ராகுல் நிச்சயம் பிரதமராவார்: சொல்கிறார் ராஜீவை துப்பாக்கியால் அடித்த சிங்கள வீரர்

rahul-Gandhi_002ராகுல் பிரதமராவது நிச்சயம் என்று இலங்கை முன்னாள் கடற்படை சிற்பாய் விஜித ரோஹண விஜிதமுனி ஜோதிடம் பார்த்து கூறியுள்ளார்.

1987ம் ஆண்டு இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கைச் சிப்பாய் தற்போது ஜோதிடராகவும், இசைக் குறுந்தகடுகளை விற்பவராகவும் தொழில் புரிந்து வருகிறார்.

விஜித ரோஹண விஜிதமுனி(48) முன்னாள் கடற்படை சிப்பாய் ஆவார்.

கடந்த 1987ம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை – இந்திய உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக இலங்கை சென்றிருந்தார்.

அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட கடற்படை அணி வகுப்பு மரியாதையில் அணி வகுத்து நின்றவர்களில் விஜேமுனி, ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கியுள்ளார்.

இதனால் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட விஜேமுனி, மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தற்போது ஜோதிடராகவும், இசைக் குறுந்தகடுகளை விற்பவராகவும் தொழில் புரிந்து வருகிறார்.

ராஜீவைத் தாக்கிய சம்பவம் குறித்து அவரிடம் இந்தியப் பத்திரிக்கை ஒன்று பேட்டி கேட்டது.

ஆனால் அதற்குக்கு வாய் திறக்க மறுத்து விட்ட விஜேமுனி, ராஜபக்சே குறித்து மட்டும் ஊடகத்திற்கு ஜோதிடம் கூற சம்மதித்தார்.

அவர் ராஜபக்சே குறித்து கூறுகையில், அடுத்த தேர்தலில் ராஜபக்சே தோல்வியைத் தழுவுவார் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அரசியலையும் தான் கவனித்து வருவதாகவும் வரும் 2014ம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும் எனவும் ஜோதிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜீவ் குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த விஜேமுனி, ராகுல் நிசயம் பிரதமராவார், ஆனால் இப்போதல்ல இதற்கும் அடுத்தத் தேர்தலில் எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மற்றொரு சிங்கள் ஊடகத்திற்கு விஜேமுனி அளித்துள்ள பேட்டியில், தான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல என்றும் இலங்கையின் வான் பரப்பில் அத்து மீறி பறந்து நாட்டை ஆக்கிரமித்த ராஜீவ் காந்தி பலாத்காரமாக இந்திய – இலங்கை உடன்படிக்கையை மேற்கொண்டு நாட்டைப் பிரிக்கும் 13ஆவது திருத்தத்தையும், மாகாண சபை முறைமையையும் இலங்கை அரசியலமைப்புக்குள் புகுத்தியதாலேயே அவரை தாக்கியதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS: