-ஜீவி காத்தையா, செம்பருத்தி,கோம், அக்டோபர் 15, 2013.
மலேசிய கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட் “அல்லாஹ்” என்ற கடவுளைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புத்ராஜெயாவில் தீர்ப்பு அளித்தது. .
டிசம்பர் 31, 2009 இல், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி லவ் பீ லான் உள்துறை அமைச்சு “அல்லாஹ்” என்ற சொல்லை த ஹெரால்ட் பயன்படுத்துவதற்கு எதிராக விதித்திருந்த தடை சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்திருந்தார்.
அத்தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் செய்திருந்த மேல்முறையீட்டை செவிமடுத்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி லவ் அளித்திருந்த தீர்ப்பை நேற்று தள்ளுபடி செய்தது.
அம்மூன்று நீதிபதிகளும், பெடரல் நீதிமன்றத்துக்கு புதிதாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி முகமட் அபண்டி அலி, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் மற்றும் முகமட் ஸவாவி, மொத்தம் 102 பக்கங்களில் தங்களுடைய தீர்ப்பை கூறியிருந்தனர்.
“அல்லாஹ்” என்ற பெயர் பயன்படுத்தல் கிறிஸ்துவ சமயத்தின் முழுமையான நம்பிக்கை மற்றும் வழக்கமான நடைமுறைகள் ஆகியவற்றின் ஓர் அங்கம் அல்ல என்பது எங்களுடைய பொதுவான முடிவு” என்று நீதிபதி முகமட் அபாண்டி அவரது தீர்ப்பில் கூறுகிறார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று த ஹெரால்ட்டின் ஆசிரியர் கூறினார்.
விஷ்ணுவும் அமைச்சரவையும்
இந்தத் தீர்ப்பில் இரு கூறுகள் கவனத்தை ஈர்ப்பவைகளாக இருக்கின்றன:
- “புனித பைபளில் ‘யாவே’, புனித குரானில் அல்லாஹ், புனித வேதங்களின் கடவுளான விஷ்ணு போன்ற பெயர்கள் அவரவர் புனித நூல்களில் அவரவர் கடவுள்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதை முறையாக அங்கீகரித்தாக வேண்டும்.” (“Due recognition must be given to the names given by their respective Gods in their respective holy books such as ‘Yahweh’ in the holy Bible, Allah in the holy Quran and Vishnu the God of the holy Vedas.” )
- 1986 ஆம் ஆண்டில், அமைச்சரவை “அல்லாஹ்” என்ற சொல் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
இவ்விரு கூறுகளில் முதலாவதைக் கூறியவர் முகமட் அபண்டி அலி. இரண்டாவதைக் கூறியவர் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம்.
இந்தியாவின் “புனிதத் திருமறை நூல்களாக போற்றப்படும்” நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் மட்டுமே “பல்வேறு இந்து சமய தெய்வங்களுக்காகக் கொள்ளப்பட்ட ஆயிரம் துதிப் பாடல்களைக் கொண்டிருக்கிறது.” இவற்றை எல்லாம் படித்து அதில் கூறப்பட்டுள்ள பல்வேறு தெய்வங்களில் விஷ்ணுவை மட்டும் புனித வேதங்களின் கடவுளாக எப்படி முகமட் அபண்டி அடையாளம் கண்டு அங்கீகாரம் அளித்தார் என்பது ஒரு புறமிருக்க, த ஹெரால்ட் சம்பந்தப்பட அல்லாஹ் வழக்கிற்கும் விஷ்ணுவுக்கும் என்ன சம்பந்தம்?
நீதிபதி முகமட் அபண்டியின் இக்கூற்று அவரது அறியாமையாக இருக்கலாம் என்று தட்டிக்கழித்து விட முடியாது. மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதற்கு ஏதோ ஓர் அடிப்படை, ஓர் உள்நோக்கம் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் இந்நாட்டின் இன்றையச் சூழ்நிலையில் எழுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இந்நாட்டு இந்துக்களுக்கு இவர் ஒரு கடவுளை தேர்வு செய்துள்ளாரா? நீதிபதி முகமட் அபண்டியின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் எவ்வித மாற்றமும் இன்றி, குறிப்பாக விஷ்ணு இந்து வேதங்களின் கடவுள் என்று கூறியிருப்பதில் எவ்வித மாற்றமும் இன்றி, நிலைநிறுத்தப்பட்டால், எதிர்காலத்தில் இந்து கோயில்கள் உடைக்கப்படுவதற்கு இது ஒரு வலுவான ஆயுதமாக்கப்படலாம் என்ற சந்தேகம் தோன்றுவதற்கு இடமுண்டு.
இந்நாட்டில் பல்வேறு இந்து தெய்வங்களுக்கு கோயில்கள் இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இத்தீர்ப்பின் அடிப்படையில் விஷ்ணுதான் இந்துக்களின் கடவுள். இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆகவே இதர இந்து தெய்வங்களுக்கான கோயில்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று கூறுவதற்கு வாழை மரமும் தோரணங்களும் கட்ட அனுமதி மறுக்கும் அரசு அதிகாரிகள் தயங்க மாட்டார்கள்.
இந்து மதத்தை இழிவுபடுத்தியவரை பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தியவர்கள் இந்நாட்டு ஆளுங்கட்சியினர் என்பதை மறந்து விடக் கூடாது.
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்ய முயற்சிப்பதில் பலன் இல்லை. ஆகவே, சம்பந்தப்பட்டவர்கள் இந்தத் தீர்ப்பில் இந்து வேதங்களின் கடவுளாக கூறப்பட்டுள்ள விஷ்ணுவின் நியமனத்தை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, இந்தத் தீர்ப்பில் நீதிபதி அப்துல் அசிஸ் 1986 ஆம் ஆண்டில் அமைச்சரவை அல்லாஹ் என்ற சொல் பயன்படுத்துவதற்கு தடை விதித்ததை அவரது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், 2011 ஆம் ஆண்டில், அமைச்சரவை இச்சொல் பயன்படுத்துவதை அனுமதிக்கும் முடிவு எடுத்து அதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைக் கண்டு கொள்ளவில்லை.
பிரதமர் நஜிப் ரசாக்கின் தலைமையிலான அமைச்சரவை எடுத்த இம்முடிவு இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்கான ஓர் ஆக்கரமான முடிவு. பத்து அம்சங்கள் அடங்கிய இம்முடிவை கிறிஸ்துவ சம்மேளனத்திற்கு அறிவித்தவர் பிரதமர் நஜிப் ரசாக்.
இந்த பத்து அம்சங்கள் மிக முக்கியமானவை. அமைச்சரவை எடுத்த முடிவு. இதனை ஏன் அரசாங்கம் அமல்படுத்தவில்லை. ஏன் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை?
அமைச்சரவை 2011 ஆம் ஆண்டில் எடுத்த இந்த பத்து அம்ச முடிவு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, தேர்தலில் கிறிஸ்துவ சமூகத்தினரின் வாக்குகளைக் கவர்வதற்காக எடுக்கப்பட்டதா என்ற கேள்வி நியாயமானதே. நியாயமான ஒன்றை ஏன் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வியும் நியாயமானதே!
பிரதமர் நஜிப்பின் அமைச்சரவை 2011 ஆண்டில் ஒப்புதல் அளித்து கிறிஸ்துவ சம்மேளனத்திடம் அளிக்கப்பட்ட இந்த பத்து அம்சங்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும், அவை வாசகர்களின் கவனத்திற்கு மீண்டும் முழுமையாக வெளியிடப்படுகிறது.
பிரதமர் நஜிப் அறிவித்த பத்து அம்சங்கள்
“1. பகசா மலேசியா/இந்தோனேசியா உட்பட அனைத்து மொழிகளிலும் உள்ள பைபிள்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யலாம்.
2. இந்த பைபிள்களை தீவகற்ப மலேசியா, சாபா மற்றும் சரவாக்கிலும் கூட அச்சிடலாம். இது ஒரு புதிய முன்னேற்றம். இதனை கிறிஸ்துவ தரப்பினர்கள் வரவேற்க வேண்டும்.
3. சாபா மற்றும் சரவாக்கின் இபான், கடஸான் டூசுன் மற்றும் லுன் பாவாங் போன்ற பூர்வீக மொழிகளிலுள்ள பைபிள்களை உள்ளூரில் அச்சிடலாம், இறக்குமதியும் செய்யலாம்.
4. சாபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் பெரும் கிறிஸ்துவ சமூகம் இருப்பதை அங்கீகரிக்கும் வகையில் அனைத்து மொழிகளிலும் உள்ள, மலேசியா/இந்தோனேசியா மற்றும் பூர்வீக மொழிகள் உட்பட, பைபிள்கள் இறக்குமதி செய்வதற்கோ, உள்ளூரில் அச்சிடுவதற்கோ எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. எவ்வித முத்திரை அல்லது தொடர் எண் இடுவதற்கான தேவையும் இல்லை.
5. பெரிதான முஸ்லிம் சமூகத்தின் நலன்களைக் கவனத்தில் கொண்டு, மலேசிய தீவகற்பத்தில், மலாய்/இந்தோனேசிய மொழி பைபிள்கள் “கிறிஸ்துவ பதிப்பு” என்ற சொற்களையும், சிலுவை சின்னத்தையும் முகப்பட்டையில் கண்டிப்பாக அச்சிட்டிருக்க வேண்டும்.
6. ஒரே மலேசியா கொள்கைக்கு ஏற்பவும், அதிகமான மக்கள் சாபா, சரவாக் மற்றும் தீவகற்ப மலேசியாவுக்கிடையில் பயணிப்பதைக் கவனத்தில் கொண்டும், அவ்வாறான பயணத்தின் போது மக்கள் தங்களோடு கொண்டு வரும் பைபிள்கள் மற்றும் கிறிஸ்துவ பொருள்கள் மீது தடைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது.
7. பைபிள் பற்றிய அமைச்சரவையின் இந்த முடிவு முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் (கேஎஸ்யு) ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அமல்படுத்தத் தவறும் அதிகாரிள் பொது உத்தரவுகள் விதிகளின் கீழ் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர். சம்பந்தப்பட அரசு பணியாளர்கள் இந்த உத்தரவை நன்கு புரிந்து கொண்டு அதனை முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகள், சட்டத்துறை தலைவர் உட்பட, விசாலமான விளக்கம் அளிப்பார்கள் (இணப்பு 1 ஐ காண்க).
8. கூச்சிங், கிடெயோனில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 30,000 பைபிள்களை அவற்றின் இறக்குமதியாளர் எவ்விதக் கட்டணமுமின்றி பெற்றுக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட தரப்லினர்களுக்கு ஏற்பட்ட செலவுகள் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதே போன்ற முன்வைப்பு போர்ட் கிள்ளானில் 5,100 பைபிள்களை இறக்குமதி செய்தவருக்கும் கிடைக்கவிருக்கிறது. இதனை கடந்த வாரம் மலேசிய பைபிள் மன்றம் (பிஎஸ்எம்) பெற்றுக்கொண்டு விட்டது.
9. கிறிஸ்துவ விவகாரங்களுக்கு அப்பால், சமயங்களுக்கிடையிலான விவகாரங்கள் மீது கவனம் செலுத்தவும், அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப சமய விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கும் கிறிஸ்துவ மற்றும் இதர பல்வேறு சமயங்களுடன் செயல்பட அரசாங்கம் கொண்டுள்ள ஈடுபாட்டை அது மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது. இப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு நாட்டிலுள்ள இதர சம்பந்தப்பட்ட சட்டங்கள் கவனத்தில் கொள்ளப்படும். பிரதமர் என்ற எனது தகுதியில் இதற்கு ஒரு முன்னேற்றகரமான வழி குறித்து விவாதிக்க விரைவில் நான் மலேசிய கிறிஸ்துவ சம்மேளனத்தின் (சிஎப்எம்) பிரதிநிதிகளைச் சந்திப்பேன்.
10. எனது அமைச்சரவையின் கிறிஸ்துவ அமைச்சர்கள் ஒரு முறையான அடிப்படையில் பல்வேறு கிறிஸ்துவ தரப்பினர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதோடு, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகளோடும் என்னோடும் பணியாற்றுவார்கள். இந்நாட்டின் தலைவர் என்ற முறையில், நாட்டின் அனைத்து சமயப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அமைதியையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கு நமது சமுதாயத்தில் காணப்படும் பிளவுகளைச் சரிக்கட்டுவதற்கான தேவை இருக்கிறது. இதனை அடைவதற்கு மரியாதை, சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு மற்றும் நல்லிணக்கம் ஆகியவையே மிகச் சிறந்த வழி என நான் நம்புகிறேன்.”
போதிவர்மரே உங்கள் கருத்துக்கு நான் உடன்படுகின்றேன்.
அன்னை திரேசாவைப் பற்றி நான் மட்டமாக பேசவில்லை. திருத்திக் கொள்ளுங்கள். அவர் இந்தியாவுக்கு கன்னியாஸ்திரியாக வந்த நோக்கத்தை செவ்வனே பூர்த்திக் செய்து கொண்டார் என்றுதானே சொன்னேன். அதில் தவறு என்ன கண்டீர் குருஜி.
குருஜி எப்பொழுது கிருஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் தமிழ் மொழியின் மீது அக்கறை காட்டினார்கள்? தமிழர்களை மதம் மாற்றும் பொழுதும், மதம் மாற்றிய பிறகும் அவர்கள் அந்த மதத்தை விட்டு ஓடி விடாமல் இருக்க தமிழில் புலமை பெற்ற கோடரிக் கம்புகளை வைத்துக் கொண்டு அவர்களுக்கு தமிழில் மூளை சலவை செய்யவே தமிழை உபயோகித்தார்கள் தவிரவே தமிழ் மொழிப் பற்றால் அல்ல. இதில் ஒரு சில முஸ்லிம் இந்திய தமிழ் இலக்கியவாதிகல் விதி விலக்கு.
இந்த ‘Tan Sri’ குருஜிக்கும் இந்து சமயத்துக்கும் ஏன்னய்யா முடுச்சி போடுகின்றீர். பணம் பறிக்கும் அந்த கும்பலில் போய் மாட்டிக் கொண்டு தத்தளிக்கும் மடையர்களைப் பற்றி உங்களுக்கு ஆதங்கம் இருப்பதை அனைவராலும் உணரமுடிகின்றது. அதற்காக நீங்கள் போற்றும் இந்து மதத்தை ஏன் சம்பந்தம் இல்லாமல் வைகின்றீர்கள். இந்து மதம் என்ன அந்த குருஜியை அவதார புருஷனாக ஏற்றுக் கொண்டதா இல்லை இந்நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களும் அவரை அவதார புருஷனாக ஏற்றுக் கொண்டனரா? இல்லையே. ஏதோ ஒரு சிறு பிரிவினர் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தாந்தோனித்தனமாக ஆடினால் அது அவரவர் வினைப் பயன் என்று விட்டுச் செல்லுங்கள். நெஞ்சு வலி ஏற்படாது. “BP” ஏறாது.
யார் தமிழர்? தமிழ் பேசுபவர் எல்லாம் தமிழர் என்றால். இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் தெலுங்கர்களும், மலையாளிகளும் சீக்கியர்களும் தங்களை தமிழர் என்று அடையாளப் படுத்திக் கொள்வது இல்லையே! ஒரு சீனரும், மலாய்க்காரரும் தமிழ் பேசினால் அவர்களும் தமிழராகி விட முடியுமா? தமிழர் என்ற அடையாளத்துக்குரியவர் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவராக இருக்க வேண்டும், குறைந்த பட்சம் தமிழ் மொழியில் பேச வேண்டும், தமிழர் மரபையும் பண்பாடுகளையும் (உடை, உணவு, மற்றவரிடம் பழகும் முறை, பழக்க வழக்கம் etc ) பின் பற்ற வேண்டும், தமிழர்கள் போற்றும் சமயத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதெல்லாம் இல்லாமல் மொழியையும், பண்பாட்டையும், சமையத்தையும் புறக்கணித்து விட்டு நான் தமிழன், நான் தமிழன் என்று வீராப்பு பேசும் தமிழன் இருப்பதை விட சாவதே மேல்.
குருஜி, காலை 6.30-க்கு பத்து மலையில் குடிகொண்டிருக்கும் எம்முருகனுக்கு நித்திய பூஜை நடைபெற்று முடிந்த பின்பு, நீங்கள் தாராளமாக கந்தர் சஷ்டி கவசம் படியுங்கள், முருகன் பாமாலைகளை அங்குள்ள எல்லா பக்தர்களின் காதிலும், அங்கே இருகின்ற அர்ச்சகரின் காதிலும் நன்றாக விழும்படி பாடுங்கள். எவனாவது மறுபேச்சி பேசினால் காலில் போட்டுக் கொண்டிருப்பதை எடுத்து கண்மூடிதனமாக வாங்குங்கள். பாவமில்லை.
குருஜி, இந்து மதம் வேதத்தின் அடிப்படையில் வருணாசிரம கோட்பாடுகளை உடையது என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்கள் உங்களை இந்து என்று கூறிக்கொண்டால் அந்த வருணாசிரம கோட்பாடுகளையும் ஏற்றுக் கொண்டு அதற்க்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அப்படி உங்களால் முடியாது என்றல் அந்த இந்து மதத்திற்குள்ளே இருந்துக் கொண்டு நோய், நோய் என்று ஏன் வசை பாடிக்கொண்டிருக்கிண்றீர்கள்.இது உங்களுக்கு இழிவாக தெரியவில்லையா? அக்கரையில் இருந்து வெறுமே பேசிக்கொண்டிராமல் எல்லா உயிர்களையும் சமாக போற்றும் இக்கரையில் உள்ள சைவ சமத்திற்கு வந்து விடுவதுதானே? குறைந்தபட்சம் ‘பிறவாக் கடல் நீந்துவது” எப்படி என்றாவது உங்களுக்கு நான் உணர்த்த முடியும்.
குருஜி, இந்து மதம் வேதத்தின் அடிப்படையில் வருணாசிரம கோட்பாடுகளை உடையது என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்கள் உங்களை இந்து என்று கூறிக்கொண்டால் அந்த வருணாசிரம கோட்பாடுகளையும் ஏற்றுக் கொண்டு அதற்க்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அப்படி உங்களால் முடியாது என்றால் அந்த இந்து மதத்திற்குள்ளே இருந்துக் கொண்டு நோய், நோய் என்று ஏன் வசை பாடிக்கொண்டிருக்கிண்றீர்கள். இது உங்களுக்கு இழிவாக தெரியவில்லையா? அக்கரையில் இருந்து வெறுமே பேசிக்கொண்டிராமல் எல்லா உயிர்களையும் ஒன்றாகவும் சமமாகவும் போற்றும் இக்கரையில் உள்ள சைவ சமயத்திற்கு வந்து விடுவதுதானே? குறைந்தபட்சம் ‘பிறவாக் கடல் நீந்துவது” எப்படி என்றாவது உங்களுக்கு நான் உணர்த்த முடியும். மாற்றத்தை விரும்புவர்களுக்கு சைவம் மாற்று வழியை கொடுக்கின்றது. பற்றிக் கொள்ளுங்கள்.
நான் சொல்ல வந்தது, “அன்பே சிவம்”. அன்பில்லாதவர் வெறும் சவம். கடவுள் இருக்குனு சொல்லுரவனை நம்பலாம், இல்லன்னு சொல்லுரவனையும் நம்பலாம், ஆனால் நான்தான் கடவுள்னு சொல்லுரவனை நம்பாதீர்…
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்)
மதத்தின் மேல் நம்பிக்கை வைத்தால் ஆன்ம நேய ஒருமைப்பாடு வராது, மாறாக தங்களுடைய மதத்தை காப்பாற்ற வேண்டும் என்ற குறுகிய மனப்பாங்கு வளர ஆரம்பிக்கும். அதனால் எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பார்க்கும் பக்குவம் சன்மார்க்க தீட்சை என்பது ஞானத்தில் ஞானம் -எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் நிலையில் தான் உள்ளது. அதனால் தான் ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம்,ஜெபம், தியானம் முதலியவைகளை செய்கின்றவர்கள் கடவுளருளுக்கு சிறிதும் பாத்திரமாகார்கள் என்று வள்ளலார் குறிப்பிடுகிறார்கள்.
இந்து மதத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் இதை கூற தகுதி அற்றவர்.நீதிபதி என்பவரும் சாதாரண மனிதரே.எங்கள் குடும்பத்தினர் யாவரும் பிறந்தது முதல் முருகனையே வணங்கி
வருகிறோம் .அப்படியானால் இவர் கூற்றுப்படி நாங்கள் இந்து அல்ல.இந்து சங்கம் இதில் தலையிட்டு இந்த வரி நீதிமன்ற ஏட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும்.இதை கூறிய நீதிபதி தான் கூறியது தவறு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
குருஜி, தாங்கள் யோக நெறியின் அடிப்படைத் தத்துவங்களைத் ஓரளவு தெரிந்து வைத்திருக்கின்றீர் என்று தெரிகின்றது. ஆனால், தங்களுக்கு வழிகாட்டியான யோக சித்தர் ஞான நெறியில் ஆர்வம் காட்டவில்லை என்றே தெரிகின்றது. ஆதலால்தான் தாங்கள் பக்தி நெறியை பின்னே தள்ளிவிட்டு, மனிதகுல பொது நெறியிலேயே நின்று கொண்டிருகிண்றீர்கள். சற்று மாற்றி சிந்திக்கவும் பழகிக் கொள்ளுங்கள் (think out of box). சிறப்படைவீர்கள்.
யோகா ஞான சித்தன் ஒரு ஏமாற்று பேர்வழி, தயவு செய்து அவனை என்னோடு சேர்க்க வேண்டாம். பிறகு நான் கேட்ட வார்த்தையில் திட்ட வேண்டி வரும். இங்கே கருது எழுதுபவர்கள் யாவரும், சமுதய நலன் கருத்தில் கொள்பவர்கள் என்ற மரியாதையை எனக்கு எப்பொழுதும் உண்டு. நான் நல்ல மனிதனாகவே இருக்க விரும்புகிறேன். என் தகுதிக்கு தகுந்த மாதிரி பிறருக்கு உதவியாக இருக்க ஆசை படுகிறேன், எனக்கு இது போன்ற முட்டாள் குருஜிக்களை நம்பி கடவுளை காண விருப்பம் இல்லை.. காசு கொடுத்தால் கண் முன் வந்து நிற்க கடவுள் என்ன காட்சி பொருளா? நீங்கள் யோகா ஞான மடையனின் சிஷ்யன் என்பது நீங்கள் செய்த விதண்ட வாதத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்.
நான் இந்து மதம் என்ற பெட்டிக்கு வெளியே நின்று சிந்திக்க பழகி கொண்டேன்.. நீங்கள் தான் குண்டு சட்டியை விட்டு வெளியே வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிரிர்கள்.
நீங்கள் பெட்டிக்கு வெளியே நின்று யோசித்தாலும், உள்ளே நின்று யோசித்தாலும், எல்லோருடைய வாழ்கையும், பெட்டிக்குள்ளதான் அடங்க போகிறது… இங்கேயும், எல்லா மதங்களுக்கும் ஒற்றுமைதான். அதனால் வாழும் வரை, மதம் மதம் என்று அடித்து கொள்ளாமல், மனிதம் போற்றுவோம், உலகில் முதலில் நாகரீகம் அடைந்தது தமிழர்களாகிய நாம். ஆகவே இந்த மனிதம் போற்றுவதையும், நாமே முதலில் செய்வோம்.. நன்றி வணக்கம்.
இந்து சமயம் ஆரியன்களால் நம்மில் புகுத்தப்பட்டது. எத்தனை பேர் நான் தமிழன் என்று ஒத்துக்கொள்கின்றனர்? எத்தனை தமிழ் முஸ்லிம்கள் தான் தமிழன் என்று முதலிலும் முஸ்லிம் பிறகு என்று ஒத்துக்கொள்கின்றனர்? முன்பெல்லாம் சேலை கட்டிய தமிழ் முஸ்லிம் பெண்கள் இப்போது சேலை கட்டுகின்றார்களா- அல்லது மலாய்கார வகையில் உடுத்துகின்றனரா ?
இதெல்லாம் எதைகாட்டுகின்றது? ஏற்றத்தாழ்வு- உயர் சாதி தாழ்ந்த சாதி இதுவே இந்து சமயத்தில் இருந்து பேரளவு சமயம் மாறியதற்கு காரணம். இந்துக்களிடம் உண்மையான ஒற்றுமை கிடையாது- சமயம் என்பது எப்பொழுதும் பின்னால் இருந்து ஒருவனை நல் வழியில் கொண்டுசெல்ல வேண்டும். முன்னாள் இருந்து மனிதர்களை பிரித்தாளக்கூடாது. அதிலும் பகுத்தறிவுக்கு ஒப்பாத சாங்கியம் சம்பிரதாயங்களை விட்டு விட வேண்டும். நாம் தான் யாது ஊரே எம்மதமும் சம்மதமும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்– மற்றவர் யாராவது சொல்கின்றனர? நம்மை மட்டம் தட்டி குளிர் காய் கின்றனர். நமக்கு ஒற்றுமை தேவை. நீங்கள் எந்த சாமி/ஆண்டவனை தரிசித்தாலும்-உண்மையாக செய்யுங்கள். உண்மை என்பது ஆண்டவனுக்கு சமம் — என்னைப்பொருத்தவரையில் திருக்குறளும் திருவள்ளுவருமே முதல் — இத்தெய்வ புலவரை மிஞ்சி யாரும் ஏதும் சொல்லவில்லை– நான் தமிழன்-நான் நம்மினத்தை விட்டுக்கொடுக்கமாட்டேன் எவ்வளவுதான் எனக்கு நம்மவர் மீது அதிருப்தி இருந்தாலும். சவுதி அரேபியாவில் நம்மால் கோவில் கட்டமுடியுமா? சிந்தித்து பாருங்கள். நம்முடைய இந்நிலை நாம் திருக்குறளை முதன்மையில் வைக்காததே. ஆண்டவன் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்கவில்லை– ஆனால் சிலரின் சுயநலத்திற்க்காக நம்மையெல்லாம் மடையர்களாக ஆக்கி ஆண்டார்கள். தயவு செய்து நம்மவர்களே சிறுது சிந்தியுங்கள். இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் உள்ள நல்லவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்- ஆனால் தவற்றையும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத வற்றையும் ஏற்பது சரியா? நம்மிடையே இருக்கும் காட்டிக்கொடுக்கும் புத்தியை நாம் அடியோடு ஒழிக்கவேண்டும், நாம் சீனர்களிடமிருந்து நல்ல பலவற்றை கற்றுக்கொள்ளவேண்டும்-வாழ்க்கைக்காக.எவ்வளவுதான் நான் சொல்வது?
இன்னொன்று –தமிழ் முஸ்லிம்கள் தமிழை முதன்மையாக வைத்திருக்கின்றனர் என்பது மிகவும் பாராட்டத்தக்கது. நான் சொல்வது தமிழ்நாடு தொலைக்காட்சியை பார்த்தால் புரியும். இனப்பற்றும் கிடையாது-மொழிப்பற்றும் கிடையாது.
anti guruji போன்ற தமிழர்கள் இருப்பதால் , தமிழர்களின் உண்மை சமயம் ,சித்தர்களின் கோட்பாடு வெளியே வருகிறது ! சில மத அடங்கா பிடாரிகளின் கருத்து வேதனை தருகிறது ! anti guruji அவர்களே ! தொடருங்கள் உங்கள் தாக்குதலை ,
குருஜி, உம்மைப்போல் நானும் ‘Anti Guruji’ தான்.
தேனியிடம் நட்பாக ஒரு கேள்வி. தமிழர்களாகிய கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் மற்றவர்களும் மதக்கொள்கையில் வேறுபட்டிருப்பதால் “தமிழர்” இல்லாமல் போய்விடுமா? மதத்தைத் தவிர மற்ற எல்லா வகையிலும் தமிழனாக இருக்கும் ஒருவரை என்னவென்று சொல்வது?
சகோதரர்களே வெள்ளிகிழமை தோறும் நமது நாட்டில் உள்ள, தமிழ் முஸ்லிம் மசூதிகளில் என்ன அழகான சுத்த தமிழில் உரை நிகழ்த்துகிறார்கள், ஒரு முறை வெளியே நின்று கேட்டாலே புரியும் அவர்களின் தமிழ் பற்று மற்றும் தமிழ் உட்சரிப்பும். அருமை. ஆங்கில கலப்பு இல்லாமல்.
ஜெகவீரபன்டியன் அவர்களே— தமிழன் என்று நாம் கூறக்கூடாது—அவர்கள் கூறவேண்டும். இவர்கள் கூறுவதில்லை .
ஒருவரின் இனம் இன்னது என்று அறியப்படுவதற்கு சில இலக்கணங்கள் உண்டு. அவை முறையே, மொழி, சமயம், கலாச்சாரம், பண்பாடு என்று இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படிப் பார்த்தோமானால், தமிழர்கள் கிறிஸ்துவர்களாகவும், முஸ்லீம்களாகவும் மாறிய பிறகு அவர்கள் சமயம் மாறுகின்ரன்றது அதன் அடிப்படையில் உணவு, உடுத்தும் உடை, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவையும் மாறுகின்றது. தமிழர் என்பதற்கான அடையாளங்கள் பலவையும் இழந்து விட்டு நான் தமிழன் என்பது காலி பெருங்காய டப்பாவை போன்றது. பெருங்காயத்தை பெட்டியில் இருந்து எடுத்து விட்டப் பிறகு வெறும் பெருங்காய வாசனை மட்டும் இருக்கும், பொருள் இருக்காது. உங்களுக்கு பயன்படும் பொருள் வேண்டுமா இல்லை பயன்படாத வெறும் வாசனை மட்டும் போதுமா. முடிவு உங்கள் கையில். நான் தெளிவாக இருகின்றேன்.
நீங்கள் தெளிவாக இல்லை தேனீ அவர்களே! நீங்கள் அண்டி குருஜியோடு நடத்திய வாதங்களை வைத்தும் சொல்கிறேன் நீங்கள் தெளிவாக இல்லை. குருஜி தவறுதலாக தொல்காப்பியம் என்று சொல்லிவிட்டார். இந்த உலகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று இரு தரத்தினரும் உள்ளனர். ஆதியிலே மனிதன் பிறந்தபோது மதத்தொடுதான் மனிதன் பிறந்தானா ? மனிதன் பிறந்து,பிறகு பேசப்பழகி,குழுவாகி, மொழி உருவாகி, பின்பு இனம் உருவாகி ஒரு காலக்கட்டத்திற்கு பிறகுதான் மதம் உண்டாக்கப்பட்டது. தொல்காப்பியமே நம்முடைய பழைமையான நூல் (நமக்கு கிடைக்கப்பெற்றதிலேயே) அதில் சைவ சமயம் என்றோ அல்லது இந்து மதம் என்றோ ஏதாவது ஒரு குறிப்பாகிலும் உண்டோ? ஒரு நிலப்பரப்பின் தெய்வமாக முருகன் காணப்படுகிறான். எங்காவது முருகனின் குடும்பம் உண்டா தொல்காப்பியத்தில்? கணபதியைக் காணமுடியுமா? வேட்டுவ மக்களின் தெய்வமாகிய முருகன் புலால் உண்ணாத தெய்வமாக வாய்ப்புள்ளதா? கிறிஸ்துவும், புத்தரும் சங்கம்தான் வைத்துக்கொண்டனர், மதத்தை அல்ல. இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்துவர் ஆனார்கள். புத்தனின் போதனைகளை ஏற்றுக்கொண்டவர்கள் புத்தர்களானார்கள். மதமற்றவையெல்லாம் பின்நாளில் மனிதர்களால் மதமாக ஆக்கப்பட்டன. ஆக, மொழியால்,இனத்தால், பண்பாட்டால் எவன் தமிழனாக இருக்கிறானோ அவனெல்லோரும் தமிழர்தாம். அவனவனுக்கு அவனவன் மதம் பெரிதென்றால் வைத்துக்கொள்ளட்டும்.அதற்காக இந்த மதம்தான் இந்த இனத்தின் மதம் என்றும், இந்த சமயத்தை நம்பாதவன் தழிழனே அல்ல என்று சட்டஞ்செய்ய எந்த கொம்பனுக்கும் உரிமை கிடையாது .
ஒருவன் கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்றுக்கொண்டால்,உணவு, உடுத்தும் உடை,கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் எல்லாம் மாறிவிடுகன்றன. ஆகவே அவர்கள் எப்படி தமிழர் ஆவார்கள் என்பது பைத்தியக்காரத்தனமில்லையா? நான் கேட்கிறேன்… ஹிந்துக் கலாச்சத்தை ஏற்றுக்கொள்வதால் தமிழன் ஹிந்தியன் ஆகிடுவானா? அதை ஒரு தமிழ் கிறிஸ்தவனோ, புத்தனோ அல்லது முஸ்லிமோ ஹிந்துத் தமிழனைப் பார்த்து சொன்னால் (சொல்லமாட்டார்கள்) எப்படி இருக்கும்? உதிரம் கொதிக்குமல்லவா? அப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் . எனவே கருத்தைத் எழுதும்போது சிந்தித்து எழுதவேண்டும்.
தமிழன் என்பதிலேயே தமிழ் வருகிறது. தமிழ் என்பது ஒரு இனம். மதம் அல்ல.. தமிழனாக இருக்க ஒரே தகுதி, தமிழ் பேசுவதுதான் அன்றி, தமிழனை இருக்க இன்ன மதம் என்று இல்லை. நம்மில் சிலர், “அவர் தமிழர் அல்ல கிறிஸ்தவர்” என்று சொல்வார்கள். இப்படி சொல்லியே தமிழ் இனத்தை உடைத்து விடுகின்றனர். துலுக்கன், மாமாக் என்று சொல்வதால், அவர்களும் காட்டி கொள்வதில்லை.
பெருங்காயம் பயன்படுத்த படுவதே வாசனைக்காகதான். அந்த டப்பாவில் பெருங்காயம் இல்லை என்றாலும் அந்த வாசனை இருப்பதுபோல், நீங்கள் அவர்களை தமிழர்கள் இல்லை என்றாலும், அவர்களின் மேல் தமிழ் வாசனை வந்து கொண்டுதான் இருக்கிறது..
முருகன் உருவான வரலாறு…. ஆதியில் தமிழர்கள் சூரியனைத்தான் வணங்கி வந்தனர். அந்த சூரிய உதயத்தை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் பத்தாது… அவ்வளவு அழகாக இருக்கும். உளவு தொழிலுக்கு சூரியனே பிரதானம் என்று அறிந்து வைத்திருந்தனர். சூரிய உதயத்திற்கு முருகு என்ற பெயரும் உண்டு.முருகு என்றால் அழகு என்று பொருள்.இதுநாள் வரை தாங்கள் வணங்கி வந்த சூரிய முருகுக்கு வடிவம் தர ஆரம்பித்தனர். நீல கடலில் எழுந்து வரும் சூரியன், வேலன் ஆனார். நீல கடல் நீல மயில் ஆனது. இப்படிதான் முருகன் உருவானார். நான் நிறைய பம்பாய் என்ஜினீர்களுடன் வேலை செய்திருக்கிறேன், பம்பாய்க்கும் சென்ற வந்திருக்கிறேன். முருகன் என்று சொன்னால் அவர்களுக்கு புரிவதில்லை. கார்த்திகேயன் என்றே குறிப்பிடுகின்றனர்.
உலகமா? இறைவனா? முதலில் தோன்றியது? உலகம் தோன்றும் முன் என்ன இருந்தது? அணுக்கள் எப்படி ஒன்றாக சேர்ந்தது? யார் சேர்த்தது? பல கோடி அணுக்கள் எப்படி ஒன்று சேர்ந்து பல்லாயிரம் உலகங்கள் தோன்றின? ஆதியும்,அகண்ட இருளும்,அதன்தொனியும்,
அருட்பெரும்ஜோதியும்,அணுவில் ஒடுங்கி,அணுவாய் பிரிந்து,அகில உலகங்களாய் நிறைந்தபின் ஆதியால்,அகண்ட இருளில்,அணுவை தரித்து,அணுவை துளைத்து,அதில் உருவானது நாம்.
மலேசியாவின் அரசியல் சாசனம் (Federal Constitution) யார் “மலாய்க்காரர்” என்று இவ்வாறு குறிப்பிடுகின்றது, “Malay” means a person who professes the religion of Islam, habitually speaks the Malay language, conforms to Malay custom”. மேலும், “Section 2 of Malay Reservation Enactment (Federated Malay States) defines “Malay” a person belonging to any Malayan race who habitually speaks the malay language or any malayan language and professes the muslim religion”. மலேசியாவின் அரசியல் சாசனம் கடந்த 59 ஆண்டுகளாக இந்த மலேசிய திருநாட்டில் உள்ளது. அத்துணை வருடத்துக்கு முன்னமே இந்நாட்டு கொம்பன் எழுதிவைத்த இந்நாட்டின் உயரிய சட்டத்துக்கு உங்கள் பெற்றோரும் எங்கள் பெற்றோரும் ஒற்றுக் கொண்டு நீங்களும் இதுநாள் வரை அதைபற்றி கேள்வி எழுப்பாமல் மௌனமாக இருந்து விட்டு, இன்று “யார் தமிழர்” என்ற கேள்விக்கு வேற்றொரு வியாக்கினம் பாடுவது ஏன். சட்டத்தைப் போட்ட அவன் கொம்பன், நான் வம்பனா? இப்பொழுதும் நான் தெளிவாகவே உள்ளேன். மற்றவர்களைப் போல் மயக்கத்தில் அல்ல.
மலாய்க்காரன் யார் என்பதற்கு அவர்களின் அதிகார பலத்தைக்கொண்டு எப்படி வேண்டுமானாலும் வியாக்கியானம் செய்து அதை சட்டமாகவும் ஆக்கி வைத்துக்கொள்ளலாம். அதெல்லாம் உலக நீதியாகிடாது. எவனோ ஓர் அறிவிலி ஒன்றைக் குறித்து ஒரு வியாக்கியானம் செய்து, முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று கட்டாயப்படுத்தினால், அதை சட்டம் என்று சொன்னால் அறிவுலகம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் கட்டாயமில்லை. யாரைப்பற்றியோ எவரோ தன் அதிகாரத்தைக் காட்டி சட்டமாக்கி வைத்துக்கொண்டதற்கு எங்கள் அப்பனோ அல்லது உங்கள் அப்பனோ, நானோ அல்லது நீங்களோ மயிரைப் பிய்த்துக்கொண்டு ஏன் கேள்வி எழுப்ப வேண்டும? கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த நாட்டில் இல்லையா? அதற்காக ருக்கூன் நகாராவை ஏற்றுக்கொள்ளாதவன் என்று எவரையாகிலும் நாட்டைவிட்டு விரட்டிவிட்டார்களா என்ன? மேலும், மலாய்க்காரன் என்பவனுக்கு சட்டம் சொல்லும் வியாக்கியானத்தை தமிழன் என்பவன் யார்? என்பதற்கும் பயன்படுத்த நாம் என்ன பித்துக்குளியா தோழரே? நம்முடைய பார்வையின் உயரமென்ன? நம்முடைய பண்பாட்டின் கணமென்ன? யாருடையதை யாருடையதோடு ஓப்பிட்டு விளக்கமளிக்கவேண்டும் என்பதில்கூடவா உங்களுக்கு இன்னும் தெளிவில்லை? உங்களைப்போய் நான் கொம்பன் என்பேனா தோழனே? நீங்கள் என் நண்பனல்லவா? உங்கள் கருத்து எப்படி இருந்தாலும்… நீங்களும் அண்டி குருஜியும் பகிர்ந்துகொண்ட கருத்துக்களம் எத்தனை பேருக்குச் சுவையாகவும் பயனாகவும் இருந்தது தெரியுமா அன்பரே? நமது வாசகர்கள் இன்னும் நிறைய கருத்துகளை இந்தத் தளத்திலே பரிமாறிக்கொள்ளவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
“யார் தமிழர்”, என்ற கேள்வி எழுந்ததர்க்குக் காரணம் “தமிழர்” என்ற வார்த்தையைப் இப்பகுதியில் கலவையாக பயன்படுத்தி கருத்து எழுதியமையால்தான். தமிழ் கிறிஸ்தவர்களையோ அல்லது தமிழ் முஸ்லிம் அன்பர்களையோ நிந்தித்து எழுதுவதற்காக அல்ல. நான் என்றும் குறுகிய வட்டத்துக்குள் சிந்திப்பவன் அன்று. குருஜியைப் போல எனக்கும் பரந்த மனம் உண்டு. ஆனால், குருஜி வள்ளலார் பெருமான் போன்றவர்களின் போதனைகள் வசமாகி சமய நெறியை ஏற்றுக் கொள்ள தயங்குகின்றார் என்று என்னுகின்றேன். ஆதலால்தான், சமய ஞான நெறியை முன்னிறுத்தும் பொழுது அவர் மனம் அதை ஏற்க்க மாறுகின்றது. பரவாயில்லை. உங்கள் விவாதத்திற்கு நாளை வருகின்றேன். இன்று கொஞ்சம் ‘பிசி’.
சமய போதனையை ஏற்று கொள்வதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை, ஆனால் என் சமயம் மட்டுமே சரி, அதில் இருக்கும் தத்துவங்கள் மட்டுமே சரி என்று சொல்வதில் எனக்கு உடன் பாடு இல்லை. மற்றவர்களும் நம்மை போலத்தான் நம்பிக்கை வைத்து கடவுளை காண்கிறார்கள் என்று நம்புகிறேன். நாம் வைத்து வணங்கும், ஒரு செங்கல்லுக்கு கூட சக்தி இருபதாக நாம் நம்பும் பொழுது, அடுத்தவர் வணங்கும் தெய்வம் பொய் என்று சொன்னால் அது நமது அறியாமையே.. கடவுள் நல்ல விசயங்களை போதிக்க அவதாரம் எடுத்தார். அரபு நாட்டில், தமிழ் குமாரனாம் முருகன் அவதரித்து,அங்கே தமிழில், போதனை செய்திருந்தால், அவர்களுக்கு கடவுள் அந்நியனாகி இருப்பார். அவர்களில் ஒருவனாக அவதரிக்க வேண்டிய கட்டாயம் கடவுளுக்கு.. இப்படித்தான் என்னுடைய ஆராய்ச்சி போகிறது. நல்ல விஷயங்கள் எங்கு இருப்பினும் அதை மனதில் கொள்வது எனது வழக்கம்.பிறரிடம் இருந்து நல்ல விசயங்களை கற்று கொள்ள தயங்க கூடாது.. கிறிஸ்துவ மதமும், இஸ்லாம் மதமும், கட்டு கோப்புடன் இருப்பதை ஹிந்து மதம் கற்று கொள்ளத்தான் வேண்டும்.
மனிதர்களுக்குள் புரிந்துணர்வு வேண்டும். சில விசயங்களை நாம் நமது கோணத்தில் இருந்தே பார்த்து கொண்டிருந்தாள், நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.. இஸ்லாமியர்கள், நாயையும், பன்றியையும் ஏன் இவ்வளவு வெறுக்கிறார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதே போல் ஹிந்துக்கள் ஏன் பசுவை இப்படி நேசிக்கிறார்கள் என்பதின் அர்த்தம் அவர்களுக்கு பிடிபடுவதில்லை. ஆக ஒருவருக்கு ஒருவர் மதிப்பு கொடுத்தால் ஒழிய , வேறு வழியில் நல்லிணக்கம் வராது…
யார் கடவுள் என்று தேடுங்கள் தங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்…
தென்னாடும் வடநாடும் கண்ணிடை நடுநாடும்
கீழ்நாடும் அறிவமுதே நாடும்,கூடிக்குலாவும்
நன்னாடு அந்நாடு என்னாடு சென்னி நாடே.
தொட்டேன் தொட்டுத் தொட்டு எல்லாம்
விட்டே விட்டேன் பின் ஒன்றை தொட்டேன்
அதை விடமுடியா மேல்நிலை சென்றேன்
அது எது? அதுவே என்னிலை உணர்வு.
இங்க தொட்டேன் ,அங்க தொட்டேன் ,பிறகு எல்லாத்தையும் விட்டேன் ,ஒன்றே ஒன்று தொட்டு விட்டு விட முடியாமல் ( என்னிலை உணர்வு ), என்னிலை என்றால் உடலா ? மனமா ? ஆன்மாவா ? விவரமாக சொன்னால் நானும் புரிந்து கொள்வேன் ஞானியே ?
ஜெ.வீ. பாண்டியரே, ‘Lord Reid’ தலமைத்தாங்கி 5 நீதிபதிகளால் வரையப்பட்ட நம் நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் “ஓர் இனம்” என்பதற்கு எது இலக்கணம் என்று கூறப்பட்டது முறையே அவர்தம் சமயம், வழக்கமாகப் பேசும் மொழி, பண்பாடு (இதில் கலை, கலாச்சாரம், உணவு, உடை, பழக்க வழக்கங்கள் இன்னும் பல) அடங்கியுள்ளன. இதில் அவர்தம் வரலாறும் சேர்ந்து இருக்க வேண்டும் என்கின்றேன். இந்த நீதிபதிகளை வெறுமனே “அறிவிலிகள்” என்று கூறி விலக்கி வைக்க எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. இது தீர ஆராய்ந்து கொடுக்கப் பட்ட பொருள் விளக்கமே ஒழிய தாங்கள் கூறுவது போல் முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று முடிவெடுத்து அதிகார பலத்தை மட்டுமே கொண்டு கொடுக்கப்பட்ட பொருள் விளக்கம் அல்ல. ஏன் “தீர ஆராய்ந்து கொடுக்கப்பட்ட பொருள் விளக்கம்” என்பதை அடுத்து விளக்குகின்றேன். பொறுத்திருங்கள். உடனே மறு கருத்து எழுதி விடார்தீர்கள். தொடரும்.
ஒரு தமிழர் மதம் மாறி கிறிஸ்தவராகவோ அல்லது முஸ்லிமாகவோ போகும் பொழுது எவற்றை எல்லாம் இழக்கின்றனர் என்று பார்ப்போம். 1) பெரும்பாலான தமிழர்கள் போற்றும் இந்து அல்லது சைவ சமயத்தை இழக்கின்றனர். 2) தமிழர்கள் பண்பாடுகளை இழக்கின்றனர். எ.கா. (a) தமிழர் மரபுப்படி ஒரு மாமன் முறையில் உள்ளவரை திருமணம் செய்ய இயலாது மாறாக அண்ணன் தங்கை உறவு முறையை முஸ்லிம்கள் சமயத்தின் அடிப்படையில் பின்பற்றுகின்றனர். திருமண வைபவத்தில் இருக்கும் மரபு சார்ந்த நிகழ்வுகளையும் அவர்கள் பின் பற்ற இயலாது காரணம் இதில் பல, அவர்களின் சமய நெறிகளுக்கு ஏற்புடையவையாக இருக்காது என்பதால். இது கிறிஸ்தவர்களுக்கும் தகும் (b) கலை என்று எடுத்துக் கொண்டால். அவர்கள் பரத
கலையை பின்பற்ற முடியாது காரணம் நடராஜப் பெருமானை வணங்கியே நடனத்தை தொடர வேண்டும். கலையையும் இழந்தார்கள். (c) எது நமக்கு ஒவ்வாத உணவோ அதை அவர்கள் உட்கொள்கின்றனர். உணவிலும் நம்மை விட்டுப் பிரிந்தனர். (d) நமது பாரம்பரிய உடையை பெரும்பாலும் இங்குள்ள முஸ்லிம் அன்பர்கள் அணியமாட்டார்கள் காரணம் அது அவர்களின் இன அடையாளத்தை வெட்ட வெளிச்சமாக்கி விடும் என்பதால். இவை ஒரு சில எடுத்துக்காட்டுகளே. விவரித்தால் பட்டியல் நீண்டு விடும். இவ்வாறு மாறியவர்களைப் பார்த்து நீங்கள் தமிழரா என்று கேட்டால், எடுத்த வாய்க்கு இல்லைங்க நான் கிறிஸ்துவர்ங்க அல்லது முஸ்லீங்க என்றே பதில் வரும் விதிவிலக்காக நூற்றில் இருவர் வேட்றொரு பதிலைக் கொடுக்கக் கூடும். ஏன்
இப்படி? காரணம் மாறியவர்கள், தமிழர்கள் என்றால் அவர்கள் இந்து மதத்தை ஒட்டிவர்கள் (Tamilians are always associated with Hinduism) என்று எண்ணி விடுவார்களோ என்று எண்ணி தங்களின் அடையாளத்தை மாற்றி சொல்லவே விரும்புகின்றார்கள். மலேசியாவில் உள்ள ‘KIMMA’ தலைவர்களைக் கூப்பிட்டு நாங்களெல்லாம் தமிழர்களே என்று பொது அறிக்கை விடச் சொல்லுங்கள் பார்ப்போம். யாரும் முன் வரமாட்டார்கள். காரணம் அவர்கள் தங்களை எந்த அளவுக்கு மலாய்க்காரராக மாற்றிக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு தங்களை மாற்றிக் கொண்டு ‘BUMIPUTERA’ அந்தஸ்த்தை பெற விரும்புகின்றார்கள். அவர்களே தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ள
விரும்பாத பொழுது நீங்கள் ஏன் அவர்களுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தொடரும்.
ஆகையால்தான் இனத்திற்கான இலக்கணங்களில் சமயத்தையும் சேர்த்து பொருள் கூறினார்கள் நமது அரசியல் சாசனத்தில். கண்ணுக்கெதிரே இருக்கும் பெரிய யானையை (அரசியல் சாசனம்) உங்களுக்கு காட்டினேன். தாங்களோ யானை எனக்குத் தெரியவில்லை மாறாக தென்குமரி முனையில் உள்ள எறும்பை எனக்கு காட்டுங்கள் என்று கூறுகின்றீர்கள். எங்கே இருகின்றது நியாயம்? தொடரும்.
ஒரு தமிழர் மதம் மாறி இரண்டோ அல்லது மூன்று தலைமுறைக்குப் பிறகோ அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் எந்நிலையில் இருப்பாகள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்களின் பண்பாடு என்னென்ன வகையில் வேறுபட்டு போயிருக்கும்? அவ்வாறு இன அடையாளமே வெகுவாக மாறுபட்டு போனவர்களை எவ்வாறு தமிழர்கள் என்று அடையாளம் கூற முடியும். இது மட்டும் அல்ல, தமிழர் என்பவர்கள் பல தலைமுறைகளாக தமிழர் பரம்பரையில் இருந்து வந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் கடந்த ஒன்றோ அல்லது இரண்டு தலைமுறையாக தமிழ் நாட்டிலோ அல்லது வேறு நாட்டிலோ தமிழர்களுடன் கூடி வாழ்ந்து விட்டு நானும் திராவிடன் என்ற போர்வைப் போர்த்திக் கொண்டு தமிழர்களை ஆண்டு வரும் மற்ற இனத்தவர்களின் நிலையும் ஆராயத் தக்கதே! ஆதாலால்தான், இன இலக்கணத்துக்கு வரலாற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றேன். ஆகவே தமிழ் மொழி பேசுவதால் மட்டுமே ஒருவர் தமிழராகி விட முடியாது. அறிவார்ந்த அறிஞர்களின் ஆராய்ச்சியும் இவ்வாறே இருக்கும். தமிழர் பரந்த மனம் கொண்டவர்கள். நம்மை வேற்று ஒருவர் ‘நீ ரொம்ப நல்லவன்டா” என்று சொல்லி விட்டால் போதும் தமிழர்கள் அடிக்க, அடிக்க அடி வாங்கிக் கொண்டே இருப்பார்கள். அவ்வளவு (அப்) பாவிகள் தமிழர்கள். இதன் காரணத்தால் என்னவோ தமிழர்கள் பொற்காலத்தில் இருந்து இருண்ட காலத்துக்கு மறுபடியும் சென்று கொண்டிருக்கின்றோம் போலிருக்கின்றது. மற்றவை உங்கள் பதில் கண்ட பிறகு நாளை தொடரும்.
தேனீ…யாம் வெஇட்டிங்க்!
தமிழனின் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வாசகம் பெருமைப்படககூடியது ஆனால் உலக வாழ்க்கையில் சரி பட்டு வராது. எம்மதமும் சம்மதம் என்பதுவும் சரி பட்டு வராது. நாளடைவில் காணமல் போய்விடுவோம். பாலாக இருந்த நாம் தயிராகி பின்பு பாலா அது என்ன? என்ற கேள்விக்கு வந்து விடுவோம்.
500 வருடத்துக்கு முன்பு தமிழன் ( சமய நிலையில் ) தனித்து இருந்தான். இப்பொழுது எப்படி இருக்கிறான். யோசியுங்கள்.
தேன்னீ… உங்களின் வாதத்தை படிக்கும் வாசகர்களுக்கு, நீங்கள் கொட்டுகிறீரா? அல்லது தேனை ஊட்டுகிறீரா? எனும் ஐயம் வரலாம். ஆனால் எனக்கோ உங்களின் வாதம் தேன்பாக; தென்பாங்கு. நீங்கள் தமிழ்க் கிறிஸ்துவர்கள் மற்றும் தமிழ் முஸ்லீம்கள் குறித்த பண்பாட்டுத் திரிபுகளை விரிவாகவோ அல்லது சுருக்கமாகவோ எழுத முடிந்தபோது ஏன் தமிழ் இந்துக்களின் தடம்புரண்ட பண்பாட்டு வரலாற்றை கொஞ்சம்கூட எழுதமுடியாமல் போனது என்பதன் காரணத்தை அடியேன் அறிந்துகொள்ளலாகுமா? அவற்றை நான் எழுதப்போனால் அது தீபாவளி பரிசாக இல்லாது போய்விடுமே சம்மதமா? பலர் மனம் காயப்படுமே சம்மதமா?வாதம் என்று வந்துவிட்டால் பிறகு ஒப்பரி எதற்கு? என்றும் கேட்கத்தோன்றும். மதமா?மனித உணர்வா? என்றால் மனிதத்திற்கும் மனித உணர்விற்கும் மனிதாபத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவன். எனக்கும் மதத்திற்கும் வெகு தூரம். ஏனென்றால் பொதுவாக மதங்கள் தன்னுடைய இலக்கை விட்டு விலகிப்போய் வெகுகாலமாகிவிட்டன. அந்த உயிரில்லா சவத்தை கட்டிக்கொண்டு அழ எனக்கு நேரமில்லை. ஆகவே, நான் முன்வைக்கப்போகும் கருத்துகள் எந்த இந்துவையும் காயப்படுத்தி விட்டது என்னறு யாரும் என்னைக் கோபித்துக்கொள்ளக்கூடாது. நான் இப்படி எழுதுவதால் ” இவன் பெரியார் கட்சிக்காரன் ” என்று யாரும் எனக்கு முத்திரைக்குத்த முயற்சிக்கவும் கூடாது. பெரியாராக இருந்தாலும் காந்தியாக இருந்தாலும் அல்லது வேறு எந்த மேதையாக இருந்தாலும் கருத்து பிழை என்றால் பிழைதான் என்று தயங்காமல் உரைப்பவன். சம்மதம் என்றால் நான் தயார். தேனீயிடமிருந்தும் மற்ற அன்பர்களிடமிருந்தும் பதிலை எதிர்பார்க்கிறேன்.
6 அறிவு படைத்த மானிடர் என்னிலை அறிவது ஆன்மாவை உணர்வது என பொருள்,”அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது”. கடவுளை அடைய எண்ணற்ற வழிகள் இருப்பினும் (தொட்டேன் தொட்டுத் தொட்டு எல்லாம் விட்டே விட்டேன் பின் ஒன்றை தொட்டேன் அதை விடமுடியா மேல்நிலை சென்றேன்) 4 முக்கிய வழிகள் கர்மம்,பக்தி,ராஜயோகம் மற்றும் ஞானம் என்பவையே ஆகும். தந்தை பரந்த வேட்டவேளியையும்,தாய் பூமதேவியையும் நம் உடலின் மூலம் வழிதொடர்பு கொள்ள நம் நூண் உடலின் அறிவு,ஆன்மா,7 பிரதான சக்கரங்கள் (மூலதார,சுவதிஸ்தானா,
மணிபூரஹா,அனகாத,விசூதி,ஆஜ்னா,சஹஸ்ரார) இருப்பினும் இவை அனைத்தும் பரு உடலில் முலமாக இயக்க படுகின்றன.அவர்தம் வழிபாட்டு தலங்களுக்கு சென்று (குறிப்பாக இந்துக்களுக்கு ஆன்மா லயம் அடைகின்ற ஆலயங்களில்) இறைவனை ஒருநிலை படுத்தி (20 முதல் 30 நிமிடம் வரை) தியானம் செய்தல் அவசியம்.உடலை கடந்து,உயிரை கடந்து,மனதை கடந்து,அறிவை கடந்து,அனுபவங்களை கடந்து,இனி கடப்பதற்கு ஒன்றுமில்லை என்று உணரும் நிலையே “கடவுள்”, இவை அனைத்தும் பரம்பொருளின் திருவிளையாடல்.
ஜெகவீரபாண்டியன் … இதுபோதுமா இன்னும் வேணுமா ??? தேனீ அருமையான விளக்கம் .. இப்போது கிருஸ்தவர்கள் ஒருசில வெள்ளையரையும் அழைத்துக்கொண்டு வீடுவீடாக மதவியாபாரம் செய்கிறார்கள் .. அண்மையில் எங்கள் தமானில் ஒருவிட்டுக்குசென்று கைலாகுகொடுத்து பின்பு நலம்விசாரித்து விட்டு .. மதுவைவீரன் சாமிஜை சாத்தான்களை வணன்காதிர்கள் என்று சொன்னது மட்டுமில்லாமல் வீசசொல்லியுல்லார்கள் !!! வீட்டுக்காரர் கடுப்பாகி தயவுசெய்து மீண்டும் இந்தபக்கம் வராதிர்கள் என்று எச்சரித்து அனுபியுல்லார்கள் .. ஜெகவீரபாண்டியன் தமிழ் புத்தாண்டை எத்தனைபேர் கொண்டாடுகிரிர்கள் ??? சீனர்கள் கிரிஸ்தவர்கலானாலும் சினபெருநாள் கொண்டாடுகிறார்கள் .. சீனமொழி பேசுகிறார்கள் ..
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதுதான் வாசகம். கேளுங்கள் எனும் பொருளில் கேளீர் என்பது தவறாகிடும். கேளிர் என்றல் நண்பர் என்று பொருள். சரி, தமிழ்ப்புலவன் ஒருவன் இந்த உயரிய வாசகத்தை கொடுப்பதற்கு முன் எவ்வளவு சிந்தித்திருப்பான்? அவன் வாழ்ந்த காலத்தையும் விஞ்சி இன்று நம் காலத்தையும் கடந்து மனிதம் உணர்வு கொண்டு வாழப்போகும் ஒரு பொற்காலத்தை சிந்தித்தவன் அல்லவா? அவனால் அது கூடும். மன உயரம் குன்றியவர்களால் அது கூடமலே போகும். சத்தியம் ஜெயிக்குமா? என்று காந்தி மகான் சோதித்துப்பார்க்க விரும்பி அதன்படி வாழ்ந்து பார்த்தார். சத்தியம் வெல்லும் என்பதை இந்த நவீன காலத்திலே நிரூபித்து உயிர் விட்டார். இப்படி துனிபு கொண்டு வாழ்ந்து பாராது , இது சரிபட்டு வராது என்பது எப்படி சரியாகும்? நிறைய பேர் என்ன சொல்கிறார்கள் ” திருக்குறளாவது வெங்காயமாவது ? எல்லாம் வாழ்க்கைக்குச் சரிபட்டு வராது.” என்கிறர்கள். இப்படி சொல்லிச் சொல்லியே தமிழர்களால் குறளின் பயனை அனுபவிக்கவியலாது போயிற்று. “குறள் சொன்னபடி உணர்வோடும் வைராக்கியத்தோடும் கடைபிடித்து வாழ்ந்து தோற்றுவிட்டேன்!” என்று ஒருவராகிலும் மனசாட்சியோடு பகர முடியுமா? நம்முடைய திமிர், நம்முடைய அகம்மபாவம், நம்முடைய அலட்சியம் நம்மை வாழவிடாமல் செய்கிறது என்பதை எப்போதுதான் நாம் உணரப்போகிறோமோ தெரியவில்லை! “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்னும் அடுத்த வரியையும் மனதில் கொள்ள வேண்டுகிறேன்.
ஹிந்து மதத்தை துறந்து, ஏன் கிற்ஸ்துவ மதத்தையும் இஸ்லாமிய மார்க்கத்தையும் மக்கள் ஏன் ஏற்றுகொள்கிறார்கள் என்பதை கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தல் பல உண்மைகள் வெளியாகும், குறிப்பாக ஏற்ற தாழ்வு, தீண்டாமை இன்னும் பல சொல்லிக்கொண்டு போகலாம்.
சைவபிரியா…அவசரக்குடுக்கையாக இருக்கிறீர்கள். தேனிக்கு எப்படி பதில் சொல்லவேண்டுமென எனக்குத்தெரியும். தேனிக்கு நான் பதில் எழுதினால் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாது. குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுபவரிடம் போய் சொல்லுங்கள் இதுபோதுமா? இன்னும் வேண்டுமா? என்னும் எக்காளத்தை!
கிருஸ்தவ மதத்தில் எவரும் பாதிரியாக ஆகலாம், இஸ்லாமிய மதத்தில் யாரு வேண்டும்னாலும் இமாம் ஆகலாம், இந்து மதத்தில் உயர்ஜாதி ஹிந்துக்களை தவிர்த்து ஒரு தலித்தோ அல்லது அருந்ததியர் இனத்தை சேர்ந்தவர் அணைத்து ஜாதி இந்துக்களுக்கும் ஒரு அர்சகராக இருக்க முடியுமா? ஏன் கேள்விக்கு என்ன பதில்? உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் பதில் அளிக்கவும் நன்றி.
Tamil அவர்களே, மதம் மாறுவதற்கு ஜாதி ஒரு காரணம் என்று சொல்ல முடியாது. சனாதான தர்மத்தை தெரிந்து கொள்ள தவறுவதுதான் காரணம். எந்த கட்டதிலுமே ஹிந்து மதம் ஜாதியைப்பற்றி பேசவில்லை. ஜாதியைப்பற்றி பேசுவது மிகச்சிலரே.