-ஜீவி காத்தையா, செம்பருத்தி,கோம், அக்டோபர் 15, 2013.
மலேசிய கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட் “அல்லாஹ்” என்ற கடவுளைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புத்ராஜெயாவில் தீர்ப்பு அளித்தது. .
டிசம்பர் 31, 2009 இல், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி லவ் பீ லான் உள்துறை அமைச்சு “அல்லாஹ்” என்ற சொல்லை த ஹெரால்ட் பயன்படுத்துவதற்கு எதிராக விதித்திருந்த தடை சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்திருந்தார்.
அத்தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் செய்திருந்த மேல்முறையீட்டை செவிமடுத்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி லவ் அளித்திருந்த தீர்ப்பை நேற்று தள்ளுபடி செய்தது.
அம்மூன்று நீதிபதிகளும், பெடரல் நீதிமன்றத்துக்கு புதிதாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி முகமட் அபண்டி அலி, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் மற்றும் முகமட் ஸவாவி, மொத்தம் 102 பக்கங்களில் தங்களுடைய தீர்ப்பை கூறியிருந்தனர்.
“அல்லாஹ்” என்ற பெயர் பயன்படுத்தல் கிறிஸ்துவ சமயத்தின் முழுமையான நம்பிக்கை மற்றும் வழக்கமான நடைமுறைகள் ஆகியவற்றின் ஓர் அங்கம் அல்ல என்பது எங்களுடைய பொதுவான முடிவு” என்று நீதிபதி முகமட் அபாண்டி அவரது தீர்ப்பில் கூறுகிறார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று த ஹெரால்ட்டின் ஆசிரியர் கூறினார்.
விஷ்ணுவும் அமைச்சரவையும்
இந்தத் தீர்ப்பில் இரு கூறுகள் கவனத்தை ஈர்ப்பவைகளாக இருக்கின்றன:
- “புனித பைபளில் ‘யாவே’, புனித குரானில் அல்லாஹ், புனித வேதங்களின் கடவுளான விஷ்ணு போன்ற பெயர்கள் அவரவர் புனித நூல்களில் அவரவர் கடவுள்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதை முறையாக அங்கீகரித்தாக வேண்டும்.” (“Due recognition must be given to the names given by their respective Gods in their respective holy books such as ‘Yahweh’ in the holy Bible, Allah in the holy Quran and Vishnu the God of the holy Vedas.” )
- 1986 ஆம் ஆண்டில், அமைச்சரவை “அல்லாஹ்” என்ற சொல் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
இவ்விரு கூறுகளில் முதலாவதைக் கூறியவர் முகமட் அபண்டி அலி. இரண்டாவதைக் கூறியவர் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம்.
இந்தியாவின் “புனிதத் திருமறை நூல்களாக போற்றப்படும்” நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் மட்டுமே “பல்வேறு இந்து சமய தெய்வங்களுக்காகக் கொள்ளப்பட்ட ஆயிரம் துதிப் பாடல்களைக் கொண்டிருக்கிறது.” இவற்றை எல்லாம் படித்து அதில் கூறப்பட்டுள்ள பல்வேறு தெய்வங்களில் விஷ்ணுவை மட்டும் புனித வேதங்களின் கடவுளாக எப்படி முகமட் அபண்டி அடையாளம் கண்டு அங்கீகாரம் அளித்தார் என்பது ஒரு புறமிருக்க, த ஹெரால்ட் சம்பந்தப்பட அல்லாஹ் வழக்கிற்கும் விஷ்ணுவுக்கும் என்ன சம்பந்தம்?
நீதிபதி முகமட் அபண்டியின் இக்கூற்று அவரது அறியாமையாக இருக்கலாம் என்று தட்டிக்கழித்து விட முடியாது. மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதற்கு ஏதோ ஓர் அடிப்படை, ஓர் உள்நோக்கம் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் இந்நாட்டின் இன்றையச் சூழ்நிலையில் எழுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இந்நாட்டு இந்துக்களுக்கு இவர் ஒரு கடவுளை தேர்வு செய்துள்ளாரா? நீதிபதி முகமட் அபண்டியின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் எவ்வித மாற்றமும் இன்றி, குறிப்பாக விஷ்ணு இந்து வேதங்களின் கடவுள் என்று கூறியிருப்பதில் எவ்வித மாற்றமும் இன்றி, நிலைநிறுத்தப்பட்டால், எதிர்காலத்தில் இந்து கோயில்கள் உடைக்கப்படுவதற்கு இது ஒரு வலுவான ஆயுதமாக்கப்படலாம் என்ற சந்தேகம் தோன்றுவதற்கு இடமுண்டு.
இந்நாட்டில் பல்வேறு இந்து தெய்வங்களுக்கு கோயில்கள் இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இத்தீர்ப்பின் அடிப்படையில் விஷ்ணுதான் இந்துக்களின் கடவுள். இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆகவே இதர இந்து தெய்வங்களுக்கான கோயில்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று கூறுவதற்கு வாழை மரமும் தோரணங்களும் கட்ட அனுமதி மறுக்கும் அரசு அதிகாரிகள் தயங்க மாட்டார்கள்.
இந்து மதத்தை இழிவுபடுத்தியவரை பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தியவர்கள் இந்நாட்டு ஆளுங்கட்சியினர் என்பதை மறந்து விடக் கூடாது.
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்ய முயற்சிப்பதில் பலன் இல்லை. ஆகவே, சம்பந்தப்பட்டவர்கள் இந்தத் தீர்ப்பில் இந்து வேதங்களின் கடவுளாக கூறப்பட்டுள்ள விஷ்ணுவின் நியமனத்தை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, இந்தத் தீர்ப்பில் நீதிபதி அப்துல் அசிஸ் 1986 ஆம் ஆண்டில் அமைச்சரவை அல்லாஹ் என்ற சொல் பயன்படுத்துவதற்கு தடை விதித்ததை அவரது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், 2011 ஆம் ஆண்டில், அமைச்சரவை இச்சொல் பயன்படுத்துவதை அனுமதிக்கும் முடிவு எடுத்து அதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைக் கண்டு கொள்ளவில்லை.
பிரதமர் நஜிப் ரசாக்கின் தலைமையிலான அமைச்சரவை எடுத்த இம்முடிவு இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்கான ஓர் ஆக்கரமான முடிவு. பத்து அம்சங்கள் அடங்கிய இம்முடிவை கிறிஸ்துவ சம்மேளனத்திற்கு அறிவித்தவர் பிரதமர் நஜிப் ரசாக்.
இந்த பத்து அம்சங்கள் மிக முக்கியமானவை. அமைச்சரவை எடுத்த முடிவு. இதனை ஏன் அரசாங்கம் அமல்படுத்தவில்லை. ஏன் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை?
அமைச்சரவை 2011 ஆம் ஆண்டில் எடுத்த இந்த பத்து அம்ச முடிவு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, தேர்தலில் கிறிஸ்துவ சமூகத்தினரின் வாக்குகளைக் கவர்வதற்காக எடுக்கப்பட்டதா என்ற கேள்வி நியாயமானதே. நியாயமான ஒன்றை ஏன் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வியும் நியாயமானதே!
பிரதமர் நஜிப்பின் அமைச்சரவை 2011 ஆண்டில் ஒப்புதல் அளித்து கிறிஸ்துவ சம்மேளனத்திடம் அளிக்கப்பட்ட இந்த பத்து அம்சங்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும், அவை வாசகர்களின் கவனத்திற்கு மீண்டும் முழுமையாக வெளியிடப்படுகிறது.
பிரதமர் நஜிப் அறிவித்த பத்து அம்சங்கள்
“1. பகசா மலேசியா/இந்தோனேசியா உட்பட அனைத்து மொழிகளிலும் உள்ள பைபிள்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யலாம்.
2. இந்த பைபிள்களை தீவகற்ப மலேசியா, சாபா மற்றும் சரவாக்கிலும் கூட அச்சிடலாம். இது ஒரு புதிய முன்னேற்றம். இதனை கிறிஸ்துவ தரப்பினர்கள் வரவேற்க வேண்டும்.
3. சாபா மற்றும் சரவாக்கின் இபான், கடஸான் டூசுன் மற்றும் லுன் பாவாங் போன்ற பூர்வீக மொழிகளிலுள்ள பைபிள்களை உள்ளூரில் அச்சிடலாம், இறக்குமதியும் செய்யலாம்.
4. சாபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் பெரும் கிறிஸ்துவ சமூகம் இருப்பதை அங்கீகரிக்கும் வகையில் அனைத்து மொழிகளிலும் உள்ள, மலேசியா/இந்தோனேசியா மற்றும் பூர்வீக மொழிகள் உட்பட, பைபிள்கள் இறக்குமதி செய்வதற்கோ, உள்ளூரில் அச்சிடுவதற்கோ எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. எவ்வித முத்திரை அல்லது தொடர் எண் இடுவதற்கான தேவையும் இல்லை.
5. பெரிதான முஸ்லிம் சமூகத்தின் நலன்களைக் கவனத்தில் கொண்டு, மலேசிய தீவகற்பத்தில், மலாய்/இந்தோனேசிய மொழி பைபிள்கள் “கிறிஸ்துவ பதிப்பு” என்ற சொற்களையும், சிலுவை சின்னத்தையும் முகப்பட்டையில் கண்டிப்பாக அச்சிட்டிருக்க வேண்டும்.
6. ஒரே மலேசியா கொள்கைக்கு ஏற்பவும், அதிகமான மக்கள் சாபா, சரவாக் மற்றும் தீவகற்ப மலேசியாவுக்கிடையில் பயணிப்பதைக் கவனத்தில் கொண்டும், அவ்வாறான பயணத்தின் போது மக்கள் தங்களோடு கொண்டு வரும் பைபிள்கள் மற்றும் கிறிஸ்துவ பொருள்கள் மீது தடைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது.
7. பைபிள் பற்றிய அமைச்சரவையின் இந்த முடிவு முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் (கேஎஸ்யு) ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அமல்படுத்தத் தவறும் அதிகாரிள் பொது உத்தரவுகள் விதிகளின் கீழ் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர். சம்பந்தப்பட அரசு பணியாளர்கள் இந்த உத்தரவை நன்கு புரிந்து கொண்டு அதனை முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகள், சட்டத்துறை தலைவர் உட்பட, விசாலமான விளக்கம் அளிப்பார்கள் (இணப்பு 1 ஐ காண்க).
8. கூச்சிங், கிடெயோனில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 30,000 பைபிள்களை அவற்றின் இறக்குமதியாளர் எவ்விதக் கட்டணமுமின்றி பெற்றுக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட தரப்லினர்களுக்கு ஏற்பட்ட செலவுகள் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதே போன்ற முன்வைப்பு போர்ட் கிள்ளானில் 5,100 பைபிள்களை இறக்குமதி செய்தவருக்கும் கிடைக்கவிருக்கிறது. இதனை கடந்த வாரம் மலேசிய பைபிள் மன்றம் (பிஎஸ்எம்) பெற்றுக்கொண்டு விட்டது.
9. கிறிஸ்துவ விவகாரங்களுக்கு அப்பால், சமயங்களுக்கிடையிலான விவகாரங்கள் மீது கவனம் செலுத்தவும், அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப சமய விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கும் கிறிஸ்துவ மற்றும் இதர பல்வேறு சமயங்களுடன் செயல்பட அரசாங்கம் கொண்டுள்ள ஈடுபாட்டை அது மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது. இப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு நாட்டிலுள்ள இதர சம்பந்தப்பட்ட சட்டங்கள் கவனத்தில் கொள்ளப்படும். பிரதமர் என்ற எனது தகுதியில் இதற்கு ஒரு முன்னேற்றகரமான வழி குறித்து விவாதிக்க விரைவில் நான் மலேசிய கிறிஸ்துவ சம்மேளனத்தின் (சிஎப்எம்) பிரதிநிதிகளைச் சந்திப்பேன்.
10. எனது அமைச்சரவையின் கிறிஸ்துவ அமைச்சர்கள் ஒரு முறையான அடிப்படையில் பல்வேறு கிறிஸ்துவ தரப்பினர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதோடு, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகளோடும் என்னோடும் பணியாற்றுவார்கள். இந்நாட்டின் தலைவர் என்ற முறையில், நாட்டின் அனைத்து சமயப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அமைதியையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கு நமது சமுதாயத்தில் காணப்படும் பிளவுகளைச் சரிக்கட்டுவதற்கான தேவை இருக்கிறது. இதனை அடைவதற்கு மரியாதை, சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு மற்றும் நல்லிணக்கம் ஆகியவையே மிகச் சிறந்த வழி என நான் நம்புகிறேன்.”
மதுரை வீரனை யாருயா கும்புட சொன்னது. கடவுள வணங்கவேண்டியதுதனே. சரியான போதனை இல்லாதனால தான் காரணம்.
ஐயா ஞானி, நீங்க சொல்றது நல்லாத்தான் இருக்கு. ஆனால் ஆலயத்திலே முடியாதுயா. பூசாரி கொவிச்சுக்குவாறு .
இந்துக்களிடம் தடம் புரண்டது பண்பாடு மட்டுமல்ல சமயமும் சேர்த்துதான். பண்பாடு தடம் புரள்வதற்கு முதற்கானமே சமயம் தடம் புரண்டதுதான். எது உண்மை நெறியோ அதை மறைத்து உண்மைக்குப் புறம்பான நெறியை உண்மையென நம்மை நம்ப வைத்த ஆரியன், அவர்களைப் பின் பற்றி வந்த பிராமண மக்களின் சுயநலமே காரணம். “இந்து சமயம் தடம் புரண்டது யார் சுயநலத்துக்காக?” என்று கேள்வி கேட்டு ஒரு கட்டுரையை யாராவது ஒரு சமய அறிஞர் எழுதி வலையேற்றினால் நம் கருத்து பரிமாற்றத்துக்கு ஏதுவாக இருக்கும். திருவருள் விரைவில் கிட்டட்டும். நான் ஒரு எழுத்தாளனும் இல்லை சமய அறிஞரும் அல்ல. மாறாக பகுதி நேர கருத்தாளன் (part time commentator). உங்களில் ஒருவன் பின், நான் எங்கே கட்டுரை எழுதுவது. அதெல்லாம் முடியாது அப்பனே!
anti guruji அவர்களுக்கு. கிறிஸ்துவ மதத்தினரும் இஸ்லாமியர்களும் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறிர்கள். எந்த ஆன்மீக இலக்கியத்திலும் ஹிந்து என்ற வார்த்தையை பார்திருக்கமாட்டீர்கல். காரணம் மற்ற மதங்களை போல் இது யாராலும் கொண்டு வரப்படவில்லை. இந்த சனாதன தர்மம் எல்லாமனிதர்கலுக்கும் இறைவனால் கொடுக்கப்பட்டது. இந்த உலகம் எப்பொழுது தோன்றியதோ அப்போதே இறைவன் வேதம், உபநிஷத் போன்றவைகளை நமக்கு கொடுத்துவிட்டான். குரு சிஷ்யன் பரம்பரையில் இவைகள் வந்தன.ஆனால் நாளடைவில், உலகம் பல முனேற்றம் அடைந்ததால் இந்த தொடர்ச்சி விட்டுப்பட்டுப்போனது. சனாதான தர்மத்தை ஒரு புறம் ஒதுக்கிவிட்டார்கள். அதன் விளைவாக நாமும் அதை ஒதுக்கி வைத்துவிட்டோம். இதனால் தர்மம் அழிந்து விட்டது. ஒவ்வொரு முறையும் தர்மம் அழியும் போது இறைவன் மீண்டும் அவதரித்து அந்த தர்மத்தை நிலைநாட்டுவான் (பகவத் கீதை அத்தியாயம் 4, சுலோகம் 7,8.). வேதம், உபநிடதம், பகவத் கீதை ஆகிய இவைகள்தான் இந்தியத் தத்துவ (விசாரணையில்) சிந்தனையின் ஆணிவேர்கள். இம்முன்றையும் இணைத்து “பிரஸ்தான த்ரயம்”, “அதிகாரப்பூர்வமான மூன்று இலக்கியம்” என அழைக்கின்றனர். தொடரும்.
இந்து சமய வேதத்தை இறைவனே அருளியது உன்மை எனில் அவ்வேதத்திற்கு பொருள் கூற எம்பெருமான் சிவபெருமானே வல்லவன். அதனை உணர்த்தவே திருவிளையாடல் புராணத்தில் 16-வது படலமாக ‘வேதத்திற்கு பொருளருளிச் செய்த படலம்” உள்ளது. ஆனால் ஆரியர்கள் அன்றும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை இன்றும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் (ego problem). நம் சிற்றறிவிர்க்கு எட்டாத வேதத்தை, நம் சிற்றறிவு கொண்டு கருத்து கூறுதல் அறியாமையாகும். ஆகவே வேதத்தைக் குறைக் கூறாமல், அதை தன் கையில் எடுத்துக் கொண்டு தன் சுயநலத்துக்காக, வேதத்திற்குப் புறம்பான அறிவை நமக்கு அறிவு புகட்டும் அஞ்ஞான பிராமணர்களை குறைகூருங்கள் தகும். நான் உங்களுடன் இருப்பேன் ஜே.வி.பி. அது இந்நாட்டு இந்துக்களுக்கு தீபாவளி பரிசாக அமையட்டும்.
