நக்ஸல்கள் நடத்தியுள்ள தாக்குதல்களில் 11,742 பொதுமக்கள் பலி

Naxalsஇந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக நக்ஸல்கள் நடத்தியுள்ள தாக்குதல்களில் சுமார் 12,000 பொதுமக்கள், 3,000 பொலிஸார் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம்:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1980ஆம் ஆண்டு முதல் நக்ஸல்கள் தீவிரத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த ஆண்டில் பொதுமக்களில் 84 பேரும், 17 நக்ஸல்களும் கொல்லப்பட்டனனர்.

2010ஆம் ஆண்டில் அதிகபட்சமாக சத்தீஸ்கர், ஆந்திரம், ஜார்க்கண்ட், ஒடிஸா, பிகார், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொதுமக்கள் 720 பேர் கொல்லப்பட்டனர்.

2009இல் அதிகபட்சமாக 317 பொலிஸார், நக்ஸல்களால் கொல்லப்பட்டனர். 1998இல் 296 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2012இல் 300 பொதுமக்கள், 114 பொலிஸாரும் உயிரிழந்தனர். 52 நக்ஸல்கள் கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 198 பொதுமக்களும், 88 பொலிஸாரும் கொல்லப்பட்டனர். 52 நக்ஸல்களை பொலிஸார் சுட்டுக்கொன்றனர்.

இதுவரை நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் 11,742 பொதுமக்களும், 2,947 பொலிஸாரும் உயிரிழந்தனர். இந்த காலகட்டத்தில் பொலிஸாரால் 4,638 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: