ஒலியைவிட ஏழு மடங்கு வேகத்தில் பறந்து, அதிகபட்சம் 7,200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் மிக அதிவேக “ஹைப்பர்சோனிக்’ ஏவுகணையை இந்தியா தயாரிக்கவுள்ளது.
2017-ஆம் ஆண்டில் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக மூத்த பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகளில் ஒருவரும் “பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத் தலைமை செயல் அதிகாரியுமான ஏ. சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.
டெல்லியில் “பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் அடுத்த கட்டப் பணிகள் குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்,
வழக்கமாக, ஏவுகணைகள் தரை, கடல், வான் வழியில் ஓர் இலக்கில் இருந்து மற்றொரு இடத்தில் உள்ள இலக்கைக் குறி வைத்துத் தாக்கும் வகையில் ஏவுகணைகள் தயாரிக்கப்படும்.
அதை மேம்படுத்தி, மலைப் பகுதிகளில் மலைக்குப் பின்னால் தரையில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டதுதான் “சூப்பர்சோனிக்’ ரக ஏவுகணையாகும். அண்மையில் இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்தது. மொத்தம் 300 கிலோ எடையுடன், அதிகபட்சம் 290 கிலோ மீட்டர் தொலைவு, ஒலியைவிட 2.8 மடங்கு வேகமாகப் பறந்து இலக்கைத் தாக்கும் திறனை சூப்பர்சோனிக் ஏவுகணை பெற்றுள்ளது.
மேலும், பல வகையான பறக்கும் பாதைகள், ஏவிய பிறகு தனக்குத் தானே செயல்படும் திறன், ஏவுகணையின் அதிக இயக்க ஆற்றலின் (கைனடிக் எனர்ஜி) காரணமாக எதிரியின் இலக்குகளை முற்றிலுமாக அழிக்கும் திறன் போன்றவை சூப்பர்சோனிக் ஏவுகணையின் சிறப்பு அம்சங்களாகும்.
கடல்சார் பாதுகாப்பு மட்டுமன்றி, எதிரிக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், தரை வழித் தாக்குதல் போன்றவற்றைத் துல்லியமாகத் தாக்கும் வகையில், சூப்பர்சோனிக் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. செங்குத்தாக ஏவுதல், சாய்வு நிலை ஏவுதல், செலுத்து வாகனம் மூலம் ஏவும் பல்திறன் ஆற்றல்கûளை இந்த ஏவுகணை கொண்டுள்ளது.
இதுவரை பிரம்மோஸ், பிரம்மோஸ் பிளாக் 1, பிரம்மோஸ் பிளாக் 2, பிரம்மோஸ் பிளாக் 3 என்ற வகைகளில் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் சோதனை முழுமையாக வெற்றிபெற்றுள்ளன.
இதையடுத்து, சூப்பர்சோனிக் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட “ஹைப்பர்சோனிக்’ ஏவுகணையை 2017-ஆம் ஆண்டில் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இந்த அளவுக்குச் செயல்பாட்டுத் திறன் கொண்ட ஏவுகணை வேறு எந்த நாட்டிலும் கிடையாது’ என்றார் சிவதாணு பிள்ளை.
முதலில் சோத்துக்கு வழியை பாருங்கடா ! ஏவுகணை உனக்கு சாப்பாடா போடும் ?
போங்கப்பா! பக்கத்திலே பாக்கிஸ்தான்காரன் போட்டுத் தள்ளிக்கொண்டிருக்கிறான். நீங்க என்னவோ கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள்!
இந்தியாவில் மட்டும் ஆறில் ஒரு பங்கினர் பட்டினியால் வாடுவதாக தகவல்கள் வருகின்றன. அறிவியல் பசியை போக்கவில்யே! மக்களின் பசிப்பிணியைப் போக்குவீர்!