-ஜீவி காத்தையா, செம்பருத்தி,கோம், அக்டோபர் 15, 2013.
மலேசிய கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட் “அல்லாஹ்” என்ற கடவுளைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புத்ராஜெயாவில் தீர்ப்பு அளித்தது. .
டிசம்பர் 31, 2009 இல், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி லவ் பீ லான் உள்துறை அமைச்சு “அல்லாஹ்” என்ற சொல்லை த ஹெரால்ட் பயன்படுத்துவதற்கு எதிராக விதித்திருந்த தடை சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்திருந்தார்.
அத்தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் செய்திருந்த மேல்முறையீட்டை செவிமடுத்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி லவ் அளித்திருந்த தீர்ப்பை நேற்று தள்ளுபடி செய்தது.
அம்மூன்று நீதிபதிகளும், பெடரல் நீதிமன்றத்துக்கு புதிதாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி முகமட் அபண்டி அலி, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் மற்றும் முகமட் ஸவாவி, மொத்தம் 102 பக்கங்களில் தங்களுடைய தீர்ப்பை கூறியிருந்தனர்.
“அல்லாஹ்” என்ற பெயர் பயன்படுத்தல் கிறிஸ்துவ சமயத்தின் முழுமையான நம்பிக்கை மற்றும் வழக்கமான நடைமுறைகள் ஆகியவற்றின் ஓர் அங்கம் அல்ல என்பது எங்களுடைய பொதுவான முடிவு” என்று நீதிபதி முகமட் அபாண்டி அவரது தீர்ப்பில் கூறுகிறார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று த ஹெரால்ட்டின் ஆசிரியர் கூறினார்.
விஷ்ணுவும் அமைச்சரவையும்
இந்தத் தீர்ப்பில் இரு கூறுகள் கவனத்தை ஈர்ப்பவைகளாக இருக்கின்றன:
- “புனித பைபளில் ‘யாவே’, புனித குரானில் அல்லாஹ், புனித வேதங்களின் கடவுளான விஷ்ணு போன்ற பெயர்கள் அவரவர் புனித நூல்களில் அவரவர் கடவுள்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதை முறையாக அங்கீகரித்தாக வேண்டும்.” (“Due recognition must be given to the names given by their respective Gods in their respective holy books such as ‘Yahweh’ in the holy Bible, Allah in the holy Quran and Vishnu the God of the holy Vedas.” )
- 1986 ஆம் ஆண்டில், அமைச்சரவை “அல்லாஹ்” என்ற சொல் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
இவ்விரு கூறுகளில் முதலாவதைக் கூறியவர் முகமட் அபண்டி அலி. இரண்டாவதைக் கூறியவர் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம்.
இந்தியாவின் “புனிதத் திருமறை நூல்களாக போற்றப்படும்” நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் மட்டுமே “பல்வேறு இந்து சமய தெய்வங்களுக்காகக் கொள்ளப்பட்ட ஆயிரம் துதிப் பாடல்களைக் கொண்டிருக்கிறது.” இவற்றை எல்லாம் படித்து அதில் கூறப்பட்டுள்ள பல்வேறு தெய்வங்களில் விஷ்ணுவை மட்டும் புனித வேதங்களின் கடவுளாக எப்படி முகமட் அபண்டி அடையாளம் கண்டு அங்கீகாரம் அளித்தார் என்பது ஒரு புறமிருக்க, த ஹெரால்ட் சம்பந்தப்பட அல்லாஹ் வழக்கிற்கும் விஷ்ணுவுக்கும் என்ன சம்பந்தம்?
நீதிபதி முகமட் அபண்டியின் இக்கூற்று அவரது அறியாமையாக இருக்கலாம் என்று தட்டிக்கழித்து விட முடியாது. மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதற்கு ஏதோ ஓர் அடிப்படை, ஓர் உள்நோக்கம் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் இந்நாட்டின் இன்றையச் சூழ்நிலையில் எழுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இந்நாட்டு இந்துக்களுக்கு இவர் ஒரு கடவுளை தேர்வு செய்துள்ளாரா? நீதிபதி முகமட் அபண்டியின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் எவ்வித மாற்றமும் இன்றி, குறிப்பாக விஷ்ணு இந்து வேதங்களின் கடவுள் என்று கூறியிருப்பதில் எவ்வித மாற்றமும் இன்றி, நிலைநிறுத்தப்பட்டால், எதிர்காலத்தில் இந்து கோயில்கள் உடைக்கப்படுவதற்கு இது ஒரு வலுவான ஆயுதமாக்கப்படலாம் என்ற சந்தேகம் தோன்றுவதற்கு இடமுண்டு.
இந்நாட்டில் பல்வேறு இந்து தெய்வங்களுக்கு கோயில்கள் இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இத்தீர்ப்பின் அடிப்படையில் விஷ்ணுதான் இந்துக்களின் கடவுள். இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆகவே இதர இந்து தெய்வங்களுக்கான கோயில்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று கூறுவதற்கு வாழை மரமும் தோரணங்களும் கட்ட அனுமதி மறுக்கும் அரசு அதிகாரிகள் தயங்க மாட்டார்கள்.
இந்து மதத்தை இழிவுபடுத்தியவரை பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தியவர்கள் இந்நாட்டு ஆளுங்கட்சியினர் என்பதை மறந்து விடக் கூடாது.
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்ய முயற்சிப்பதில் பலன் இல்லை. ஆகவே, சம்பந்தப்பட்டவர்கள் இந்தத் தீர்ப்பில் இந்து வேதங்களின் கடவுளாக கூறப்பட்டுள்ள விஷ்ணுவின் நியமனத்தை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, இந்தத் தீர்ப்பில் நீதிபதி அப்துல் அசிஸ் 1986 ஆம் ஆண்டில் அமைச்சரவை அல்லாஹ் என்ற சொல் பயன்படுத்துவதற்கு தடை விதித்ததை அவரது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், 2011 ஆம் ஆண்டில், அமைச்சரவை இச்சொல் பயன்படுத்துவதை அனுமதிக்கும் முடிவு எடுத்து அதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைக் கண்டு கொள்ளவில்லை.
பிரதமர் நஜிப் ரசாக்கின் தலைமையிலான அமைச்சரவை எடுத்த இம்முடிவு இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்கான ஓர் ஆக்கரமான முடிவு. பத்து அம்சங்கள் அடங்கிய இம்முடிவை கிறிஸ்துவ சம்மேளனத்திற்கு அறிவித்தவர் பிரதமர் நஜிப் ரசாக்.
இந்த பத்து அம்சங்கள் மிக முக்கியமானவை. அமைச்சரவை எடுத்த முடிவு. இதனை ஏன் அரசாங்கம் அமல்படுத்தவில்லை. ஏன் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை?
அமைச்சரவை 2011 ஆம் ஆண்டில் எடுத்த இந்த பத்து அம்ச முடிவு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, தேர்தலில் கிறிஸ்துவ சமூகத்தினரின் வாக்குகளைக் கவர்வதற்காக எடுக்கப்பட்டதா என்ற கேள்வி நியாயமானதே. நியாயமான ஒன்றை ஏன் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வியும் நியாயமானதே!
பிரதமர் நஜிப்பின் அமைச்சரவை 2011 ஆண்டில் ஒப்புதல் அளித்து கிறிஸ்துவ சம்மேளனத்திடம் அளிக்கப்பட்ட இந்த பத்து அம்சங்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும், அவை வாசகர்களின் கவனத்திற்கு மீண்டும் முழுமையாக வெளியிடப்படுகிறது.
பிரதமர் நஜிப் அறிவித்த பத்து அம்சங்கள்
“1. பகசா மலேசியா/இந்தோனேசியா உட்பட அனைத்து மொழிகளிலும் உள்ள பைபிள்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யலாம்.
2. இந்த பைபிள்களை தீவகற்ப மலேசியா, சாபா மற்றும் சரவாக்கிலும் கூட அச்சிடலாம். இது ஒரு புதிய முன்னேற்றம். இதனை கிறிஸ்துவ தரப்பினர்கள் வரவேற்க வேண்டும்.
3. சாபா மற்றும் சரவாக்கின் இபான், கடஸான் டூசுன் மற்றும் லுன் பாவாங் போன்ற பூர்வீக மொழிகளிலுள்ள பைபிள்களை உள்ளூரில் அச்சிடலாம், இறக்குமதியும் செய்யலாம்.
4. சாபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் பெரும் கிறிஸ்துவ சமூகம் இருப்பதை அங்கீகரிக்கும் வகையில் அனைத்து மொழிகளிலும் உள்ள, மலேசியா/இந்தோனேசியா மற்றும் பூர்வீக மொழிகள் உட்பட, பைபிள்கள் இறக்குமதி செய்வதற்கோ, உள்ளூரில் அச்சிடுவதற்கோ எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. எவ்வித முத்திரை அல்லது தொடர் எண் இடுவதற்கான தேவையும் இல்லை.
5. பெரிதான முஸ்லிம் சமூகத்தின் நலன்களைக் கவனத்தில் கொண்டு, மலேசிய தீவகற்பத்தில், மலாய்/இந்தோனேசிய மொழி பைபிள்கள் “கிறிஸ்துவ பதிப்பு” என்ற சொற்களையும், சிலுவை சின்னத்தையும் முகப்பட்டையில் கண்டிப்பாக அச்சிட்டிருக்க வேண்டும்.
6. ஒரே மலேசியா கொள்கைக்கு ஏற்பவும், அதிகமான மக்கள் சாபா, சரவாக் மற்றும் தீவகற்ப மலேசியாவுக்கிடையில் பயணிப்பதைக் கவனத்தில் கொண்டும், அவ்வாறான பயணத்தின் போது மக்கள் தங்களோடு கொண்டு வரும் பைபிள்கள் மற்றும் கிறிஸ்துவ பொருள்கள் மீது தடைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது.
7. பைபிள் பற்றிய அமைச்சரவையின் இந்த முடிவு முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் (கேஎஸ்யு) ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அமல்படுத்தத் தவறும் அதிகாரிள் பொது உத்தரவுகள் விதிகளின் கீழ் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர். சம்பந்தப்பட அரசு பணியாளர்கள் இந்த உத்தரவை நன்கு புரிந்து கொண்டு அதனை முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகள், சட்டத்துறை தலைவர் உட்பட, விசாலமான விளக்கம் அளிப்பார்கள் (இணப்பு 1 ஐ காண்க).
8. கூச்சிங், கிடெயோனில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 30,000 பைபிள்களை அவற்றின் இறக்குமதியாளர் எவ்விதக் கட்டணமுமின்றி பெற்றுக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட தரப்லினர்களுக்கு ஏற்பட்ட செலவுகள் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதே போன்ற முன்வைப்பு போர்ட் கிள்ளானில் 5,100 பைபிள்களை இறக்குமதி செய்தவருக்கும் கிடைக்கவிருக்கிறது. இதனை கடந்த வாரம் மலேசிய பைபிள் மன்றம் (பிஎஸ்எம்) பெற்றுக்கொண்டு விட்டது.
9. கிறிஸ்துவ விவகாரங்களுக்கு அப்பால், சமயங்களுக்கிடையிலான விவகாரங்கள் மீது கவனம் செலுத்தவும், அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப சமய விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கும் கிறிஸ்துவ மற்றும் இதர பல்வேறு சமயங்களுடன் செயல்பட அரசாங்கம் கொண்டுள்ள ஈடுபாட்டை அது மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது. இப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு நாட்டிலுள்ள இதர சம்பந்தப்பட்ட சட்டங்கள் கவனத்தில் கொள்ளப்படும். பிரதமர் என்ற எனது தகுதியில் இதற்கு ஒரு முன்னேற்றகரமான வழி குறித்து விவாதிக்க விரைவில் நான் மலேசிய கிறிஸ்துவ சம்மேளனத்தின் (சிஎப்எம்) பிரதிநிதிகளைச் சந்திப்பேன்.
10. எனது அமைச்சரவையின் கிறிஸ்துவ அமைச்சர்கள் ஒரு முறையான அடிப்படையில் பல்வேறு கிறிஸ்துவ தரப்பினர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதோடு, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகளோடும் என்னோடும் பணியாற்றுவார்கள். இந்நாட்டின் தலைவர் என்ற முறையில், நாட்டின் அனைத்து சமயப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அமைதியையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கு நமது சமுதாயத்தில் காணப்படும் பிளவுகளைச் சரிக்கட்டுவதற்கான தேவை இருக்கிறது. இதனை அடைவதற்கு மரியாதை, சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு மற்றும் நல்லிணக்கம் ஆகியவையே மிகச் சிறந்த வழி என நான் நம்புகிறேன்.”
கற்பனையில் உருவாக்கபட்ட பல கடவுள்களை வணங்குவதும் ..வட நாட்டினரால் அறிமுகபடுத்தப்பட்ட ..பூசை ..பழக்க வளங்கங்களையும்.கண்மூடிதனமா பின்பற்றுவதே இன்று தமிழனின் இழி நிலைக்கு காரணம் ….சிவன் ..பிள்ளையார் ..முருகன் …தீபாவளி சிவராத்திரி இவையெதுவும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் சொல்ல படவில்லை .சூரிய வழிபாடு மாத்திரமே சொல்லபட்டு உள்ளது
Jegaveeraphaandian அவர்களுக்கு. ஒரு சினிமா படத்திற்கு விமர்சனம் எழுதினால், அந்த படத்தை முழுமையாக பார்த்திருக்க வேண்டும். பகவத் கீதையை ஓர் அளவாவது படித்திருக்க வேண்டும். பகவத் கீதையில் கூரப்பட்ட விஷயங்கள் அனைத்தும் தினசரி வாழ்க்கையில் நடைமுறை படுத்துவதுதான். ஒரு சக்முதாயத்தில் எல்லா தரப்பினருக்கும் பயனலிக்கக்கூடியவை. பகவத் கீதையில் எந்த ஒரு மூட நம்பிக்கையும் சாங்கியங்களும் கிடையதும். இது பிராமணர்கள்தான் படிக்கவேண்டும், கீழ்தர ஜாதிகள் படிக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லவில்லை. ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால் அதைப்பற்றி பேசாமல் இருப்பதே. எந்த ஒரு ஆலையதிலும், நான் உயர்ந்தவன் நீ கீழ்சாதிக்காரன் நீ உள்ளே நுளையக்குடாது என்று எந்த ஆலயத்திலையா சொல்லப்பட்டது? இல்லாத ஒன்றை ஏன் இருக்கு என்று சொல்கிறீர்கள். ஜாதி மனிதர்களால் ஆக்கப்பட்டது. சனாதன தர்மத்தில் பலியைப்போடாதீர்கள் இந்த தர்மம் கடவுளால் கொடுக்கப்பட்டது, பாப்பனர்களாலும் பிராமணர்களாலும் கொடுக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் கீதையை படிக்கலாம். சுவாமி விவேகானந்தர், ரபிந்த்ரநாத் தாகூர், மகாக்த்மா காந்தி போன்றோர் என்னுடைய குருமார்கள். இதோ மகாத்மா காந்தி கீதையைப்பற்றி சொன்னவை,
“கீதை – பிரபஞ்சத்தின் தாய்….அவளை மெஇப்பொருலாகப்பொற்றி, வணங்கிய எந்த ஒரு மனிதனும் ஏமாற்ற்றத்துடன் திரும்பிச்சென்றதில்லை. பகவத் கீதையிலிருந்து நான் ஆருதல்பெட்ட்ருள்ளேன்… ஏமாற்ற்றங்கள் என்னை அச்சுறுத்தி, தோல்வியின் விளிம்புக்கு என்னை அழைத்துச்சென்றபோது, நான் பகவத் கீதையை நோக்கி திரும்பியிருக்கிறேன். அங்கேயும் இங்கேயுமாக கீதை சுலோகங்களைப் படித்தபோது,
துன்பங்களிலிருந்து விடுபட்டு, நான் உடனடியாகப் புன்னகைக்க தொடங்கினேன். மேலும், துன்பத்தின் சுவடுகள் எதுவும் மீதமில்லாமல், ஆற்ற முடியாத தழும்புகள் எதுவும் இல்லாமல் இருப்பதற்காக நான் பகவத் கீதையின் தத்துவ விளக்கங்களுக்குக் கடமை பக்ட்டுல்லேன்.” என்று காந்தீஜி கூரியிருக்கிரார்.
தேனி அவர்களே, உண்மையைச்சொல்ல எந்த நாடா இருந்தா என்னையா. தமிழன் தமிழன்தான். உண்மை ஒன்றுதான். கடவுள் ஒருவரே. ‘ஹிந்து மதம் எக்கே போகிறது’ என்ற புஸ்தகத்தை படிக்கசொன்நீர்கள் . ஹிந்து மதம் எங்கேயும் போகவில்லை. அங்கேயேதான் இருக்கிறது . நாம்தான் வழிதவறி போய்கொண்டிருக்கிறோம். அறியாமைதான் இதற்க்கு காரணம். முஸ்லிம்களுக்கு குரான். கிறிஸ்துவர்களுக்கு பைபிள். ஹிந்துக்களுக்கு நான் மேற்ட்குரிப்பிட்டது போல், வேதம், உபநிஷத், பகவத் கீதை . இவைகளை நாம் படிக்காதனால்தான் நம் சமுதாயத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியவில்லை. இவைகளில் நிறைய ஆன்மீக ஒழுக்கத்தையும், சமுதாய ஒழுக்கத்தையும் காணலாம்.
All saints who seem to post like experts of the religion. Take a step behind to explore your goodself for one to take your argument on religion. Every one seem to be holding on to the one part of the elephant in blind and trying to describe the elephant how it looks like. Just imagine that. And you shall fall in that category. If any shuld touch on this topic, one has to go beyond the 7ooo years of Hindu philosophy to speak up about God. What ever the religion may be. Whats your KARMA to talk about this. Do you know your birth purpose in the first place. And do any one know the difference about one observing Muniswarar and Saiva Sidhantam. or Krisna conscious. Stay cool and stay away. Don’t add KARMA to yourself. You are overloaded with it. Learn how to burn it away first. No body will laugh at you if you stand before the learned judge. He can only interprete the law. We can go beyond that to put thing in the right perspective. Rules and regulations takes no one near GOD . The SUPREME ONE. And none of us have any idea what the SUPREME ONE is all about.
அனோனிமஸ்.. முதலில் நீங்கள் உங்கள் உண்மையான முகத்தைக் காட்டுங்கள்.என் பெயர் ஜெகவீரபாண்டியன். வசிப்பிடம் கிள்ளான் நகரம். எனக்கு முகத்திரை இல்லை. முதலில் எப்படி வாசிப்பது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். முதலில் ஒரு சொற்றொடரை படித்து புரிந்து கொண்ட பின்பு அடுத்த சொற்றொடருக்குப் போங்கள். விளங்காவிட்டால் நன்கு தமிழறிந்தவரிடம் படிக்கச்சொல்லி விளக்கம் பெற்று எழுதுங்கள். இதை ஏதோ எனக்கு எதிராக எழுதிவிட்டீரே எனும் கோபத்தில் நான் எழுதுவதாகவும் நீங்கள் நினைக்க வேண்டாம்.
பகவத்கீதையை நீங்கள் படித்திருப்பதாகவும், அது உங்கள் வாழ்க்கையை நலப்படுத்தியதாகவும் எழுதியுள்ளீர்கள். நல்லது. அதற்காக விவேகாவையையும் காந்தியையும் துணைக்கு அழைக்காதீர்கள். ” பஞ்சமர்” என்றால் யார் என்பது காந்திக்கும் தெரியும் மற்றவருக்கும் ஆனால் உங்களுக்கு மாத்திரம் தெரியாது. இந்து மதத்தில் தீண்டாமையும் இன்னும் பல கேவலமான நடைமுறையும் இல்லாது இருந்திருக்குமானால் காந்தியார் ஏன் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரம் செய்யவேண்டும்;அவசியமில்லையே? பஞ்சமர் மற்றும் சூத்திர தமிழர்கள் கோவிலுக்குள் நுழைதல் ஆகமத்திற்கு (சிலை வழிபாட்டு விதிகளுக்கு) எதிரானது என்றும் , த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே…என்று போகிற பாஞ்சாராத்ர ஆகம ஸ்லோகம் என்ன உத்தரவிடுகிறதாம் என்றால்… பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம். இந்த புனிதமான கோயில்களுக்குள் சூத்திரனோ பஞ்சமனோ ஒர் அடி எடுத்து வைத்தால்கூட அனுஷ்டானங்கள் கறைபட்டுவிடும். அதனால்… அந்த விக்ரகங்களில் இருந்து பகவான் பட்டென ஓடிப்போய் விடுவாராம். ஆதலால் சூத்திரனோ பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்… விக்ரகங்கள் வெறும் கல்லாகிவிடும். பகவான் அதில் சிறிது வினாடிகூட தங்கமாட்டார். ஆகவே கோயிலுக்குள் விடாதே அவர்களை என்கிறது ஆஹம ம். சரி , கீதையிலே பகவான் என்ன சொல்லுகிறார் … எல்லாம் என் செயல் . கர்ணனைக் கொல் . அது உன்னை பாதிக்காது. என்னால் அன்றி எதுவும் நடக்காது என்கிறாரே.. ஆக எல்லாமே கண்ணனின் செயலென்றால் ஏனய்யா பொம்மையாகிய மனிதனை பாவம் சேரவேண்டும்? எதற்கு அய்யா சம்பந்தமே இல்லாதவர்கள் தண்டிக்கப்படவண்டும்? கோவில் பிரவேசத்திற்காக போராட்டம் நடத்தவேண்டும்? இந்துமதம் எனும் பேரால் தமிழினத்திற்கு நேர்ந்த துன்பங்களும் துயரங்களும் உங்களுக்கும் குசேலனுக்கு மட்டும் தெரியாத்தைப்போல் பாசாங்கு செய்கிறீர்கள்? குசேலா.. ” இந்துமதம் எங்கே போகிறது? ” எனும் புத்தகத்தை வாசித்து தெளிவு பெறச் சொன்னால், இந்துமதம் எங்கேயும் போகவில்லை. அங்கேயேதான் இருக்கிறது என்றால் எங்கே? குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டா?
பஞ்சமனும் சூத்திரனும் வேதம் படிக்கவே கூடாது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழினத்தை சட்டம் போட்டே தடுத்து வந்துள்ளது இந்துக்களின் ராஜியம். பசப்பாதீர்கள் தோழர்களே. கீதையை நீங்கள்தான் படித்து முன்னேறி விட்டீர்கள் என்று தவறுதலாக எண்ணி எழுதிவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். தேனிக்கு அறியாமையா? அவர் நிறைய படிப்பவர்.அவர் எழுத்தே அதை பறைசாற்றுகின்றன. குசேலா… நீங்கள்களதான் இருளில் இருக்கிறீர்கள்.தயவு செய்து வெளியே வாருங்கள். உங்களிடம் புராணங்கள் வண்டி வண்டியாக இருக்கின்றனவே. அதைப்பற்றியெல்லானம் குசேலன் பேசமாட்டாரா? அதையெல்லாம் எங்களுக்கு சிபாரிசு செய்யமாட்டாரா? தாயுமானவர் எனும் உண்மையான தமிழன் இருந்தானே அவரைப் பற்றியெல்லாம் பேசமாட்டீரா? வடநாட்டானின் சரக்கு மட்டும்தான் விலைபோகுமா?
illatha ondru endru sollum anymouse avargale… neengal solvathai paarthal, ambetkar,periyaar ellam kooda karpanai uruvamaa?? jathi hindhu mathatil taan solla pattullathu.. indrum irukkindrathu, konjam valu ilanthu.
குசேலரே, நான் கேள்வி கேட்டதில் காரணம் இருக்கின்றது. உங்கள் பதிலில் இருந்து நீங்கள் மலேசியர் அல்ல என்று புரிந்து விட்டது. உங்கள் பதிலில் இருந்து நான் பெற்ற மற்றொரு விடயம் நீங்கள் வேத மரபைச் சார்ந்தவர். காரணம், வேதம், உபநிடதம், பகவத்கீதையை படி என்று இங்கே தமிழில் அறிவுறுத்தும் நீங்கள், தமிழில் திருமூலர் திருமந்திரத்தில் வழங்கிய வாழ்வியல் கருத்துக்களையோ, நால்வர் பெருமக்கள் வழங்கிய சைவ நெரியையொ, மெய்கண்ட சாத்திரங்கள் வழங்கிய சைவ சித்தாந்த மெய்யறிவு நூல்களையோ, சிவ ஆகமங்களையோ (அனைத்தும் தமிழில் பிறந்தது) படியுங்கள் தமிழர்களே என்று புண்ணியத்துக்கு ஒரு வார்த்தையைக் கூற உங்களுக்கு இயலவில்லை அல்லது தெரியவில்லை அல்லது இரண்டுமே. இப்பொழுது நீங்கள் செய்துக் கொண்டிருப்பது தமிழர்களின் மூளையை சலவை செய்து இந்து மதத்தை விட்டு சைவ சமயத்துக்கு திரும்பிச் செல்லாமல் (அல்லது ஓடாமல்) தடுப்பதற்கு என்பது உண்மை அல்லவோ? ஜெகவீரபாண்டியன் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு எனக்கு மறுமொழி எழுதுங்கள். காத்திருகின்றேன்.
என்னய்யா அது? இந்த அசோகன் 7000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி போகச் சொல்லுறாரு? மதத்தைப் படைத்த எலும்பு கூடுகள் எல்லாவற்றிற்கும் எல்லாம் தெரியுமாம். நமக்கு கர்மம் பிடிச்சிருக்கு .அதனால யானையோட வாலு மட்டுந்தான் தெரியுமாமே… மற்றதெல்லாம் தெரிஞ்சுக்கணும் ஆசைபட்டா இமயமலைக்கு போய் ,உடம்பெல்லாம் வேர் முளைக்கிற அளவுக்கு தவமிருந்து, பி.எச்.டி. வாங்கின பிறகுதான் கருத்துரைக்க வேண்டுமாமே! அப்படித்தான் நம்ம கர்மா விலகும் என்றல் , மனிதத்தை மாத்திரமே மதிக்கக்கூடிய நான் அந்த ஏழாயிரம் வருட எலும்புக்கூடுகளைச் சந்திக்கத் தயார்!
இலங்கை சரித்திரத்தை மறுபடியும் படியுங்கள் நந்த அவர்களே ! தமிழன் தானக்கு தானே விதைத்த வினைதான் முடிந்த போர். தஞ்சம் என்று நாடி வந்த சிங்களவனுக்கு இடம் கொடுத்தது, பின் அதை சரிவர கண்காணிக்காதது,அவன் செய்த தவறுகள். கற்று கொடுக்கும் இனம் தமிழ் இனம் என்பதால் எல்லாவற்றையும் கற்றுகொடுத்தான். ஆதி காலத்திலிருந்தே கிடைத்த எல்லாவற்றையும் சிங்களவன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழர்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகளை செய்து இன்று முழு இலங்கையையும் சிங்கள தீவாக மாற்றிவிட்டான். அதில் மேற்கத்திய ஆட்சியாளர்கள் செய்த கொடுமையும் தொடர்ந்து சுதந்திரத்திற்கு பிறகு நடந்த சதிவேளைகளும்,CIA ஆடிய கபட நாடகமும் அடங்கும்.மிக முக்கியமாக ஒற்றுமை இல்லாமல்,தங்கள் இனத்தைய அழிக்கும் அளவிற்கு போராளிகள் அமைப்புகள் போர் நடத்தினர்! அது அங்கு மட்டும் அல்ல; தமிழ் நாட்டில் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது.தங்கள் உரிமைகளையும் எல்லையையும்
சரியாக பாதுகாக்க மறந்து விட்டனர்! வடக்கில் ஆந்த்ரவும்,மேற்கில் கேரளாவும் தமிழனின் நிலங்களை பங்கு போட்டனர்! இன்று
தண்ணீர் பிரச்சனைக்கு அதுவே முக்கிய காரணம்! இவை எல்லாம் இறைவன் செயல் அல்ல; நந்தா அவர்களே! தமிழன் உலகிற்கே வாழ கற்று கொடுத்துவிட்டு தான் வாழ தன் சந்ததியர்களை வாழவைக்க மறந்து விட்டான்! மதம் என்றும் தவறான போதனைகளை போதிக்கவில்லை, மாறாக மனிதன் தங்கள் சுயனலதிக்காக செய்தவை இங்கு நடக்கும் அனைத்து கோளாறுகளும்.நமது வாழ்க்கை வழிகாட்டிகளாக திருக்குறள் மற்றும் பல இதிகாசங்கள்,
புராணங்கள் இருப்பினும் சிலரே அவைகளை முறையாக பின்பற்றுகின்றனர்.அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும்! பொறுத்திருந்து பாருங்கள்! ஆறுபடையப்பன் விளையாட்டை!
(இன்று) :
i.அமெரிக்காவின் பொருளாதாரம் நலிவடைந்து வர காரணம்?
ii.காங்கிரஸ் ஆட்சி தடுமாற காரணம்?
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் ஏராளமான
பதில்கள் கிடைத்து கொண்டிருக்கும் விரைவில்!
இந்த வர்ண கோதாவில் – குதூகலமாக போர்தொடுத்த அனைவரையும் பாராட்டுவோம்மாக !! ஏன் இந்த ஆவேசம் ? எதற்கு இந்த போராட்டம் ? எங்கே போய்கொண்டிருகிறது நம் சிந்தனைகள் ? இதைதான் “வெங்காயத்தை உரிதுபார்த்தல் ஒன்றும் இருக்காது ” என்று கவிஞன் பாடினான். விவாதங்களை விடுதல்லுங்கள் , வாருங்கள் விவேகமான சிந்தனை சுரங்கத்தை தூர் வாருவோம் ! நன்றி .
திரு ஞான பைத்தியம் … சொன்னால் வெல்லும் சொல்லை சொல்லுங்கள். அடுத்து பாருங்கள் நமது தமிழர் நந்தா உங்களை ஒரு பிடி பிடிக்கப்போகிறார். என் இனம் ,லட்சம்பேர் குழந்தைகளும்,குமரிகளும், முதியோரும் ,பெண்களுமாக – கற்பழிக்கப்பட்டும் குண்டடிபட்டும் கொலைசெய்யபட்டபோது உதவாத கடவுள், இப்போது காங்கிரஸ் காலை வாரினால் என்ன? அமெரிக்காவை அழித்தால் எனக்கு என்ன அய்யா? என்பார்.
ஐயா ஞானி ! இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட அனைவரும் முருக பக்தர்கள் என்று நீங்கள் அறியாதது ஏனோ ? துன்ப படும்போது உதவாத முருகர் கையில் வேல் இருந்தால் என்ன ? AK 47 இருந்தால் என்ன ? போர் நடக்கும்போது ஒபாமா கழுத்தில் முருகர் அவரின் வேலை அழுத்தி வைத்திருந்தால் அன்றே போரை நிறுத்தி இருக்கலாமே ஐயா ? போர் நடக்கும்போது மயிலில் ஏறி ரீவஸ் கியர் போட்டு எங்கோ கிளம்பி விட்டாரே ! அதுசரி ஏன் காலம் கடந்து அமெரிக்கா கருவுலத்தில் முருகர் கை வைக்க வேண்டும் ? காங்கரஸ் ஆட்சி ஆட்டம் காண்பதற்கு காரணம் முருகரா ? அதுவும் காலம் கடந்து ! முருகர் ஒரு ஞானஸ்தர் என்பது எல்லோருக்கும் தெரியும் ,இலங்கையில் நடந்த கொடூர கொலைகளை தடுக்க இவரின் ஞானம் ஏன் வேலை செய்யவில்லை ? அனைத்தும் சூனியக்காரி சோனியாவுக்கு சாதகமாக அமைந்து விட்டது ஐயா ! இப்போது காங்கரஸ் ஆட்டம் ஆடினால் என்ன ? டிஸ்கோ ஆடினால் என்ன ? இது தனி மனிதன் தாக்குதல் இல்லை ஐயா , உங்களைபோல் சமுதாய சிந்தனைதான் ! நம்மை அணுக்கமாக கவனிக்கும் ஐயா ஜெகவீரபாண்டியனுக்கு நன்றி சொல்வோம் ஐயா !
உலகிலே வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன் என்று கீதை சொல்கிறது.. ஆனால், ஏகலைவன் என்ற வேட்டுவ இளைஞன், வில் வித்தை கற்று கொள்ள அர்ஜுனனி குருவை நாடினான். அவர் சத்திரிய வம்சத்திற்கு மட்டுமே பயிற்சி அளிப்பேன் என கூறியதால், அந்த இளைஞன், அவரின் உருவத மரத்தில் செதுக்கி, அவரையே மானசீக குருவாக ஏற்று, சுயம்புவாக வில் வித்தையில் தேறினான். ஆனால் அந்த குரு, ஒரு கீழ் ஜாதி இளைஞன் வில் வித்தையில் சிறந்து விளங்குவது பொறுக்காமல், அவனின் கட்டை விரலை குரு தட்சணையாக பெற்று, (அவர் கற்றே கொடுக்கவில்லை) அவனை ஊனமாக்கினார். ஏன்? அவன் ஒரு வேட்டுவ இளைஞன்.
கர்ணன், அர்ஜுனனை விட அதிகமான வில் வித்தைகளை காண்பித்தும், அவனை வீரனாக ஏற்று கொள்ளவில்லை. ஏன்? அவன் தேரோட்டியின் மகன்.
பகவத் கீதையில், ஜாதி பிரிவினை இல்லை என சொன்னவர் யார்?
பகவத் கீதையில், ஒரு தர்மம் செய்தவனின் தலையை, அவன் செய்த தர்மம் காக்கும் பொழுது… அவனின் தர்மத்தையும், தானம் கேட்டு, சதி செய்து, கடவுள் அவனை கொள்கிறார், இதை படித்து நான் மிகவும் குழம்பி போனேன்.
பஞ்ச பாண்டவர்களின் மனைவியை துகிலுரித்தான் என்ற குற்றத்திற்காக, வைய படும் துரியோதனன் கெட்டவனா? இல்லை தன் மனைவியை வைத்து சூதடியவர்கள் கேட்டவர்கள?
சாதியை பற்றி பேசாமல் இருந்தால் சாதி தானாக மறைந்து விடுமா? அப்படி என்றால் தந்தை பெரியார் போன்றவர்கள் முட்டாள்கள? அப்படி என்றால், இனி நாம் கொலை, கொள்ளை, இலஞ்சம் போன்றவற்றை பற்றி பேச கூடாது/
உங்கள் கேள்வி சரியானதுதான் நந்தா அவர்களே! மேலோட்டமாக பார்த்தல்,உண்மை காரணம்; கர்ம வினை! ஒவ்வொரு பிறவிக்கும் அவரவர் கர்ம வினையே காரணம்! அதன் படி அவர்கள் ஈழத்தில் பிறந்தனர், தாங்களோ இங்கு பிறந்தீர்கள்! அதுதான் இறைவைனின் தீர்ப்பில் உள்ள வித்தியாசம்! ஏன் இங்கு கூட ஒருவன் அரசனாகவும் ஒருவன் ஆண்டியாகவும் பிறப்பது என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? கர்ம வினையே! அதன்படி அவர்கள் கர்ம கடன்களை கழிக்க தீர்ப்பு வழங்கபட்டது! இருப்பினும் இறைவன் மானிட பிறவிக்கு மதியால் விதியை வெல்லும் வழியையும் காட்டியுள்ளான்(அதை பின்வருமாறு கவனிக்கவும்). தாங்கள் கூறியதுபோல் ஒபாமாவிற்கு பல முறை கடைசி நேர போரின் நிலவரங்களை அணிப்பிய வண்ணமாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் சில அரசு சார தரப்பினர் செயல் பட்ட போதிலும் அமெரிக்காவோ,அல்லது இந்தியாவோ எந்த உதவியையும் செய்யவில்லை போரையும் நிறுத்தவில்லை. என்னெற்றால் அந்த போர் இந்திய (சூனியக்காரி) ஆசிர்வதித்து,அமெரிக்காவை
போல் பல பேடி நாடுகள் கூட்டு சேர்ந்து தமிழனை அழிக்க போட்ட சதி! மீண்டும் அங்கு நடந்தவைகளை ஆராய்ந்து பாருங்ககள் புரியும்! இந்தியாவுக்கு அதில் முழு தொடர்பு உண்டு! முக்கிய புலி படைகளின் தலைவர்களை பிரபாகரனுக்கு எதிராக செயல்பட “ர” எப்படி விலைக்கு வாங்கியது? CIA.MOSAD போன்ற அமைப்புகள் அதற்கு உடந்தையாக செயல்பட்டது. இப்படி பல ஓநாய்கள் தமிழனை பதம் பார்க்க என்ன காரணம்? இறைவனா? இங்கு ஒரு விஷயத்தை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். திரிகோணமலை இந்திய சமுத்திரத்தை கண்காணிக்க மிகவும் சிறந்த தளம்,அதற்கு இன்னொரு பெயர் இராவணன் கோட்டை.இராவணன் கோட்டையை எவன் ஆட்சி செய்கிறானோ? அவனே தென் ஆசியா மண்டலத்தையும் இந்திய சமுத்திரத்தையும் ஆட்சி செய்ய வல்லமை படைத்தவனாக இருப்பான் என்று புராணம் கூறுகிறது.அதற்கு ஆதாரமாக ராமாயணத்தில் நடந்த போரின் தடயங்களை கண்டு பிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். அதை அமெரிக்க நன்கு அறிந்து வைத்திருந்தது, அதே வேளையில் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் போர் ,பாகிஸ்தான் தீவிரவாதமும்,இந்தியாவின் ரஷ்ய விசுவாசம் போன்ற காரணங்கள் முட்டு கட்டையாகவே இருந்து வந்தது. CIA; புலி படையை ரகசியாமாக தொடர்பு கொண்டு சிங்களவன் கொட்டத்தை அடக்க முன்வந்தது.பதிலுக்கு தாங்கள் திருகோணமலையில் தளம் அமைக்க உத்தரவும் கேட்டது.அனால் புலி படை அதை ஏற்கவில்லை காரணம் இந்திய தங்கள் ரத்த தொடர்பு உள்ள நாடென்றும்,சகோதர நாடென்றும்,தாய் மண் என்றும் காரணம் கூறி அமெரிக்காவின் உதவியை புறக்கணித்துவிட்டனர். அன்று புலிப்படை சரியான முடிவை எடுக்க தவறியதால் பல லட்ச மக்களை இழந்தது அதன் பிறகு. என் அப்பன் முருகன் ஒரு வழி காட்டி; சர்வதிகாரியல்ல எவன் கழுத்திலாவது வேலை வைத்து பயமுறுத்த! மானிட பிறவியும் கர்ம பிடியிலிருந்து பிறவா வரம் பெற பகுத்தறிவை பயன் படுத்தி தியானம்,தவம் என பல வழிகளை காண்பித்துள்ளான்.மானிட கண்கள் இன்னுமும் முடி இருக்க யார் குற்றம்? நன்றி உங்களுக்கும்,ஐயா ஜகவீரபண்டியனுக்கும்,ஐயா தேனீ மற்றும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஐயா ஞானி ! ஒரு கனம் கர்ம வினை பலன் என்கிறீர் , மறு கனம் இலங்கை தமிழனின் மடமை என்கிறீர் , இந்த இரண்டு கருத்துக்கும் முரண் படுகிறதே ஐயா ! இதில் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் , ஒருவேளை முருகப்பெருமான் டபல் கேம் விளையாடி விட்டாரா ?
ஹஹஹ! கர்ம வினையால் நாம் அனைவரும் எடுத்த இந்த பிறவி,மீண்டும் மீண்டும் எடுக்காதிருக்க அல்லது பிறவி கடனை அறுக்க முருகன் காட்டிய வழியே தியானம்,தவம் போன்ற ஞானவழி! அது தங்களுக்கு புரிய வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை என்றே நான் நினைக்கிறேன்.ஐயா இலங்கை தமிழன் மடமை என
நான் கூறவில்லை,அவர்கள் மதியால் வென்றிருக்க
வேண்டிய அந்த போரை விதி (கர்ம வினையால்) ஏமாந்து விட்டனர்!
விதி பயனை மாற்றி அமைக்கவே ஞானவழி.ஞானத்தை தேடுங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.
ஞானி ! கதை வேறு கோணத்தில் போகிறது ! ஞான நிலையை அடைய , கர்ம வினை போக , சுவாமி நித்தியா நந்தாவை (ரஞ்சிதா ) நாடலாமா ஞானி ! வேறு குரு பரிந்துரை உண்டா ?
ஞானி & நந்தா இவர்களில் எவன் ஞானி என்று தெரியவில்லை.
ஒருவன் தாழ்ந்த குலத்தில் பிறக்க கர்மாதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அரசனாக இருப்பதற்கும் ஆண்டியாக இருப்பதற்கும் கர்மாதான் என்கின்றனர். லட்சம் பேர் கொல்லப்பட்டதற்கும் கர்மாதான் என்று சொல்கிறீர்கள். எனக்குத் தெரிந்து ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை அது நல்லதென்றும் கெட்டதென்றும் ( மனதர்களின் பார்வைக்கொப்ப) இருக்கிறது. இந்த வினை அடுத்தப் பிறவியை நிர்ணயம் செய்கிறது என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொள்லாது. மத உலகம் ஏற்றுக்கொண்டும் ஏற்றுக்கொள்லாமலும் இருக்கிறது. வள்ளுவன் கூட ” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால்” என்று சொல்லியிருக்க பிறப்பு கர்மாவால் பாகுபாடுபட்டும் எனும் மதக்கொள்கை அடிபட்டு பொய்விடுகிறது. நீர் உயர வரப்பு உயர்வதைப்போல் எண்ணங்கள் உயர ஒருவனின் வாழ்கை நிலையும் மாறும் என்பது அனுபவ உண்மை.அதை வள்ளுவனும் பறைசாற்றுகிறான். எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின் என்று. இங்கேயும் ஒருவன் வளமாக இருப்பதற்கும் தாழ்வடைவதற்கும் உள்ளத்தைச் சார்ந்துள்ளான் என்பது தெளிவாகிறது; கர்மா அடிபடுகிறது. கர்மாதான் படைப்புக்கு காரணமென்றால் இந்த பிரபஞ்ச படைப்பு எந்தக் கர்மாவினால் நிகழ்தது? இந்த உலகில் பிறந்த முதல் மனிதனுக்கு எப்படி கர்மவினை வந்தது ; அவன் பரிசுத்தமாகத்தானே இருந்திருக்க முடியும்?? அப்படித்தானே பைபளும் சொல்லுகிறது! இவையெல்லாம் பார்க்கும்போது… மதவாதி தன் அறிவால் விளக்கமுடியாத ஒன்றை “கர்மா” எனும் ஒரு வார்த்தையைச் சொல்லி தப்பித்துக்கொள்ள முயன்ற எஸ்கேபிசத்தைத்தான் இங்கே காணமுடிகிறது!
உலகை முழுமையாக படைத்த பின்புதான் மனிதன் (யார்?) படைக்க பட்டான்,அதாவது ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா ஜீவராசிகளும்.இதை இன்னும் தெளிவாக சொன்னால்;பரந்த வெட்ட வெளியில் உயிரினமே இல்லாத ஒரு காலத்தில் பரம்பொருளின் ஞானத்தால்,அசைவால் ஓர் அணு இராணுவக கூடி அது கால
ஒட்டாத்தில் கோடி கோடி அணுக்களாக ஒன்று சேர்ந்ததுதான் பஞ்சபூதங்களும் இந்த உலகமும். அப்படி படைக்க படைக்கப்பட்ட பிரகுதான் மனிதனை பகுத்தறிவோடு படைத்தான் இறைவன். எதையும் சீர்தூக்கி தர்ம வழியில் நடக்க அனைத்து வாய்ப்புகளையும் அவனிடமே கொடுத்தான். அனால் மனிதனோ தங்களுக்கு கிடைத்ததெல்லாம் அனுபவித்தார்கள் ஆசையின் காரணத்தால்,
தர்மம் சிறிது சிறிதாக அழிய ஆரம்பித்து நம்மை இன்று வரை இழுத்து வந்துள்ளது. நாம் அனைரவரும் திருவல்லுவனாகவே வாழ்திருந்தால் கர்ம வினை எதுவும் நம்மை நாடி இருக்காது! இங்கு எத்தனை திருவள்ளுவர்கள் இருக்கிறீர்கள்?
எனக்கு தெரிந்து எல்லா மதங்களிலேயும், கொஞ்சம் ஓட்டைகள் இருக்கின்றன. சரி பஞ்சர் போட்டு கொள்ளலாம் என்று நினைத்தாள், நாகரீக குருஜிக்கள் தொல்லை தாங்க முடியவில்லை. அவனுங்கள வேற கடவுள கும்புடுது நம்ம சனம். இத்தனை நாளை கும்பிட்டு வந்த கடவுளுக்கு மதிப்பில்லாமல் போச்சு. கிராபிக் படங்கள் பூஜை அறையில், பட்டய கிளப்புகிறது. ஹிந்துக்கள் முட்டாள்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கும் செயல். வெந்ததை தின்னுற மனுசனுக்கு அவன் சாப்புடற அரிசி கிடைக்கிறதே கடவுள் அருளினால் தான். அவனையே கடவுள்னு நினைக்கும் மனிதர்கள் எத்தனை பெரிய அறிவிலிகள்?
ஜே.வி.பி. உங்கள் கேள்விகளுக்கு மெய் விளக்கத்தை தீபாவளிக்குப் பின் எழுதுகின்றேன். இப்பொழுது பிசி. செம்பருத்தி வாசகர்கள் அனைவருக்கும் எமது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ஆத்மா ரீதியில் நாம் எல்லோரும் சமமாணவர்களே. புனிதமான,அறிவுள்ள,என்றும் இன்பமாயுள்ள இந்த ஆத்மா ஏன் இந்த பூமியில் அல்லல் பட்டு கொண்டு இருக்கிறது?அன்பும் இரக்கமும் கொண்ட இறைவன் எப்படி இதை சகித்து கொள்கிறான்…..!!!!
இதோ வருகிறது பதில்….ஒவ்வொரு தந்தைக்கும் தன் பிள்ளைகள் என்றும் சீறும் சிறப்புமாக வாழ வேண்டும் என்றுதான் ஆசை. இதற்காக தந்தையர்கள் பல தியாகங்கள் செய்கிறார்கள்.பிள்ளைகளின் ஆசைக்கும் பாசத்திற்கு அடிமையாகி பிள்ளைகளி்ன் விருப்பத்திற்கு ஏற்றவாரு அவர்களுக்கு அனைத்தையும் தருகிறார்கள். பிள்ளைகளி்ன் சுதந்திரத்திலும் தலையிட விரும்பவில்லை. நம்மை படைத்த இறைவன் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.ஆரம்பத்தில் நாம்(உயிர்கள்)பகவானின் திரு நாட்டிள் அவருடன் வாழ்ந்து வந்தோம். அங்கும் நமக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது…!ஆனால் நமக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன்படித்தியுள்ளோம். தந்தைக்கு(இறைவன்) அடிபணியாமல் நம் போக்கில் வாழ்ந்தோம்.சேவகனாக இருக்க வேண்டிய ஆத்மாக்கள்(உயிர்கள்)தலைவனாக இருக்க ஆசைப்பட்டது.இதன் விளைவே இந்த பூமியில் ஒவ்வொரு உயிரும் மற்ற உயிரை ஆட்சி செலுத்த முயற்சிக்கிறது.சுதந்திரத்தை விரும்பிய நாம், இந்த பூமியில் சுதந்திரமாக வாழ,பகவான் எல்லாம் வசதிகளையும் உயிர்களுக்கு தந்துள்ளார்.நம் சுதந்திரத்தில் அவர் தலையிட விரும்பவில்லை.அவரை மறந்துவிட்ட நாம், இன்று இங்கு பல துன்பங்களில் சுழன்று கொண்டிருக்கிறோம்.நம்மேல் அக்கறை கொண்ட அவர்,நம்மை மீட்க (விடுதலை அளிக்க) யுகந்தோரும் இம்பூமியில் அவதார புருஷராக தோன்றியுள்ளார் . நம் தவறானபோக்கை(வாழ்க்கை)கண்டு,பல இறை துதர்களை இங்கு அனுப்பியுள்ளார்.காலம்,இடம்,சூழ்நிலைக்கு ஏற்றவாரு மதக் கொள்கைகளும் தத்துவங்களும் தோன்றின. தன் சொந்த போதனையான பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இதை கூறயுள்ளார். பகவான் அளித்த வாழ்க்கை நெறிகளை பின்பற்றாமல், பகவான் என்று தன்னை பிரக்கடனம் செய்து கொண்டு மக்களை ஏமாற்றும் பல பொய் பகவான்கள் இந்து மதத்தில் ஏறாளம்.. ஏறாளம்..!! இப்படிபட்ட பொய்யர்களும் அவர்களை பின்பற்றும் அறிவு குறைந்தோரும் நரகத்தை நோக்கி செல்கிறார்கள் என்று பகவான் தெள்ளத் தெளிவாக கீதையிள் கூறுகிறார்!!!!!!!!!.
இறைவனை புகழ்ந்து பாட மொழி ஒரு பிரச்சனை கிடையாது.இறைவனுக்கு மாசற்ற அன்புதான்(பக்தி)தேவை.இந்த மாசற்ற பக்தி, நாம் இறைவனுக்கு புரியும் தன்னலமற்ற சேவையால் வளரும்.மொழி என்பது ஒலி(சத்தம்).இறைவன் எந்த மொழியையும் சார்ந்தவர் அல்ல.மிருகங்கள் எந்த மொழியில் பேசுகின்றன? நாய் எந்த மொழியில் குறைக்கிறது? தெளிவுயின்மை, குறைந்த அறிவு ஆற்றல்,மந்த புத்தி கொண்டவர்கள், நன்மையிலும் குறை காண்பார்கள்.
ஜே.வி.பி. தங்கள் கேள்விகளுக்கு மெய் விளக்கம். இங்கே யாம் கூறும் கருத்துக்கள் யாவும் சைவ சித்தாந்தத்தின் மெய்நெறி தத்துவங்களே அன்றி வேதாந்த தத்துவங்கள் அல்ல என்று அறிக. கேள்வி 1. இந்த பிரபஞ்ச படைப்பு எந்த கர்மாவினால் நிகழ்ந்தது? “கர்மா” எனப்படும் வேதாந்த தத்துவத்திற்கு சைவ சித்தாந்தத்தில் “வினைப் பயன்” என்று பொருள். பிரபஞ்ச படைப்பு வினைப் பயனால் நிகழ்ந்தது அல்ல!. வேதாந்திகள் ‘ஒரு பொருள்’ வாதிகள். அனைத்தும் ‘பிரம்மம்’ ஒன்றிலிருந்தே தோன்றியது என்பர். சித்தாந்திகளோ பொருள் ஒன்றல்ல பல என்று பகர்வர். சித்தாந்திகள் முப்பொருள் வாதிகள். அவை பதி (இறை), பசு (உயிர்), பாசம் (ஆணவம், கன்மம், மாயை) என்பர். இவை என்றும் உள்ள பொருள்கள் (அநாதி). ஆணவ மலம் உயிரை என்றும் அழுந்தி (பந்தித்து) நின்றதனால் உயிர்கள் இருள் நிலையில் (ஆணவ மறைப்பில்) இருந்து மெய் அறிவைக் கானாமல் துன்பத்தில் துவண்டு இருந்தன. கருணையே வடிவான இறைவன், உயிரின்பால் அன்பு கொண்டு ஆணவ மலத்தில் கட்டுண்டு இருக்கும் உயிர்களை விடுவிக்க வேண்டி மூல மாயையில் இருந்து இப்பிரஞ்சத்தை உருவாக்கினார். பின்னர், உயிருக்கு தனு, கரண புவன போகங்களைக் கொடுத்து அவை இப்பூவுலகில் பக்குவப்பட்டு (இரு வினை ஒப்பு ஏற்பட்டு) முத்தி நிலை அடைந்து இறைவனின் பேரின்பத்தில் சேர்ந்து இருக்க வேண்டியே இப்பூவுலகில் பிறப்பித்தார். நாம் என்ன செய்கின்றோம்? ‘வந்த வேலையை விட்டுட்டு பந்தக் காலைப் பிடித்து கொண்டு’ வாழ்கின்றோம்! இதற்க்கு என்ன அர்த்தம் என்று கேட்கின்றீர்களா? இங்கே வந்து பக்குவப்பட்டு முத்தி அடைந்து இறைவனின் பேரின்பத்தைப் பெறாமல், குடும்பம், சுற்றம், நண்பர் என்ற பந்த பாசத்தை ஏற்படுத்திக் கொண்டு வந்த நோக்கத்தை அறியாமல் ‘நான், எனது’ என்ற ஆணவ செருக்கினால் வினைப்பயன் பெற்று மீண்டும், மீண்டும் நம் உயிர் பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு என்று சுழன்று வந்துக் கொண்டே இருக்கின்றது. இது அவரவர் வினைப்பயனே அன்றி வேறு யாருடையதும் இல்லை.
கேள்வி 2. இந்த வினை அடுத்தப் பிறவியை நிர்ணயம் செய்கின்றது என்று அறிவுலகம் ஏற்றுக் கொள்ளாது. இது கடவுள் மறுப்பாளர்களின் கருத்து. தங்களின் கருத்தாகவும் இருக்கலாம். பாவமில்லை. அதனாலே தங்களுக்கு உண்மையை இன்று உணர்த்த வேண்டும் என்பது என்னுடைய வினைப்பயன். தொடரும்.
ஆணவ மலத்தில் அழுந்தி இருக்கும் உயிர், தன்னையும், தன் உள்ளே இருக்கும் கடவுளரையும் அறியாமல், புறத்தே இருக்கும் உலகப் பொருட்களையும், உலகியல் வாழ்வையும் நோக்கியே இருக்கிறது. இதனாலே, என் வளர்ச்சிக்கு நானே காரணம் என்பர் இறை மறுப்பாளர்கள். உயிர் தன்னையே எல்லாவற்றிற்கும் காரணம் என்று எண்ணி “நான்”, “எனது” என்ற முனைப்போடு செயல்படுவது வினை என்றும் அறியவும். அவ்வாறான நல்வினை, தீவினைக்கு (ஆகாமிய வினைக்கு) ஏற்ப புண்ணியம், பாவம் என்று சூக்கும நிலையில் சஞ்சித வினையாக நிலைத்து நின்று மீண்டும் அவ்வுயிர் பக்குவப்பட வேண்டி தனு, கரண புவன போகங்களைப் பெற்று வரும் பொழுது பிராரத்த வினையாக அவ்வுயிர்க்கு ஊட்டப்படுவது அந்த இறைவனின் செயலே. இதுவே வினையின் சுழற்ச்சித் தத்துவமாகும். தொடரும்.
ஏன் எல்லா நிலைகளிலும் சமமாக இருக்கும் பொழுது வெவ்வேறான பயன் வெளிபடுகின்றது. இதற்க்கு ஓர் எடுத்துக் காட்டை காண்போம். இரட்டை சகோதரர்கள் ஒரே சூழ்நிலையில் வளருகின்றார்கள், ஒரே பள்ளிக்குச் செல்கின்றார்கள், ஒரே ஆசிரியரிடம் கற்கின்றார்கள். ஒருவர் கல்வியில் சிறந்த அறிவாளியாகவும் மற்றொருவர் கல்வியில் கடை நிலையிலும் நிற்கின்றார். இது எமது உறவினர் குடும்பத்தில் நடக்கும் உண்மை நிலை. ஏன் இந்நிலை என்றால், இதற்க்கு ஒருவர் முயற்சி செய்தார், இன்னொருவர் முயற்சி செய்யவில்லை என்பீர்கள். ஏன் அந்த இன்னொருவர் முயற்சி செய்யவில்லை அல்லது முயற்சி செய்ய முடியவில்லை என்பதற்கு உங்களிடம் நியாயமான விளக்கம் இருக்க நியாயமில்லை. இது அந்தந்த உயிருக்கு ஊட்டபட்ட பிராரத்த வினையே (ஊழ்வினையே) காரணம் என்று விளக்கும் சித்தாந்தம். இன்னொரு எடுத்துகாட்டு. ஒரு சுல்தானின் மகனோ/மகளோ பிறக்கும் பொழுது தங்கக் கிண்ணத்தில் பால் பருகுகின்றார். படித்தாலும் படிக்காவிட்டாலும் ஒரு பட்டத்தை பெற தகுதியுள்ளவராக இருகின்ரார். வேலை செய்தாலும், வேலை செய்யாவிட்டாலும் மாத மாதம் அவருடைய அலவன்ஸ் அவருக்குச் சென்று சேர்ந்து விடும். படிக்காமலும், வேலை செய்யாமலும் ஒரு ‘Lamborgini’ வண்டியையோ அல்லது ஒரு ‘Porche’/Ferrari’ – யையோ ஓட்டிச் செல்ல தகுதி உடையவர்களாக இருகின்றார்கள். ஏன் உமக்கோ அல்லது எமக்கோ அந்த சுகபோக வாழ்க்கை அமையவில்லை? நீங்களும், நானும் எவ்வளவு முயற்சி செய்தோம் என்று நீங்கள் அறிவீர்கள், நான் அறிவேன். இருந்தும், ஏன் நம்மால் அந்த சுகபோக வாழ்க்கையை பெற இயலவில்லை. முதல் எடுத்துக்காட்டில் பிறந்த பிறகு சம நிலையில் வேற்றுமை. இரண்டாவது எடுத்துக்காட்டில் பிறக்கும் பொழுதே வேற்றுமை. இவ்விரு வித்தியாசமான வேற்றுமையை விளக்க கடவுள் மறுப்பாளர்களிடம் உள்ள காரணத்தை விளக்குங்கள் பார்ப்போம். இந்திய துணைக் கண்டத்தில் பிறந்த இறை நெறிகள் அனைத்தும் இந்த வினைப் பயன் சுழற்சியை ஏற்றுக் கொண்டன. ஆனால், கிறிஸ்துவ மதமோ அல்லது இஸ்லாமிய மதமோ இதை அவர்களுடைய மத நெறியாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனாலேதான், இன்றளவில் இந்திய துணை கண்டத்தில் பிறந்த தத்துவ நெறிகள் எவ்வளவு போட்டிகள் வந்தாலும் நிலைத்து நிற்கின்றன. தனித்துவம் பெற்றுள்ளன. தொடரும்.
கேள்வி 3. இந்த உலகில் பிறந்த முதல் மனிதனுக்கு எப்படி கர்மவினை வந்தது ; அவன் பரிசுத்தமாகத்தானே இருந்திருக்க முடியும்?? அப்படித்தானே பைபளும் சொல்லுகிறது!. இதற்குப் பதில் நாளைக்கு. தொடரும்.
என்று உயிரோ அன்றே ஆணவம் அதை மறைத்து நின்றது. இந்நிலையில் ஆணவமும் அநாதியே (என்றும் உள்ள பொருள்) . அதனாலேயே உயிர் அறியாமையில் அழுந்தி இறைவனை அறியாது துன்பங்களில் துவண்டு நின்றது. இந்நிலை, உயிர் இந்த பிரபஞ்சத்தில் ஓர் உடலைப் பெற்று வருவதற்கு முன்பே இருந்த நிலை. இது கேவல நிலையாகும். சித்தாந்தம், மனிதனின் உயிர்களை மட்டும் குறிக்கவில்லை. எல்லா உயிர்களையும் குறிக்கின்றது. ஆகையால், உலகில் பிறந்த முதல் மனிதன் (அவனின் உயிர்) பரிசுத்தமானதாகவே இருந்திருக்க முடியும் என்பது தவறான கருத்தேயாகும். பைபள் சொல்லும் தத்துவத்தை அறிந்த தாங்கள், இந்து என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளும் போது வேதாந்த தத்துவத்தையோ அல்லது சித்தாந்த தத்துவத்தையோ அறிந்திராமல் பைபிளின் தத்துவத்தை அறிந்து பரீட்சியம் பெற்றிருப்பதைப் பார்க்கும் பொழுது தாங்கள் இந்துவா, சைவரா என்ற சந்தேகமே எழுகின்றது. சிந்தியுங்கள். மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அறியாமையில் இருந்து விலகி இறைவனை ஏற்றுக் கொண்டு மெய் அறிவை நாடுங்கள். நலம் பெறுவீர்கள்.
ஆன்மாக்கள் யாவும், ஊழ்வினை காரணமாக மறுபிறப்பு எடுப்பது உண்மை என்றால், வருடா வருடம், மக்கள் தொகை அதிகரித்து கொண்டே போவது ஏன்? புது புது ஆன்மாக்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றனவா?
சொர்க்கம் நரகம் என்று நம் தவறுகளுக்கு தண்டனை இருக்கும் பொழுது, கணக்குகள் சரி கட்ட பட்டிருக்க வேண்டுமே.. ஏன் மறு பிறப்பிலும் தொடர்கிறது?
குழந்தைகள் உருவாவது மிக நுணுக்கமான விஷயம். ஒரு குழந்தை உருவாக 46 குரோமோசாம்கள் தேவை படுகிறது.. அதில் 23 தாயிடம் இருந்தும், 23 தகப்பன் இடம் இருந்தும் கிடைக்க பெருகிறது. இதில் ஆனா பெண்ணை என்பதை தந்தையின் உயிரணுவே உறுதி செய்கிறது. பிறகு தானியங்கி முறையில் சில விஷயங்கள் நடைபெறுகிறது. தாயிடம் சிவந்த மேனிக்கான உயிரணுவும், தந்தையிடம் கருத மேனிக்கான உயிரணுவும் இருக்கும் என்றால், அதில் எது வலிமை பெற்று உள்ளதோ, அதுவோ குழந்தைக்கும் கிடைக்கிறது. இப்படிதான் சிலரின் குணநலன் உருவாகின்றது.
இரட்டை குழந்தைகளில் கூட இருவகை உண்டு.ஒன்று, ஒரே கருமுட்டையில் உருவாகி, பிறகு அந்த சினைமுட்டை இரண்டாக பிரிந்து, வளரும். இத்தகைய இரட்டையர்கள் இருவரும் ஒரே பாலினராகதான் இருப்பார். ஒரே உருவாக்கம் என்பதால், ஒரே மாதிரிதான் இருப்பார்கள். மற்றொண்டு,, இரு சினைமுட்டைகள் கர்பையை வந்தடைந்து, இரண்டுக்கும் உயிரணு கிடைத்தால், ஏற்படும் இரட்டையர் வகை. இவர்கள் ஒரே போல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.ஒருவர் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். ஒரே பாலினரக இருந்தாலும், முக ஜாடை வேறு மாதிரியும் இருக்கும். இதெல்லாம் அடிப்படையான உருவாக்கம். ஆனால் குணமும் திறமைகளும், வளரும் சூழலே நிர்ணயம் செய்கிறது.அந்த குழந்தைகள் அவற்றை எப்படி கிரகித்து கொள்கிறார்கள் என்பதை பொருத்து. நீங்கள் சொல்வது போல் எல்லாவற்றுக்கும் கர்மவினை என்று காரணம் காட்டினால், நாளை யாராவது உங்களை கொன்று விட்டு, இது என் தவறல்ல, உங்களின் ஊழ்வினையே கரணம் என்று சொல்ல கூடும்.
தேனீ… நீங்கள் ஒருவரின் மூலத்தை அறிவதில் ஒரு சி.ஐ.டியைப்போல் ஆர்வம் காட்டுகிறீர்கள். அது ஒருவருக்கு முத்திரை குத்தி, நீர் இந்த வகையைச்சார்ந்தவர். உங்களுக்கு நம்பிக்கையும் இப்படித்தான் இருக்கும். ஆகவே எங்களைப் பற்றி வாதம் செய்ய நீங்கள் யார்? என்பன போன்ற ஒரு நிலைமையை உருவாக்க ஆசைப்படுபவரைப்போல் தெரிகிறது. நான் யார்? என் கொள்கை எப்படிப்பட்டது? என்பனவற்றை எல்லாம் தெளிவாக ஏற்கனவே அறிவித்துவிட்ட பிறகும் என்னை ஒரு குறிப்பிட்ட ஒரு மதச்சிறையில் சிறைவைக்க எத்தனிக்கிறீர்கள். நான் வள்ளுவனைப் பற்றி குறிப்பிட்டால் நான் வள்ளுவ அடிமை, நான் தாயுமானவரைக் குறித்தால் தாயுமானவ தாசன்.,நன் பைபிளை மேற்கோள் காட்டினால் நான் கிறிஸ்துவன், நான் மார்க்ஸ்சைப்பற்றி பேசினால் நான் கம்யூனிஸ்ட்,நான் பெரியாரையோ அல்லது காந்தியைப்பற்றி பேசினால் கடவுள் மறுப்பாளன் என்றும் அகிம்சாவாதி என்றும் முத்திரைக்குத்த நினைப்பது எப்படி ஆக்கபூர்வ சிந்தனையாகும். நான் எற்கனவே குறிப்பிட்ட மாதிரி நல்லத் தேன் எந்த மலரில் இருந்தாலும் எடுத்துக்கொள்ள தயங்கமாட்டேன். எனக்குக் கருத்துதான் முக்கியமேதவிர யார் சொன்னது? எந்த சமயத்தில் உள்ளது? என்றெல்லாம் பாகுபடுத்தி தள்ளுவது என் சுபாவமன்று. நான் முழுக்க முழுக்க பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டிருக்கும் சக்தியை ருசித்தவன் அதனால் ஏற்றுக்கொண்டவன். என்னை உருவாக்கியதால் அந்த சக்தி எனக்கு தகப்பன். அந்த சக்தி என்னை மகனே… என்று அழைத்ததால், அதை நான் அனுபவ பூர்வமாக இந்த மாமிச உடலைக் கொண்டே கேட்டு அனுபவித்ததால் நான் அதைக்குறித்து யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சாட்சியமிடுவேன். நான் அனுபவித்த அந்த அனுபவத்தை இந்த உலகத்தில் உள்ள எந்த மனிதனாலும் அனுபவிக்க இயலும் என நினைப்பவன். அவருக்கு மதமில்லை; ஜாதி இல்லை; அவர் என்னை தமிழனாக கண்டதால் என்னைத் தமிழ்மொழியில்தான் அழைத்தார். மற்றவர்களைப்போல் எவரோ எழுதிவைத்தத மதக் கடவுளை நான் கண்டறிந்தவனைப்போல் பிரசங்கிக்கவும் மாட்டேன். உலக இயல்புக்கு எது ஓத்துப்போகாதோ அதை அலட்சியப்படுத்துவேன். ஆனால் கருத்துத்திணிப்பு எங்கு நடந்தாலும் முடியுமட்டும் எதிர்ப்பேன். விரைவில் கருத்துரைப்பேன் நன்றி!
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் அவன் பிறப்பே உயர்வு. நான் சுல்தான் மகனாக பிறந்திருக்க கூடாதா என்று ஏங்குபவர்கள் மானம் கெட்டவர்கள். என் அப்பா சுல்தானாக இருந்திருக்க கூடாத என்று வேண்டுமமனாலும் ஏங்கலாம். சுல்தான் மகனாக பிறப்பது மிக உயர்ந்த பிறப்பு என்று தேனீ அவர்கள் நினைத்து கொண்டார் போலும். சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியான தந்தைக்கு பிறந்த ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் அதிபர் ஆகவில்லையா? அவர் ஊழ்வினை பயனை பற்றி சிந்திதிருந்தால்? தலைவிதி, கர்மவினை என்பதை எதற்காக சொன்னார்கள்? வாழ்கையில் சில தவிர்க்க முடியாத துன்பம் வரும்பொழுது, சட்டேன்ன்று தன்னை ஆறுதல் படுத்தி கொள்ளவே இதெல்லாம் சொல்ல பட்டது. உதரனத்திற்க்கு இறப்பு. அங்கே உணர்ச்சி வச படகூடாது என்பதற்காக, இதெல்லாம் விதி, அவரின் ஆயுள் இவ்வளவுதான் என்று எழுதப்பட்டுள்ளது என்றார்கள். ஆனால் நம்மர்வகள் யாரும் நம்மை கவனிக்கிறார்களா.!! என்று பார்த்து அலுத்து அரட்டுகிரார்கள். இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ, அமைதியான முறையில், ஆண்டவனின் தீர்ப்புக்கு எதிரே, கண்ணீர் சிந்தாமல், (மண்ணில் படாமல்) அடக்கம் செய்கிறார்கள்.
கர்மவினை என்பதெல்லாம் சோம்பேறிகளை அதிகரித்து விடும். மழை வருவது விதி என்றால், அதற்க்கு குடை பிடித்து தற்காத்து கொள்ள வழி உண்டு. துன்ப பறவை தலைக்கு மேல் பறப்பதை தடுக்க முடியாது, ஆனால் தலையில் கூடு கட்டுவதை நிச்சயமாக தடுக்க முடியும். விதி விதி என்று நினைத்தால் நாம் மதி இழக்க நேரிடும் தோழர்களே. இந்த கர்ம வினை பயன்கள் எல்லாம், லௌகிக வாழ்வை துறந்து போக நினைபவர்கள் படிக்க வேண்டியது. இப்பொழுது இங்கே யாரும் துறவியாக விரும்புவதில்லை. ஆகவே வாழ்வதையாவது சிறப்புடன், வள்ளுவர் சொன்னது போல் வாழ கருத்து சொல்ல வேண்டும்.
என்ட்டி குருஜி, தாங்கள் எந்த ஒரு சமயத்தின் கடவுள் கொள்கையும் முழுமையாக அறியாமல், அங்கும் இங்கும் நுனிப் புல் மேய்ந்து விட்டு இங்கே வந்து இரத்த வாந்தி எடுத்தால் யாம் என்ன செய்ய? இந்து சமய அல்லது சைவ சமய கடவுள் கொள்கைகையும் தாங்கள் முழுமையாகவும் அறிந்து வைத்திருக்கவில்லை. இது இந்த சமயத்தின் கடவுள் நெறி என்று சொன்னாலும் ஏற்க மறுக்கின்றீர்கள். நீங்கள் இந்துவாக இருந்து மற்ற இந்துக்களுக்கோ சைவர்களுக்கோ பயனில்லை என்றால் அப்புறம் இந்துக் கடவுள் விஷ்ணுவாகா இருந்தால் என்ன, சிவனாக இருந்தால் உமக்கு என்னய்யா? சென்ற வழியில், பார்த்து செல்லுங்கள். அங்கேயும் தடம் புரண்டு தடுக்கி விழுந்து அடிபட்டு விடார்தீர்கள். பின்னர் வேறு வழி இல்லாமல் மறுபடியும் இங்கே வந்து ஒட்டிக் கொண்டு குத்துதே, குடையுதே என்ற பழைய பல்லவி பாடாதீர்கள். தேர்ந்தெடுக்கும் வழி தீர்க்கமானதாக இருக்க வேண்டும். அதில் முழு நம்பிக்கையுடன் பயணிக்க வேண்டும். அப்பொழுதுதான் இலக்கை சென்று அடைய முடியும். இல்லையேல், மாலுமி இல்லாத கப்பலைப் போல் நடு கடலில் நின்றுக் கொண்டு தத்தளிக்க வேண்டி வரும். நடு கடலில் தத்தளிக்கப் போகின்றீரா அல்லது பிறவாக் கடல் நீந்தப் போகின்றீரா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். எனக்கு வயசாகி விட்டது. ஆதலால், உங்கள் கப்பலுக்கு நான் மாலுமியாக வர முடியாது. என் வழியில் நான் செல்கின்றேன். புரிஞ்சிக்கிட்டால் சரி.
“ஆன்மாக்கள் யாவும், ஊழ்வினை காரணமாக மறுபிறப்பு எடுப்பது உண்மை என்றால், வருடா வருடம், மக்கள் தொகை அதிகரித்து கொண்டே போவது ஏன்? புது புது ஆன்மாக்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றனவா?” இது உங்களுடைய கேள்வி. என் பதில். சந்தான ஆசிரியர் அறுவரில் ஒருவராகிய உமாபதிசிவாச்சாரியார் அருளிய “திருவருட்பயன்” இல் 11-வது குறளில் உள்ளது உங்களுடைய கேள்விக்குப் பதில். “பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாள் போலும் துறந்தோர் துறப்போர் தொகை”. இதன் பொருள், உலகம் தோன்றி இதுநாள் வரை கழிந்த நாட்கள் எவ்வளவு என்று கணக்கிலட முடியாதோ அந்த அளவு முத்தி பெற்ற உயிர்கள். அதுபோலவே, முத்தி பெறாத உயிர்களின் எண்ணிக்கை (உம் உயிர், எம் உயிர் போல இருப்பவை) இனி உலகம் முற்றழிப்பு செய்யப்படும் வரை இருக்கும் நாட்கள் எவ்வளவு என்று கூற இயலாதோ அவ்வளவு என்கின்றது இம்மெய்ஞான சாஸ்திர நூல். இதற்க்கு மேல் உங்களுக்கு விரிவான விளக்கம் தேவை இல்லை என்று நினைகின்றேன் என்ட்டி குருஜி.
நீங்கள் அறிவுறுத்தும் அறிவியல் பாடம் நான் 40 வருடத்திற்கு முன்பே படித்தது. அதை எனக்கு மறுபடியும் அறிவு புகட்டிய உங்களுக்கு நன்றி. ஒரு உயிரின் அறிவு வளர்ச்சியும் அடையும் பக்குவமும் நீங்கள் சொல்லும் “குணமும் திறமைகளும், வளரும் சூழலே நிர்ணயம் செய்கிறது” என்பது துணைக் காரியமே அன்றி முதற் காரணம் அல்ல. நான் இருப்பதும், இறப்பதும் என் கையில் இல்லை என்று முடிவு செய்து பல நாட்கள் ஆகி விட்டன. எப்பொழுது என் வினைப்பயன் முற்றுப் பெறுகின்றதோ அப்பொழுதே என் உயிர் வந்த நோக்கம் முழுமை அடைந்து என் உடலை விட்டு பிரியும். இதுவே இறப்பு. உயிர் வேறு, உடம்பு வேறு என்று உணர்ந்த எனக்கு உயிர் உடலை விட்டுப் பிரிவதில் எந்த ஒரு பயம் இல்லை. ஐந்தெழுத்து மந்திரமே என்னை இம்மையுலும், மறுமையிலும் காக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க!.
நான் சுல்தானாகவோ அல்லது அவரின் மகனாகவோ பிறப்பது மிக உயர்ந்த பிறப்பு என்று சொல்லவில்லை. நீங்கள், எல்லாம் அவன் அருள் இன்றி என் முயற்ச்சியால் மட்டுமே நடக்கின்றது என்று வாதிட்டால், ஒரு சுல்தானாகவோ அல்லது அவரின் மகனாகவோ பிறப்பதிர்க்கு “அவர்தம் உயிர் செய்த முயற்சிதான் என்ன”? எல்லாமே என் முயற்சியால்தான் வந்தது என்றால், இவ்வாறு வேற்றுமையில் பிறப்பதின் காரணம்தான் என்ன? பகர்வீர்.
“வினைப் பயன்” என்று சொல்லிக்கொண்டு சிவனே என்று செயலற்று இருப்பதை விட மடமை வேறேதுமில்லை என்பதை யாம் அறிவோம். பிறரும் அறியவேண்டும். ஆகையால், அறியாமையில் உள்ளவரே சோம்பேறிகளாக ஆவதற்கு தகுதியுடையவர்கள் என்பது நீங்கள் சொல்லி நான் அறியவேண்டியதில்லை.
“இந்த கர்ம வினை பயன்கள் எல்லாம், லௌகிக வாழ்வை துறந்து போக நினைபவர்கள் படிக்க வேண்டியது. இப்பொழுது இங்கே யாரும் துறவியாக விரும்புவதில்லை.” சைவ சித்தாந்தம் இல்லறத்தை விட்டு துறவியாகச் செல்ல சொல்லவில்லை. முனிவராகித்தான் முத்தி அடையவேண்டும் என்பது இல்லை. இல்லறத்தில் நின்று முத்தி அடைய இயலும் என்பதை 63 நாயன்மார்களின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் புரியும் அன்பரே!. இல்லறத்திலிருந்தே துறைவியாக வாழக் கற்றுக் கொள் என்கின்றது சைவ சித்தாந்தம்.
ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை ஜாதி வேறுபாடு உள்ளது? ஏனென்றால் எல்லா உயிரினங்களும் ஒரு ஆண் பெண்னில் இருந்து உருவானதே, அய்யன் திருவள்ளுவர் குற்றுபடி பார்த்தல் இறைவன் ஒருவனே, அப்படி இருக்கையில் தமிழர்கள் ( ஹிந்துக்கள்) மத்தியில் ஏன் இத்தனை சிலை (பல மாதிரி கடவுள்கள்) வழிபாடு, தெளிவாக விளக்கவும்.
ஆட்டகடிச்சி மாட்டகடிச்சி மனசனகடிச்ச கடிச்ச கதையா இருக்கிறது இவர்கள் தீர்ப்பு எல்லாம்
Typed with Panini Keypad
1-அவன் அசைந்தால் அசையும் அகிலமெல்லாம் ,அவனன்றி ஒரு அணுவும் அசையாது.பரம்பொருளின் அசைவினால் ஓர் அணு இரணுவாகி பின் கோடி கோடி அணுக்கள் ஒன்று சேர்ந்ததுதான் பஞ்சபூதங்களும் இந்த உலகமும்.இன்று வரை அந்த சேர்க்கை நடந்த வண்ணமாக இருப்பதால் உயிரினங்கள் பிறப்பு கூடி கொண்டேதான் இருக்கும். எத்தனை குடும்பத்தில் ஒரு பிள்ளையோடு வாழ்கின்றனர்? —- இப்போதாவது பரவாயில்லை முன்பு குடும்பத்தில் 10 பிள்ளைகளுக்கு மேல் இருப்பார்கள்! முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பது 33×000,000,000,000,000,000,000 (தமிழ் எண்ணிக்கையில் ஆக பெரிய என் 1×22 பூஜியங்கள் அல்லது
மயூகம் என பெயர் – தமிழன் பூஜியத்தை பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே உபயோகபடுத்தியவன்).தற்போது
உலக ஜனத்தொகை அதில் ஒரு சிறு எண்ணிக்கையே. அகவே நமக்கு முன் எத்தனை கோடி மக்கள் பிறவி எடுத்தனர் என்று யாருக்காவது தெரியுமா? வினைகள் மொத்தம் 4 வகைப்படும்: i)முன்னோர் செய்த வினை ii)ஊழ்வினை iii)ஊன் வினை iv)செய்வினை. இவை அனைத்தும் 7 தலைமுறைக்கு தொடரும்.
2.சொர்கமும் நரகமும் இங்கேதான் உள்ளது! தர்ம வழியில் வாழ்ந்த ஆன்மாக்கள் மீண்டும் தாங்களே பிழைகளாக பிறகின்றனர்.எங்கு
விட்டு சென்றார்களோ அங்கிருந்து அவர்கள் பயணம் மீண்டும் தொடரும். அவரவர் கரும வினைகள் அவர்கள் பிறக்கும் போதே
முதுகேளும்பில் பதிவு ஆகிவிடும் பின் அதன் படி அவர்கள்
வாழ்க்கை பயன் அமையும்.சொர்க்கம் என்பது இறுதி இலக்கு அல்ல தற்காலிகம் .
3.பிள்ளைகள் பிறப்பை பற்றிய தங்களின் கருத்து உண்மைதான்.
4.ஒருவன் கொலைசெய்ய படுவதும் அவன் கருமை வினையே.
5.ஜகவீரபண்டியன் அது தங்கள் விருப்பு வெறுப்பு,அதற்கு யாரும் குறுக்கிட முடியாது.
6.செருப்பு தைப்பவரும் தர்ம வழியில் வாழ்க்கை நடத்திருப்பாரனால் அவரும் அடுத்து எடுக்கும் பிறவி ஒரு நல்ல ஆத்மாவக
பிறந்து அதன்படி அவர் வாழ்க்கை தரமும் உயரும்.
7.இறைவனை துறவிகள்தான் அடைய முடியும் என எந்த hard and fast rule கிடையாது!
-மழை விதி,குடை மதி அகவே மதியால் விதியை வெல்ல
நம்மிடமே அனைத்தையும் கொடுத்துவிட்டான் இறைவன், தாங்கள்
சொல்வது உண்மைதான் தற்போது முப்பத்து முக்கொடி சோம்பேறி தேவர்கள் இறைவனுடன் சேர்ந்து விட்டனர்! தாங்கள் வள்ளுவனை பின்பற்றினால் சந்தோஷம்!
கர்மவினை எப்படி செயல்புரிகிறது என்று எந்த மனிதராலும் கூற முடயாது.இது நமது அறிவுற்கு அப்பாற்பட்டது.நமது மங்கிய புலன்களால் இதை அறிய முடியாது.மாடு புற்கள் தின்று பாலை தருகிறது,இந்த புற்கள் எப்படி சக்தியாக மாற்றம் பெற்று பிறகு இரத்தம்,பால் என்று உருபெறுகிறது?மனிதன் உண்ணும் உணவுகூட உடலின் மாற்றத்திற்கு முக்கிய பங்கு உண்டு.ஒவ்வொரு இரத்த அனுவும் எப்படி துள்ளியமாக இயங்குகிறது என்று எவரும் கூறமுடியாது!!! இந்த பூமி எப்படி அதன் சுழற்பாதையில் ஒழுங்குடன் இயங்கிக் கொண்டிருக்கிறது? சூரியன் கோடி வருடங்களாக ஒளியை தர அதற்கு எறிவாயு கழாய் எங்கிருந்து வந்தது. இவைகள் எல்லாம் எப்படி முறையாக இயங்குகிறது என்று விஞ்ஞானிகள் கூட சரியாக பதில் கூறவில்லை!!!விஞ்ஞானிகள் இறைவன் ஆற்றலை கண்டு தன்னடக்கத்துடன் தாங்கள் எவ்வளவு சிறியவர்கள் என்று உணர்ந்தனர். இது இப்படி இருக்க……கர்மவினை எப்படி மனிதனின் வாழ்வில் இயங்குகிறது என்று எவராலும் துள்ளியமாக கூறமுடியாது !!!!இருப்பினும் கர்மவினை மனிதர்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை!!!!!!!!!!!!
கர்மவினை எப்படி செயல்புரிகிறது என்று எந்த மனிதராலும் கூற முடயாது.இது நமது அறிவுற்கு அப்பாற்பட்டது.நமது மங்கிய புலன்களால் இதை அறிய முடியாது.மாடு புற்கள் தின்று பாலை தருகிறது,இந்த புற்கள் எப்படி சக்தியாக மாற்றம் பெற்று பிறகு இரத்தம்,பால் என்று உருபெறுகிறது?மனிதன் உண்ணும் உணவுகூட உடலின் மாற்றத்திற்கு முக்கிய பங்கு உண்டு.ஒவ்வொரு இரத்த அனுவும் எப்படி துள்ளியமாக இயங்குகிறது என்று எவரும் கூறமுடியாது!!! இந்த பூமி எப்படி அதன் சுழற்பாதையில் ஒழுங்குடன் இயங்கிக் கொண்டிருக்கிறது? சூரியன் கோடி வருடங்களாக ஒளியை தர அதற்கு எறிவாயு கழாய் எங்கிருந்து வந்தது. இவைகள் எல்லாம் எப்படி முறையாக இயங்குகிறது என்று விஞ்ஞானிகள் கூட சரியாக பதில் கூறவில்லை!!!விஞ்ஞானிகள் இறைவன் ஆற்றலை கண்டு தன்னடக்கத்துடன் தாங்கள் எவ்வளவு சிறியவர்கள் என்று உணர்ந்தனர். இது இப்படி இருக்க……கர்மவினை எப்படி மனிதனின் வாழ்வில் இயங்குகிறது என்று எவராலும் துள்ளியமாக கூறமுடியாது !!!!இருப்பினும் கர்மவினை மனிதர்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை!!!!!!!!!!!!
கர்மவினை உண்டு என்பதற்கு ஆதாரம்…..!மனிதர்களின் மனதில் இக்கேள்விகள் தோன்றினால் 1) நான் யார்? 2)நான் ஏன் பிறந்தேன்? 3)நான் இந்த உடலா அல்லது வேறு ஒன்றா? 3)இறப்பிற்கு பின் நான் எங்கு செல்வேன்? 4) இந்த இயற்கை எப்படி இயங்குகிறது ,இன்னும் இதுபோன்ற சில கேள்விகள் தோன்றினால்..இஃது கர்மவினையாலும் தன் உணர்வாலும் மனதில் எழுந்த விழிப்புணர்வுகள். இதுபோன்ற கேள்விகள் தோன்றவில்லை என்றால் அதுவும் கர்மவினைதான்.