இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது சந்தேகமே என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அரசியல் கட்சிகளின் தொடர் நெருக்கடியே இதற்கு காரணம் என்றும் நெருக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இது குறித்து இறுதி முடிவை கடைசி நேரத்தில் தான் பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிகிறது.
இருப்பினும், இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.