லல்லுவுக்கு கிடைத்த 5 ஆண்டு சிறை தண்டனையை பேராசைக்கார அரசியல்வாதிகள் பாடமாக கருத வேண்டும்: மம்தா அறிவுரை

mamtha banarjeeகொல்கத்தா, அக்.10- பீகாரின் முதல் மந்திரியாக ராஷ்டீரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் இருந்த போது மாட்டுத்தீவணம் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட் அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து அவர் ராஞ்சி பிர்சா முண்டா சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், லல்லுவுக்கு கிடைத்த 5 ஆண்டு சிறை தண்டனையை பேராசைக்கார அரசியல்வாதிகள் தங்களுக்கு கிடைத்த பாடமாக கருத வேண்டும் என மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வங்கமொழி வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ள மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது:-

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவிற்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இச்சம்பவத்தில் இருந்து எல்லா அரசியல்வாதிகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என நான் வற்புறுத்துகிறேன்.

அவ்வளவு பேராசை எதற்கு? ஒருவர் அரசியல்வாதியாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் ஒரு குடும்பத்தின் செலவுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?

ஆடம்பரமாக வாழ ஆசைப்படாத வகையில் ஊழல் செய்வதற்கான தேவையே ஏற்படாது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல.. அனைத்து துறையிரும் கூட பேராசைகளை தவிர்க்க வேண்டும் என்று அந்த கட்டுரையில் கூறியுள்ளார்.

TAGS: