-ஜீவி காத்தையா, செம்பருத்தி,கோம், அக்டோபர் 15, 2013.
மலேசிய கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட் “அல்லாஹ்” என்ற கடவுளைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புத்ராஜெயாவில் தீர்ப்பு அளித்தது. .
டிசம்பர் 31, 2009 இல், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி லவ் பீ லான் உள்துறை அமைச்சு “அல்லாஹ்” என்ற சொல்லை த ஹெரால்ட் பயன்படுத்துவதற்கு எதிராக விதித்திருந்த தடை சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்திருந்தார்.
அத்தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் செய்திருந்த மேல்முறையீட்டை செவிமடுத்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி லவ் அளித்திருந்த தீர்ப்பை நேற்று தள்ளுபடி செய்தது.
அம்மூன்று நீதிபதிகளும், பெடரல் நீதிமன்றத்துக்கு புதிதாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி முகமட் அபண்டி அலி, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் மற்றும் முகமட் ஸவாவி, மொத்தம் 102 பக்கங்களில் தங்களுடைய தீர்ப்பை கூறியிருந்தனர்.
“அல்லாஹ்” என்ற பெயர் பயன்படுத்தல் கிறிஸ்துவ சமயத்தின் முழுமையான நம்பிக்கை மற்றும் வழக்கமான நடைமுறைகள்
ஆகியவற்றின் ஓர் அங்கம் அல்ல என்பது எங்களுடைய பொதுவான முடிவு” என்று நீதிபதி முகமட் அபாண்டி அவரது தீர்ப்பில் கூறுகிறார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று த ஹெரால்ட்டின் ஆசிரியர் கூறினார்.
விஷ்ணுவும் அமைச்சரவையும்
இந்தத் தீர்ப்பில் இரு கூறுகள் கவனத்தை ஈர்ப்பவைகளாக இருக்கின்றன:
- “புனித பைபளில் ‘யாவே’, புனித குரானில் அல்லாஹ், புனித வேதங்களின் கடவுளான விஷ்ணு போன்ற பெயர்கள் அவரவர் புனித நூல்களில் அவரவர் கடவுள்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதை முறையாக அங்கீகரித்தாக வேண்டும்.” (“Due recognition must be given to the names given by their respective Gods in their respective holy books such as ‘Yahweh’ in the holy Bible, Allah in the holy Quran and Vishnu the God of the holy Vedas.” )
- 1986 ஆம் ஆண்டில், அமைச்சரவை “அல்லாஹ்” என்ற சொல் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
இவ்விரு கூறுகளில் முதலாவதைக் கூறியவர் முகமட் அபண்டி அலி. இரண்டாவதைக் கூறியவர் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம்.
இந்தியாவின் “புனிதத் திருமறை நூல்களாக போற்றப்படும்” நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் மட்டுமே “பல்வேறு இந்து சமய தெய்வங்களுக்காகக் கொள்ளப்பட்ட ஆயிரம் துதிப் பாடல்களைக் கொண்டிருக்கிறது.” இவற்றை எல்லாம் படித்து அதில் கூறப்பட்டுள்ள பல்வேறு தெய்வங்களில் விஷ்ணுவை மட்டும் புனித வேதங்களின் கடவுளாக எப்படி முகமட் அபண்டி அடையாளம் கண்டு அங்கீகாரம் அளித்தார் என்பது ஒரு புறமிருக்க, த ஹெரால்ட் சம்பந்தப்பட அல்லாஹ் வழக்கிற்கும் விஷ்ணுவுக்கும் என்ன சம்பந்தம்?
நீதிபதி முகமட் அபண்டியின் இக்கூற்று அவரது அறியாமையாக இருக்கலாம் என்று தட்டிக்கழித்து விட முடியாது. மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதற்கு ஏதோ ஓர் அடிப்படை, ஓர் உள்நோக்கம் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் இந்நாட்டின் இன்றையச் சூழ்நிலையில் எழுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இந்நாட்டு இந்துக்களுக்கு இவர் ஒரு கடவுளை தேர்வு செய்துள்ளாரா? நீதிபதி முகமட் அபண்டியின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் எவ்வித மாற்றமும் இன்றி, குறிப்பாக விஷ்ணு இந்து வேதங்களின் கடவுள் என்று கூறியிருப்பதில் எவ்வித மாற்றமும் இன்றி, நிலைநிறுத்தப்பட்டால், எதிர்காலத்தில் இந்து கோயில்கள் உடைக்கப்படுவதற்கு இது ஒரு வலுவான ஆயுதமாக்கப்படலாம் என்ற சந்தேகம் தோன்றுவதற்கு இடமுண்டு.
இந்நாட்டில் பல்வேறு இந்து தெய்வங்களுக்கு கோயில்கள் இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இத்தீர்ப்பின் அடிப்படையில் விஷ்ணுதான் இந்துக்களின் கடவுள். இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆகவே இதர இந்து தெய்வங்களுக்கான கோயில்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று கூறுவதற்கு வாழை மரமும் தோரணங்களும் கட்ட அனுமதி மறுக்கும் அரசு அதிகாரிகள் தயங்க மாட்டார்கள்.
இந்து மதத்தை இழிவுபடுத்தியவரை பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தியவர்கள் இந்நாட்டு ஆளுங்கட்சியினர் என்பதை மறந்து விடக் கூடாது.
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்ய முயற்சிப்பதில் பலன் இல்லை. ஆகவே, சம்பந்தப்பட்டவர்கள் இந்தத் தீர்ப்பில் இந்து வேதங்களின் கடவுளாக கூறப்பட்டுள்ள விஷ்ணுவின் நியமனத்தை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, இந்தத் தீர்ப்பில் நீதிபதி அப்துல் அசிஸ் 1986 ஆம் ஆண்டில் அமைச்சரவை அல்லாஹ் என்ற சொல் பயன்படுத்துவதற்கு தடை விதித்ததை அவரது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், 2011 ஆம் ஆண்டில், அமைச்சரவை இச்சொல் பயன்படுத்துவதை அனுமதிக்கும் முடிவு எடுத்து அதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைக் கண்டு கொள்ளவில்லை.
பிரதமர் நஜிப் ரசாக்கின் தலைமையிலான அமைச்சரவை எடுத்த இம்முடிவு இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்கான ஓர் ஆக்கரமான முடிவு. பத்து அம்சங்கள் அடங்கிய இம்முடிவை கிறிஸ்துவ சம்மேளனத்திற்கு அறிவித்தவர் பிரதமர் நஜிப் ரசாக்.
இந்த பத்து அம்சங்கள் மிக முக்கியமானவை. அமைச்சரவை எடுத்த முடிவு. இதனை ஏன் அரசாங்கம் அமல்படுத்தவில்லை. ஏன் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை?
அமைச்சரவை 2011 ஆம் ஆண்டில் எடுத்த இந்த பத்து அம்ச முடிவு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, தேர்தலில் கிறிஸ்துவ சமூகத்தினரின் வாக்குகளைக் கவர்வதற்காக எடுக்கப்பட்டதா என்ற கேள்வி நியாயமானதே. நியாயமான ஒன்றை ஏன் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வியும் நியாயமானதே!
பிரதமர் நஜிப்பின் அமைச்சரவை 2011 ஆண்டில் ஒப்புதல் அளித்து கிறிஸ்துவ சம்மேளனத்திடம் அளிக்கப்பட்ட இந்த பத்து அம்சங்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும், அவை வாசகர்களின் கவனத்திற்கு மீண்டும் முழுமையாக வெளியிடப்படுகிறது.
பிரதமர் நஜிப் அறிவித்த பத்து அம்சங்கள்
“1. பகசா மலேசியா/இந்தோனேசியா உட்பட அனைத்து மொழிகளிலும் உள்ள பைபிள்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யலாம்.
2. இந்த பைபிள்களை தீவகற்ப மலேசியா, சாபா மற்றும் சரவாக்கிலும் கூட அச்சிடலாம். இது ஒரு புதிய முன்னேற்றம். இதனை கிறிஸ்துவ தரப்பினர்கள் வரவேற்க வேண்டும்.
3. சாபா மற்றும் சரவாக்கின் இபான், கடஸான் டூசுன் மற்றும் லுன் பாவாங் போன்ற பூர்வீக மொழிகளிலுள்ள பைபிள்களை உள்ளூரில் அச்சிடலாம், இறக்குமதியும் செய்யலாம்.
4. சாபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் பெரும் கிறிஸ்துவ சமூகம் இருப்பதை அங்கீகரிக்கும் வகையில் அனைத்து மொழிகளிலும் உள்ள, மலேசியா/இந்தோனேசியா மற்றும் பூர்வீக மொழிகள் உட்பட, பைபிள்கள் இறக்குமதி செய்வதற்கோ, உள்ளூரில் அச்சிடுவதற்கோ எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. எவ்வித முத்திரை அல்லது தொடர் எண் இடுவதற்கான தேவையும் இல்லை.
5. பெரிதான முஸ்லிம் சமூகத்தின் நலன்களைக் கவனத்தில் கொண்டு, மலேசிய தீவகற்பத்தில், மலாய்/இந்தோனேசிய மொழி பைபிள்கள் “கிறிஸ்துவ பதிப்பு” என்ற சொற்களையும், சிலுவை சின்னத்தையும் முகப்பட்டையில் கண்டிப்பாக அச்சிட்டிருக்க வேண்டும்.
6. ஒரே மலேசியா கொள்கைக்கு ஏற்பவும், அதிகமான மக்கள் சாபா, சரவாக் மற்றும் தீவகற்ப மலேசியாவுக்கிடையில் பயணிப்பதைக் கவனத்தில் கொண்டும், அவ்வாறான பயணத்தின் போது மக்கள் தங்களோடு கொண்டு வரும் பைபிள்கள் மற்றும் கிறிஸ்துவ பொருள்கள் மீது தடைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது.
7. பைபிள் பற்றிய அமைச்சரவையின் இந்த முடிவு முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் (கேஎஸ்யு) ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அமல்படுத்தத் தவறும் அதிகாரிள் பொது உத்தரவுகள் விதிகளின் கீழ் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர். சம்பந்தப்பட அரசு பணியாளர்கள் இந்த உத்தரவை நன்கு புரிந்து கொண்டு அதனை முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகள், சட்டத்துறை தலைவர் உட்பட, விசாலமான விளக்கம் அளிப்பார்கள் (இணப்பு 1 ஐ காண்க).
8. கூச்சிங், கிடெயோனில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 30,000 பைபிள்களை அவற்றின் இறக்குமதியாளர் எவ்விதக் கட்டணமுமின்றி பெற்றுக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட தரப்லினர்களுக்கு ஏற்பட்ட செலவுகள் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதே போன்ற முன்வைப்பு போர்ட் கிள்ளானில் 5,100 பைபிள்களை இறக்குமதி செய்தவருக்கும் கிடைக்கவிருக்கிறது. இதனை கடந்த வாரம் மலேசிய பைபிள் மன்றம் (பிஎஸ்எம்) பெற்றுக்கொண்டு விட்டது.
9. கிறிஸ்துவ விவகாரங்களுக்கு அப்பால், சமயங்களுக்கிடையிலான விவகாரங்கள் மீது கவனம் செலுத்தவும், அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப சமய விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கும் கிறிஸ்துவ மற்றும் இதர பல்வேறு சமயங்களுடன் செயல்பட அரசாங்கம் கொண்டுள்ள ஈடுபாட்டை அது மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது. இப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு நாட்டிலுள்ள இதர சம்பந்தப்பட்ட சட்டங்கள் கவனத்தில் கொள்ளப்படும். பிரதமர் என்ற எனது தகுதியில் இதற்கு ஒரு முன்னேற்றகரமான வழி குறித்து விவாதிக்க விரைவில் நான் மலேசிய கிறிஸ்துவ சம்மேளனத்தின் (சிஎப்எம்) பிரதிநிதிகளைச் சந்திப்பேன்.
10. எனது அமைச்சரவையின் கிறிஸ்துவ அமைச்சர்கள் ஒரு முறையான அடிப்படையில் பல்வேறு கிறிஸ்துவ தரப்பினர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதோடு, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகளோடும் என்னோடும் பணியாற்றுவார்கள். இந்நாட்டின் தலைவர் என்ற முறையில், நாட்டின் அனைத்து சமயப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அமைதியையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கு நமது சமுதாயத்தில் காணப்படும் பிளவுகளைச் சரிக்கட்டுவதற்கான தேவை இருக்கிறது. இதனை அடைவதற்கு மரியாதை, சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு மற்றும் நல்லிணக்கம் ஆகியவையே மிகச் சிறந்த வழி என நான் நம்புகிறேன்.”

























ஐயா காத்தையா அவர்கள் அல்லா பயன் படுத்தக்கூடாது என்ற தீர்ப்பை நன்கு அலசி முடிவை சொல்லியுள்ளார்!!? இந்துக்களும் சற்றே சிந்திக்கவேண்டிய நேரம், காலம்!! இந்து மதத்தைப்பற்றி பேச இந்த நீதிபதி யார் இவர்? யார் கேட்க முடியும்? இந்து சங்கமா?? இந்து மதத்தினரா??
மதத்தில் ஊறியவனுக்குதான் 1008 பிரச்சனை , ஐயா ஜி.வீ காத்தையா விஷ்ணுவை கிளப்பி விட்டார் இது எங்க போய் முடியுமோ ?
malay judges have no right to talk about hindu gods….!
saint sankrachariyar has shown clarity on hindu gods.
malaysia hindu sangam and dharma maamandram , tamil dailies must voice out the impending issues.
நேரம் சரியில்லை!
நடுநிசி
எல்லாம் இனத்தவரும் வழிப்படும் வழி தான் வேறு அருவிகள் மாதிரி ஆனால்??
சங்கமம் ஆகும் இடம் கடல் தான் இது சில மத அறிவாளி முட்டாள்களுக்கு புரிய வில்லை .
முஸ்லிம் மலாய் நீதிபதிகளிடம் இருந்து என்றைக்குமே இது போன்ற வழக்குகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது. இதன்காரணமாகவே இந்தியர்களும் சீனர்களும் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதில்லை. எல்லாம் அவன்களுக்கு சாதகமாகவே நடக்கும்.
ஒரே கடவுள் (விஸ்ணு ) மேட்டர் நல்லாத்தான் இருக்கு.சாமியாடினால் கைது செய்யப்படும் என்று சட்டம் இயற்றினால் இன்னும் நல்லது,அப்படியாவது தமிழன் அறிவாளியாக வருகிறானா என்று பார்ப்போம்.
நாட்டில் சில விஸ்ணு ஆலயங்கள் இருக்கிறது..! ரிக் வேதத்தில் விஸ்ணு தான் மூலக் கடவுள் ஆக மாரியம்மா , காளியம்மா , முனியாண்டி , முனிஸ்வரன் கோவில்கள் தேவை இல்லை அதை உடைத்து விடலாம் என்று இவனுங்க சொன்னாலும் ஆச்சரியப் படத் தேவை இல்லை? ஐயா ஜீவி சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது?
ஐயா ஜி வி எனக்கு ஒரு டவுட்டு ! விஷ்ணு இந்துக்கு மட்டும் கடவுளா? இல்லை எல்லூருக்கும் கடவுளா? ஆனா ஒன்னு சார், நீங்க நல்லா நாட்டுநடப்பை புரிஞ்சு வச்சு இருக்கிங்க.
நம் இந்திய பாரம்பரிய உணவு வகையான வடை, அதிரசம் போன்றவைகளை தங்கள் பலகாரம் என்று சொல்பவர்கள் இப்போது நமது கடவுள் யார் என்பதையும் தீர்மானிக்க துணிந்து விட்டார்கள். நம் அரசியல் அதி மேதாவிகள் இதற்கும் ஆமாம் என்று தலை ஆட்டினாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை.
போகிற போக்கைப் பார்த்தால் நமது நீதிபதிகள் இந்து சமயத்தில் ‘புலமை’ பெற்று விடுவார்கள் போலிருக்கே! முனைவர்ஆறு நாகப்பன் கவனிக்க!
கௌதாரி வாயால கெட்டது இப்படிதான். தீர்ப்பு எழுதும்போது கொஞ்சம் சிந்திச்சு எழுதணும். அத விட்டிட்டு ஏதோ ஒரு பிராமண முஸ்லிம் வக்கீல் சொன்னத எல்லாம் காதால கேட்டுக்கிட்டு சிந்திக்காம தீர்ப்பு எழுதுனா இப்படிதான் வரும் செருப்படி! எதற்கும் கட்டுரையாளர் சொன்னத கொஞ்சம் ஆழமா சிந்தித்து பாப்போம், இதன் விளைவு என்னவென்று. இதற்க்கு முன்பே, ஓமம் வளர்த்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தாலி கட்டினது எல்லாம் செல்லாது என்று நமது அவமதிப்பிற்குரிய வங்காளி நீதிபதி நம்பள பின்னால அடிச்சிட்டு போயிட்டான். அதன் வழியே இன்னும் தீரல, அதற்குள் நெத்தி மேல இந்துக்களுக்கு இன்னொரு அடி! ஓட்டு கேட்டு வந்த ம.இ.க. PPP, IPF தானைத் தலைவர்களே, குட்டித் தலைவர்களே வெகு விரைவில், இந்நாட்டு இந்துக்கள் விஷ்ணு கோவிலைத் தவிர வேற எந்த கோவிலும் கட்டக் கூடாதுன்னு ஜுல் நோர்டன் என்ற ஒரு அரவேக்காடு அறிக்கை விடப் போறான் . காத்திருங்கள். அப்புறம், மற்ற தெய்வங்கள் எல்லாம் அவன் சொன்னது போல அரசியல் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
நம்ப விவஸ்தக்கெட்ட நீதிபதிகள் சொல்லிட்டாங்க இல்ல, இந்துக்கள் கடவுள் விஷ்ணுன்னு. அப்புறம் என்ன எல்லா தமிழர்களும் நெத்தியில இருக்கிற திருநீற அழிச்சிட்டு மூன்று நாமங்கள் போட்டுக் கொள்ளுங்கள். பார்க்க நல்லா இருக்கும்.
ஹிந்துக்களுக்கு யாரு தான் கடவுள்? ஏனென்றால் மொழி வாரியாக ஜாதி வாரியாக கடவுள்கள் இருக்கிறார்கள்? அத நாள்தான் கேட்கிறேன், நான் கேட்ட கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
நாம் அவர்களுக்கு மண்டையில் ஆணி அடித்த மாதிரி திருப்பி சொல்ல வேண்டும்…. விஸ்ணு மட்டும் அல்ல, ஜெசுஸ், அல்லா மற்றும் புத்தரும்,கூட எங்களின் கடவுள்தான். எல்லா கடவுளையும் கையெடுத்து கும்பிடும் மன பக்குவம் எங்களுக்கு உள்ளது.. நாங்கள் மசூதியை பார்த்து கையெடுத்து கும்பிட்டால், அல்லா சாமீ, என்று இறைஞ்சினாள், தடுக்க முடியுமா உங்களால்? கடவுளுக்கு தரும் வணக்கத்தை யாரால் தடுக்க முடியும்? வாசுதேவனும் ஏசுநாதரும்,ஒன்றுதான். மதர் மேரி யும், மாரியம்மாவும் ஒன்றுதான். நபி ஈசா, ஜெசுஸ், ஈஸ்வரன் எல்லாம் ஒன்றே… ஆமின் மற்றும் சமர்ப்பயாமி (ஏற்றுகொள் அல்லது ஏற்றுகொள்கிறேன்) ஒன்றே. இதெல்லாம் புரிந்துகொள்ளும் நேரம் இவர்களுக்கு எப்பொழுது?
பிரம்மன்(குரு),விஷ்ணு(பிறப்பு முதல் இறப்பு வரை காக்கும் தன்மை கொண்டது),விதியை அப்படியே யேட்றூ கொள்வது.சிவம் நரக வேதனையை போக்கி சுகம் தருபவர்(இறக்கும் முன்பு வாழ்வில் செய்த பாவம் அதிகம் அதனால் துன்பம் தவிர்க்க/பாவ மன்னிப்பு வேண்டி ஈசனை வளிபடுகின்றனர்).சூர்யன்,சிவா அம்சம் பரிகார 9 க்ரஹா கிங்.பொது (ஒக்சிகேன் ).
“சுயமரியாதை இயக்கத்துக்கே” தன் கடவுள் யாருன்னு தெரியவில்லை என்று தேடிக் கொண்டிருந்தால், ரோட்டிலே போற வர சுப்பன்னுக்கும், குப்புசாமிக்கும் எப்படி தெரியும் அவரவர் கடவுள் யார் என்று? இப்படி சமய அறியாமையில் இருக்கின்ற காரணத்தினால்தான், Anti Guruji, எல்லா கடவுள் பெயரையும், மற்ற சமயத்தில் உள்ள எல்லா இறை தூதர்கள் பெயரையும் தன் கடவுளாக ஏற்றுக் கொள்கின்றார். புத்தர் கடவுளும் அல்ல, புத்த சமயத்திற்கு கடவுள் கோட்பாடும் இல்லை. அவர்கள் கடவுளை நம்பாதவர்கள். ஆதாலால்தான் இந்தியாவில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இஸ்லாம், கிறிஸ்துவ மதத்திற்கு வினைப் பயன் கொள்கையும், மறு பிறவி கொள்கையும் இல்லை (“both the religion do not accept PRINCIPLE OF KARMA”). மேலும், அம்மதங்களை, கோட்பாடுகளை நம்பாதவர்களை அம்மதங்கள் இஸ்லாமியர்களாகவோ, கிறிஸ்துவர்களாகவோ, பௌத்தர்களாகவொ
ஏற்றுக் கொள்வதில்லை. அப்புறம் Anti Guruji -க்கு அவர்கள் மதத்தில் என்ன வேலை இருக்க வேண்டி இருக்கு. முதல்ல அவரவர் சமய கோட்பாடுகள் என்ன என்று அறிந்துக் கொண்டு மற்றவர்க்கு அறிவுரை செய்ய புறப்படுங்கள். பிரச்சனை வராது.
மலேசியாவில் விஸ்ணு ஆலயங்கள் இருந்தால் நல்லது தானே ? காளி ,முனிஸ்வரன் கோவிலில் பலி போடுவதை விட இது பரவ இல்லை . உண்மையான இந்துக்கள் சைவ பிரியர்களே .
எல்லா கடவுளும் நம்ப கடவுள்தான், அல்லது நம்ப கடவுள் மாதிரிதான் சொல்லிகிட்டு இருகின்ற காரணத்தாலேதான் இன்றைக்கு இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு வருடா வருடம் புக்கிட் மேர்தாஜாமில் உள்ள ‘St Anne’ தேவாலயத்துக்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு அன்னை மேரியை வணங்கி விட்டு அப்படியே கொண்ட்டாட்டமாக பினாங்கு சுற்றுலாவும் சென்று வருகின்றனர். எங்கே இருக்குது பாருங்ககள் இந்துக்களின் சமய நெறி, பக்தி, ஞானம், அறிவு!. அப்புறம் ஏன் இந்துக்களை இஸ்லாமியர்களாகவோ, கிறிஸ்துவர்களாகவோ, பௌத்தர்களாகவொ
மதம் மாற்றி விடுகின்றனர் என்று வாயிலும் வைத்திலும் அடித்துக் கொள்கின்றீர்கள். இந்து சங்கம் உட்பட. இப்பகுதியில் மங்கை என்ற ஒரு பெண்மணி தமிழர்களுக்கு சமய நெறி இல்லை முன்பு என்று வாதிட்டது ஒரு வகையில் உண்மை என்றே இப்ப எனக்கு தோன்றுது. நல்லா வாழ்கின்றீர்கள் போங்க.
கடல் வாழை என்று மீனை சாப்பிடும் பிரமனர்களும் உண்டு. இந்து மதம் ஒரு கடல் மாதிரி.. அங்கே பலருக்கு பல வழிகள். விஸ்ணுவை வணங்கும் மங்கைக்கு பிடிக்கும்.. மற்றவர்க்கு ?
தேனீ… உங்களை நான் ஒன்றும் உங்களை போல் மத வெறி பிடித்தவன் இல்லை.. நீங்கள் காட்டும் மதவெறிக்கும், இவர்கள் காட்டும் மதவெறிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம். ஆதி சங்கரர் வருவதற்கு முன்பு, இந்து மதமே கூட ஆறு வெவேறு மதம். இதற்க்கு என்ன சொல்ல போகிறிர்கள்? ஒரு அன்னை மேரி , நம் கண்ணுக்கு மரியாம்மா என்று தெரிய கூடாதா? ஒரு அன்னை தெரேசா உலகத்துக்கு அம்மாவாகவில்லையா? நானும் முருகன் பக்தன். ஆனால் உங்களை போல் என்னால் எல்லாவற்றையும், மத கண்களால் பார்க்க முடியவில்லை. மனித கண்களால் பார்க்கிறேன். ஒன்றே குலம், ஒருவனே தேவன். யாதும் ஊரே யாவரும் கேளீர். தொல்காப்பியர் சொன்ன இந்த வார்த்தையை, உலக அரங்கில் சொல்லியவர் அப்துல் கலாம்.ஆஸ்கார் விருது வாங்கும் பொழுது, எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில் பேசியவர், ரஹ்மான். நதிகள் பல.. கடல் ஒன்று.. இங்கே வழிபாடும் முறைகள் வேராக இருக்கிறதே அன்றி..நீங்கள் சொல்லும் அந்த கடவுள் ஒன்றுதான். முதலில், இந்து மதத்தில் ஏன் முப்பது முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு சொல்ல முடியுமா தேனீ.
அன்று வெள்ளைகாரனுக்கு தேனிக்கு இருக்கும் சிந்தனை இருந்திருந்தால், எல்லா எஸ்டேட் லேயும், ஒரு தேவாலயம் கட்டிருப்பார்கள். நமது இறை நம்பிக்கையை அவர்களும் மதித்தார்கள். அதனால்தான் இன்று இந்த மலேசியாவில் இத்தனை கோவில்கள். அவர்கள் நினைத்திருந்தால்.. சாஞ்சி கூலிகளாக வந்த நம்மை மதம் மாற்றி இருக்கலாம்….
(அ)நீதிபதிகள் ஹிந்து சமயத்தை பற்றி எல்லாம் தெரிந்தவர்போல் விஷ்ணு ஹிந்து கடவுள் என்று தங்களது தீர்ப்பினில் எழுதி ஒரு பிரச்சனையை விதைத்திருக்கிறார்கள். இப்பிரச்சினை வளர்ந்து கட்டு படுத்த முடியாத விருட்சமாக வளரும்முன் முளைவிடும்போதே கிள்ளி விடுவது மிகவும் முக்கியமாகும். இன்று சம்பந்த பட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் நாளடைவில் அதுவே உண்மையாகி நடைமுறையாக்க அரசு முற்பட்டு அமலாக்கவும் செய்து மற்ற வழிபாடுகளை (தைபூசம் போன்ற திருவிழாக்களை ) தடை செய்தால் நாம் எடுக்கும் நடவடிக்கைகள் காலம் கடந்ததாயிருக்கும் அதோடு எவ்வித பலனும் அளிக்காது. இது நாளைக்கு நடக்காது என்று இரும்மாந்து இருந்து விட கூடாது. ஒருகால் இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளாகலாம். அப்பொழுது, நடவடிக்கை எடுக்காது நமது முன்னோரை நாம் குறைகூறி வசைப்பாடுவது போன்று அன்றைய தலைமுறை நம்மை வசைப்பாடாமல் இருக்க இப்பொழுதே தக்க செயலில் இறங்கி ஆவன செய்வோம். ஒரு சமயத்தை சார்ந்தவர் வேறொரு சமயத்தை விமர்சிக்காமல் இருந்து அனைவரின் நம்பிக்கையையும் மதிப்போம். அனைவரும் இறைவனின் திட்டம்மகியா அன்பு, அடுத்தவர் சுதந்திரம்/மரியாதை, அடுத்தவர் நலம் பேணி இறைவனின் ஆசீரை வெகுவாக பெற்று எல்லாரும் நலமுடன் வாழ்வோம். அடுத்தவர் நலனை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம். இறைவன் நம்மை அசீர்வதித்து வழி நடத்துவாராக.
அண்டி குருஜி மற்றும் துவனா பாவனா உங்கள் பிரச்சனைய ஏன் மற்றவர்களையும் அழைகிரிர்கள்!!! கோயில் உடைப்பில் பலதேவாலயங்கள் மகிழ்ச்சியடைந்தன … ஹிண்ட்ராப் பேரணியில் இந்துக்கள்தான் பாதிக்கபட்டார்கள் .. பலன் என்னமோ அனுபவித்தது பெரும்பாலும் கிறிஸ்தவர்களே ..ஒன்றேகுலம் ஒருவனேதேவன் மற்றும் யாதும் உரே யாவரும் கேளிர் என்று சொன்ன தமிழன் இன்றைக்கு அல்லல்பட்டுகொண்டிருக்கிறான் … பேச்சுக்கு நல்லா இருக்கு .. இந்துக்கள் எந்தவிலத்திலும் மதத்தில் யாருடனும் சமரசம் வேண்டாம் … இஸ்லாமியர்கள் அடுத்தவன் குடும்பம் பிரிதலை கவலைப்படமாட்டார்கள் .. மதத்துக்கு ஒருவர் வந்தால் மகிழ்சி .. கிருஸ்தவர்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை .. நாம் நாமாக வாழ்வோம் .. மக்களே மதம்மாறினால் மொழி கலாசாரம் பண்பாடு அனைத்தும் அழிந்துவிடும் .. பெரும்பாலான இந்திய முஸ்லிம்கள் தேசிய மொழியில் பேசுகிறார்கள் .. இந்திய கிறிஸ்தவர்கள் ஆங்கிலேயர் போன்று வாழ்கிறார்கள் .. இஸ்லாமியர்கள் மற்றமதத்தவர்களை மணமுடிப்பது போல கிறிஸ்தவர்களிடமும் அந்த நடைமுறை உள்ளது ..நாம் நம்முன்னே காணலாம்
மனிதகுல நல்வாழ்வு நீதிகள், தத்துவங்கள் (‘Universal values’) ஒரு புறம். ஒவ்வொருவரின் சமய நெறி மற்றொரு புறம். இரண்டையும் ஒன்றாக கலந்து அர்த்தம் புரியாமல் பேசுவதால்தான் பிரச்சனையே வருகின்றது. ஒவ்வொரு சமயத்திற்கும் தனித்தனி சமய நெறி உள்ளது. பல நிலைகளில் இரண்டும் ஒற்று போகும். சில சமயங்களில் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒற்றுவராது. தத்தம் சமய நெறி இன்னது என்று அறிந்துக் கொண்டு அதன் வழியில் நிற்ப்பவர்க்கு அதற்க்கு புறம்பான மற்றொரு சமய நெறியுடன் இணைந்து போக இயலாது. ஆதால்தான், நான் இந்து என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு அதன் நெறிக்கு புறம்பாக உள்ள இன்னொரு சமயத்திலும் ஒட்டிக் கொண்டால் அப்புறம் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்ற நிலைக்கு கொண்டு போய் விடும். இங்கேயும் இல்லாமல், அங்கேயும் இல்லாமல் ‘Rojak’ நெறியில் தத்தளிபோர் போல் ஆகிவிடும். தேவையா இது நமக்கு. தொடரும்.
பல நூற்றாண்டுகலாக உண்மையான மதங்கள் அதன் அடிப்படை உண்மைகளிருந்து எப்படி சுய நலவாதிகளால் மாற்றாறப்பட்டன என்பதின் அழகான உண்மை கதை இது. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு அடுத்த தேர்தலில் அதிக வாக்கு கிடைக்கும். அரைகுறை அறிவினால் பாமரமக்களின் மத அறிவு தெரியவில்லை மதவெறிதான் தெரிகின்றது. என் மதம் என்று நினைக்கும் போதே மதத்தின் புனித தன்மை மறைகின்றது.
“அன்டி குருஜி” நீங்கள் சொன்னது தெளிவான மனிதனின் அடையாளம் ” ஒன்றே குலம், ஒருவனே தேவன், யாதும் ஒரே யாவரும் கேளிர் .
எனக்கு மதமும் பிடிக்கவில்லை. நான் மத வெறியனும் அல்ல. திருத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய சமய நெறியை அறிந்து அதன் வழி நில்லுங்கள் என்றே வேண்டுகின்றேன். முடியாது என்றால் விடுங்கள். நட்டமடையப் போவது நான் அல்ல. அன்பும் கருணையும் வடிவான அன்னை திரேசா அவர்கள், அவர் வாழ்நாளில் கல்கத்தா பகுதியில் வாழ்ந்த பல லட்ச இந்துக்களை மென்மையான முறையில் (வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல) கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றினார். வாழ்க அந்த மாறி அம்மாவின் தியாகம். தொடரும்.
“ஒன்றே குலம், ஒருவனே தேவன். யாதும் ஊரே யாவரும் கேளீர். தொல்காப்பியர் சொன்ன இந்த வார்த்தையை”, தொல்காப்பியர் எந்த பகுதியில் எழுதியுள்ளார் என்று குறிப்பிடுங்கள். தொல்காப்பியத்தை திருப்பிப் பார்க்க விரும்புகின்றேன். தொடரும்
“ஆஸ்கார் விருது வாங்கும் பொழுது, எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில் பேசியவர், ரஹ்மான்.” ‘Wikipedia” கீழ்காணும் அரேபியா வார்த்தைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அர்த்தத்தை புரிந்துக் கொள்ளுங்கள். ” Alhhamdulilla (Arabic: الحمد لله) is an Arabic phrase meaning “Praise to God”. It is commonly used by Arabic speakers of all religions, including Christianity and Judaism, and frequently by Muslims due to the centrality of this specific phrase within the texts of the Qur’an and the words of the Islamic prophet Muhammad. It is similar to the Hebrew word Hallelujah הַלְלוּיָהּ (‘God be praised’). A.R. ரஹ்மான் சொன்ன எல்லா புகழும் இறைவனுக்கே என்றது அவருடைய அல்லாவுக்கு. உங்களுடைய விஷ்ணுக்கோ அல்லது சிவனுக்கோ அல்ல. அவர் அரேபியராகவோ, மலாய்க்காரராகவோ இருந்திருந்தால் ‘அல்ஹ்ஹம்டுளிள்ள’ என்று சொல்லி இருப்பார். மாறாக இந்திய முஸ்லிமாக இருந்ததால் அதையே தமிழில் மொழி பெயர்த்து சொன்னார். இதில் உங்களுக்கு என்ன பெருமை வேண்டிக் கிடக்கின்றது ‘Anti Guruji’. தொடரும்.
வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசிவரை யாரோ…நண்பெண்டா புண பிக்கேரிகளா !!
மலேசியாவில் மட்டும் தான் அல்லா பிளவு பட்டு சட்டம் வரை போயி உள்ளார். சபா சரவாக்கில் எல்லாம் அல்லா எல்லோர்க்கும் இருக்கார். உலகம் முழுக்க அல்லா அடக்க ஒடுக்கமாதன் இருக்கார்.எல்லாம் பிதாமகன் கையில் போகும் வரை ஒரே அரசியல் ஆர்பாட்டம் ! லா ?
ஆதி சங்கரர் வருவதற்கு முன்போ அல்லது பின்போ “இந்து மதம்” என்று ஒரு மதமோ, சமயமோ இல்லை. இந்து மதம் என்ற சொற்றொடர் வந்தது ஏறக்குறைய 230 வருடங்களுக்கு முன்புதான். சிந்து என்ற வார்த்தை மருவி “Hindustan”, “Hindustani”, என்று வந்த பிறகு, இந்திய துணைக் கண்டத்தில் இருந்த பல்வேறு வட்டார சமயங்களை இன்னது என்று ஒரு பெயரில் சொல்ல இயலாத காரணத்தினால் ‘Hindu Religion’ என்று ஆங்கிலேயன் சட்டத்தில் எழுதி வைத்த பிறகுதான் ‘Hinduism’ அல்லது இந்து மதம் என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தபட்டது. இதற்க்கு சான்றாக நமது மலாயாவில் எழுதப்பட்ட ‘Hikayat Sejarah Melayu’ – வில் இந்தியாவை ‘Benua Hindu’ என்றே குறிக்கப்பட்டுள்ளது. ‘Hindu’ நாட்டின் சமயம் இந்து சமயமாக குறிக்கப்பட்டது. பிரச்சனைக்கு வருவோம். தொடரும்.
கட்டுரையாளர் கூறியது போல மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு கூர்ந்து கவனிக்க தக்கது. மலேசிய கூட்டரசு அரசியல் சாசனத்தின் 3-வது சரத்து “Religion of the Federation –
3. (1) Islam is the religion of the Federation; but other religions may be practised in peace and harmony in any part of the Federation” என்று உள்ளது. இதை இஸ்லாத்தின் (1) “அமைதிக்கும் இணக்கத்திற்கும் உட்பட்டு”, (2) “இஸ்லாத்தின் இறையாண்மையை பாதுகாக்கும் வண்ணம்” பிற சமயங்கள் பின்பற்றப்படலாம் என்று ஒரு நீதிபதி சட்டத்தை எடுத்துரைத்திருகின்றார். இதை ‘unnatural interpretation” என்று வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் சுட்டிக்காட்டி இருகின்ரார். இத்தகைய தீர்ப்பு நம்மை எவ்விடத்தில் கொண்டு போய் விடும்?. உதாரணத்திற்கு, நமது ஆலயத்தின் மணி ஓசை அருகாமையில் உள்ள நமது முஸ்லிம் அன்பர்களின் அமைதிக்கு ஊறு விளைவிக்கின்றது என்று ஒரு வழக்கு நீதிமன்றத்தின் முன் வருகின்றது என்றால் மேற்கூறிய தீர்ப்பின்படி நமது ஆலயத்தில் மணி அடிக்ககக் கூடாது என்று உத்தரவு போடலாம். அல்லது ஓர் முஸ்லிம் அன்பரின் வீட்டிலிருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நமது ஆலயம் அமைக்க வேண்டி இருந்து அது இஸ்லாத்தின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் என்று ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால் அங்கே ஆலயம் கட்டக்கூடாது என்று தடை உத்தரவு வாங்கலாம். இப்படியே இன்னும் பலவாறாக பிரச்னைகள் வரலாம். இதை கவனிக்க நமது ம.இ.க. தானைத் தலைகளுக்கும், குட்டித் தலைகளுக்கும் துப்பில்லை. நாம் DAP கட்சியின் தலைகளைத்தான் தற்சமயம் நம்பி இருக்க வேண்டி இருக்கிறது. பாப்போம் இனிமேல் என்ன கூத்துதான் நடகின்றது என்று.
நண்பர்களே ஏன் அலட்டிகொல்கிரிர்கள் பைபிள்-லை மீண்டும் இங்கிலீஷ்சக மாற்றிவிட்டால் போதுமே ,இந்த மலாய் மொழி மற்ற மொழிகளை காப்பி அடித்த ஒரு மொழிதானே. வெட்கம் இல்லாத ஒரு இனம் இந்த மலாய் இனம்,எல்லாவற்றையும் கப்பி அடித்தே பழகி விட்டார்கள் பாவம்.
தேனீ மற்றும் அப்பள நாயுடு அவர்களே … அருமை அருமை.. உங்களின் மதவெறியில், அப்படியே பூரித்து போனேன் அய்யா.. என்ன சொன்னிர்கள்? மத விசயத்தில் நமக்குள் சமரசம் வேண்டாமா? மூன்றாவது இனமாக இருக்கும் நாமே இப்படி யோசித்தால், அதிக மக்கள் தொகை கொண்டவர்கள் இன்னும் எப்படி எல்லாம் யோசிப்பார்கள்? அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லை எனும்போது, நாம் ஏன் அவர்களை குறை சொல்ல வேணும்? மதம் என்பதே கடவுளை காணும் வழிதான். ஆனால் கடவுள் என்பவர், இந்த ஆண்ட சராசரத்தை படைத்தவர் ஒருவர் என்பதே உண்மை. கடவுள் ஒருவராக இருக்க.. மதங்களுக்குள் எதற்கு சண்டை?
தேனீ அவர்களே, நீங்கள் ஏதேதோ புள்ளி விவரங்களை சொன்னிர்கள். ஆனால் ஹிந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கின்றனரே அது ஏன் என்று கேட்டேன், ஆனால் அதை பற்றி நீங்கள் மூச்சே விடவில்லை. இந்தியாவுக்குள்ளேயே, கோடி முறை அவதரித்து இருக்கும் கடவுள், இந்தியாவுக்கு வெளியே, ஜெசுஸ் ஆகவும், நபி ஆகவும், அவதரித்து இருக்க மாட்டாரா? அப்படி என்றால் கடவுள் ஒருவர் தானே..??
அண்ணை தெரேசாவை பற்றி நீங்கள் சொன்ன கருத்துக்கள் என்னை வாயடைக்க செய்து விட்டன. உலகமே அவரின் தாய்மையை போற்றும் வேலையில், அவரை மட்டமாக விமர்சித்த ஒரு ஆள் நீங்கள்தான். அன்னை தெரேசா குணபடுதிய நோயாளிகள் சாதாரண நோயாளிகள் அல்ல.. அதில் தொழு நோயாளிகளும் அடக்கம். தன் சொந்த இனத்திலேயே தாழ்த்த பட்ட ஜாதிக்காரனை தொட மறுக்கும் ஹிந்துக்கள் இருந்த வேலையில், எங்கேயோ இருந்து வந்த ஐரோபிய பெண், இந்த தொழுநோயாளிகளை தொட்டு தூக்கி, அரன்வனைதார் என்றால், அவரை மதித்தவர்கள் அவர் சார்ந்த மதத்திற்கு சுயவிருப்பதிலோ, நன்றி கடனாகவோ, சேர்ந்திருக்கலாம். ஆனால் இதைபோல் சேவை செய்ய, ஒரு ஹிந்து இல்லாமல் போனது யார் தவறு? அவர்களின் சேவை நமக்கு வேண்டும், ஆனால் அவர்கள் வணகும் தெய்வம் மட்டும் உண்மை இல்லையா??
நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது…நம் கடவுளையும் பிரிக்க முடியாது.ஆகவே நாம் எல்லோரும் ஜாதி, மதம் தாண்டி ஒற்றுமையை நிலை நாட்டுவோம்…வாழ்க ஹிந்து மதம்..வாழ்க நம் சமய நெறி..நிலை நாட்டுவோம் நம் ஆலயத்தை எவன் தடுத்தலும்..நன்றி
தேனியின் பயம், இங்கே மதமாற்றம் செய்து விடுவார்கள் என்பதே. நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இங்கு மதம் மாறுபவர்கள் எல்லாம் கடவுளை வேண்டி மதம் மாறுபவர்கள் அல்ல, மாறாக, சுயநலத்தின் பேரில்தான் மதம் மாறுகின்றனர். அது பணமாக இருக்கலாம், பெண்ணாக இருக்கலாம், பகட்டாக இருக்கலாம். சிலர் தன் குழந்தைகள் தன்னிடம் இருக்க வேண்டும் என்றும் மதம் மாறி இருக்கின்றனர். ஆனால் எல்லா கடவுளும் ஒருவர்தான் என்று, உணரும் இதயம் ஒரு போதும் மதம் மாறாது.. ஆகவே நீங்க வீணான பயத்தில் இருக்கின்றீர்கள்.
இப்பொழுது நாம் நம் மதத்தை காக்க வேண்டியது, மற்ற மதத்தினரிடம் இருந்து இல்லை.. மாறாக இந்த பணம் புடுங்கிகளிடம் இருந்துதான். இதன் காரணமாகவே என் பெயரை அண்டி குருஜி என்று வைத்துள்ளேன். நம் மதத்தில் ஏன் கடவுள், மிக அதிக விலைக்கு விற்க படுகிறார்? இந்த மாதிரியான குறைகளே நம்மவர்களை மதம் மாற வைத்து விடுகிறது. ஆனால் நாம் மற்றவர்களை குறை கூறி கொண்டு இருப்பதில் என்ன பலன்? தமிழகத்தில், கடற்கரையோர பகுதிகளில், ஏன் அதிகமான தமிழர்கள் கிருஸ்துவ மதத்திலும், இஸ்லாமிய மதத்திலும் இருக்கின்றனர்? என்றாவது யோசித்தது உண்டா? ஜாதி அடிப்படையில் அவர்களை ஹிந்து மதம் அரன்வனைக்க மறந்தது என்பதே உண்மை. மற்ற மதங்கள் அவர்களை ஆதரித்த பொழுது, அவர்கள் அந்த மதத்தில் சேர்ந்ததில் வியப்பேதும் இல்லையே… ஆதரித்தவன் குற்றவாளி என்றால்? ஆதரிக்க மறந்தவனை என்ன சொல்ல… இதை ஏன் சொல்கிறேன் என்றால், எல்லா மதங்களிலேயும், குறை நிறைகள் உண்டு. அதை நாம்தான் திருத்தி கொண்டு உண்மை உணர வேண்டும். இங்கே நான் என் மதத்திற்கு புறம்பாக பேசவில்லை.. எல்லா கடவுளும் ஒன்றுதான் என்று மனிதனாக சொன்னேன். இதற்குதான் நீங்கள் என்னை இவ்வளவு பேச வைத்து விட்டிர்கள். உங்களின் வாதத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அன்னை தெரேசாவையும், மட்டமாக பேசுகிறிர்கள். தன் வாழ்நாளையே, அர்ப்பணித்து, பலருக்கு தாயக இருந்த அந்தம்மா எங்கே? பலரிடம் 750 வெள்ளி வசூல் செய்து, பொண்டாட்டிக்கு நகை வாங்கி போட்டு அழகு பார்க்கும், இன்றைய குருஜிகள் எங்கே? இவங்களைதான் பத்து மலையில் வைத்து அழகு பார்க்கிறார்கள்.
அப்பள நாயுடு அவர்களே… கோவில் உடைக்கப்பட்ட பொழுது, எந்த தேவாலயம், நாங்கள் கோவில் உடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று, அறிக்கை வெளி இட்டது என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? அப்படி இல்லை என்றால் நீங்க மதங்களுக்குள் பிரச்சனைகளை ஏற்படுத்த முயல்வதாக அர்த்தம்.
ஆஸ்கார் விருது வாங்கிய ரஹ்மான் எல்லா புகழும், அல்லாவுக்கே என்று சொல்லி இருக்கலாமே.. ஏன் எல்லா புகழும் இறைவனுக்கு என்று சொன்னார். அவரின் புகழை தன் தாயி மொழியுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தார். இதை ஏன் இங்கு சொன்னேன் என்றால், தமிழ் மொழியின் மீது, கிருஸ்துவ மதமும், இஸ்லாமிய மதமும் காட்டும், அக்கறையை, நம் இந்து மதம் கூட காட்டுவதில்லை. பத்து மலையில் தமிழில் மந்திரம் சொல்ல சொல்லி பாருங்கள்.. நாளைக்கே தமிழனே வரிந்து கட்டி கொள்ளுவான். சமஸ்கிருததில் மந்திரம் சொன்னால்தான் பலிக்குமாம்.. தமிழ் கடவுள் குமரனுக்கு தமிழ் விளங்கதாம்.
மனிதம் மறந்து மதம் பிடித்து இருக்கும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், எல்லாவற்றையும் மத கண்களோடு பார்க்க வேண்டாம். மதம் வேராக இருந்தாலும் அவர்கள் தமிழர்கள் என்றால், அவர்களை நம் சமுதாயத்தில் இருந்து ஒதுக்குவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. மதம் என்ற வட்டத்தை விட, தமிழர் என்ற வட்டம் பெரியது. அதில் பல மதத்தினரும், கடவுள் மறுப்பாளர்களும் அடக்கம். மதம் என்பதை விட, நாம் தமிழர்கள் என்ற உணர்வே நமக்கு தேவையானது. அதில் உங்கள் மதவெறியை காட்டி, தமிழர் என்ற வட்டத்தை மேலும் பலவீன படுத்த வேண்டாம். ஒரு ஹிந்துவாக முதலில் நாம் செய்ய வேண்டியது, இந்த பாபா சென்டர்களையும், குருஜி சென்டர்களையும் ஒழிப்பதே…
A.R. ரஹ்மான் சமய அரசியல் புரிந்தவர். ஆதலால்தான் எல்லா புகழும் அல்லாவுக்கே என்று சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் கோலிஹூட்டில் அவர் புகழ் மங்கி விடும் என்று அவர் அறியாமல் இல்லை. ஆனால் நீங்கள் அறியாமையில் இருகின்றீர்கள் என்று எனக்கு நன்றாகவே புரிகின்றது குருஜி. மற்றவைக்கு பதில் பின்னர். பாஸ் வந்து விட்டார். சென்று வருகின்றேன்.
குருஜி இப்போ தெளிவா இருக்கார்.இப்பதான் புரியுது அண்டி குருஜி பேர் ஓகே ..போலிஸ் வலையில் மீண்டும் நித்யானந்தா? 100 குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காம சேட்டையாம் ….கவனிங்க.. !
இந்து கடவுள் விஷ்ணு … நம்ப தமிழ் கடவுள் சிவன் என்ன சொல்றார்?
தேனி, நீங்கள் சொல்லுவது ஏற்புடையதல்ல. ஏ.ஆர். ரஹ்மான் ஒரு தமிழர். தமிழின் மீது அவருக்கு இருக்கும் பற்றை நீங்கள் சந்தேகிக்கக் கூடாது. இப்படி எல்லார் மீதும் நாம் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது சரியல்ல. உங்களைப் போலவே மற்றத் தமிழர்களுக்கும் மொழிப் பற்று இருக்கவே செய்யும்.
முதல் தமிழன் அப்புறம்தான் மதம் இந்தியன்
குருஜி, என்னய்யா வேடிக்கை இது! நீங்கள் ஒரு இந்து என்று அடையாளமிட்டுக் கொண்டீர்கள். அப்படி இருக்கையில் சைவ சமியியான என்னைப் பார்த்து “ஹிந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கின்றனரே, ஏன்” என்று என்னிடம் வினைவினால் நான் என்ன செய்ய? இந்துவான நீங்கள் அல்லவா கேள்வியும் கேட்டு, பதிலையும் சொல்லியிருக்க வேண்டும். இருந்தாலும் பரவாயில்லை. கேள்வி கேட்டு விட்டீர்கள். பதிலைச் சொல்லுகின்றேன். இந்த “முப்பத்து முக்கோடி தேவர்கள்” முத்தி அடைந்த ஆன்மாக்கள். வேத மரபின் படி தேவேந்திர லோகத்தில் இந்திரனை தலைவராக ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள். சித்தாந்திகள், இவர்களை அசுத்த மாயையில் உள்ள பிரளயாகலர் ஆன்மாக்கள் என்பர். இத்தகைய ஆன்மாக்களுக்கு மலவாசனை சற்றே உண்டு (ஆணவம் கன்மம் மட்டும் உண்டு) என்பர். இத்தகைய ஆன்மாக்கள் மீண்டும் சகலர்களுக்கு உரிய பிரகிருதி மாயைக்கு வரும் வாய்ப்பு உண்டு. இது அவ்வான்மாக்களின் சிவ சார்பைப் பொறுத்து உள்ளது. ஆகவே, இந்த முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆன்மாக்களில் ஒன்றோ, இரண்டோ அல்லது பலவோ மீண்டும் உலகியல் வாழ்க்கையில் பக்குவ பட வேண்டி இயேசுவாகவோ, நபிகள் நாயகமாகவோ வந்திருக்க வாய்ப்புண்டு என்று நீங்கள் நம்பினால் அதற்க்கு நான் பொறுப்பு அல்ல. எங்கள் அன்பு பரமனே அதை நிர்ணயிக்க ஆற்றல் உள்ளவர். நீரோ அல்லது யாமோ அதற்க்கு வியாக்கினம் கூற அருகதை அற்றவர்கள். என்ன குருஜி நான் ஏதோ உங்களுக்குப் புரியாத ஜெர்மனி மொழியில் உளறுகின்றேன் என்று நினைகிண்றீர்களா? இல்லை மண்டை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சுற்றுகின்றதா? நீங்கள் கூறும் “கடல்” என்ற சமய நெறியில் இறை, உயிர், மாயை என்ற தத்துவங்கள் உங்கள் அறிவுக்கும், என் அறிவுக்கும் எட்டாத ஆழத்தில் அடங்கி உள்ளது. வாருங்கள், நீங்களும், நானும் அதில் மூழ்கி முக்குளித்து முத்துக்களை எடுப்போம்.
இறைவன் ஒருவன்தான் என்பதில் உங்களுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு இல்லை குருஜி. ஆனால், வேதாந்தத்தில் உள்ள “கடவுள் அவதார” கோட்பாடு எங்கள் சித்தாந்தத்தில் இல்லை. எங்கள் பரமன் பிறப்பு இறப்பு அற்றவன். அவன் என்றும் உள்ள பொருள். அவர்தம் அடியார்களுக்கு இறைஞ்சி காட்சி அளிக்கும் பொருட்டு அடியார்கள் அறியும் படி காட்சி அளிப்பார். காரியம் ஆற்றிய பின் கொண்ட உருவத்தை விட்டு அகலுவார். அவ்வாறே திருஞான சம்பந்தருக்கும் அம்மை அப்பனாக காட்சி அருளி மறைந்தார்.