மனிதாபிமானம் எல்லா சமயத்துக்கும் உரியது. எவ்வொரு சமயமும் மனிதாபிமானத்தை விட்டு அகல இயலாது. காரணம் அது உலக பொது நியதி (universal value). சைவ சமயம் அந்த மனிதாபிமானத்துக்கும் அப்பால் கடந்து “உயிர்கள்” எல்லாம் சமம் என்று உணர்த்துகின்றது. பதி (இறை), பசு (உயிர்), பாசம் (உலகவியல்) என பகுத்து அதில் எல்லா உயிர்களையும் (மனிதன், விலங்கு, பூச்சி, பறவை, ஊர்வன, நீந்துவன, தாவரங்கள் என்று பாகுபடுத்தாமல்) சம நிலை கொடுத்து காக்க வேண்டுகின்றது. ஆதலாலே, அன்பு என்னும் இலக்கனத்துக்கு “அன்பே சிவம்” என்று உரைக்கின்றது சிவ நெறி. இங்கே பார்பனன், பறையன் என்ற சாதி வேற்றுமைக்கே இடமில்லை. இங்கே யாவரும் சிவத்தை பூஜிக்கலாம், பூசாரி ஆகலாம், தொட்டு வணங்கலாம். ஆனால், இங்கேயும் ஒரு சில ஆதினங்களிடம் இருக்கும் ஆணவ மறைப்பினால் சாதியம் தலை தூக்கி நின்றது. அதனாலேயே, சைவம் அதன் பொற்காலத்தில் இருந்து சரிந்தது. அதை மீட்டெடுக்க தமிழர்கள் முன் வரவேண்டும். மாறாக தமிழர்கள் அவர்தம் சிவ நெறி அறியாது, சமயத்தையும், இறைவனையும் நிந்திப்பது எவ்வகையில் நியாயம் ஆகும்?
கல் தோன்ற காலத்தில், முன் தோன்றிய இனம், தமிழர் இனம் என்று சொல்வார்கள். அதையே இங்கு நான் வாத பொருளாக பயன்பட்டுதுகிறேன்.. கல்லே தோன்றாத காலத்தில் தமிழன் தோன்றினான் என்றால்..அப்புறம் எப்படி கற்களை கொண்டு சிலை வடித்திருக்க முடியும்? ஆகா கல் தோன்றா காலத்தில் தமிழன் தோன்றினான் என்பது, ஒரு அலங்கார வாசகம். ஆனால் உலகில், முதலில் தோன்றிய இனம் தமிழர் இனம் என்பது உண்மையே.. அப்படி முதலில் தோன்றிய இனத்தை, ஏன், மதம் என்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க வேணும்? தமிழர் என்பவர் மதங்களுக்கு அப்பாற் பட்டவர்.. ஹிந்து மதம் என்பது, ஹிந்தி மதம்.. தமிழ் மதம் என்று ஒன்று இருந்தால், அது தமிழரின் பாரம்பரிய மதம் என்று சொல்ல முடியும்.. ஆகா ஹிந்து மதம் மட்டுமே தமிழர் மதம் என்று சொல்வது தவறு.. ஆனால் தமிழர்கள் வணங்கிய சூரியன், சூரியனின் அவதாரம் முருகன், எல்லோரும், ஹிந்து மதத்தோடு பிணைக்க பட்டு இருக்கிறார்கள். மதம் மாறுவதும், தனது மதத்தை மற்றவரரிடம் திணிப்பதும், அறிவுடை செயல் ஆகாது.. முட்டாள் தனத்தை மற்றவர் செய்தால் நாமும் செய்ய வேண்டும் என்றில்லை..
ஆனால் பல வருடங்களுக்கு முன், இந்தியாவில், சாதி கொடுமைகள் அதிகமாகவே இருந்திருக்கிறது. தங்களின் பிறப்பை சொல்லி தூற்றும் இடத்திலிருந்து தங்களை தற்காத்து கொள்ளவே, நிறையே பேர் மதம் மாறி இருக்கிறார்கள் என்பது உண்மையே.. அதை தவிர்த்து, சரியான நிர்வாக திறன் இல்லாமை, எல்லோரையும் ஒரே கட்டுகோப்பாய் கொண்டுவர முடியாமையும் காரணம். இதெல்லாம் மற்றவர்களின் தவறுகள் கிடையாது. நமது சொந்த தவறே ஆகும். அப்படி பட்ட சூழ்நிலையில் மதம் மாறி போனவர்களை, இன்னும் அந்நிய படுத்தி கொண்டிருந்தாள் எப்படி?
குசேலா… தெரிந்தால் எழுதும். தெரியவில்லை என்றால் தெரிந்துகொண்டு பேசும். யாரோ சமய பலவீனத்தை மறைப்பதற்காகப் பேசியதையோ எழுதியதையோ ஒப்புவிக்காதீர். கருத்தாளர்களைக் குழப்பாதீர். பெரியார் சொன்னால் கேட்கமாட்டோம். அவர் கடவுள் கொள்கையை எதிர்த்தவர் என்போம். ஆனால் ஒரு பழுத்த சமய ஞானி சொன்னால் இனிக்குமென்றல் , புத்தகத்தின் தலைப்பையும் , பெயரையும் தருகிறேன். படித்துப்பார்த்துவிட்டு பிறகு பகரும் . எந்தக் கட்டத்திலும் இந்துமதம் சாதியைப்பற்றி பேசியதா? இல்லையா? என்பதை! புத்தகத் தலைப்பு : இந்துமதம் எங்கே போகிறது? ஆசிரியர்: அக்கினிஹோத்ரம் ராமனுஜ தாத்தாச்சாரியார்.
அய்யா குசேலன் அவர்களே.. நான் பேசி கொண்டு இருப்பது, எல்லா மனிதர்க்கும் பொதுவான விசயங்களை.. எல்லா மதத்தினரும் கடவுள் என்று நினைப்பவர் ஒன்றுதான் என்று சொல்கிறேன். நீங்க ஒரு ஹிந்து வாக பேசி கொண்டு இருக்கிறிர்கள். ஹிந்து மதத்தில் சொல்ல பட்ட விசயங்களை இங்கே சொல்லி கொண்டு இருக்கிறிர்கள். இது எல்லா மதத்தினருக்கும் புரியுமா? அன்பு மொழி மிருகங்களுக்கு கூட புரியும் அய்யா.. இஸ்லாமியரும் கிறிஸ்தவரும், கட்டு கோப்பாக இருக்கின்றனர் என்பது நாடறிந்த உண்மை. உண்மையை ஏற்று கொள்ள பக்குவம் வேண்டும். அவர்கள் வகுத்த பதில் பயணம் செய்கின்றனர். அனால் நம் ஹிந்து மதத்தில், குருஜிக்கள் போடும் ஆட்டமும், அவர்களின் கூஜா தூக்கிகள் போடும் ஆட்டமும், தாங்க முடியவில்லை. இப்போ மாரியாத்த, முருகன், விநாயகன் எல்லாம் மலை ஏரிட்டங்க.. புது புது குருஜிக்கள் வந்துட்டாங்க. நமக்கு பின்னால் வந்த மதம் அவர்கள் வணங்க வேண்டியவர்கள் யார் என்று தெளிவகா இருக்கின்றனர்.. அனால் ஹிந்துக்கள் இன்னும் தடுமாறி கொண்டு இருக்கிறோம். நித்தம் நித்தம் நாம் வணகுபவர்களை மாற்றி கொள்கிறோம்..
தேனீ அவர்களே நம் மதத்தில் சில முரண்பாடுகளை தவிர்க்க முடிவதில்லை.உண்மையிலேயே தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்தான் கேட்கிறேன். சைவம் என்பது உயிர் கொல்லாமை ஆகும். சிவன் சைவ கடவுள் என்று சொல்கிறோம், ஆனால் அவர் அமர்ந்திருப்பது புலி தோலின் மீது. அணிந்திருப்பதும் புலி தோலே.. அந்த புலியை கொன்றது யார். அவர் ஒரு வேட்டை இனத்தை சேர்ந்தவரா? இதற்க்கு சரியான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
குருஜி உங்களுக்கு என்னய்யா பிரச்சனை? மென்மேலும் சந்தேகங்களை எடுத்துக் கொண்டு வந்து கோக்கு மாக்கா என்னிடம் கேள்விகள் கேட்கின்றீர்கள். இதனால் என் தூக்கமும் கெட்டுத் தொலைந்தது. இப்பகுதியில் கருத்து எழுத தொடங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூங்க முடியாமல் என் மனைவிக்குத் தெரியாமல் கீழே இறங்கி வந்து மீண்டும் கணினி முன் அமர்ந்து அதிகாலை மணி 4.06-க்கு உங்களுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கின்றே. என்னை இப்படி கேள்வி கேட்டு அல்லாட வைப்பதில் உங்ககளுக்கு என்ன நப்பாசையோ தெரியவில்லை போங்க. தொடரும்.
சிவபெருமான் நுண்ணிய நிலையில் இருந்து அருளாற்றுபவர். அவருக்கு தூல உடம்பு இல்லை. பின்னர் எப்படி அவர் புலியைக் கொன்று தோலை உரித்து ஆடையாகப் போட்டுக் கொண்டும் அந்த புலித் தோல் மீதும் அமர்ந்துக் கொண்டும் இருப்பார்? ஜோகூர் பாரு கண்ணாடி கோவிலில் வேண்டுமானால் இப்படி ஒரு அறிவிலி புலியின் தோல் மீது உட்கார்ந்துக் கொண்டு பாமர தமிழர்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருப்பதை காணலாம். தொடரும்.
சிவபெருமான் புலித் தோலை உடுத்திக் கொண்டு அத்தோளின் மீது அமர்ந்துக் கொண்டும் இருப்பதாக நீங்கள் பார்க்கும் வர்ணப் படமெல்லாம் ஓர் ஓவியக் கலைஞனுடைய கற்பனையே அன்றி வேறு யாதுமில்லை. நம்மடைய கற்பனை இவ்வாறு போனதர்க்குக் காரணம் திருவிளையாடல் புராணமே! இப்புராணத்தில், சமணர்கள் பெரிய யாக வேள்வி நடத்தி பொய்யான பலமிக்க யானையையும், கடுஞ்சினம் கொண்ட புலி போன்ற மிருகங்களை சிவனடியார்களை நோக்கி ஏவிடும் பொழுது அவர்களைக் காப்பாற்ற வேண்டி சிவபெருமான் அந்த பலமிக்க யானையைக் கொன்று அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்துக் கொண்டதாகவும், கடுஞ்சினங் கொண்ட புலியின் தோலை உரித்து ஆடையாக அணிந்துக் கொண்டதாகவும் புராணம் கூறும். பாமர மக்களுக்கு சில அறிய கருத்துக்களைக் கொண்டு சேர்க்க வேண்டுமாயின் அவற்றை சுவாரசியமிக்க சில கதைகளைப் புனைந்து சொன்னால் தான் அவர்கள் மனதில் நிற்கும் என்பது அக்கால நியதி. இதற்க்கு அந்நாளில் அச்செழுத்து இல்லாததே காரணம். இவ்வாறே தமிழர்கள் எம்பெருமான் இப்படிதான் இருப்பார் என்று தம்மனதுக்குள்ளேயே கற்பனை செய்துக் கொண்டு அவரை நினைத்து வழிபாடும் நிலை உருவாகியது. இந்த பாமர மக்களை விட ஒரு படி மேல் சென்றவர்கள், சிவனை அருஉருவமாகி இருக்கும் இல்லிங்கத்தை நோக்கி வணங்குவார்கள். தொடரும்.
அப்படியானால், மேற்கூறிய திருவிளையாடல் புராணத்தில் கூற வந்த அறிய கருத்துதான் என்ன? சிவபெருமானை வழிபடுவோருக்கு, அவர்களுடைய அறிவை மறைத்து நிற்கும் ஆணவ மலத்தை நீக்குவார் {மேல் தோலை உரித்து உட்பொருளை (இறைவனை / மெய்யறிவைக்) காண்பிப்பார்} என்பதே அதன் பொருள். நம்மவர்கள் எப்பொழுதும் வெளிப் பொருளை (face value) மட்டுமே எடுத்துக் கொண்டு உட்பொருளை (substance) கை விட்டு விடுவார்கள். ஆதலால்தான், மெய்பொருளை அறியாத நம் மக்கள் இப்பூவுலகத்தில் தொடர்ந்து சிற்றின்பத் துன்பங்களில் உழன்று மயங்குகின்றார்கள். இவர்களுக்கு திருவருளின் வெளிச்சம் சற்றே கிட்டினால் ஆணவ மலம் மெல்லவே விலகுமே!
ஜே.வி.பி., “இந்து மதம் எங்கே போகின்றது” என்ற புத்தகத்தை நேற்றே என் கருத்தில் குறிப்பிட வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் நேரம் கடந்து சென்று கொண்டிருந்தலால் கணினியை அடைத்து விட்டுச் சென்றேன். அதற்குள் நீங்கள் முந்திக் கொண்டீர்கள். நன்றி.
திருவிளையாடல் புராணத்தில் 16-வது படலமாக ‘வேதத்திற்கு பொருளருளிச் செய்த படலம்” உள்ளது. ஆனால் ஆரியர்கள் அன்றும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை இன்றும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று யாம் கருத்துக் கூறியதற்கும் இப்பகுதியில் உள்ள கட்டுரை தலைப்புக்கும் சம்பந்தம் உள்ளது. வைணவ சமயத்தை பின்பற்றுபவர்களான ஆரியரும், அவர்களை பின் பற்றி வந்த பிராமணர்களும் (தமிழக ஆதி அந்தணர்கள் / தீட்சிதர்களை விடுத்து) விஷ்ணுவையே முழு முதற்கடவுளாக போற்றினர். ஆகவே, எம் கடவுள் அளித்த வேதத்திற்கு உம் கடவுள் (சிவன்) பொருளருளிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன என்ற ஆணவச் செருக்கு ஏற்பட்டதாலே, ஆரியர்களோ, வைணவ பிராமணர்களோ அன்றும் சரி இன்றும் சரி தமிழர்களின் சைவ சமயத்தை ஏற்கவில்லை. ஏற்கனவே, “சுயமரியாதை இயக்கம்” கேட்ட கேள்விக்குப் பதில், நீங்கள் தமிழரானால், உங்கள் முழுமுதற்கடவுள் சிவபெருமானே. திருநீலகண்டம்.
இதற்கு மேல் தூங்கி சாதிக்கப் போவது ஒன்றுமில்லை. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு சீக்கிரமே வேலைக்குச் செல்வதுதான் சாலச் சிறப்பு. குருஜி நன்றாக தூங்கி எழுந்திருங்கள். நம்மவர்களின் சமய சந்தேகங்களைப் போக்க இன்னும் அதிகமாக கோக்கு மாக்கான கேள்விகளை கேளுங்கள். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
ஐயா குசேலன்! புசாரி,புச்ச்சண்டிகளுக்கு எல்லாம் பயந்து வாழ முடியாது.அவன் உடலிலும் ஜீவன்(சிவன்)தான் ஆட்சி செய்கிறான்,என் உடலிலும் அதே சிவன்தான் ஆட்சி செய்கிறான்,அதுதான் பரம்பொருள் வழங்கிய ”அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது” இந்த மானிட பிறவி.
குசேலன் எந்த தைரியத்தில் ஹிந்து மதத்தில் ஜாதி இல்லை என்று சொல்கிறார் என்று புரியவில்லை. வேதங்கள்தான் ஜாதிகளை உருவாக்கின. பிரம்மனின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன் ( பூசாரிகள்), தோளில் பிறந்தவன் சத்ரியன் (அரச வம்சம்), தொப்புளில் பிறந்தவன் வைசியன் ( வாணிபம் செய்யும் பணக்காரர்கள்) சுண்டு விரலில் பிறந்தவன் சூத்திரன் (கீழ் ஜாதி) என்று ஹிந்து மதமே ஜாதியின் ஆரம்பம். பகவத் கீதையிலும், இராமயணத்திலும், பரவலாகவே ஜாதியை பற்றி உபதேசம் செய்ய படுகிறது. இதில் சூத்திரர்களுக்கு கடவுளின் இருப்பிடமான கோவிலினுள் சென்று வணங்க தடை. காரணம் அவர்கள் கீழ் ஜாதி. ஆனால் இவர்கள் மதம் மாறிவிட்டால் மசூதிக்குள் சென்று வழிபடவும், தேவலயதிர்க்குள் சென்று வணங்கவும் தடை இல்லை. மனிதர்கள் எல்லாம் சமமாக நடத்த பட்டனர். பிறகு ஏன் மதம் மாற மாட்டார்கள்? இது முற்றிலும் யாருடைய தவறு??
ஆண்டி, நீங்கள் சொல்லுவது வேண்டுமானால் உலகக் கிறிஸ்துவர்களுக்கும் உலக முஸ்லிம்களுக்கும் ஒரு வேலை பொருந்தலாம். தமிழனுக்கு அது பொருந்தாது. அவன் கிறிஸ்துவனாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் தனது ஜாதியை விட்டுக் கொடுக்க மாட்டான்! உற்று நோக்கினால் உண்மைப் புரியும்!
தேனீ… நானும் கருத்தேற்றங்களின் நேரத்தை கவனித்திருக்கிறேன். நீங்களும் அண்டிகுருஜியும்தான் நடு நிசியிலும் அதிகாலையிலும் கருத்தேற்றங்களைச் செய்கிறீர்கள். கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது என்பது ஜோலியாக இருக்க வேண்டும். மனத்தைச் செம்மைப்படுத்தான் மதங்கள் வந்தன. மனமது செம்மையானால் மந்திரமும், மதங்களுமே தேவைப்படாது. மனிதனின் மனத்தை செம்மையாக்கி மான்புற வாழவைக்க வந்த மதங்கள் சந்தர்ப்பவாதிகளின் மற்றும் மத அதிகாரவர்க்கங்களிடம் வெகுகாலத்திற்கு முன்பே சிக்கிக்கொண்டது; பணம்,அந்தஸ்து,அதிகாரம் போன்றவற்றை தங்கள் கைவசம் வைத்துக்கொள்ள அவர்கள் வகுத்த சட்டங்களும்,புராணங்களும், இதிகாசங்களும் இன்னும் பிறவும் மதங்களின் நோக்கத்தை சீரழித்துவட்டன. நல்ல சிந்தனையாளர்களின் கண்களுக்கு இன்றைய மதங்களின் நிலை அருவருப்பாகிப்போனது. வழிதவறின மதங்களைச் சரிபடுத்த முயன்ற நபர்கள் சொல்லொன்னா துயரங்களுக்கும் சோதனைகளுக்கும் ஆளானார்கள்.புத்தருக்கும்,இயேசுவுக்கும், சங்கரனுக்கும் என்ன நடந்தது? சைவசமயத்தவர்கள் ஆயிரக்கணக்கான சமணர்களைக் கழுவேற்றி கொலை செய்துள்ளனரே! உண்மையைச் சொன்ன இயேசுவை கொடூரமாக கொலைசெய்தனரே! எல்லா மதங்களிலும் இந்தக் கொடுமைகளைக் காணலாம். மனத்தைச் செம்மையாக்கி இந்த பிரபஞ்ச ஆற்றலோடு எப்படி ஐக்கியம்கொண்டு மனிதகுலம் உன்னத நிலைக்கு உயரலாம்; உயர்தலாம் என்பதன் நோக்கத்தைவிட்டு மதங்கள் வழுவியும் நழுவியும் சென்றுவிட்ட நிலையில் , செம்மையுறவேண்டிய மனித மனங்கள் தடமிழந்து நோய்பிடித்துக் கிடக்கின்றன.மனிதனால் பாவத்தைவிட்டு விலகிட இயலவில்லை.மனதை எப்படி நன்மையானதில் செலுத்தி வெற்றிபெறுவது எனும் பாடம் தெரியவில்லை. தியானம்,யோகா,குண்டலினி, மூச்சுப்பயிற்சி அப்படி இப்படியென்று பெரியவர்களையும் ஆர்வமுள்ள இளந்தலைமுறைகளையும் ஏமாற்றிட நிறைய போலி குருஜிக்கள் ( நமது நண்பர் அண்டி குருஜி அல்ல) வெளியாகி உள்ளனர். மதவெறி பிடித்த மனிதன் எனும் மரங்களை, உணர்வே இல்லாத அரசியல் தீவிரவாதிகளை உண்டாக்கி இருக்கிறார்கள். மனிதர்கள் பரந்த மனம் உள்ளவர்களாகி , எல்லா நல்ல மலர்களிலும் உள்ள தேனினை சேகரித்து அனுபவிக்கும் தேனியைப் போல (தும்பி) மனித இனமும் எல்லா மதங்களிலும்,எல்லா போதனைகளிலும், எல்லா நூல்களிலும் உள்ள நம்மைச் செம்மையாக்கும் கருத்துகளை உண்மைகளை ஏற்றுக்கோண்டு கபடமற்றவர்களாக நாம் வாழ்வதில்தான் வெற்றிகரமான ,ஆராவாரமற்ற வெற்றிகரமான வாழ்க்கை உள்ளது. ஆகவே அண்டி குருஜியும் , தேனியும் தூக்கத்தை இழந்து உடலாரோக்கியத்தைக் கெடுத்து மன உளைச்சலுக்கு ஆளாகித்தான் இந்தக் கருத்தேற்றங்களைச் செய்யவேண்டும் எனும் கட்டாயம் நம் யாருக்குமே வேண்டாமே! குறிப்பாக தேனி அவர்களே… நீங்கள் ” என் மணைவிக்குத்தெரியாமல் கீழே இறங்கி வந்து… மன உளைச்சல்… ” என்று எழுதியது எனக்குப் பெரிய மனபாரத்தை உண்டாக்கிவிட்டது. ஜோலியாக எதையும் செய்யுங்கள். நாம் மகிழ்ச்சியாகவே… வருத்திக்கொள்ளாமலே கருத்துகளைப் பரிமாரிக்கொள்ளலாமே!
ஜே.வி.பி., தங்களின் கருத்து அருமை. உலகிலேயே இன்று அதிகமாக கெட்டு சீரழிந்து சீல் வடிந்துக் கொண்டிருப்பது சமயமே. அரசியலை விட அதிகமாக கெட்டுள்ளது சமயமே. சமயம் என்பது வியாபாரப் பொருளாகிப் போனதால் எப்படி எப்படி சமய விளம்பர வியாபாரம் செய்யலாம் என்று பலர் சிந்தித்து, திட்டமிட்டு செயலில் இறங்கி விட்டனர். இதில் கோவில் நிருவாகங்கள், அர்ச்சகர்கள், மந்திர, தந்திர குருஜிக்கள், போலி குருஜிக்கள், மண்டையில் ஒன்றுமே இல்லாத குருஜிக்கள், புதுப் புது குரு வழிபாட்டு முறைகள், சோதிடர்கள், என் கணித சோதிடர்கள், குறி சொல்லும் தற்குறிகள் என்று என்னற்ற சேற்றுப் படலங்கள் சமயத்தின் மீது படிந்து விட்டது என்று தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. தங்களைப் போன்ற சிந்தனையாளர்களின் கருத்துக்கள் சமுதாயத்துக்கும், சமயத்துக்கும் அதிகமே வேண்டியுள்ளது. இதில் உண்மையான யோக நெறியில் பயணிக்கும் (Tan Sri Guruji அல்ல) நெறியாளர்களை குறைகூறுதல் கூடாது. இதில் உண்மையான யோக நெறியாளர் யார் என்று கண்டு பிடிப்பதுதான் மிகவும் கடினம். ஞானி இப்பகுதியில் ஒரு சில யோக நெறிகளை எடுத்து உரைத்தார். ஆனால், அந்த ஞானி யார் என்று தெரியவில்லை. எது எப்படி இருப்பினும் தங்களைப் போன்ற சிந்தனையாளர்கள் சமய நெறியை வெறுப்பது அறிவுடைமையாகாது. மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா? சேற்றுப் படலம் படிந்த சமயத்தில் தங்களைத் திணித்துக் கொள்ளாமல், செம்மையான சிவ நெறி தங்களைப் போன்றவர்களை அரவணைத்துச் செல்ல தயாராக இந்நாட்டில் இருக்கும் பொழுது தயங்காதீர்கள். சைவ சமயத்தைப் பின் பற்றுங்கள். குருஜி சொன்ன மாதிரி சைவ சமயம் என்பது “கொல்லாமை சமயம்” என்ற குறு வட்டத்திற்கு உடையது அல்ல. மாறாக இறைவன் யார், அவரின் இலக்கணம் யாது, உயிர் என்பது யாது அதன் இலக்கணம் என்ன, இந்த இரண்டுக்கும் உலகம் என்னும் பாசக் கட்டு ஏன் வந்தது என்று சிந்திக்க உங்களுக்கு வழி வகுக்கும்.
