காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்திய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு அவர்கள் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார்.
14 நாட்களாக இந்த உண்ணாவிரதப்போராட்டத்தினை அவர் மேற்கொண்டிருந்தார். உடல் நலிந்த நிலையில் அவர் சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் உட்பட பலர் அவரை சந்தித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ள தியாகுவும் மாலையில் பழ இரசம் அருந்தி தனது உண்ணாநிலை போராட்டத்தினை முடித்துக்கொண்டார்.
தியாகு, கருணாநிதியின் அடிமை என்று பெயரும் வாங்கி விட்டார் ! பொறுத்திருந்து பார்போம் !
தயாளு அம்மாளுக்கு கோர்ட்டின் தீர்ப்பு என்ன ஆகும் என்பதை வைத்து கலைஞர் கருணாநிதியின் கடிதமும் அதற்கு ஏற்றவாறு மாறும். தமிழக அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு!
எந்த இந்திய அரசியல் ,அமைப்பு தமிழ் தலைவன்கள் எவரையும் நம்பவேண்டாம் …எலும்புக்கு வாலாட்டும் பிறவிகள் ..தமிழ் இனத்தின் வெட்க கேடுகள் ..இந்த கரு -நாய் -நிதி கேவலம் நிரந்தரம் இல்லாத முதலமைச்சர் பதவிக்காக ஈழ தமிழ் மக்களின் படுகொலைக்கு துணை போனவன் ..மலேசியாவில் இருந்து விசா பெற்று படுக்கையில் மருத்துவ சிகிச்சை பெற வந்த தாயை திருப்பி அனுப்ப துணை போனவன் ….இவன் போன்ற பிறவிகளும் ..டெல்லியை ஆளுபவர்களும் ..வெளி நாடு தமிழர்களும் ..படிப்பறிவில்லாத …சினிமா நடிகர்களை கும்பிடும் …இரண்டு பெண்டாட்டி வைதிருபவர்கள் என்று நினைத்து செயல் படுகின்றார்கள்
கருணாநிதியிடம் எனக்கு மரியாதை இருந்தது–தமிழ் பற்றை நான் இவர்களிடமிருந்து தான் தெரிந்துகொண்டேன். ஆனால் நம் உடன்பிறப்புகளுக்கு செய்த துரோகத்தை என்னால் மன்னிக்கமுடியாது. ஈழ தமிழர்கள் தமிழ் நாட்டு தமிழர்களை மதிப்பதில்லை என்பது உண்மையாயிருந்தாலும் நாம் யாவரும் ஓர் தாய் பிள்ளைகள் என்பதே உண்மை. இது எப்போது யாவருக்கும் ரத்தத்தில் ஓடுகிறதோ அன்று தான் நமக்கு விடிவுகாலம். நம்மவர்களுக்கு இனப்பற்று மொழிப்பற்று மிகவும் குறைவு–அதிலும் தமிழ் நாட்டு தமிழர்களை ப்பற்றி சொல்லவா எவ்ண்டும்.