-ஜீவி காத்தையா, செம்பருத்தி,கோம், அக்டோபர் 15, 2013.
மலேசிய கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட் “அல்லாஹ்” என்ற கடவுளைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புத்ராஜெயாவில் தீர்ப்பு அளித்தது. .
டிசம்பர் 31, 2009 இல், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி லவ் பீ லான் உள்துறை அமைச்சு “அல்லாஹ்” என்ற சொல்லை த ஹெரால்ட் பயன்படுத்துவதற்கு எதிராக விதித்திருந்த தடை சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்திருந்தார்.
அத்தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் செய்திருந்த மேல்முறையீட்டை செவிமடுத்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி லவ் அளித்திருந்த தீர்ப்பை நேற்று தள்ளுபடி செய்தது.
அம்மூன்று நீதிபதிகளும், பெடரல் நீதிமன்றத்துக்கு புதிதாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி முகமட் அபண்டி அலி, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் மற்றும் முகமட் ஸவாவி, மொத்தம் 102 பக்கங்களில் தங்களுடைய தீர்ப்பை கூறியிருந்தனர்.
“அல்லாஹ்” என்ற பெயர் பயன்படுத்தல் கிறிஸ்துவ சமயத்தின் முழுமையான நம்பிக்கை மற்றும் வழக்கமான நடைமுறைகள் ஆகியவற்றின் ஓர் அங்கம் அல்ல என்பது எங்களுடைய பொதுவான முடிவு” என்று நீதிபதி முகமட் அபாண்டி அவரது தீர்ப்பில் கூறுகிறார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று த ஹெரால்ட்டின் ஆசிரியர் கூறினார்.
விஷ்ணுவும் அமைச்சரவையும்
இந்தத் தீர்ப்பில் இரு கூறுகள் கவனத்தை ஈர்ப்பவைகளாக இருக்கின்றன:
- “புனித பைபளில் ‘யாவே’, புனித குரானில் அல்லாஹ், புனித வேதங்களின் கடவுளான விஷ்ணு போன்ற பெயர்கள் அவரவர் புனித நூல்களில் அவரவர் கடவுள்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதை முறையாக அங்கீகரித்தாக வேண்டும்.” (“Due recognition must be given to the names given by their respective Gods in their respective holy books such as ‘Yahweh’ in the holy Bible, Allah in the holy Quran and Vishnu the God of the holy Vedas.” )
- 1986 ஆம் ஆண்டில், அமைச்சரவை “அல்லாஹ்” என்ற சொல் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
இவ்விரு கூறுகளில் முதலாவதைக் கூறியவர் முகமட் அபண்டி அலி. இரண்டாவதைக் கூறியவர் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம்.
இந்தியாவின் “புனிதத் திருமறை நூல்களாக போற்றப்படும்” நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் மட்டுமே “பல்வேறு இந்து சமய தெய்வங்களுக்காகக் கொள்ளப்பட்ட ஆயிரம் துதிப் பாடல்களைக் கொண்டிருக்கிறது.” இவற்றை எல்லாம் படித்து அதில் கூறப்பட்டுள்ள பல்வேறு தெய்வங்களில் விஷ்ணுவை மட்டும் புனித வேதங்களின் கடவுளாக எப்படி முகமட் அபண்டி அடையாளம் கண்டு அங்கீகாரம் அளித்தார் என்பது ஒரு புறமிருக்க, த ஹெரால்ட் சம்பந்தப்பட அல்லாஹ் வழக்கிற்கும் விஷ்ணுவுக்கும் என்ன சம்பந்தம்?
நீதிபதி முகமட் அபண்டியின் இக்கூற்று அவரது அறியாமையாக இருக்கலாம் என்று தட்டிக்கழித்து விட முடியாது. மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதற்கு ஏதோ ஓர் அடிப்படை, ஓர் உள்நோக்கம் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் இந்நாட்டின் இன்றையச் சூழ்நிலையில் எழுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இந்நாட்டு இந்துக்களுக்கு இவர் ஒரு கடவுளை தேர்வு செய்துள்ளாரா? நீதிபதி முகமட் அபண்டியின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் எவ்வித மாற்றமும் இன்றி, குறிப்பாக விஷ்ணு இந்து வேதங்களின் கடவுள் என்று கூறியிருப்பதில் எவ்வித மாற்றமும் இன்றி, நிலைநிறுத்தப்பட்டால், எதிர்காலத்தில் இந்து கோயில்கள் உடைக்கப்படுவதற்கு இது ஒரு வலுவான ஆயுதமாக்கப்படலாம் என்ற சந்தேகம் தோன்றுவதற்கு இடமுண்டு.
இந்நாட்டில் பல்வேறு இந்து தெய்வங்களுக்கு கோயில்கள் இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இத்தீர்ப்பின் அடிப்படையில் விஷ்ணுதான் இந்துக்களின் கடவுள். இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆகவே இதர இந்து தெய்வங்களுக்கான கோயில்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று கூறுவதற்கு வாழை மரமும் தோரணங்களும் கட்ட அனுமதி மறுக்கும் அரசு அதிகாரிகள் தயங்க மாட்டார்கள்.
இந்து மதத்தை இழிவுபடுத்தியவரை பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தியவர்கள் இந்நாட்டு ஆளுங்கட்சியினர் என்பதை மறந்து விடக் கூடாது.
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்ய முயற்சிப்பதில் பலன் இல்லை. ஆகவே, சம்பந்தப்பட்டவர்கள் இந்தத் தீர்ப்பில் இந்து வேதங்களின் கடவுளாக கூறப்பட்டுள்ள விஷ்ணுவின் நியமனத்தை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, இந்தத் தீர்ப்பில் நீதிபதி அப்துல் அசிஸ் 1986 ஆம் ஆண்டில் அமைச்சரவை அல்லாஹ் என்ற சொல் பயன்படுத்துவதற்கு தடை விதித்ததை அவரது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், 2011 ஆம் ஆண்டில், அமைச்சரவை இச்சொல் பயன்படுத்துவதை அனுமதிக்கும் முடிவு எடுத்து அதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைக் கண்டு கொள்ளவில்லை.
பிரதமர் நஜிப் ரசாக்கின் தலைமையிலான அமைச்சரவை எடுத்த இம்முடிவு இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்கான ஓர் ஆக்கரமான முடிவு. பத்து அம்சங்கள் அடங்கிய இம்முடிவை கிறிஸ்துவ சம்மேளனத்திற்கு அறிவித்தவர் பிரதமர் நஜிப் ரசாக்.
இந்த பத்து அம்சங்கள் மிக முக்கியமானவை. அமைச்சரவை எடுத்த முடிவு. இதனை ஏன் அரசாங்கம் அமல்படுத்தவில்லை. ஏன் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை?
அமைச்சரவை 2011 ஆம் ஆண்டில் எடுத்த இந்த பத்து அம்ச முடிவு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, தேர்தலில் கிறிஸ்துவ சமூகத்தினரின் வாக்குகளைக் கவர்வதற்காக எடுக்கப்பட்டதா என்ற கேள்வி நியாயமானதே. நியாயமான ஒன்றை ஏன் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வியும் நியாயமானதே!
பிரதமர் நஜிப்பின் அமைச்சரவை 2011 ஆண்டில் ஒப்புதல் அளித்து கிறிஸ்துவ சம்மேளனத்திடம் அளிக்கப்பட்ட இந்த பத்து அம்சங்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும், அவை வாசகர்களின் கவனத்திற்கு மீண்டும் முழுமையாக வெளியிடப்படுகிறது.
பிரதமர் நஜிப் அறிவித்த பத்து அம்சங்கள்
“1. பகசா மலேசியா/இந்தோனேசியா உட்பட அனைத்து மொழிகளிலும் உள்ள பைபிள்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யலாம்.
2. இந்த பைபிள்களை தீவகற்ப மலேசியா, சாபா மற்றும் சரவாக்கிலும் கூட அச்சிடலாம். இது ஒரு புதிய முன்னேற்றம். இதனை கிறிஸ்துவ தரப்பினர்கள் வரவேற்க வேண்டும்.
3. சாபா மற்றும் சரவாக்கின் இபான், கடஸான் டூசுன் மற்றும் லுன் பாவாங் போன்ற பூர்வீக மொழிகளிலுள்ள பைபிள்களை உள்ளூரில் அச்சிடலாம், இறக்குமதியும் செய்யலாம்.
4. சாபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் பெரும் கிறிஸ்துவ சமூகம் இருப்பதை அங்கீகரிக்கும் வகையில் அனைத்து மொழிகளிலும் உள்ள, மலேசியா/இந்தோனேசியா மற்றும் பூர்வீக மொழிகள் உட்பட, பைபிள்கள் இறக்குமதி செய்வதற்கோ, உள்ளூரில் அச்சிடுவதற்கோ எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. எவ்வித முத்திரை அல்லது தொடர் எண் இடுவதற்கான தேவையும் இல்லை.
5. பெரிதான முஸ்லிம் சமூகத்தின் நலன்களைக் கவனத்தில் கொண்டு, மலேசிய தீவகற்பத்தில், மலாய்/இந்தோனேசிய மொழி பைபிள்கள் “கிறிஸ்துவ பதிப்பு” என்ற சொற்களையும், சிலுவை சின்னத்தையும் முகப்பட்டையில் கண்டிப்பாக அச்சிட்டிருக்க வேண்டும்.
6. ஒரே மலேசியா கொள்கைக்கு ஏற்பவும், அதிகமான மக்கள் சாபா, சரவாக் மற்றும் தீவகற்ப மலேசியாவுக்கிடையில் பயணிப்பதைக் கவனத்தில் கொண்டும், அவ்வாறான பயணத்தின் போது மக்கள் தங்களோடு கொண்டு வரும் பைபிள்கள் மற்றும் கிறிஸ்துவ பொருள்கள் மீது தடைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது.
7. பைபிள் பற்றிய அமைச்சரவையின் இந்த முடிவு முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் (கேஎஸ்யு) ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அமல்படுத்தத் தவறும் அதிகாரிள் பொது உத்தரவுகள் விதிகளின் கீழ் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர். சம்பந்தப்பட அரசு பணியாளர்கள் இந்த உத்தரவை நன்கு புரிந்து கொண்டு அதனை முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகள், சட்டத்துறை தலைவர் உட்பட, விசாலமான விளக்கம் அளிப்பார்கள் (இணப்பு 1 ஐ காண்க).
8. கூச்சிங், கிடெயோனில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 30,000 பைபிள்களை அவற்றின் இறக்குமதியாளர் எவ்விதக் கட்டணமுமின்றி பெற்றுக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட தரப்லினர்களுக்கு ஏற்பட்ட செலவுகள் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதே போன்ற முன்வைப்பு போர்ட் கிள்ளானில் 5,100 பைபிள்களை இறக்குமதி செய்தவருக்கும் கிடைக்கவிருக்கிறது. இதனை கடந்த வாரம் மலேசிய பைபிள் மன்றம் (பிஎஸ்எம்) பெற்றுக்கொண்டு விட்டது.
9. கிறிஸ்துவ விவகாரங்களுக்கு அப்பால், சமயங்களுக்கிடையிலான விவகாரங்கள் மீது கவனம் செலுத்தவும், அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப சமய விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கும் கிறிஸ்துவ மற்றும் இதர பல்வேறு சமயங்களுடன் செயல்பட அரசாங்கம் கொண்டுள்ள ஈடுபாட்டை அது மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது. இப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு நாட்டிலுள்ள இதர சம்பந்தப்பட்ட சட்டங்கள் கவனத்தில் கொள்ளப்படும். பிரதமர் என்ற எனது தகுதியில் இதற்கு ஒரு முன்னேற்றகரமான வழி குறித்து விவாதிக்க விரைவில் நான் மலேசிய கிறிஸ்துவ சம்மேளனத்தின் (சிஎப்எம்) பிரதிநிதிகளைச் சந்திப்பேன்.
10. எனது அமைச்சரவையின் கிறிஸ்துவ அமைச்சர்கள் ஒரு முறையான அடிப்படையில் பல்வேறு கிறிஸ்துவ தரப்பினர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதோடு, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகளோடும் என்னோடும் பணியாற்றுவார்கள். இந்நாட்டின் தலைவர் என்ற முறையில், நாட்டின் அனைத்து சமயப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அமைதியையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கு நமது சமுதாயத்தில் காணப்படும் பிளவுகளைச் சரிக்கட்டுவதற்கான தேவை இருக்கிறது. இதனை அடைவதற்கு மரியாதை, சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு மற்றும் நல்லிணக்கம் ஆகியவையே மிகச் சிறந்த வழி என நான் நம்புகிறேன்.”
அவர்களுடைய கோடிக்கணக்கான மத நூல்கள் நம்முடைய ஒரு(1)பாகவத புராணத்திற்கு சமம். பாரத தேசத்திற்கு இறைவன் அளித்த மஹாபாரதம் ஒரு மகா சமுத்திரம்.
மகாபாரதம் கிருஸ்ணனை உயர்த்தி காட்டும் ஒரு நூல். நல்ல அறிவோடு படித்தால் முன்னுக்கு பின் முரணான கருதுக்கள் ஏராளம், மத சார்பற்ற நூலான திருக்குறள் ஒன்றே போதும்.
அன்புள்ள ஆசாமி!!!!! மகாபாரதம் தர்மத்தை பற்றி பேசும் நூல்.பரத பூமியில் மட்டும் அல்ல வெளிநாட்டிலும் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்று கூறும் அளவிற்கு இன்று கிருஷ்ண நாமம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஐநூறு வருடங்கள் முன்பு, மேற்கு வங்கத்தில் அவதரித்த மாபெரும் துறவி, பொன்மேனியார், ஸ்ரீ கிருஷ்ணா சைதன்ய மகாபிரபு ,உலகம் முழுவதும் ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருநாமம் ஒலிக்கும் என்றார்.
பெருமானின் திருவாக்கு இன்று உண்மையாகிவிட்டது.இது மேலும் மேலும் தொடரும்.. ! இறைவன் திருஅவதாரம் செய்த அந்த பாரத மண்ணில் பிறந்து, நாத்திகம் கம்யுனிஷம் பேசி திரியும் மூடர்கள் மத்தியில், எங்கேயோ ஆயிரகணக்கான மைல்களுக்கு அப்பால் பிறந்து, வேத வைணவத்தை வரித்து கொண்டு..அன்றாடம் எம்பெருமானின் திருநாமங்களை ஜபித்து அவனுக்கு பக்தி தொண்டு புரியும் மேற்கத்தியர்கள் எவ்வளவு சிறந்தவர்கள்! எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள்! பற்பல பிறவிகளுக்கு பிறகு, ஞானம் பெற்ற ஒருவன் வாசுதேவனே எல்லாம் காரணங்களுக்கும் காரணமானவன் என்று என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிக அரிதானவன்! என்கிறார் பகவான்!
இன்று மேற்குலகில் லட்சகணக்கான மகாத்மாக்கள் அவதரித்துள்ளனர். அவர்களிடம் இருந்து நாம் பாடம் கற்போம்!
ஆசாமி- திருக்குறளில் ஆத்மாவிற்கும் பரமாத்மாவிக்கும் உள்ள தொடர்பை பற்றி பேசவில்லை. அறிவு நிறைந்தோர் அவழில்லா இன்பத்தை நாடுவர்!!!!!இந்த அழிவில்லா பேரின்பத்தை நாடும் வழியை கூறும் புனித நூல் பகவத் கீதை.பல ஞானிகள் இதை நன்கு உணர்ந்துள்ளர்.கீதையையும் கிருஷ்ணரையும் சந்தேகம் கொள்பவருக்கு என்றுமே ஞானம் உண்டாகாது..பகவத் கீதை அத்தியாயம் 15ஐ படித்து பாருங்கள் ….தெளிவு உண்டாகும்.
முகுந்தா உம்முடைய …… மூட்டைய இங்கு அவுத்து விடாதிர் ..
நீர் தெளுங்கரோ மலையாளியாகவோ இருக்கிறாய் என்பது நன்றாக தெரிகிறது .. தமிழர்கள் சைவ மார்க்கம் பின்பற்றுபவர்கள் .. சைவம் அறிவு சார்ந்தது… ஹிந்து மூ…. சார்ந்தது .. உமக்கு மூ….. வேண்டுமா அல்லது அறிவு மார்க்கம் வேண்டுமா???
இதற்குமேல் உம்முடைய மூட்டையை செம்பருத்தியில் திணித்தால் அப்புறம் நாமும் கிளறவேண்டிவரும் .. நல்ல பழுத்த ஆரியபழம் எழுதிய இந்துமதம் எங்கே செல்கிறது என்ற நுலிலிருந்து பதிலளிப்போம்..
எல்லா தவறுகளுக்கும் மதங்கள் காரணமல்ல “நான் இன்ன மதத்தவன் ” என்று சொல்லிக்கொண்டு அவரவர்களின் மத முதன்மை கருத்துக்கு, அடிப்படைக்கு, அஸ்திவாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறம்பான வெறிக்கு இடம்கொடுப்பதால் வருவதே சமயத்திற்கும் அந்த சமயத்தைச் சார்ந்தவருக்கும் ஏற்படுகின்ற அவமானங்கள். எல்லா மதங்களிலேயும் நல்லவையும் கெட்டவையும் இருப்பதை சுட்டிக்காட்ட இயலும். அது சமயத்தைக் கையாண்டவர்களின் தவறேயன்றி சமயத்தின் மையக் கருத்தினால்… நோக்கத்தினால் அல்ல என்பது மிகத் தெளிவு. நான் அன்பர்களோடு வாதிடக் காரணமே தவறான புரிந்துணர்வைக்கோண்டு கருத்தை முன்வைத்ததுதான் முதல்காரணம். சைவம் எல்லா மத வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டுள்ளது.உலகில் எதை எப்படி எந்த முறையில் வழிபட்டாலும் இறுதியில் கடைசியாக அந்தப் பரம்பொருளையே சென்றடையும் என்ற உண்மையை எந்த ஒரு தயக்கமுமின்றி சைவநூல் இயம்புவதைக் காண்கிறேன். இப்படி உலகம் மெச்சும் சகிப்புத்தன்மைகொண்ட சைவர்கள் சமணசமய கோயில்களை சூரையாடி,அடித்து தன்புறுத்தி அவர்களின் கோவிலகளை சைவக் கோயில்களாக மாற்றினர் என்ற வரலாற்றை புள்ளிவிபரத்தோடு கண்டபோது அதிர்ச்சியடைந்தேன். ஆனாலும் இதுபோன்ற தவற்றுக்கெல்லாம் சைவத்தை குறைசொல்லக்கூடாது. அந்த அந்தக் காலத்தில் ஆட்சி அதிகாரத்திலிருந்தவர்களின் சமயஅரசியல் வெறியைத்தான் குறைசொல்ல வேண்டும். இப்படிப்பட்ட வரலாறு எல்லா மதவரலாற்றிலும் காணலாம். ஒவ்வொருவரின் சமய தத்துவங்கள் , அதன் தத்துவ விளக்கங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போவதால் ஒன்றும் பெரிய பாவமாகிடாது. ஏற்றுக்கொள்ளும் காலம் பிறகு வந்தாலும் வரலாம் ; வராமலும் போகலாம். ஆனால் அந்த தவறுகளை நியாயப்படுத்த சப்பைக்கட்டு கட்டுவதுதான் கூடாது.
கலை !!!!!!!! தமிழர்களோ,தெளுங்கரோ மலையாளியாலியோ,இந்தியோ,பஞ்சாபியோ இவையல்லாம் உம் போன்ற இன வெறி கொண்டு பேசும் மனிதன் நானல்ல!!!உடல் சார்ந்த வாழ்க்கை வாழும் மனிதன்,என் இனம்,என் மதம்,என் ஜாதி,என் குடும்பம்,என் நாடு,என் சொத்து,நான் பெரியவன்,என்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை என்று உளரியபடிய மண்ணோடு மண்னாய் மாண்டு போவான். ஒன்றே குளம் ஒருவனே தேவன் !!!!!அந்த தேவன் இனம்,மதம்,ஜாதி போன்றவைக்கு அப்பாற்பட்டவன்!!!! அவனுக்கு இன வெறி இல்லை!!!!அந்தோ பாவம்….அவனை வணங்கும் மனிதனுக்கு ஆணவம்தான் மேலோங்கிருக்கிறது.
சைவ சித்தாந்தம் என்பது 4 நாட்களில் Wikipedia வில் தேடி அலைந்து எடுத்து வந்து பாய் விரிபதற்க்குரிய சமயமில்லை. முறையாக சைவ சித்தாந்தத்தை கற்று அறிந்த ஆசிரியரிடம் குறைந்தது 12 மாத காலாமாவது தொடர்ந்து கற்றுக் கொண்டால் ஒழிய சித்தாந்தம் கையகப்படாது. தொடரும்
இந்த முகுந்தன் கொஞ்சம் குழப்புகிறார். கிருஷ்ணன் மட்டுமே தெய்வம் என்பது போலவும் பேசுகிறார். அப்புறம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் சொல்கிறார். அனால் ஒன்று மட்டும் உண்மை, திருக்குறளை விட பகவத்கீதை ஒன்றும் பெரிதாக சொல்லிவிடவில்லை. மூன்றாம் உலக போருக்கு போவதற்கு முன்னாள் வேண்டுமானால், பகவத்கீதை படிக்கலாம். கிருஷ்ணர் மகாபாரததில், எத்தனை சூழ்சிகள் செய்கிறார்.
இந்து சமயத்தை எப்படியெல்லாம் தூற்ற வேண்டும் என்று போலியான குருமார்கள் தங்களவர்களிடம் ஒரு நீண்ட ‘லிஸ்டே’ கொடுத்திருப்பார்களே!. எந்த எந்த வேத மந்திரங்களை மேற்கோள் காட்டி, ஆரிய பிராமணர்களின் அறிவுக்குப் புறம்பான சமய சட்டங்களை எப்படி எப்படி தங்களவர்களுக்குச் சாதகமாக்கி தமிழனை திசை திருப்ப வேண்டும் என்று!. மாறிய தமிழனே, மரத்தமிழனுக்கு கோடரி கம்பாக வந்து, என் அருமைத் தமிழிலே தடம் புரட்ட எத்தனை நாளாய் காத்திருந்தாய்? இந்து மதம் போலியான புறச் சமயங்களுக்கு போட்டியாக விளங்கியதாலே புறம் சொல்ல எத்தநித்தீர். மூக்கறுந்தினீர். தேவையா இது உமக்கு?. சைவ சமயம் மற்ற போலியான சமயங்களுக்கு போட்டியாக இருக்கவில்லை என்பதால் தங்கள் குருமார்கள் இச்சமயத்தை இழிவு படுத்த மற்றொரு மாற்று ‘லிஸ்டை’ தன்களவர்களிடம் கொடுக்க மறந்து விட்டார்கள் போலும். ஆனால் தாங்கள் சைவ சமயத்தை கொலை செய்ய எண்ணி, ஆதாரமில்லாத கொலைப் பழியை எம்மீது சுமத்தினீர். தங்களுடைய முகத்திரையை தாங்களே கிழித்துக் கொண்டீர். தேவையா இது உமக்கு?. தொடரும்.
இறுதியாக ஒன்றைச் சொல்லிவிட்டு இப்பகுதியில் இருந்து விடை பெற விரும்புகின்றேன். போலிச் சமயங்களை பிரித்தெடுத்து, புரிந்து அறிந்துக் கொண்டு விலகி இருக்க எங்கள் ஆசான் எங்களிடமும் ஒரு நீண்ட அட்டவனையை கொடுத்துள்ளார்கள். ஆனால் புறச் சமயங்களைப் புறம் சொல்ல இந்த அட்டவணைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் கட்டளையிட்டுள்ளார். இது மறத்தமிழனின் மரபு. பரந்த மனம் கொண்டவன், பண்புடையவன் மறத்தமிழன், மாறியத் தமிழனைப் போல் அல்லாமல். தேவை ஏற்பட்டால் ஆசானின் அறிவுரைக்கு இணங்க இவ் அட்டவனையை பயன்படுத்தவும் தயங்கமாடோம். எமது நெற்றிக் கண்ணை திறக்க வைத்து விடாதீர்.
“இப்படி உலகம் மெச்சும் சகிப்புத்தன்மைகொண்ட சைவர்கள் சமணசமய கோயில்களை சூரையாடி,அடித்து தன்புறுத்தி அவர்களின் கோவிலகளை சைவக் கோயில்களாக மாற்றினர் என்ற வரலாற்றை புள்ளிவிபரத்தோடு கண்டபோது அதிர்ச்சியடைந்தேன்”. உங்கள் புள்ளி விபரத்தை விக்கிபீடியாவே ஆதரமற்றது என்று கூறும் பொழுது, நீங்கள் வலைப்பகுதியில் இருந்து சுட்டெடுத்த ஆதாரத்தின் முகவரியை இங்கே குறிப்பிடவும். நாங்களும் படித்துத் தெரிந்துக் கொள்ள ஆர்வம் கொண்டுள்ளோம்! யார் பொய்யர், யார் மெய்யர் என்று.
சைவமும் அதன் தத்துவங்களும் அதைக் கையாண்டவர்களைவிட சிறப்பானதே. நீர் உம்மை சிவன் என்று பறைசாற்றிக்கொன்டாலும் ஒரு உண்மை சைவனுக்குள்ள நிதானமும் பொறுமையும் தங்களிடம் கொஞ்சம்கூட இல்லாததைக் கண்டு தாங்கள் உண்மையிலேயே சைவனா?அல்லது மதவெறியனா? என்று எண்ணவேண்டியுள்ளது. உம்மைபோன்று சைவத்தைத் தவறாக புரிந்துகொண்டவர்களால் மாத்திரமே மற்ற சமயத்தவரை இழிவாகவும் கேவலமாகவும் பேச இலலும். தத்துவ தர்கத்திற்குள் நான் தற்போது இறங்கவில்லை.காரணம் விவாதம் திசைமாறிவிடும் என்பதால். என்னுடைய ஆரம்ப கேள்வியே ஒருவன் தாழ்ந்த குலத்தில் பிறப்பதற்கு கர்மா காரணமா? ஒருவன் ஏழையாகவும் பணக்காரனாகவும் இருப்பதற்கு கர்மா காரணமா? அரசனாகவும் ஆண்டியாகவும் இருப்பதற்கு / பிறப்பதற்கு கர்மாதான் காரணமா? இலங்கையிலே லட்சம்பேர் கொல்லப்பட்டதற்கும் கர்மாதான் காரணமா என்பதே. இவற்றிக்கு கர்மாதான் காரணமென்றால் … பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் சிறப்புமட்டிலும் செய்கின்ற தொழிலைச் சார்ந்து இருக்கும் என்று வள்ளுவன் கூறுகின்றானே … அப்படிஎன்றால் பிறப்பின் ஏற்றத் தாழ்விற்கு கர்மா எப்படி காரணமாக முடியும் ? சரி… எண்ணியர் எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பேரின் என்று சொல்வதிலிருந்து ஒருவனின் உயர்விற்கும் தாழ்விற்கும் கர்மா காரணமல்ல ஒருவனின் உள்ளத்திடமே கரணம் என்று இருக்கும்போது கர்மாவைக் காரனப்படுத்துவது சரியாகுமா? என்பதே என்கேள்வி. இதற்கான பதிலை நீர் நேரடியாக சொல்லவே இல்லை. இதற்கான பதிலை நீர் தெளிவாக சொல்லவில்லை என்றால் உம்மோடு தொடர்ந்து வாதிடுவது வேஸ்ட். எதோ தாங்கள் ஓரி தமிழனைப் போலவும் நாங்களெல்லாம் தமிழனே இல்லாததைப் போலவும் கோடாரிக்காம்பு அது இது என்று தமிழ்ப் பண்பாடற்ற தரக்குறைவான எழுத்துக்களை எழுதி உங்களையும் நீங்கள் சைவன் என்று மார்தட்டிக் கொள்கிறீரே அந்த சமயத்தையும் அவமானப் படுத்தாதீர். நீங்கள் கேட்ட தளத்தையல்ல புத்தகத் தலைப்பையும் ஆசிரியரையும் ஒவ்வொரு நாளும் பட்டியலிடுகிறேன் நீர் கேட்டுக் கொண்டதற்காகவேயன்றி உமது சமயத்தை சாட அல்ல.ஏனென்றால் உம்முடைய சமயம் உங்களைவிட சகிப்புத்தன்மை மிக்கது. அது சரி … படித்த பண்டிதனும் சைவனுமாகிய மறைமளையடிகளாலேயே சாதிவேறியிலிருந்து தப்பமுடியாத போது மற்றவர்களைப்பற்றி சொல்ல வேண்டுமா என்ன???
ஜெகவீர பாண்டியன் நீர் ஒரு கோடரிகாம்புதான்……
தமிழர்களின் சைவமார்க்கம் யாரையும் பிரச்சாரம் செய்து கவர்ந்திழுப்பதில்லை… நீர் பார்ப்பனன் வகுத்த சாதிவெறியால் மதம்மாறிநீரோ??? இசைஞானி இளையராஜா, அவர் மகன் யுவன் சங்கர்ராஜா அவர்களும் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட தாழ்தபட்டவர்களே!! இன்று உம்மை போன்று மதம் மாறாமல் புகழின் உச்சியில் இல்லையா இசை ஞானி!!!??? மூட்டப்பூசிக்கு பயந்து என்னமோ செய்தானாம் சோணகிரி கதை… உம்மைபோன்று ஒரு கோடரி இருந்தான் அவன் இயற்பெயர் சேசாச்சலம். பிறப்பு இந்து குடும்பம்… வாலிப பருவம் நாத்திகம் அதனால் பெயரை மாற்றி பெரியார்தாசன் என்றுவைத்தான்… பின்பு அம்பேத்கார் புத்தகம் படித்து புத்த மதத்திற்கு மாறி போனான்… நாத்திகம் பேசியவன் தொலைகாட்சியில் ராசிகல்லு வித்து ஜோதிடம் சொல்லி பொழப்பு நடத்தினான்… பிற்பாடு வறுமை காரணமாக 2010–ம் ஆண்டு அபுதாபி சென்றான்… அங்கு தன் பள்ளி தோழனை (இஸ்லாமிய போதகர் ) கண்டார். தன் கஷ்டத்தை நண்பனிடம் பகிர்ந்துகொண்டார்… நண்பரின் போதனையால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு அப்துல்லா பெரியார்தாசன் ஆகினார்… இருந்த போதிலும் பெரியார்தாசன் என்ற புனைப் பெயரிலேயே கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதுடன் திரைப்படங்களில் நடித்து வந்தான்…. தன் பிழைப்புக்காக செயல்பட்டானே ஒழிய… வேறெதுவும் இல்லை… மின்னல் எப் எம் வானொலியில் இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசினான். தன் வயிற்று பிழைப்புக்காக… இஸ்லாத்தை தழுவியதை குறை சொல்லவில்லை… எதிர்வீட்டுக்காரன்கூட சேர்ந்து சொந்த வீட்டுக்குள் கல்லெறியாதிர்கள்…!!!!!
அடப்பாவிகளா… என்னை ஒரு மதம் பிடித்தவனாகவே உங்கள் விருப்பத்திற்கு மடிவு செய்துகொண்டால் அதற்கு உங்கள் அறியாமைதான் காரணம். கண்ணை முடிக்கொண்டு என்னை மதம்மாற்றிய கலை எனும் பெயரில் கொலைகாரனைப்போல் ஆவேசப்படுபவரே… நான் ஒரு கோடாரிகாம்பாகவே இருந்துவிட்டுப் போகிறேன். கவலையில்லை. அறிவிருந்தால் என் கேள்விக்கு பதில் சொல்லும். வாய்சவடால் பேசினால் சமயம் எனும் பெயரில் உம்மைப்பொன்றவர்கள் மதவெறிபிடித்து செய்த அட்டூழியங்களைப் பட்டியலிடுவேன். இளையராஜாவின் குடும்பத்தினரை தாழ்தப்பட்டதென்று சொல்லும் நீரெல்லாம் சமயத்தைப்பற்றி அகிம்சாமூர்த்தியைப்போல் பேச வருகிறீர்???
ஜெகவீரபாண்டியன், நீங்கள் எம் வழிக்கு வந்து விட்டீர். நீங்கள் ஓர் இந்துவோ, சைவரோ இல்லை என்று ஒப்புக் கொண்டீர்கள். உங்களுக்கு எங்கள் மத/சமய கோட்பாட்டில் நம்பிக்கை இல்லை என்று தெள்ளத்தெளிவாக கூறிவிட்டீர்கள். அப்புறம் உங்களுக்கு வினைப்பயனை பற்றி விளக்குவதில் என்ன பயன்?. உங்கள் மொழியில் சொன்னால் அது ‘வேஸ்ட். அடுத்து, 7-11-2013 தேதி நீங்கள் சைவர்கள் சமணத்தவர்களை கொன்ற புள்ளிவிவரப் பட்டியலைக் கண்டு “அதிர்ச்சியடைந்தேன்” என்ற விவரத்தை இரவு 11.00 மணிக்கு படித்தேன். உடனே ஆதாரத்துடன் மறுப்பெழுதி கருத்தை வலையேற்றியவுடன் செம்பருத்தி உமது கோணங்கித்தனமான கருத்தை கனகச்சிதமாக வெட்டி ஒட்டி திருத்தம் செய்தது. என்னுடைய கருத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. காரணம் வெகுண்டெழுந்து பொய்யைத் தற்காத்து பேசியதுதான். கொட்டக் கொட்டக் குனியும் தமிழன் “நல்லவன்”. தனது சமயத்தைப் புறம் சொல்லிப் பேசும் மாற்றான் மதத்தவனை எதிர்த்தால் “மதவெறியன்”. எங்கே இருந்து கற்றுக் கொண்டு வந்தீர்கள் இந்த அடைமொழியை. “அல்லாஹாஜ்” என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று முஸ்லிம் சொன்ன கூற்றுக்கு மரத்தமிழர்களையும், இந்துக்களையும் உங்களுடன் சேற்றுக் கொண்டு எங்களையும் பலிகடாவாக்கப் பார்த்தீர்கள். விழித்துக் கொண்டோம். பிழைத்துக் கொண்டோம். தொடரும்.
சைவர்கள் அன்பு நெறியில் நிற்பவர்கள். அவர்கள் மென்மையானவர்கள். உண்மைதான். ஆதலால்தான், சைவர்களை ஆரியன் மதம் மாற்றினான், முஸ்லிம் மதம் மாற்றினான், கிறிஸ்துவனும் மதம் மாற்றினான். நாங்கள் உலக நடப்பை புரிஞ்சுகிட்டோம், தெளிவடைஞ்சுவிட்டோம். ஆதலால் தேவை ஏற்பட்டால் எங்களை தற்காக்கவும் கற்றுக் கொண்டோம். இதற்குப் போய் எங்களை “மத வெறியன்” என்றால், “அல்லாஹாஜ்” என்ற சொல்லை மறைமுக நோக்கத்தோடு பயன்படுத்த வேண்டாம் என்று சொன்னதற்கு மண்ணுக்கும் விண்ணுக்கும் எகிறி குதிக்கும் கிறிஸ்துவர்களை எந்த அடைமொழியில் அழைக்கவேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள். தொடரும்.
சைவ சித்தாந்தத்தை இழிபட கூற உமது மதபோதகர்கள் ஒரு ‘லிஸ்ட்’ தயார் செய்யவில்லைப் போலும். அப்படியே சித்தாந்தத்தை பிரசங்கித் தனம் செய்யப் போய் எங்கே தம் மத தத்துவமே அடிபட்டுப் போய் விடும் என்று பயந்து அடக்கிக் கொண்டு வாசிகின்றார்கள் போலும். உங்களுக்கும் சைவ சித்தாந்த எதிர்ப்பு லிஸ்ட் கிடைக்கவில்லையாதலால், அதனுள் நுழைய மறுக்கின்றீர்கள் அல்லது மூக்கறும் என்று பயபடுகிண்றீர்கள். எதுவாக இருந்தாலும் காரியமில்லை. இதுநாள் வரை யாம் புற சமயங்களை நினைந்து இகழ்ந்தது கிடையாது. ஆதால்தான், நெற்றிக் கண்ணை திறக்க வைக்காதீர் என்றேன். யாம் பரம்பொருளாக உருவேற்றிக் கொள்வதற்காக அல்ல. ஆனால் நீரோ, இந்து மதத்தையும், சைவ சமயத்தையும் புறம் பேசி இகழ்ந்து வாழ்த்தினீர். நல்ல எண்ணத்தில் செய்கின்றீர் என்று தடம் புரட்டப் பட்ட இந்து மதத்தை தரணியில் நிற்க வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கரம் கொடுத்தேன். கொடுத்தக் கையையே பிடுங்கி எடுக்க நினைத்த உம்மை தக்க சமயத்தில் என்பெருமான் அருளால் சூசகமாக உணர்ந்தேன். கையை விடுவித்துக் கொண்டேன். நாம் உன்னை அறிந்ததால் உமக்கு நான் “மத வெறியன்” ஆனேன். உன் வரையில் அப்படியே இருக்கட்டும். நலம். நாடுவதும் அதுவே.
இறுதியாக, இந்திய நாட்டில், தமிழர்க்கு மட்டும் ஜாதியம் ஒரு கொடுங்கோலனாக இருக்கவில்லை மாறாக தெலுங்கர்கள், மலையாளிகள், வடநாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தியாவின் ஈரெட்டு பதினாறு திக்கிலும் சாதியம் தலை விரித்தாடிக் கொண்டிருகின்றது. இதற்க்கு மறைமலை அடிகள் என்ன, அத்துணை சங்கராச்சாரியார்களும், ஆதீனங்களும் அடிமையே. இதை நான் 25-10-2013 வலையேற்றிய கருத்தில் ஏற்றுக் கொண்டேன். மறைக்கவில்லை, மறுக்கவில்லை. யாம் வேண்டுவதெல்லாம், இம்மலைத் திருநாட்டில் வாழும் தமிழர்கள் ஒன்றுபட்டு சாதியத்தை ஒழிப்போம் வாரீர் என்பதுதான். அதற்க்கு இந்நாட்டில் இன்னும் இடம் இருக்கிறது. சைவத்தின் வழி. புதியதோர் உலகம் படைப்போம் வாரீர்.
மதநல்லிணக்கம் இல்லாமல் போவதற்கும் ,மதஅராஜகம் தலையெடுப்பதற்கும், சமயதீவிரவாதம் உருவெடுப்பதற்கும் மதவேற்றுமைக்குள்ளே ஒற்றுமையைக் காணமுடியாமைதான் காரணம். அதனால்தான் நாங்களே சிறந்தவர்கள்,எங்களின் வயழிமுறையே சிறந்தது என்றும் மற்றதெல்லாம் கீழ்தான் எனும் மனநிலை வெறியாக உருவெடுக்கிறது. உதாரணத்திற்கு ,”அன்பே கடவுள்” என்று எல்லா சமயங்களுமே சொல்லுகின்றன. அன்பிற்கு பாகுபாடே கிடையாது. அது உள்ளத்தைப் பார்க்குமேயன்றி உருவத்தையோ மற்ற வேறுபாடுகளையொ காணாது. ஆனாலும் பாருங்கள் அன்பே கடவுள் என்று சொல்லிக்கொண்டே தவறு செய்பவர்களை கையை வெட்டவேண்டுமன்பதும் காலைவெட்டவேண்டுமென்பதும்,தலையை வெட்டவேண்டுமென்பதும் , மற்றவர்களை சாத்தான் வழிபாட்டினர் என்பதும், ஒருவர் மற்றவர்களின் வழிபாட்டுமுறையை தூற்றிப்பேசுவதும் அன்பான கடவுளை வழிபடுகிறவர்கள் செய்யக்கூடிய காரியமா? இப்படிப்பட்ட முறன்பாடுகள் எப்படி அன்பை வளர்க்கும்? இறைவனை ஒருவன் எப்படிவேண்டுமானாலும் வணங்கிக்கொள்ள உரிமை இல்லையா? அல்லாஹ் என்று நாங்கள்தான் சொல்லவேண்டும் என்றும் மற்ற சமயத்தவர் அப்படி அழைக்க முடியாது என்று அவர்கள் புனித நூலிலே எங்காவது சொன்னதுண்டா? தவிர, கிறிஸ்துவர்கள் செய்வது சரி என்று நான் சொல்லவில்லையே? மேலும் நீங்கள் ஏன் என்னை மற்ற மதக்காரனாக எண்ணிக்கொண்டு கேள்வி தொடுக்கிறீர்கள்? மதமற்ற ஒருவன் நல்ல நோக்கில் மதங்களில் உள்ள குறைகள் என்று தெரிபவற்றைச் சுட்டிக்காட்டக்கூடாதா? அதைச்சொல்ல நீ யார் என்றால் நானும் திருப்பிக் கேட்கலாம்தானே?
தேனீ… நீங்கள் தவறான தகவலை வாசக அன்பர்களுக்குத் தந்து, செம்பருத்தி கனகச்சிதமாக எனது கோணங்கித்தனமான கருத்தை வெட்டி ஒட்டி திருத்தம் செய்து வெளியிட்டதாக அபாண்டமாக ஒரு பொய்யை நேரில் பார்த்தவரைப்போல் சொல்கிறீர். சைவன் என்று சொல்லும் நீர் இப்படி நடந்துகொள்வது சரியா? செம்பருத்தி வெட்டும் அளவிற்கு தரம்கெட்டு தவறான தகவல் தருபவனல்லன் நான். பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் குறித்ததை நான் ஆதாரபூர்வமாக தந்தும் ஒரு வேளை உமது நலம் கருதி வெளியிடாதிருந்தால் அக்கணமே கருத்திடுவதை நிருத்தி இருப்பேன்.
ANTI குருஜி, .!!!!குழம்பி இருப்பது நீங்கள்தான். நீங்கள் சிவ பக்தரா ?நல்லது !!அவருக்கு சேவை செய்யுங்கள்.பக்தி சேவை செய்யுங்கள்.நாயன்மார்கள் வாழ்ந்த வாழ்க்கையை பின்பற்றுங்கள். தினமும் அவரின் நாமம் ஜபம் பன்னுங்கள். சிவனின் புகழை பிரச்சாரம் பன்னுங்கள். அவர் சிறப்பை உலகத்துக்கு பரைசாற்றுங்கள் . சரியை,கிரியை,யோகம் போன்ற சேவைகள் முறையாக அமல்படு்த்துங்கள். காதலாய் கசிந்து கண்ணீர் மழ்க ஓதுங்கள்.சைவ நெறியில் கூறப்பட்ட கட்டலைகளை பன்பற்றுங்கள் இவற்றை பக்தி நெறியில் செய்யும்போது வேற்றுமையில் ஒற்றுமை காண்பீர்கள்!!!!!உங்களுக்கு தெளிவு பிறக்கும். அவருக்கு பிரியமானவராக இருப்பீர்கள் !!!!
இவைகளை உங்களால் பின்பற்ற முடியவில்லையென்றால்,உங்கள் கடமைகளை பற்றற்று செய்யுங்கள்,இதுவும் முடியவில்லையென்றால், நன்னெறி பன்புகளை முழுமையாக, வாழ்க்கையில் அமல் படுத்துங்கள். உங்களுக்கு அளவற்ற இன்பம் ஏற்படும்….இறுதியில் வீடு பேறு அடைவீர்கள்.!!!!!
பகவத் கீதை தன் பக்தர்களுக்காக ஸ்ரீகிருஷ்ணர் உபதேசம் செய்தார்.கீதையில் உள்ள ஆழமான கருத்துக்கள் பக்தர்களுக்குதான் புரியும்.இதை அவரே தன் கீதையில் கூறியுள்ளர். நீங்கள் பக்தராகும்போது ஸ்ரீகிருஷ்ணர்தான் ஆதி புருஷர் ,கோவிந்தர்,என்று அறிவீர்கள் !
நான் என்ன…
நான் மட்டும் வாழ வேண்டும்.. என் மதம் பெருக வேண்டும்.
மற்ற அனைத்தும் அழிய வேண்டும்.. அல்லது அழிக்க படவேண்டும் என்று எண்ணி கொண்டு இருக்கும் பேர்வழியா?
எனக்கும் என் அனைத்து நண்பர்களுக்கும் எம்மதமும் சம்மதம்தான்.. கர்த்தரும், ஸல்ல ரும்.. உலகில் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘வசுதேவம் குடும்பகம்’ என்று உபதேசம் செய்தது எங்கள் தர்மம்.
அந்த தர்மத்தை கேவலபடுத்தாத வரை ..
விமர்சிக்காதவரை …
எங்கள், பண்பாட்டை, கலாச்சாரத்தை, வழிபாட்டு முறைகளை
அழிக்க நினைக்காதவரை….
எங்களுக்கும் எம்மதமும் சம்மதம்தான்!
அனைவரையும் அரவணைத்து வாழத்தான் விரும்புகிறோம்.
உலகத்தில், ஒரு மூலையில், மத போரால், மக்கள் அழிவடைந்த போது, உயிரை காப்பாற்றி கொள்ள அகதிகளால் பாரதம் வந்த போது, அவர்களை அரவணைத்த தாய் இந்த பாரத தாய்! அவர்களுக்கு வாழ இடமும், அவர்கள் மத வழிபாட்டை கடைபிடிக்க அனைத்து சுதந்திரத்தையும் கொடுத்த மக்கள், பாரத தாயின் மக்கள்.
உலகில், நம்மை விட அகிம்சைவாதி யார்? நம்மைவிட அன்பை போத்தித்தவர் யார்? நம்மைவிட வந்தாரை வாழவைத்தது யார்?
Rig Veda (1.164.46): Ekam Sat viprah bahudha vadanti, “Truth is One, sages describe it variously.” thus “Vishnu and Siva are the same and equal”
“Though the three, Brahma Vishnu and Siva form an integral whole the world considers them separate and quarrels.”
“The Vedas proclaim Narayan and Shiva as one and as Brahmaswarup, God’s true nature, and, therefore, they should be known accordingly.”
“Saivites profoundly know that God Siva is the same supreme being in whom peoples of all faiths find solace, peace and liberation.
முகுந்த நீங்கள் ஆரம்பத்தில் இருந்து இங்கு எழுதபட்ட விவாதங்களை படித்தால் உங்களுக்கு புரியும். நீங்கள் சொல்வதைதான் நானும் சொல்ல வந்தேன். கடவுள் என்று நினைத்து வணங்கும் எல்லா திசையிலும் கடவுள் இருக்கிறார். நாம் வணங்குவது மட்டுமே தெய்வம், மற்றது பொய் என்று நினைத்தால் அது நியாமற்றது. எல்லா மதங்களிலும், குறை நிறைகள் உண்டு. சிலர் தங்கள் வழியில் குறையே இல்லாதது போல் இங்கே மன்றாடி கொண்டிருக்கின்றனர். உலகில் மாற்றமே இல்லாதது மாற்றம் ஒன்றுதான். காலம் மாற கருத்துக்களும் மாறி போகிறது. சிலவற்றை அப்படியே விட்டு விடுவது நல்லது.
இளையராஜாவின் குடும்பத்தில், கலைவாணியே குடியிருக்கிறாள். ஆனால் ஜாதி வெறி அவர்களை பாதிக்காமல் போனதின் காரணம், இந்தியாவில் எழுந்த ஜாதிக்கு எதிரான புரட்சியே காரணம். லியோனி கூட ஒரு பட்டி மன்றத்தில் சொல்வார், பெரியார் என்ற தாத்தா மட்டும் இல்லது போயிருந்தால், “அவாள் எல்லாம் என்னை படிக்க விட்டுருப்பாளா..?” என்று.
அன்பான செம்பருத்தி வாசகர் பெருமக்களுக்கு, இந்து மதத்தின் மற்றும் சைவ சமயத்தின் “வினைக் கோட்பாட்டை” மறுத்து கருத்தெழுதியவர்கள் வள்ளுவனையும் வம்புக்கிழுத்து விட்டு போனதால் இக்கருத்து வலையேற்றக் காரணமாயிற்று. இது கடவுள் மறுப்பாளர்களுக்கும், போலி சமய மதப் போதகர்களுக்கும், கோடரிகம்புகளுக்கும், மாறியத் தமிழனுக்கும் வள்ளுவன் அளித்த பதிலை இங்கே யாம் வாசகர்களுக்கு மறுபதிப்பு செய்கின்றோம். தொடரும்.
வள்ளுவன் சித்தாந்த ஞானி. ஆகையால், சித்தாந்தத்தை வழுவாமல் காப்பாற்றியவன். ஊழ்வினைத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு அதற்க்கு அறத்துப்பாலில் “ஊழியல்” என்ற தலைப்பில் 38- ம் அதிகாரத்தை, இறைவன்பால் உயிருக்கு இருக்க வேண்டிய நம்பிக்கையை நிலை நிறுத்த நமக்கு அளித்துள்ளான். “அறத்துப்பால்” உயிரின் நிலையை உணர்த்துவதாய் அமைந்தது. ஆதலாலே, 380-வது குறளில், “ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று குழினும் தான்முந் துறும்.” என்று கூறினார். இதற்க்கு டாக்டர் மு.வ. உரை:
“ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.”. ஆகையால், “விதியை மதியால் வெல்லலாம்” என்ற கருத்து இங்கே அடிபட்டு விடுகின்றது. இருப்பினும் விதியை மதியால் தள்ளிப்போடலாம் என்ற கருத்து ஏற்புடையதாக இருக்கும். ஊழ்வினை உயிரின் “அறிவை” பந்திக்கும். ஆதலாலே, ஊழ்வினையின் தரத்திற்கு ஏற்ப உயிரின் நல்வினை தீவினை, ஒவ்வொரு உயிருக்கும் மாறுபட்டு அமைகின்றது. “வினைப் பயனே” உயிரின் செயலை நிர்ணயிக்கின்றது என்பது வள்ளுவனின் வாக்கு. தொடரும்.
அடுத்தக் குறள், பொருட்பாலில் உறுப்பியல் பகுதியில் 67-வது அதிகாரத்தில் வினைத்திட்பம் தலைப்பில் உள்ள 666-வது குறள். “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்”. டாக்டர் மு.வ. உரை: “எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.” உயிரின் இயல்பில் ஒன்று, “உயிர் சார்ந்ததன் வண்ணமாகும்”. உயிர் திருவருளின் அருளால் இறைவனை எண்ணி சார்ந்து நின்றால் அது இறைவனின் பேரின்பத்தில் சார்ந்த வண்ணமாக இருக்கும் அல்ல ஆணவ மலத்தில் கட்டுண்டு உலகியலை (பாசத்தை) எண்ணி சார்ந்து நின்றால் உலகியல் சிற்றின்பத் துன்பத்தில் மயங்கி நிற்கும். இங்கே விளக்க உரையில் உற்று நோக்கத்தக்கது “உறுதியுடையவராக இருக்கப் பெற்றால்”. இந்த “மன உறுதி நிலை” ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு இருப்பதின் காரணம் அவர்தம் “அறிவு” செய்யும் செயல். அறிவு ஊழ்வினையைப் பொறுத்து அமையும் என்பது வள்ளுவனின் வாக்கு என்பதால், மீண்டும் “ஒவ்வொரு உயிரின் உறுதி நிலை”- யும் அவர்தம் ஊழ்வினைப் பொறுத்தே அமையும் என்பது இக்குறளின் வழி வள்ளுவன் வகுத்த நியதியாகும். தொடரும்.
Anti Guruji; காலம் மாறலாம்,வாழ்க்கை தரமும் உயரலாம்,ஆனால் சாஸ்திரமும் தர்மமும் என்றும் மாறாது. தர்மம் இறைவனின் மூச்சு.ஒவ்வொரு யுகம் தோன்றும் போது மனிதர்கள் தர்ம வழியில் வாழ பகவான் வேதம்,இறைதுதர் அல்லது தாமே வந்து போதிப்பார்.
மேலும் ஒரு குறள். பொருட்பாலில் உறுப்பியல் (குடி) பகுதியில் 98-வது அதிகாரத்தில் பெருமை என்னும் தலைப்பில் இருக்கும் 972-வது குறள். “பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.” டாக்டர் மு.வ. உரை:
“எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை”. எல்லா உயிர்களும் பிறக்கும் பொழுது ஒரே இயல்பினை உடையவையாக (உயிரின் இலக்கணம் ஒன்றாக) இருக்கும். ஆயினும், உயிர் தன்னிச்சையாக செயல் படாமல் மாயாகாரியங்களான கருவிக் கரணங்கள் துணைக் கொண்டும், பிரகிருதி மாயையில் தோன்றிய சத்துவம் (சாத்வீகம்), இராசதம் (இராஜசம்), தாமதம் (தாமசம்) ஆகிய முக்குணங்ககளைக் கொண்டும், ஆன்ம தத்துவங்களைக் கொண்டும் செயல்படுகின்றது. அவ்வாறு உயிர்கள் வேறுபட்ட குணங்களை கொண்டு செயல்படும் பொழுது ஒவ்வொரு உயிரிடையே வெளிப்படையாக காணப்படும் செயலின் சிறப்பியல்பு (செய்கைகள்) ஒற்று இருப்பதில்லை. இங்கே முக்குணங்களில் ஒன்றைத் தேர்ந்து உயிருக்கு (அறிவுக்குச்) சேர்ப்பது ஊழ்வினையே. அறிவார்ந்த சித்தாந்திகள் மேற்கூறிய குறளுகளுக்குரிய சித்தாந்த விளக்கத்திற்கு மாற்றுக் கருத்துக்கள் எழுதலாம். வரவேற்கின்றோம்.
Anti குருஜி: இந்த விவாதம் எல்லாம் காலம் விரையமே..!!! மரணம் நம்மை பின் தொடர்ந்து வருவதை உணர்ந்தோமானால்,இருக்கிற இந்த சிறிது காலத்தில்,யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காமல்,இறைவனுக்கு பக்தி சேவை செய்துகொண்டு,அவன் நாமத்தை ஓதிக்கொண்டு இறக்கும் தருவாயில் அவனை எண்ணியபடியே,இந்த பூத உடலை துறந்து ஆன்மீக உடலுடன் இறைவன் உலகத்திற்குச் செல்லலாம்.
இவ்வழியை தான் ஸ்ரீகிருஷ்ணர் தன் பகவத் கீதையில் எல்லோருக்கும் புரியும்படி,கீழ்கண்ட இச் சுலோகத்தில் கூறுகிறார்…”
Man-mana bhava mad-bhakto
Mad-yaji mam namaskuru
Mam evaisyai satyam te
Pratijane priyo si me.(பகீ.அ18,பதம்65)
TRANSLATION
Always think of Me, become My devotee, worship Me and offer your homage unto Me.Thus you will come to ME without fail. I promise you this because you are MY very dear devotee.
இதைவிட வேறு உறதிமொழி உண்டோ?
மதவாதிகளிடமிருந்தும் கருத்துப் புரட்டர்களிடமிருந்தும் உரை திரிப்பாளர்களிடமிருந்தும் தமிழையும் தமிழ்ப் புலவன் வள்ளுவனையும் தயவுசெய்து காப்பாற்றுங்கள். ஏனென்றால் ஊழையும் உப்பக்கம் காணலாம் என்று உண்மைத் தமிழனுக்கு கற்றுக்தந்தவன் எங்கள் வள்ளுவப் பாட்டன். அவரின் கருத்தைத் திருப்புபவர்களை வள்ளுவர் மன்னிக்கவேமாட்டார்.
ஐயா தேனீ அவர்களே! சாத்வீகத்திலும் இரண்டு பிரிவு;
ஒன்று தர்ம வழி சாத்விகம், இன்னொன்று சுயநல சாத்விகம்.
தர்ம வழி சாத்விகம் அனைவருக்கும் பயனாக வாழ்வர்.சுயநல சாத்விகம் எவருக்கும் எந்த நன்மையையும் செய்ய மாட்டார்கள். இறுதியில் தர்ம வழி சாத்விகமே தங்கள் இலக்கை அடைவர்.
ஐயா தங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை.
தமிழன்,மரத் தமிழன்,
,சீனன்,ஆங்கிலன்,நெகிரோ,ஜப்பான்,மலாய்க்காரன்,வங்காளி,டச்சு, இவைகள் எல்லாம் உடல்,மொழி மற்றும் இன சம்பந்தப்பட்டவேறுபாடுகள்.நிலையற்றவை !!!!உடல் உள்ளவரை மனிதன் இவற்றின் மேல் மோகம் கொண்டு,மதி மயக்கத்தால், தான் உண்மை சொருப நிலை என்ன என்பதையும் மறந்து கண்டதே காட்சி கொண்டதோ கோலம் என்று எண்ணி தன்னையும் தன் உடற்சாந்தோரையும் வேண்டாத விவாதத்தில் தன் பொன்னான நேரத்தை கழிப்பான். இப்பிறப்பில் தழிழனாக பிறந்ததால் ….தழிழ்.. தழிழ் எங்கள் பேச்சு,எங்கள் மூச்சு,என்று உறக்க கத்துவான்.வள்ளுவர் எங்கள் தெய்வம்,அவரே பரம்பொருள் என்று பறைசாற்றுவான்….!!!!அடுத்த ஜென்மத்தில் அரேபியா நாட்டில் இஸ்லாம் குடும்பத்தில் பிறந்தால், அரபு மொழிதான் உலகத்தில் சிறந்த மொழி,இஸ்லாம்தான் உலகத்திற்கு ஏற்ற மதம் என்று உறக்க ஓலமிடுவான். விந்தையான மனிதர்கள்!!!!!!!!தெளிவில்லாமல் வாழ்கிறார்கள்
முகுந்த! என் கர்ம வினைப்படி உலகின் முதல் இனமானே தமிழனாக பிறந்து அந்த பரம்பொருளான; மகாதேவனை அறிவதற்கு கிடைத்த இந்த வரத்திற்கு அன்றாடம் நன்றி கூறி தெளிவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,அதில் எந்த ஐயமும் இல்லை!
நம் நாட்டில் இவ்வகையான குட்டி கோவில்கள் எண்ணிலடங்கா…!!இங்கே தெய்வத்துக்கு பஞ்சம் இல்லை,சாமியார்களுக்கு பஞ்சம் இல்லை,பாபாக்களுக்கு பஞ்சம் இல்லை,குருஜிகளுக்கு பச்ஞம் இல்லை.இருந்தும் இந்த சமுதாயம் நாட்டு வளர்ச்சியில் பின்னால் தள்ளப்பட்டுள்ளது!!! ஏன்..ஏன்…ஏன்…? காரணம் இங்கு கூறப்பட்டுள்ள வழிபாடுகள் மனிதனின் சுல நலத்தினால் உருவானவை.இங்கு தூய்மையான பக்தி இல்லை.பக்தி என்ற பெயரில் வியபாரம் செய்வது.
ஜெகவீர-பாண்டியன்!!!
மதவாதிகளிடமிருந்து எங்கள் வள்ளுவரையும் எங்கள் தமிழையும் காப்பாற்றுங்கள் என்று ஒரு நபர் ஒப்பாரிவைக்கிறார். என்ன அநியாம்!தெய்வமாக போற்றபடும் தெய்வ புலவர் வள்ளுவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள தெரியாத என்ன? குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டாம் நபரெ.வள்ளுவரின் திருக்குறள் பல மொழிகளில் மொழி பெயர்த்தும்,அந்நூலை உலகம் முழுவதும் தெருத்தெருவாக சென்று வள்ளுவனின் பெறுமையையும் திருக்குறளின் புகழையும் எடுத்துறைக்க எந்த தமிழனாவது முன் வருவானா? அரங்கத்தில் உள்ள ஐம்பது அல்லது நூறு பேரிடம் குறளை பற்றி கூறலாம்,ஆனால் வீடு வீடாகச்,தெரு தெருவாக, சென்று போதிக்க முடியுமா? பல்லின மக்களின் ஆதரவு கிடைக்குமா? உங்களால் செய்ய முடியாது.வேண்டுமானால் கணிணி முன் உட்கார்ந்து கொண்டு வள்ளுவரின் குறளை பெருமையாக மற்றவருக்கு எழுதலாம்.
ஐய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன் பகவான் கிருஷ்ணரால் உபதேசிக்கப்பட்ட பகவத் கீதை என்னும் புனித நூல், இன்று கிராமம் கிராமாக,நகரம் நகரமாக,தெருதெருவாக ,வீடு வீடாக,கண்டம் கண்டமாக, பிரச்சாரம் செய்யும் அவரின் துய்மையான பக்தர்களின் பெறுமை எங்கே?வெறும் கணிணி முன் அமர்ந்து கொண்டு வள்ளுவரின் குறளை எழுதி திரியும் உங்கள் சிறுமை எங்கே? பகவத் கீதை உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்பது காலத்தின் கட்டளை. இன்று ஐரோப்பா,அமேரிக்கா போன்ற நாடுகளின் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு நூல் என்றால் அது பரதநாட்டின் பகவத் கீதை. இதை யாரும் மறுக்க முடியாத உண்மை. நல்லவரை காத்து கோடியவரை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவேன் என்று கிருஷ்ணர் அன்று உபதேசித்தது இன்று மெய்யாய் ஆனது.
முகுந்தா… மதவாதிகள் உங்கள் போக்கில் உங்கள் வழியில் போனால் ஒன்றும் பிரச்னை இல்லை. மதத்தில் செய்யும் கில்லாடித் தனங்களை எங்கள் தேனினும் இனிய திருக்குறளில் செய்ய நினத்தால்.. கற்றறிந்த தமிழர்கள் வெறுமனே அமைதி காக்காதீர் எனும் சங்க நாதமே தவிர ஒப்பாரியல்ல. எங்கள் வள்ளுவனின் குறளை ஊர்ஊராக கூவிக் கூவி பரப்ப வேண்டிய அவசியமே இல்லா ஒப்பற்ற நீதி இலக்கியம். பன்றிகள்தான் கூட்டம் கூட்டமாகச் சென்று பாதுகாப்பைத் தேடும். எங்கள் தமிழ்புலவன் வள்ளுவனோ சிங்கம்- தமிழ்ச்சிங்கம். ஏழே சீர்களுக்குள் இமயத்தைத்தொட்டவன். ஆக, வள்ளுவன் சிங்களாகத்தான் வருவான். கோபியரோடு காம கும்மாளமடித்த ஒரு ஈனனைப்போய் அறம்பாடிய வள்ளுவனோடு ஒப்பிட்டு பேசாதீர்! இணையமும் , கணிப்பொறியும் உமக்கு குண்டுசட்டியாகத் தோன்றுகன்றதா? இத்தோடு விட்டால் நீரும் உம் கிருட்டிணனும் தப்பிப்பித்தீர்கள். இல்லையெனில் உம்மோடு நான் நடத்தும் வாதப்போர் என் சக தமிழனோடு நடத்தியதைப்போல கூளாக இருக்காது . வடவனின் மதம் என் இனத்தை வேரறுத்ததின் கோபத்தை இன்னும் என் இதயத்தில் தேக்கி வைத்திருக்கிறேன். கிளறினால் கருவறுத்துவிடுவேன்.
அன்பர்களே,
தயவு செய்து நம்மில் அனாவசிய வாக்கு வாதம் வேண்டாம். திருவள்ளுவருக்கு யாருமே இணை
இல்லை. இந்து சமயத்தை நம்மவர் பின்பற்றுவர்கள் பின்பற்றட்டும்— நான் இந்து சமயத்தை சார்ந்தவன்–ஏனெனில் என் தாய் தந்தையர் இந்துக்கள் என என் பிறப்பு சான்றிதழ் கூறுகிறது.எனினும் நான் பகுத்தறிவுடன் செயல் படுபவன். ஆனால் தெய்வப்புலவர் வள்ளுவரே இமயம். தயவு செய்து நம்மில் வாக்கு வாதம் வேண்டாம். நம்மின் ஒற்றுமை மிகவும் முக்கியம் –நம் உடன் பிறப்புகள் கொலையுண்டு அநியாய மாக இறந்தார்கள்- நமக்கு இது என்றுமே மனதில் இருக்க வேண்டும், நம்மில் இந்த உயர்வு தாழ்வு தேவை இல்லாத ஒன்று. எது எப்படியானாலும் நாம் ஒரே இனம். தயவு செய்து இதை மனதில் கொள்ளுங்கள்
ஐயா பாண்டியா….!!!!நாலாயிரம் திவ்யபிரபந்தங்களை உலகிற்கு தந்தவர்கள் நம் தமிழர்கள்….இதில் ஆண்டாளும் ஒருவர்.இவர்கள் எல்லோரும் தென்நாட்டில் பிறந்த தமிழர்கள்.இவர்களுக்கு உம்மைவிட தமிழ் பற்று அதிகம்.வடநாட்டவரின் மீது போறாமை கொள்ளாத தூய ஆத்மாக்கள். கண்ணன்மேல் கலங்கமற்ற பக்தி கொண்ட சிறந்த வைணவ பக்தர்கள். கற்ற கல்வியால் எம்பெருமானை போற்றி பாடினார்களே தவிர தூற்றவில்லை. (வள்ளுவரும் இதைதான் கூறியுள்ளார்-கற்றதனால் பயன் ஏன் வாளரிவான் நற்றால் தொழ).ஆழ்வார்கள் கண்ணனின் சிறந்த பக்தர்கள். அவர்களுடைய தமிழ் பற்றும் இறைவனின் பற்றும் உம்மைபோன்ற இன வேறியனுக்கு புரியாது. அவர்களின் புகழும் பெறுமையும் எங்கே…..உம்முடைய புகழ் எங்கே????
நீர் இன்னும் நூறு முறை பிறந்தாலும் அச்சான்றோர்களின் அருமை புரியாது!!!!! (ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடைபெறும் உயிரல்லவா என்று,தன் திருவாயால் ஆண்டாள் கண்ணனை நோக்கிப் பாடினார்!!!!!அப்பேர்பட்ட கண்ண பரமாத்மாவை தூற்றியது, ஆழ்வார்களை தூற்றியதற்கு ஒப்பாகும், அது மட்டுமல்ல்!!!! நீர் உன் தெய்வப் புலவரான வள்ளுவனையும் தூற்றுகிறாய் (பிறப்பு என்னும் பேதாமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது இனிது)என்று வள்ளுவன் கூறியுள்ளான். இங்கு செம்பொருள் என்பது ப்பிரம்ம ஜோதியை குறிக்கும்.இந்த ப்பிரம்ம ஜோதியானது பகவான் உடலில் இருந்து வெளியாகும் ஒளிக்கதிர்!!!!!. ஐயா…மதுரை வீரபாண்டியா!!!!நாம் வள்ளுவனை தூற்றவில்லை.வள்ளுவர் ஒரு ஞானி.அவர்பால் நல்ல எண்ணம் உண்டு.ஆனால் நீர் கோவிந்தனை வாய் கூசாமல் தூற்றினீர்.கண்ணன் பால் கோபியர் வைத்த பிரேம பக்தியை தீயநோக்கத்துடன் விமர்சனம் செய்தீர்.இது உம் மடமையை காண்பிக்கிறது.ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்.
நீர் இறந்த பிறகு உம் பிணத்தை(பிரேதம்)கொண்டு செல்லும் போது ‘கோவிந்த நாமம் சங்கீர்தணம் கோவிந்தா…கோவிந்தா என்றுதான் கூறுவார்கள் தவிர, வள்ளுவன் நாமம் சங்கீர்தணம் என்று யாரும் கூறுவதும் கிடையாது..கூறவும்மாட்டார்கள்!!! இது இறைவன் வகுத்த சட்டம்!!!!!!!!!
தம்பி ராஜ் நீங்கள் நாம் ஒரே இனம் என்கிறீர்!
கீதை படிக்க சொல்லும் இந்த முகுந்தா ஈழதமிழர்களுக்கு ஏன் இந்த அழிவு என்றுகேட்டால் கிதையின்பிரகாரம் கர்மா என்று சொல்வான் இந்த மு ..
ஈழத்தில் நடந்த கொடூரத்தை மனசாட்சி மனிதநேயமுள்ள எந்த மனிதர்களும் சகித்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள் ..
தமிழ்நாடு தவிர எந்த எந்த மலையாளி ,அந்தரா ,கன்னடன் கண்டனம் தெரிவித்தார்களா ??? மதவெறி பிடித்த ஆர் எஸ் எஸ் எவனாவது கண்டனம் தெரிவிச்சானா ??? ஏன் ஏனென்றால் நாம் வேறு அவர்கள் வேறு ..
ஈழ புலிகளை சின்கலனால் தனித்து அழித்திருக்கவே முடியாது .
இந்தியா முக்கியமாக இந்து மலையாளிகள் …
அரசு அதிகாரியாக ..
எம் கே நாராயணன் , (மலையாளி )
சிவசங்கர் மேனன் ,(மலையாளி )
நிருபமா ரொவ்(மலையாளி )
அரசுக்கு வெளியில்
விஜய் நம்பியார் (மலையாளி ) ஐநாவில் முக்கிய பதவி .. தன பதவியை பயன்படுத்தி அழிவுக்கு முக்கியபன்காற்றினான் கொலையாளி
இவன் தம்பி சதிஸ் நம்பியார் .முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி .. ஈழயுத்தத்தின்போது இலங்கை ராணுவ ஆலோசகர் ..
இறுதியாக ஜான் ஆப்ரகாம் என்கிற மலையாளி மெட்ராஸ் கபே என்று ஒருதிரை படத்தை எடுத்து அதில் தமிழர்கள் காட்டு மிராண்டிகள் பயன்கரவீதிகள் போன்றும் மலையாள அதிகாரிகள் கண்ணியமானவர்கள் போன்றும் காம்பித்தான் …முட்டாள் உருகார தமிழன் சகித்துகொண்டான் (மெட்ராஸ் கபே ) கேரளா கபே என்று எடுக்க முடியுமா ???
ஹிந்து என்றும் திராவிடன் என்றும் சினிமா , மது குடித்து புழுத்து போங்கடா … முட்டாள் தமிழா இந்தியனோடு நானும் ஹிந்து நீயும் ஹிந்து ,நீயும் இந்தியன் நானும் இந்தியன் என்று சொல்லி சேராதே இந்தியன் குளிபறிப்பான்..
ஒருமுஸ்லீம் தன் வணிகதலத்தை இன்னொரு இஸ்லாமியனுக்குதான் கொடுப்பான் .
நிலம் விற்பதும் வாங்குவதும் ஒருஇச்லாமியனாக இருக்க முடிந்தவரை முயற்சி பண்ணுவார்கள் .. ஆள்கிடைக்காவிட்டால் மற்றவர்களுக்கு கொடுக்க ஜோசனைபன்னுவார்கள் .
மலையாளிகளும் தெலுங்கர்களும் சினருக்கோ இந்தோனேசியருக்கோ கொடுத்தாலும் பெரும்பாலும் தமிழர்களுக்கு கொடுக்க மாட்டார்கள் .. பல ஆதாரம் என்னிடம் உள்ளது ..
நானும் இஸ்லாம் நீயும் இஸ்லாம் இஸ்லாமியனுக்கு பொருந்தும்.. நீயும் தமிழன் நானும் தமிழன் மந்திரமாக தினமும் ஒது மாற்றம் இன்று இல்லாவிட்டாலும் நாளை மாற்றம் காண்பாய்:)
முதலில் ஹிந்துக்களுக்கு மதமே இல்லை. hindhuism is way of life நமக்கு நிறைய messengers இருகாங்க. christian = jesus islam = Mohd but hindhu = many .அதைத்தான் பல கடவுள் என்று சொல்கிறோம். மதம் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் தான் என்ன? யானைக்கு மதம் பிடித்தால் என்ன நடக்கும்? அழிவு தான். அதனால் தான் மதம் என்ற சொல்லை வைத்தார்கள் நம் முன்னோர்கள். மதத்தின் மேல் மோகம் கொண்டவன் அழிவுக்கு தான் செல்வன் என்பதை சொன்னார்கள் நமது upanishad என்ற புனித நூலில். கடவுளுக்காக அடித்து கொண்டு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஹிந்துக்கள் நாம் இதில் சேர வேண்டாம். நமக்கு மதம் வேண்டாம். இதனை நன்கு புரிந்து கொண்டு வாழ்வோமாக..
முகுந்தா… நாலாயிரம் திவ்விய பிரபந்தம் இயற்றிய வர்கள்; தமிழ்ப்புலவர்கள்; என்னைவிட தமிழ்பற்றாளர்கள் . அவர்கள் எங்கே? இந்த ஜெகவீரபாண்டியன் எங்கே? என்கிறீர். நல்லது. உம்பார்வையில் அவர்கள் பெருமைக்குறியவர்கள். எனக்கோ… இன உணர்வே இல்லா எருமைகள்; கண்ணனை கடவுள் என்று சொல்லிக்கொண்டு… தமிழனின் பண்பாட்டிற்கு விரோதமாக அவனை மானசீகமாக காமுற்று , பக்தி எனும் பேரில் மனதிற்குள்ளேயே மானசீகமாக குடும்பம் நடத்திய இழிபிறவி! அந்த கடவுளுக்கு 7 மணைவிகள். தமிழ்நாட்டில் இந்த ஆபாசம் அரங்கேறியதைக் கண்டு நீர் சொன்ன அந்தத் தமிழ் பற்றாளர்களுக்கு மனம் பதைக்கவில்லை தமிழனின் கலாச்சாரத்தின் மேல் விழுந்த கறையை நினைத்து. நீர் எழுதுகிறீர் என்னைவிட சிறந்தவன்; உயர்ந்தவன் என்று. மானம் ரோசம் இல்லா மரங்களோடு என்னை ஒப்பிடாதீர்! இந்தத் தோள் தடித்த உமது பெருமைக்குரிய தமிழ் சாண்றோர்கள் வாழ்ந்த காலத்தில்தானே தமிழினத்தை ஜாதிப் பேய்கள் பிச்சி பிராண்டிக்கொண்டிருந்தன. அப்போது உமது அந்த ஆள்வார்கள் எவனாவது தன் தமிழ்ப்புலமையைக் காட்டி தமிழினத்திற்கு நேர்ந்த கொடுமைக்கு பெரியாரைப்போல, ஒர் அம்பேத்காரைப்போல குரல் கொடுத்தானா சொல்? எந்த வகையில் என் உணர்வினைவிட அந்த இன உணர்வற்றவர்களை சிறந்தவர்கள் என்கிறீர்? “இறைவனுக்கெல்லாம் இறைவன், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாரயணன் என்ற மந்திர நாம்முடையவர்தாம் மகாவிஷ்ணு,ராமர்,கிருஷ்ணர்எனும் அவதாரம் எடுத்தவர் என்றும் அவரே தமிழர்கள் போற்றும் சிவனையே படைத்தவர் உமது கடவுள் என்று எழுதி இணையத்தை நாற்றமெடுக்கச் செய்கிறதே வடவர் மதம் உமக்கு மானமில்லையோ?
முகுந்தா… வள்ளுவனைவிட உமது சேலை பொருக்கி மகத்துவமிக்கவர் என்றீர். இப்போது வள்ளுவனை ஞானி என்கிறீர். நல்லது. அது என்ன என் பிணத்திற்கு கோவிந்த நாம ம் சங்கீத்தணம் கோவிந்தா… கோவிந்தா..! அந்த பொருக்கியின் பெயரில் எனக்கு இறுதி நடத்த என் குடும்பத்தார் வடவனின் அடிவருடிகள் அல்லர். உமது கனவு பலிக்காது!
ஐயா புலவரே, நான் பிடித்த முயலுக்கு இரண்டே கால்கள்தான் என்று முழக்கம் இடும் உம்மைபோன்ற மனிதர்களுக்கும்,இன வெறியன் என்று முத்திரை பதித்த இட்லருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.உம் இன வெறியால்,மற்றவரின் அன்பைவிட வெறுப்பைதான் நீர் அதிகம் சம்பாதித்துள்ளிர்.ஆத்திரம்தான் உம் வளர்ச்சி.அதுதான் உன் உண்மை தோற்றம். யாம் சிவ பெறுமான் மீதோ அல்லது வள்ளுவனின் மீதோ அவதூரு சொன்னது கிடையாது…!மற்றவர் போற்றி வணங்கும் இறைவனை இழிவுபடுத்தி பேசிய நீர், ஒரு அநாகரீகன்.கடைசியாக ஒன்றை சொல்ல விருப்பம்.நீர் கோழை!!!!! ஏனென்றால்…..கிருஷ்ணனை தூற்றியது போல் மற்ற சமயத்தவரின் இறைவனை இழிவுபடுத்த உமக்கு தைரியம் உண்டோ? இனியாவது உம் பிழையைத் திரித்திக்கொள். நன்றி !!!இத்துடன் உம்முடன் விவாதம் முற்றுபுள்ளி !!
மதம் ஒருவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் குறள் போன்ற தமிழனின் தனிப் பெருமைமிகு நூல்களை தமிழர்களாகிய நாங்கள் உயர்த்திப் பிடிக்கும்போது மதவாதிகள் காழ்ப்புணர்வுடன் நக்கல் செய்வதும், நையாண்டி புரிவதும் அவர்களின் கடவுள் கொள்கையோடு உரசிப்பார்ப்பதும் நாகரீகமாமோ? தர்க்கம் என்று வந்துவிட்டால் இன்னும் நீழும். நீர் என்னை எவ்வளவு தரக்குறைவாக வேண்டுமானாலும் திட்டுங்கள் கவலை இல்லை. ஆனால் எம் இனத்தையோ மொழியையோ இலக்கியத்தையோ சீண்டினால் தலையாட்டிக்கொண்டிருக்கவேண்டுமென எதிர்பார்காதீர்கள். நல்லாலோசனை தந்த ராஜ் அவர்களின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள நான் எண்ணியபோது நீர்தான் சீண்டினீர். கடைசியாக, மற்ற சமயத்தவரின் இறைவனப் பற்றி இழிவாக எழுத முடியுமா? என்று சவால் விடுகிறீர். நீர் சொல்லும் அந்த மற்ற சமயத்தவரை எம் குறளைப்பற்றி தாழ்தி நையாண்டி செய்தும் அவர்களின் கதாப்பாத்திர இறைவனை வள்ளுவனோடு உரசிப்பார்க்கச் சொல்லும் பிறகு தெரியும் யார் கோழை என்று.
மகா பாரதத்தில்……..
துரியோதனனிடம் நட்பை கண்டேன்..
கர்ணனிடம் தர்மத்தை கண்டேன்….
பீஷ்மரிடம் சத்தியத்தை கண்டேன்..
ஏகலைவனிடம் குரு பக்தியை கண்டேன்..
சகுனியிடம் சமயோசிதம் கண்டேன்..
இவர்கள் எல்லாம் போற்ற படவில்லை….
சூதில் மனைவியை வைத்து இழந்த பஞ்ச பாண்டவரும், தன்னை விட இரு சிறந்த வில் வித்தகர்கள் இருப்பது அறிந்தும், தன்னை சிறந்த வில் வித்தைகரனாக பிரகடனபடுத்தி கொண்ட அர்ஜுனனும், வஞ்சகம் செய்து எதிரியை வெல்லும் கண்ணனும் மட்டுமே போற்ற படுகிறார்கள்… ஜகவீரபாண்டியரே.. வாழ்க உன் குறள் தொண்டு.
Anti Guruji உங்கள் வேதனை அறிவேன்,நீங்கள் நல்லவரென வெளிப்படையான உங்கள் எழுத்துக்கள் பிரதிபலிக்கிறது.நீங்களோ கண்டதைத்தான் எழுதியுள்ளீர்கள்! அது உங்கள் தவறில்லை! காணாதது என்னவென்று தேடுங்கள் பதில் கிடைக்கும்! நீங்கள் தேடும் உண்மைகள் அனைத்தும் உங்களுள் இருக்கிறது! எல்லாம்வல்ல கடவுள் உங்களுக்கு துணையாக நின்று வழி காட்டுவார்.குருவே துணை!
சிவன் கையில் அக்னி இருப்பது எந்த தத்துவத்தை விளக்குகிறது?