“சைவசமயத்தவர்கள் ஆயிரக்கணக்கான சமணர்களைக் கழுவேற்றி கொலை செய்துள்ளனரே!” என்பது தவறான கருத்து என்பதை தாங்கள் அறிய வேண்டும் ஜே.வி.பி. அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் தோற்ற சமணர்கள் தங்களின் சத்தியத்தை மீறாமல் கழுவேறியதை திருஞான சம்பந்தர் தடுக்காததிர்க்கு 2 காரணங்கள் உண்டு. 1) சமணர்களைத் தடுத்திருந்தால், அவர்கள் சத்தியத்தை மீறியவர்கள் என்ற பழி சொல்லுக்கு ஆளாகி அவர்தம் சமயத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இழந்து சமண மதம் அழிந்திருக்கும். அதை திருஞான சம்பந்தர் விரும்பவில்லை என்பதே உண்மை. 2) சத்தியத்தை ஏற்றுக் கொண்டே வாதத்தில் இறங்கியதால், பாண்டிய மன்னனின் தீர்ப்புக்கு ஏற்ப சமணர்கள் தாங்களாகவே கழுவேறினர். சைவம் அந்த பழி சொல்லுக்கு ஆளாவாது நியாயமற்றது.
தேனீ அவர்களிடம் முதலில் மன்னிப்பு கேட்கிறேன். உங்களின் தூக்கம் கெடுவதற்கும், உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கும், நான் காரணம் என்றால் மன்னிக்கவும். தயவு செய்து மன உளைச்சல் வேண்டாம். மிகவும் உணர்ச்சி வாச படுகிறது நமது பலவீனங்களில் ஒன்றாக இருக்கிறது. எனக்கும் இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. உங்களின் கருத்துக்கு நான் எதிர் கருது சொன்னாலும் கூட, நீக கூறிய கருத்துக்களில் பல பயனுள்ள விசயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி….
நான் சொல்ல வந்ததை தான் இப்பொழுது, தேனியும் சொல்கிறீர்கள்.சிவபெருமான் புலி தோலின் மேல் அமர்ந்து போஸ் கொடுப்பது, ஓவியர்களின் கற்பனை. மக்களை ஈர்ப்பதற்கு சில விசயங்களை இப்படி செய்தனர் என்று. அதைதானே நானும் சொன்னேன்.நமது இதிகாசங்களையும், வேதங்களையும், அப்படியே ஏற்று கொள்ள முடியாது என்று. இன்றைய வாழ்க்கைக்கு ஜாதி நிறைந்த மனு சாஸ்திரம் சரிபட்டு வருமா? சில விசயங்களை நாம் திருத்தி கொள்ள தானே வேண்டும்?
ஒரு சைவரான திருஞான சம்பந்தரே, சமண மதம் மக்களிடம் நற்பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்கள் கழுவேரியத்தை தடுக்கவில்லை என்று சொன்னிர்கள். அப்படியெனில், அப்படியெனில், நம் வாதம் ஆரம்பித்த இடத்திற்கு மறுபடி சென்று பார்ப்போம். நான் மற்ற மதத்தை மதித்து பேசியதில் என்ன தவறிருக்கிறது?
ஜெகவீர பாண்டியர் அவர்களே, உங்களின் கருத்துக்கள் அருமை. உடன்படுகிறேன். தேனியும் சளைத்தவர் அல்ல, எல்லா விசயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார், ஆனால் மிகவும் உணர்ச்சி வசபடுகிறார். இங்கே நாம் செய்யும் வாதத்தில் வெற்றி பெறுவது மட்டும் முக்கியம் அல்ல, மாறாக அடுத்தவர் சொல்லும் கருத்தையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம். இந்த அறிவுரை எனக்கும் சேர்த்துதான்.
போதிவர்மரே.. நீங்கள் சொன்ன விஷயம் உண்மையே.. சில வேளைகளில் நான் உணர்ந்திருக்கிறேன்.. மதமே மாறி தங்கள் பெயரை, வின்சென்ட், விக்டர்,டேவிட் , ஜெசிக்கா என்று ஸ்டைல் ஆகா இருப்பதாக நினைத்து கொண்டு வைத்திருப்பார்கள். நடை உடை பாவனை எல்லாவற்றிலும், மேல் நாட்டு தோரணை தோரணை இருக்கும். ஆனால் ஜாதி இவர்களை விட்டு போவதில்லை. இவர்களெல்லாம், வெறும் ஸ்டைல் மோகத்தில் மதம் மாறுகிறவர்கள்.
சரி ,தோழர்களே… ” அல்லாஹ்” தீர்ப்பில் இந்து கடவுள் விஷ்ணு என்று குறிப்பிட்டதை எதிர்த்து விஷ்ணு மட்டுமல்லர் சிவன், முருகன், விநாயகன்…. என்று நீண்டுகொண்டு போகும் கடவுளரின் பட்டியல் நம்மிடம் இருக்கும்போது விஷ்ணுவை மாத்திரம் இந்துக்களின் கடவுள் என்பது இந்துக்களிடையே குழப்பத்தையும் மற்ற கடவுளரையும் அவமதிக்கக்கூடிய தீர்ப்பு என்று இது நாள்வரை எந்த இந்து அமைப்பும் வழக்காட முயற்சி செய்யாத நிலையில் நாம் தடம் புரண்டு வாதங்கள் செய்வதை ஒத்தி வைத்து எதிர்வழக்காட என்ன செய்யவேண்டும் என்பதை சிந்தித்தால் இந்நாட்டு இந்துக்களுக்கு நலமானதாக இருக்கும். யார் இந்த வழக்கை முன்னெடுப்பது? எவ்வளவு பணம் தேவைப்படும்? என்ற விபரங்களை திரு.ஜி.வி. கந்தையா அவர்கள் தெரிவித்தால் இன, மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டுள்ளவர்காளாலும் உங்களோடு கைகோர்க்க ஏதுவாக இருக்கும். இல்லை… நாங்கள் இந்துக்கள்! எங்களுகளுக்கு மானம் , ரோசம் இருக்கிறது. நாங்களே பார்த்துக் கோள்கிறோம் என்று சொல்லி மற்றவர்களை கைகழுவினாலும் பிரச்னை இல்லை. காரியம் நடக்கவேண்டும். என்ன கருத்தாளர்களே… ஒன்றுபட்டு செயல்படுவோமா? திரு.ஜி.வி. கந்தையா அவர்களே… சம்மதமா? “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ,நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே!”
இப்படி ஒரு தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதே. தமிழ் சமுதாயம் தங்களுக்குள்ளே தலைமைத்துவ போரட்டம் நடத்தியே 56 ஆண்டுகளை வீணாடிதுவிடனர். நீண்டகால திட்டம் போடாமல் அதை செவ்வையாக செய்திடாமல், இப்பொழுது இந்து கடவுள் யார் என்று ஒரு முஸ்லிம் நீதிபதி தீர்ப்பு எழுதும் வரை சண்டை போட்டு விட்டு இப்பொழுது குத்துதே குடையுதே என்று போலேம்ப வேண்டாம். தமிழ் ஜனங்கள் உண்மையான பக்தி என்ன என்று உணராமல், கண்டதே காட்சி என்று குருட்டடமாக வாழ்ந்துவிட்டனர். இனிமேல் எந்த ஒரு ஆலயமும் மலேசியாவில் கட்டமுதியாது அல்லது இருக்கிற ஆலயங்கள் ஓடைப்பட்டு போவது நிசியம்.
இப்போது அதிகமான இந்துக்களுக்கு சிவனையும் தெரியவில்லை, விஷ்ணுவையும் தெரியவில்லை. தான் ஸ்ரீ குருஜி, பாபா, இப்படித்தான் போய்க் கொண்டிருக்கின்றது.
விஸ்ணு கடவுள் ஆரியாயகளின் கடவுள், சைவ சிதாந்தே கொள்கையே தமிழர்களின் ஏக தெய்வம்.
