மத்திய அரசின் பலவீனமான கொள்கைகளால் சீனா, பாகிஸ்தான் அத்துமீறுகின்றன: ஆர்.எஸ்.எஸ்

mohanjibhagwatமத்திய அரசின் பலவீனமான கொள்கைகளாலேயே சீனாவும் பாகிஸ்தானும் மீண்டும் மீண்டும் நம் நாட்டில் அத்துமீறுகின்றன என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் ஜி பாகவத் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் விஜயதசமி அன்று அந்த அமைப்பின் தலைமையகமான நாகபுரியில் அமைப்பின் தலைவர் விஜயதசமி பேருரை நிகழ்த்துவது வழக்கம்.

இந்த வருட விஜயதசமி பேருரையில் தற்போதைய தலைவர் மோகன் ஜி பாகவத், நாட்டின் பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கைகள் குறித்துக் கூறினார்.

மோசமான கொள்கைகளால் நம் நாட்டில் ஊடுருவலும், ஆக்கிரமிப்புகளும் நடக்கின்றன. இந்திய மண்ணுக்குள் இத்தகைய ஆக்கிரமிப்புகள் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது என்றார் அவர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வாரில் ஹிந்து வர்த்தகர்கள் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியபடி வந்த வன்முறையாளர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இது கண்டிக்கத்தக்கது. அண்மையில், ஐரோப்பிய குழுவினர் காஷ்மீர் மாநிலத்திற்கு வந்திருந்தபோது, காஷ்மீர் சட்டரீதியாக இந்தியாவுடன் ஒருங்கிணையவில்லை, அடுத்துள்ளதுபோல் இணைந்துள்ளதாக ஒமர் அப்துல்லா அவர்களிடம் பேசியது ஆட்சேபகரமானது என்றார் மோகன் ஜி பாகவத் தனது உரையில்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, சிறுபான்மை இனத்தவர் என்ற ஒரே கண்ணோட்டத்தில் குற்றவாளிகள் குறித்து மாநில அரசுகளுக்கு விடுத்த வேண்டுகோளையும், தமிழ்நாட்டில் இந்துத் தலைவர்களை திட்டமிட்டு படுகொலை செய்துவரும் அடிப்படைவாதிகள் விவகாரத்தில் அவர் அளித்த அறிக்கையையும் குறித்து கடுமையாகச் சாடினார் மோகன் ஜி பாகவத்.

TAGS: