சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமீன்கள்: இயக்குனர் ராம் மகிழ்ச்சி

thanga meengalசர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தங்கமீன்கள்  திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக இயக்குனர் ராம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது….

“கற்றது தமிழ்” தொடங்கி  “தங்கமீன்கள்” வரை பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து என்னை ஆதரித்து ஊக்கம் அளித்த உங்களுக்கு என் மனமர்ந்த நன்றி.

jsk film corp சார்பில் ஜே. சதிஷ்குமார் தயாரித்து நான் நடித்து இயக்கிய

தங்கமீன்கள், அடுத்த மாதம் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படங்களில் தங்கமீன்கள் ஒரே தமிழ்படம் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும், 18ஆவது சர்வதேச குழந்தைகள் திரைப்படவிழாவில் (தங்க யானை/THE GOLDEN ELEPHANT) பிரத்யேகமான “குழந்தைகள் உலகம்” (“Children’s World”) சமீபத்து வருடங்களில் சிறந்த உலகக் குழந்தைகள் படங்களோடு திரையிடத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

18th International Children’s Film Festival India  ”தங்கமீன்களை” குழந்தைகள் உலகம் என்ற பிரிவில் மற்ற உலகப்படங்களோடுத் திரையிடத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்வதில் நானும் தங்கமீன்களின் தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார், தயாரிப்பை ஒருங்கிணைத்த கொளதம் வாசுதேவ் மேனன் என அனைவரும் மகிழ்ச்சி கொள்கிறோம்,  என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.