6.9 கோடி), நைஜர் (6.6 கோடி).

TAGS: