இந்திய உச்சநீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் மூன்று சத இடங்களை ஒதுக்கித்தருமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்திரவிட்டிருக்கிறது.
தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இன்று திங்கள் பல்வேறு காரணங்களினால் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது, அது வருத்ததிற்குரியது, இந்நிலையில் அம்மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை எனக் கூறியது.
எனவே அடுத்த மூன்று மாதங்களில் அனைத்து மட்டங்களிலும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் மூன்று சத இடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமிக்கும் பணி நிறைவுபெறவேண்டும் என நீதிபதிகள் உத்திரவிட்டனர்.
ஒதுக்கீடு செய்யப்படும் இடங்கள் 50 சதத்தைத் தாண்டக்கூடாது என்ற உத்திரவு மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருந்தாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. -BBC