இதுவரையில் கருத்து பரிமாரல்கலிளிருந்து நான் நிறையவே கற்று கொண்டேன். கருத்துக்கள் சில சமயங்களில் சிலர் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளீர்கள். மக்களளின் அறியாமையை போக்க சில வேளைகளில் இப்படி கருத்துரைப்பதில் தவறேதுமில்லை. நான் ஆரம்பத்தில் கூறியது போலவே JAGAVEERAPHANDIAN அவர்களும் இறுதியில் கூறியுள்ளார். பிரச்சினையை விதைத்து இருக்கிறார்கள். அது முளைத்து விருட்சம் ஆகும் முன்பே, முளையிலேயே களையெடுக்க நாம் செய்ய வேண்டியதை யோசித்து செயல்படுவோம். நமக்கு பின் வரும் சந்ததி நம்மை வசை பாடாதிருக்குமே. JAGAVEERAPHANDIAN அவர்களின் ஆக கடைசி கருத்தினை நான் ஆதரிக்கிறேன். சிந்தித்து செயல்படுவோம். இறைவன் நம்மையும் நமது நாட்டையும் ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
முப்பத்து முக்கோடி தேவர்களும்,ஒருவனே! அவனே தேவ சேனாதிபதி முருக பெருமான்.சிவன் தோற்றுவித்த முதல் இனமான தமிழனை மிகவும் நேசிப்பவன்,அதன் காரணமாக சிவனே மகனாக, தமிழ் கடவுளாக அவதரித்தான்.உங்கள் தேடுதலில் ஆழாமாக சென்றால் இந்த உண்மை தெரிய வரும்.குரு வழிப்பாடு தவறில்லை ஆனால் குருவை நாம் தேடுவதல்ல,சத்குருவே நம்மை கனவிலும் நினைவிலும் நாடி வருவார்.ஒரு முறை அல்ல பல முறை,இது அடியேனின் அனுபவம்.
இப்பகுதியில் அனைவரின் கருத்துக்களும் சிந்தனைக்கு விருந்தாக அமைந்தது. இதற்க்கு வழி செய்த செம்பருத்தி.கொம் -க்கு ஒரு பெரிய “ஜே” போடுவோம். ஜே.வி.பி. முன்மொழிந்த மாதிரி “புனித பைபளில் ‘யாவே’, புனித குரானில் அல்லாஹ், புனித வேதங்களின் கடவுளான விஷ்ணு போன்ற பெயர்கள் அவரவர் புனித நூல்களில் அவரவர் கடவுள்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதை முறையாக அங்கீகரித்தாக வேண்டும்.” என்ற தீர்ப்பில்”, “புனித வேதங்களின் கடவுளான விஷ்ணு” என்ற வார்த்தையை நீக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. காரணம், இவ்வார்த்தைகள், ‘அல்ஹாஜ் வழக்குக்கு” மையமான கருத்துக்கள் அல்ல மாறாக போகிற போக்கில் சொன்ன வார்த்தையே. அப்படியே நாம் வழக்கில் ஒரு வாதியாக சேர்க்க வேண்டி மனு போட்டாலும், மேல் முறையீடு செய்த கத்தோலிக்க மன்றத்தின் மேல் முறையீடு முதலில் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் அதன் பின்னரே நாம் குறுக்கீடு செய்ய இயலும். அப்படியே நாம் உள்ளே நுழைந்தாலும் அங்கே ஒரு பழுத்த பிராமண முஸ்லிம் வக்கீல் மூக்கை நுழைத்து வேதத்தில் எந்த எந்த இடத்தில் விஷ்ணு முழு முதற்கடவுளாக கூறப் பட்டிருக்கின்றது என்று எதிர்தரப்புக்கு போட்டுக் கொடுப்பார். இந்த அவமானம் நமக்குத் தேவையா? விடுங்கள். இந்த தீர்ப்பையே நமக்கு சாதகமாக்கிக் கொள்ள வழி தேடுங்கள். இந்து மதம் இந்நாட்டின் சிவில் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எதிர்காலத்தில் நமது சமயம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம். முதலில் ஓமம் வளர்த்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து தாலி கட்டச் சொன்னதே எங்கள் வேத விற்பன்னர் விஷ்ணுவே. ஆகையால், இந்நாட்டில் எங்கள் சமயப்படி நடத்தி வைத்த வைதீக திருமணம், திருமண பதிவேட்டில் இடம் பெறவில்லை என்றாலும் சட்டபடி செல்லுபடியாகும் என்று வாதிடலாமே. மாற்று வழிச் சிந்தனை இதுவேயாகும்.
jagaveeraphandian அவர்களுக்கு. நீங்கள் சொல்வதைப்பார்த்தால் நமக்கு ஏகப்பட்ட கடவுள் இருப்பதாக அல்லவா அர்த்தம். அப்படி இல்லை. ஹிந்து மத பிரகாரம், கடவுள் ஒருவரே. எல்லாப்பெயர்களும் எல்லா உருவங்களும் அவருடையதே. இந்த தத்துவத்தை புரிந்தால் எதற்கையா எதிர்வழக்கு. நம்மை நாமே கேவலப்படுத்திக்கொல்வதுபோல் ஆகிவிடும். எல்லா பத்திரிக்கைகளிலும் எப்படி செய்தி வெளியாகும் என்பதை எண்ணிப்பாருங்கள்.சிவனை வணங்கும் ஹிந்துக்கள் thiruppathikku சென்று வெங்கடாசலபதி என்னும் விஷ்ணுவை தரிசிக்கவில்லையா? தீர்ப்பு சொன்ன நீதிபதி எல்லா வேதங்களையும் படித்திருப்பாரா? ஹிந்துக்களுகே தெரியாது வேதம் என்று ஒன்று இருக்கிறது என்று. இந்தியாவிலேயே நீதிபதிகளுக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் தடுமாற்றம்தான்.
ஞானி, கடைசியில் சொதப்பி விட்டார் ! ஒருவனே கடவுள் முருகப் பெருமான் என்கிறீர் ? இஸ்லாமியரும் ,கிறிஸ்துவரும் ஏற்றுக்கொள்வார்களா ? இனம், மொழி, பக்தியில், உள்ளவன் யாரும் இறைவனை போதிக்க தகுதி இல்லாதவன் ! அந்த வட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள் !
anti guruji அவர்களுக்கு. மீண்டும் சொல்கிறேன். எந்த இடத்திலுமே வேதங்களிலோ அல்லது பகவத் கீதையிலோ ஜாதியைப்பற்றி பேசப்படவில்லை. வரனாசரம்த்தைப்பற்றி ஒரே சுலோகத்தில்தான் பேசப்பட்டிருக்கிறது. அதனுடைய அர்த்தம் என்ன வென்றால், சமூக மேம்பாட்டுக்காக அவரவருக்கு ஒதுக்கப்பட்ட கடைமைகளை ஒழுங்காக செய்வதற்காக சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு உதாரணம். ஒரு கம்பெனியில் 250 தொழிலார்கள் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மேலதிகாரிகளும் இருப்பார்கள், குப்பைகளை அள்ளுபவர்களும் இருப்பார்கள். அந்த கம்பெனியில் அவரவருக்கு கொடுத்த கடமையை ஒழுங்காக செய்வதுதானே ஞாயம். அப்பொழுதுதானே அந்த கம்பெனி விருத்தி அடையும். இதுதான் அதனுடைய அர்த்தம். இன்னார் இன்ன ஜாதி, இன்னார் இன்ன ஜாதி என்று ஒரு போதும் நம் ஆன்மீக இலக்கியங்கள் சொன்னதில்லை.
ஒரு சினிமா படத்தை பார்கவேண்டுமேன்றால் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பார்க்க வேண்டும். இடையிலோ அல்லது படம் முடியும்போது போனால் ஒன்றும் புரியாது. ஆகவே கீதையில் சொல்லப்பட்ட பதினெட்டு அத்தியாயங்களையும் படிக்கவும். பனிரெண்டாவது அத்தியாயத்தில் இறைவனுக்கு பக்தி எப்படி செலுத்துவது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆதி சங்கரரே பஜகோவிந்தத்தில் கீதையை படிக்கச்சொல்லி இருக்கிறார்.
ஹஹஹ! ஞானிகளும்,மகான்களும் கண்ட உண்மையே என் கருத்து,தாங்களுக்கு புரிய வேண்டிய அவசியமில்லை நந்த அவர்களே!
இப்பகுதியை ஒரு நல்ல தீர்வுக்கு கொண்டுவரலாம் என்று இறுதி கருத்து எழுதிக் கொண்டிருக்கும் பொழுது குசேலன் நடுவில் வந்து இன்னும் கதையை நீட்டுங்கள் என்பது போல் கருத்து எழுதிக் கொண்டிருகின்றாரே!
குசேலா… வர்ணாசிரமம்தான் தொழில் தர்மமாகிப்போனது. அந்தத் தொழில் தர்மம்தான் ஜாதியாக பரிமாணங்கண்டது. ஒரு தட்சனுடைய மகன் ஒரு குயவனுடைய மகளை காதலித்து மணம் செய்ய இயலாது. ஏன்? இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளை எந்த தொழிலுக்கும் போக இயலாது. அல்லது வேறு வர்ணத்தானின் தொழிலையும் செய்ய பகவத்கீதையின் வர்ணாசிரமும், மனுவின் வர்ணாசிரம்மாகிய இந்து தர்மமும் அனுமதிக்காது. இந்த வகையில்தான் எவரும் படித்து அர்ச்சகராகலாம் என்று கலைஞரின் ஆட்சியில் கொண்டுவந்த சட்டத்தை நீதிமன்றமே செயல்படுத்தமுடியாமல் செய்தது. இந்த மனுதர்மத்தைக் காட்டித்தான் பச்சைத் தமிழர்களாகிய எம்மினத்தானை சூத்திரனென்றும் ,பஞ்சமனென்றும் சொல்லி கோவிலில் நுழையவிடாமல் தடுத்தது. இதே காரணங்களைச் சொல்லித்தான் எம் குலப் பென்களை மேலாடை அணியவிடாமல் அரை அம்மணமாக்கி அவர்களின் மார்பகங்களை வருகிறவன் போகிறவனெல்லாம் காணும்படிச் செய்து அவமனப்படுத்தியது இந்த வர்ணாசிரமம் எனும் பேய். அடப்பாவிகளா… என் இனத்தானுக்கு ஆடை அணிவதற்குக்கூட , தெருவில் உரிமையோடு நடமாடுவதற்குக்கூட அனுமதித்ததில்லையே உங்களின் வர்ணாசிரமம். ” ஆரிய மதம் வேதமதமாகி வேதமதம் பிராமண மதமாகி காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க… அப்போது இங்கே (இந்தியாவில்)இருந்த சுமார் 450 மதங்களில் எந்த மதம் இந்து மதம் ?என்று கேட்டவர் தந்தை பெரியார் அல்லர், அக்கினிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரி எனும் பழுத்த 100 வயதைக் கடந்த பார்ப்பண பழம். வர்ணாசிரமத்தை சட்டமாக்க சிறப்புரிமை கோரி சங்கராச்சரியாரின் பேச்சைக்கேட்டுக்கொண்டு ஜஹவர்லால் நேருவை மகஜரோடு சந்தித்த இவரை, மதத்தைப் பற்றி பேசுவதாக இருந்தால் இந்த நாட்டைவிட்டு வெளியேறிவிடு ” என கோபமாகிவிட்டார் அந்நாள் பிரதமர் நேரு. எனக்கு இது தேவையில்லாத ஒன்று என்றாலும் நீங்கள் மறுப்பு எழுதியற்காக கேட்கிறேன் விஷ்னுவும் சிவனும் தமிழ்க்கடவுள் எனப்படும் முருகனும், விநாயகனும், பார்வதி என்பவர்களெல்லோரும் ஒருவரா? இவ்வளவு தொல்லைகள் கொடுத்தால் , இப்படியெல்லாம் என்னினத்தை அவமானப்படுத்தினால் இந்து மதத்தைவிட்டு எப்படி அய்யா ஓடாமல் இருப்பார்கள்? தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேறு மதம் போனல் ரொட்டித்துண்டுகளுக்காகவும் பணத்திற்காகவும் மதம் மாறியகூட்டம் என எசை பாடுகிறீர்கள். இன்னும் ஒரு படி மேலே போய் ” நீங்களெல்லோரும் தமிழர்களே அல்லர் ” என அவமானப்படுத்துகிறீர்கள். குசேலா… கொஞ்சமாவது பிரக்டிக்களா அனுகுங்கய்யா. நாம் எல்லோரும் முதலில் மனிதன் . அதன் பிறகுதான் இனம் ,மொழி ,மதம் ,கெட்டிக்காரன்,முட்டாள் என்பதெல்லாம். நல்லதையே செய், நல்லதையே நினை என்று இவர்தான் சொல்லனும், இந்த மதம்தான் சொல்லனும் அப்போதான் அது கரக்ட் இல்லைனா நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனும் கட்டுக்களிலிருந்து முதலில் எல்லோரும் வெளிவருவோமாக! நம்மை ஏய்த்து பிழைப்பவன் எல்லோரும் இந்த பிறவியிலேயே எல்லாவற்றையும் அனுபவிக்கிறான்.நாமோ கிடைச்ச வாழ்க்கையை ஒழுங்காக வாழாமல், நம்ம பிள்ளைகளையும் வாழவிடாமல் வானுலக வாழ்க்கைக்கு கனவு கண்டுகொண்டு இருக்கிறோம்!
தேனி… இது என்னய்யா ஓயாது போல இருக்கு? ஞானி… இங்கே கருத்து தெரிவிப்பதே மற்ற அன்பர்களுடன் நாம் கற்றதை, நமக்கு தெரிந்ததை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனபதற்காகத்தானே… “தங்களுக்குப் புரியவேண்டிய அவசியமில்லை நந்தா அவர்களே… ” என்பது சரியா? பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை பேசும்போது… ” நாம் படிப்பதே படிக்க வசதியற்றவர்களுக்கும், வாய்ப்பற்றவர்களுக்கும் நாம் படித்தவற்றை எடுத்துச் சொல்வதற்குத்தானே தவிர படித்துவிட்டு அப்படியே மனதில் பூட்டி வைத்துக்கொள்வதற்காக அல்ல. அதனால் நாம் படித்ததிற்கான பலன் பிறருக்கு பயனில்லாமலே போய்விடும்.” என்றார்.
“காகித மலர்கள்” எழுதியவர் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிஜி படிக்க வேண்டிய ஒரு சிறு புத்தகம்,மலேசியா இந்து சங்கம் வெளிட்டுள்ளனர், தங்களின் பல கேள்விகளுக்கு பதில் இதில் இருக்கிறது.
சிவனை வழிபடுபவர்கள் சைவர்கள் என்றும் விஷ்ணுவை வழிபடுபவர்கள் வைஷ்ணவர்கள் என்றும் இரு பிரிவுகளாக உள்ளனர் என்பது, பாவம் அந்த நீதிபதிக்கு தெரியாமலே எல்லாம் தெரிந்ததுபோல் எல்லாம் வல்ல இறைவனின் தீர்ப்பில் வழங்கயுள்ளார்.
குசேலரே, தாங்கள் மலேசியரா அல்லது வெளிநாட்டில் இருந்து இங்கே கருத்து எழுதுகின்றீர்களா என்று தெரியவில்லை. “தமிழன் திராவிடனா” என்ற வலைப்பூங்காவில் கொடுத்த விளக்கத்தை சுட்டெடுத்து இங்கே மறுபதிப்பு செய்து இருகின்றீர்கள். இருந்தாலும் பரவாயில்லை. மேல் அதிகாரிகளின் அலுவலகத்துக்கு செல்லும் ஒரு குப்பை அள்ளுபவரை அந்த மேலதிகாரி வாசலில் நிறுத்தி “நீ தீண்டப்படாதவன்”. என் அறைக்குள் வந்தால் எங்கள் இடம் தீட்டுப்பட்டு விடும். ஆகையால், முதலில் ஒரு வாளி மஞ்சள் நீரை உன் தலை முதல் ஊற்றி முழுகி விட்டு அப்புறம் என் அறையின் வாசலைத் தாண்டி வா என்று அந்த மேலதிகாரி போட்ட சட்டம் எந்த வேதத்தில் இருந்து வந்தது?
போட்டாயே ஒரு போடு, கேட்டாயே ஒரு கேள்வி ஜே.வி.பி. இதைவிட மேலாக யாரும் குசேலரை கேள்வி கேட்க வாய்ப்பில்லை என்றே நினைக்கின்றேன். போகிற போக்கில் என்னையும் சாடி விட்டீரே?
ஞானி ! முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒருவனே அவனே தேவ சேனாதிபதி முருகப்பெருமான் ,அதுவும் தமிழனை நேசிக்கும் தெய்வமாம் முருகப்பெருமான் ! அடப்பாவி இலங்கையில் என் இனம் ,கொத்து குண்டும் ,பீரங்கி தாக்குதலிலும்,வேதியல் குண்டு போடப்பட்டு சின்னாபின்னமாக ஆக்கினானே, சிங்களவனிடம் இருந்து நீ சொல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள்களும் முருகப்பெருமானும் என் இனத்தை காப்பாற்றி இருக்கலாமே ? தம்பி மொத்தத்தில் நீ ஒரு ஞான பைத்தியம் !
வடக்கே கொத்து குண்டு விழுந்து தமிழன்கள் செத்து கொண்டிருந்தார்கள் ,தென் இலங்கையில் தமிழன் திருவிழா தேர் இழுத்துக்கொண்டு சென்றான், நல்ல கொமெடி.