ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, வரும் 7ஆம் தேதி முதல் தில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
அவர் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
காங்கிரஸ் கட்சி இந்த நாட்டைச் சீரழித்து விட்டது. ஆந்திர மாநிலத்தை பேரழிவில் தள்ளி விட்டுள்ளது. தெலுங்கு பேசும் மக்களின் கவலைகளைத் தீர்க்காமல் மாநிலத்தைப் பிரிக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. எனவே காங்கிரஸின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துவதற்காக நான் தில்லியில் வரும் 7ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டுள்ளேன்.
இதன் மூலம், ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் ஏற்படுத்திய நெருக்கடி குறித்து தேசிய அளவில் அனைத்துக் கட்சிகளின் கவனத்துக்கும் எடுத்துச் செல்வேன். தெலங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் மறைமுகக் கூட்டு வைத்துக் கொண்டு, மாநிலத்தைப் பிரிக்கும் சதியில் இறங்கியுள்ளது. காங்கிரஸின் இச்சதியை நான் அம்பலப்படுத்துவேன் என்றார் சந்திரபாபு நாயுடு.
“ச்சொகம்” மாநாடு புறகணிப்பு ஸ்ரீலங்கா கோமன் வெல்த் பட்டியலிலிருந்து விளக்க நம்ப தோழர் தியாகு தமிழ் நாட்டில் உண்ணா விரத போராட்டம் நடத்துகிறார் அத விட்டு புட்டு தெலுங்கன் தெனாலி ராமன் செய்தி நமக்கு தேவையா? மாநிலம் தனியா பிரிவது அவலோ துரோகமா? நம்ப தமிழர் நாடே கேக்க போறோம். தமிழ் ஈழம் கேக்கிறோம். இன்னும் எலி வலைக்கு போய் எதிர்ப்பா ? யானை ஆட்சிக்கு வழி தேடுவோம் தம்பிகளா?